பொருத்தப்பாடு | guidance and counseling

 

பொருத்தப்பாடு  | guidance and counseling

தொழில்சார் ஆலோசனை பற்றிய டொனால்ட் சுப்பரின் கொள்கையைச் சுருக்கமாக விளக்குக. 

ஒருவர் தாம் தெரிவு செய்து கொள்ளும் தொழிலினூடாகத் தன்னைப் பற்றிய எண்ணக் கருவை நிறைவு செய்து கொள்ள முனைகின்றார் எனச் சுப்பர் குறிப்பிடுகிறார். 

ஒருவரது தொழில்சார் அபிவிருத்தி செயன்முறையானது அவரின் சுய எண்ணக்கரு விருத்திச் செயன்முறையுடன்  தொடர்புடையது என்கிறார்.

தொழில்சார் அபிவிருத்திச் செயன்முறை ஒரு தொடர்ச்சியான செயன்முறை என்றும்  குறிப்பிடுகின்றார்.

• பெற்றோரின் சமூக பொருளாதார மட்டம், தனியாளின்  உள ஆற்றல்கள், ஆளுமைப் பண்புகள், அவற்றை வெளிக்காட்டுவதற்குக் கிடைக்கும் வாய்ப்புக்கள் ஆகிய காரணிகள் ஒருவரின்  சுய எண்ணக்கரு விருத்தியை இசைவு படுத்துவதில் பங்களிப்புச் செய்கின்றன என்று இவரது கொள்கை விளங்குகின்றது. 

• ஆற்றல்கள், கவர்ச்சிகள், விருப்புக்கள், ஆளுமை ஆகியவற்றுக்கமைய தனியாட்கள் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றனர். அவ்வாறே ஒவ்வொரு தெரிவுக்கும் தேவையான நடத்தைப் பண்புக் கோளங்களும் வெவ்வேறாக உள்ளதாகச்  சுப்பர் குறிப்பிடுகின்றார்.

• தொழில்சார் அபிவிருத்தியானது ஒருவரது வாழ்க்கைப்படுபவர்களுடன் தொடர்புறும் நீண்ட காலச்செயன்முறையாகும். 

இது 

i. வளரும் பருவம்       (14வயதுவரை)

ii. ஆராயும் பருவம் (15 – 25) 

iii. நிலைபேறடையும் பருவம் (26 – 44 வயது)

iv.செயற்படுத்தும் பருவம ; (45 – 54) 

                   மேலும் வாசிக்க -  கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

சீர்குலையும் பருவம் (65 இன்  பின்னர்) என்றும் அர்ப்பணிப்புடன் வேலை செய்து தமது தொழில் துறையில் உயரிய இடத்தைப் பெறுவதற்காக அவர் படிப்படியாக முயற்சிப்பதாகவும் சுப்பரின்  கருத்தாகும். 

தொழில் ஆலோசகர் ஒருவர் உங்களுக்கு எவ்வாறு உதவக் கூடும்? 

  • முக்கியமான கல்வித் திறன்களையும் திறமைகளையும் இனங்காணல்
  • உங்களுக்கென ஒரு சொந்தமான செயற்றிட்டமொன்றை உருவாக்குவதற்கு.
  • தொடர்ந்து கல்வியை முன்னெடுத்துச் செல்வது பற்றியும் அது உங்கள் தொழில் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பது பற்றியும் ஆராய்ந்து பார்க்க.
  •  தொழில் முன்னேற்றம் அல்லது விருத்தி காண.
  •  தொழில் செயலடைவுக் கோவை ஒன்றை உருவாக்க

நேர்காணலை ஒரு ஆலோசனை நுட்பமாகப் பயன்படுத்துவதிலுள்ள இரண்டு அனுகூலங்களையும், இரண்டு பிரதி கூலங்களையும் குறிப்பிடுக. 

