(ஒவ்வொரு பிள்ளைகளினதும் விருத்திக் கட்டங்கள் மற்றும் பிள்ளை விருத்திக் கோட்பாடுகள் என்பனவற்றை கவனத்தில் கொண்டு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்கள)
பிள்ளையின் விருத்தி கட்டங்களை பின்வருமாறு பிரித்து நோக்கலாம்
- ஆரம்ப பிள்ளை பருவம் 2 முதல் 5 – 6 வயது
- பிள்ளை பருவம் 6 முதல் - 12 வரை
- கட்டிளமைப்பருவம் 12 வயது முதல் 20 வயது வரை
பியாஜேயின் பிள்ளை விருத்தி கோட்பாடுகளை நான்காக பிரிக்கலாம்
- புலனியக்கப் பருவம் -0-2 வயது வரை
- தூல சிந்தனைக்கு முற்பட்ட பருவம்; 2-7 வயது வரை
- தூல சிந்தனைப் பருவம் 7-17 வரை
-
இவ்வாறாக இரு பிரிவுகளாக பிள்ளை விருத்தி கட்டங்களையும் கோட்பாடுகளையும் பிரித்து நோக்கலாம். இப்பருவ மாற்றங்கள் வெறுமனே மாற்றங்களாக மற்றுமன்றி இவர்களின் நடத்தைகளிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த மாறுதல்களை சரியான முறையில் வழிநடத்தி எதிர் காலத்தில் பிள்ளைகளை நேரான பாதையில் கொண்டு செல்ல பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வகிபாகம் இன்றியமையாததாக இருக்கின்றது. அந்தவகையில் மேற்குறிப்பிட்ட ஆரம்ப பிள்ளைப் பருவமானது அறிவுசார் விருத்தி கோட்பாட்டில் தூல சிந்தனைக்கு முற்பட்ட பருவம் எனப்படுகிறது.
இப்பருவத்தில் பிள்ளைகளின் நடத்தையில் காணப்படும் பொதுவான அம்சங்களை நோக்குவோமானால்.
- முயன்று தவழுதல் முறை நிகழ்கின்றது
- எண்ணக்கருக்களை கிரகித்தல் செயன்முறை ஆரம்பமாகிறது
- மொழித்திறன் விருத்தி மற்றும் அறிவுத் திறன் விருத்தியில் மாற்றம் ஏற்படுகிறது
- கோபம் பயம் பின்வாங்கல் போன்ற எதிர்மறையான மனவெழுச்சி தோற்றம் பெறும்
- போலச் செய்தல் முறை பயன்படுத்துவர்
- ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு விடயத்தில் மட்டும் கவனம் செலுத்துவர்அளவிடும் திறன் குறைவாக காணப்படும்
- சிந்தனை ஆற்றல் விருத்தி ஏற்படும்
- தன்முனைப்புத் தன்மை அதிகரிக்கும்
பிள்ளையின் இவ்வாறான நடத்தைசார் அம்சங்களை கருத்திற் கொண்டு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூடிய கவனத்துடன் செயற்படுதல் வேண்டும். அதாவது
பெற்றோர்கள் என்றகையில்
அவர்களுக்கு ஒரு முழுமையான எண்ணக்கருவை வழங்குதல் வேண்டும். சிறிய வயது என்பதால் அவர்கள் மனதில் தோன்றும் விடயங்களை நிலை நிறுத்திகொள்ளக் கூடிய சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகிறது.
- பிள்ளைகளை குழுவாக செயற்பட சந்தர்ப்பம் வழங்குதல் வேண்டும. வீட்டுச் சூழலில் சகபாடிகளுடன் தொடர்பு கொள்ள வழிசமைத்தல்
- அதீத பயம் ஏற்படக்கூடிய விடயங்களை தவிர்த்தல்
- தன்முனைப்பின் காரணமாக தவறுதலாக பேசப்படும் விடயங்களை சரியான முறையில் பேச வழிப்படுத்தல்
- நற்கருத்துக்களை வழங்குதல்
- தன்னம்பிக்கையை வளர்த்தல்
- அதிகமாக உரையாடவும் செவிமடுக்கவும் சந்தர்ப்பம் வழங்குதல் வேண்டும் இவ்வாறான விடயங்களை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளுதல் அவசியமாகும். ஆசிரியர் என்ற வகையில்
- பிள்ளைகளின் தன்முனைப்புத் தன்மையை குறைத்தல்
- அதிகமான காட்சிப் பொருட்கள் மூலம் எண்ணக்கருக்களை விளக்குதல்
- பொருட்களுடன் பல்வேறு எண்ணக்கருக்களை உருவாக்கி கொள்ள சந்தர்ப்பம் வழங்குதல. உதாரணம் கூட்டல்¸கழித்தல என்பவற்றை கற்பிக்க கற்கள் மரத்துண்டுகளை பயன்படுத்துதல்
- பிள்ளைகளுக்கு வழங்கும் அறிவுறுத்தல் வாக்கியங்கள் மட்டுமன்றி செயல்களிலும் காணப்படல்
- மாணவர்களிடமிருந்து எதிர்பார்ப்பவைகளை பற்றித் தெளிவான மாதிரிகளை சமர்ப்பித்தல்
- எண்ணக்கருக்களை பெரும்பாலும் பிள்ளைகளின் அனுபவங்களினூடாக தொடர்புபடுத்தல்
- செயற்பாட்டு ரீதியான கற்றலை மேற்கொள்ளல்
- பிள்ளைகளை செய்தல்¸ கேட்டல்¸ பார்த்தல்¸ தொட்டுப்பார்த்தல்¸ ருசி பார்த்தல், மணம் பார்த்தல் போன்றவற்றை விளக்குவதற்கு பிள்ளைகள் பயனபடுத்தும் சொற்களையே பயன்படுத்தல்.
- மேலதிக விளக்கங்களை வழங்குதல் போன்ற செயற்பாடுகளை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்
அடுத்ததாக பிள்ளைப் பருவமானது அதாவது பிள்ளை விருத்தி கோட்பாட்டின் அடிப்படையில் தூல சிந்தனை பருவம் என அழைக்கப்படுகிறது. இப்பருவத்தில் பின்வரும் அடிப்படையில் நடத்தைசார் மாற்றங்களை காணலாம்
• பாலுறுப்புக்களின் வளர்ச்சி ஏற்படுகிறது
• ஒருபோதும் எதாவது செய்யாமல் இருப்பதில்லை
• உடலின் பாகங்களை பயன்படுத்தி செயற்பட முற்படுவர்
• எந்த பொருட்களையும் தொட்டு பார்த்து உணர முயற்சிப்பர்
• ஓடியாடி விளையாடுவதில் விருப்பம் கொள்வர்
• சமவயது தொடர்பு அதிகரிக்கும்
• சிந்தனை பன்முகப்படுத்தல் இடம்பெறும்
• தர்க்கிக்கும் திறன் விருத்தியடையும்
• ஒழுங்கப்படுத்தல் முறைமை காணப்படும்
• பிரச்சினை தீர்க்கும் இயல்பு வளரும்
தூல சிந்தனை பருவத்தில் இவ்வாறான நடத்தைசார் அம்சங்களை கருத்திற் கொண்டு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களுக்கு ஏற்றாட்போல் அனைத்து விடயங்களையும் வடிவமைத்தல் வேண்டும்.
தூல சிந்தனை பருவத்தின் போது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கீழ்வரும் விடயங்களில் அடிப்படையில் பிள்ளைகளை நல்வழிப்படுத்தலாம்
- அவர்களை இப்பருவத்திலையே கவனத்தில் கொண்டு உடலியற் ரீதியாக ஏதும் குறைபாடுகள் இருப்பின் கண்டறிதல். உதாரணமாக நடத்தல்¸ ஓடுதல் இயக்கத்தன்மையை பரிசோதித்தல்
- மனவெழுச்சி தன்மைகளை ஒவ்வொரு கட்டத்திலும் கண்டறிதல்
- சகபாடிகளின் குழுக்களை அவதானித்தல்
- குழுச்செயற்பாடுகளை ஒழுங்கமைத்தல்
- செயற்பாட்டு ரீதியான கற்பித்தலை மேற்கொள்ளல்
- உட்சாகமூட்டல்
- வாசிப்பதற்கு புத்தகங்களை வழங்குதல்
- புதிய அனுபவங்களை பெற்றுக்கொடுத்தல்
- காட்சிப்பொருட்கள் துணையுடன் விடயங்களை விளக்குதல்
- பொருட்களை பரிசோதித்து பார்ப்பதற்கும் இயக்குவதற்கும் சந்தர்ப்பம் வழங்குதல்
- சிக்கலான கருத்துக்களை தெளிவுப்படுத்த மாணவர்களுக்கு பழக்கப்பட்ட உதாரணங்களை பயன்படுத்தல்
- தர்க்க ரீதியானதும் விளக்கமானதுமான சிந்தனைக்கு அவசியமான பிரச்சினைகளை முன்வைத்தல்
- வகுப்பறை சட்டத்திட்டங்களை மாணவர்களை நடித்துக் காட்டச் செய்தல்
- நடிப்பங்குகள் குறு நாடகங்கள் மூலம் குறைபாடுடைய பிள்ளைகளை ஏற்றுக் கொள்ளல் போன்ற விழுமியங்களை கற்பித்தல்
அடுத்ததாக கட்டிளமைப்பருவமானது அதாவது பிள்ளை விருத்தி கோட்பாட்டின் அடிப்படையில் நியம சிந்தனைப் பருவம் என அழைக்கப்படுகிறது. இப்பருவத்தில் பின்வரும் நடத்தைசார் மாற்றங்களை பிள்ளைகளிடம் அவதானிக்கலாம்
- உடல் வளர்ச்சி தீவிரமாக இருக்கும்
- பாலியல் இயல்புகள் தோன்றும்
- பாடசாலை ஆசிரியர்கள் தங்களை வளர்ந்தவர்களாக கருதுவதை விரும்பவர்
- பிறர் கவனத்தை எதிர்பார்ப்பர்
- பிறரின் கருத்துக்களை விமர்சிக்க முற்படுவர்
- சமவயது குழுக்களின் தொடர்பு உச்ச அளவில் இருக்கும்
- எதிர்பாலாரின் வரவேற்பையும் அன்பையும் எதிர்பார்ப்பர்
- தீய பழக்கங்களுக்கு ஆளாக நேரிடும்
- பரந்த சிந்தனை
- எதிர்காலம் தொடர்பான எண்ணக்கரு வளர்ச்சி காணப்படும் நியம சிந்தனைப் பருவத்தின் போது அவர்களின் நடத்தை மாற்றத்திற்கு ஏற்ப பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கீழ்வரும் விடயங்களில் அவதானத்தில் கொண்டு செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.
- பெற்றோரின் ஆசிரியரின் கவனம் அதிகமாக காணப்படுதல் வேண்டும்
- ஆலோசனைகள் திறம்பட அமைதல் வேண்டும்
- தீயவை¸கெட்டவை தொடர்பான விளக்கத்தை வழங்குதல் அவசியம்
- சகபாடிகள் போல பெற்றோர் அவர்களுடன் பழகுதல்
- தண்டனைகளை தவிர்த்தல்
- பொறுமையாக ஒரு விடயத்தை விளக்குதல்
- பிரச்சினைகளுக்கு தர்க்க ரீதியான விஞ்ஞான முறைகளை கையாளுதல்
- பிரச்சினைகளை தீர்க்க சந்தர்ப்பம் வழங்குதல்
- முடியுமான அளவு கற்பனை ரீதியான விஞ்ஞான சந்தர்ப்பங்களை வழங்குதல்
- தர்க்கம் விவாதம் கலந்துரையாடல் வேலைத்திட்டங்களை ஒழுங்கமைத்தல்
தூல சிந்தனைக்கு பயன்படுத்திய துணைச்சாதனங்களை பயன்படுத்தல்
போன்ற செயன்முறைகளில் கவனம் செலுத்துதல் வேண்டும்.
போன்ற செயன்முறைகளில் கவனம் செலுத்துதல் வேண்டும்.
இவ்வாறாக ஒவ்வொரு கட்டத்திலும் பிள்ளைகளின் எண்ணங்களும் நடத்தைகளும் மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கின்றது. ஆகவேதான் ஒவ்வொரு பருவத்திலும் அவர்களின் நடத்தைகளையும் அதற்காக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியரகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் பிள்ளை விருத்தி கோட்பாடுடன் தொடர்புபடுத்தி கூறப்பட்டுள்ளது
ஆக்கம்
R..திஸ்ணாராஜா
BA,PGDE, DIP in TAmil,
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்