அனுகூலங்கள்: 

i. ஆலோசனை கேட்கும் மாணவனின் உடற்தோற்றம், அங்க அசைவுகள் மனவெழுச்சிகளை அவதானிக்கலாம். 

ii. அவன்  கூறுவதற்கு மேலதிகமாக அவனது சொற்களால் விபரிக்க முடியாதவை விபரிக்காதவை பற்றிய ஒரு கருத்தை ஆலோசகர் பெற்றுக் கொள்ளலாம்.

iii. பிற ஊடகங்கள் மூலம் சேகரித்த தகவல்களின் உண்மை, செம்மைத் தன்மைகளைச்  சோதிக்கக் கலந்துரையாடல் உதவும்.

iv. ஏனைய நுட்ப முறைகளால் உருவாக்க முடியாத சுருக்கமான பரஸ்பர தொடர்பு இரு சாராருக்குமிடையில் உருவாக இடமுண்டு. 

vi. ஆலோசனை பெறுபவர் பற்றியதெளிவான விளக்கத்தைப் பெறலாம்.

பிரதி கூலங்கள்: 

i. அதிக நேரம் செலவாகலாம்.

ii. பெறப்படும் தகவல்கள் பக்கச்சார்பு மற்றும் அகவயத் தன்மையுடையதாக அமையலாம். உூம் இரு வேறு நேர்காணல் முறைகளில் பெறப்படும் தரவு தகவல் தொகுதிகள் இரண்டுக்குமிடையில் பாரிய வேறுபாடுகள் இடம்பெற வாய்ப்புண்டு. 

iii. ஆலோசகரின்  ஆளுமைக்கேற்ப மாணவன ; துலங்கலாம். இதனால் மறைப்புத் தன்மை இடம்பெறலாம். 

iv. ஆலோசகரின்  பயிற்சி, கேட்கும் திறனுக்கமைய தகவல்கள் சரியாக அறிக்கைப்படுத்தப்படாதிருக்கலாம். 

அவதானிப்பு அமர்வுகளை நடத்துகையில் கவனத்திற்கெடுக்க வேண்டிய காரணிகள் நான்கைத் (04) குறிப்பிடுக. 

i. அவதானிக்க முன்னர் (அ) குறிக்கோள் (ஆ) அவதானிக்க வேண்டிய நடத்தைகள் என்பவற்றை வரையறுத்துக் கொள்ளுதல்.

ii. அவதானித்தலுக்காக ஒதுக்கிக் கொள்ளும் காலம், காண்பவற்றைப் பதிவு செய்யும் முறைகள் பற்றிய ஒழுங்கமைத்தல்.

iii. ஒரு தடவையில் ஒரு மாணவரை மட்டுமே அவதானித்தல்.

iv. ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், தெரிவு செய்து கொண்ட ஒரு நடத்தையை மட்டுமே அவதானித்தல்.

v. ஒதுக்கப்பட்ட காலத்துள் முறையாகவும் தொடர்ச்சியாகவும் அவதானித்தல். ஒரு குறிப்பிட்ட மாணவரை வகுப்பறையில் கற்கும் நேரத்தில் மட்டுமன்றி விளையாட்டு மைதானம், சங்கங்கள், சுற்றுக்களில் பங்குபற்றுதல் போன்ற பல சந்தர்ப்பங்களிலும் அவதானித்தல்.

vi. அவதானித்தல் முற்றுப் பெற்றவுடன ; திரட்டிய தகவல்கள் - தரவுகளை மறக்காமல் ஒழுங்காகப் பதிவு செய்தல். 

                               மேலும் வாசிக்க -  கல்வி உளவியல்   - Click Here

,பொருத்தப் பாடடைதல் என்றால் என்ன? 

• வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கும் சூழலை உருவாக்குதலுக்கு உதவுதலை பொருத்தப்பாடடையச்  செய்தல் என்பர். 

• கற்றல் கற்பித்தல் செயன்முறையில் பொருத்தப்பாடடைதல் ஆசிரியர் மற்றும் மாணவர் ஆகிய இரு சாராரிடமும் இருத்தல் அவசியம். மனித வாழ்க்கை மீது தாக்கத்தை ஏற்படுத்தும் தனியாள் இடையிலான தொடர்புறு பிரச்சினைகள், மற்றும் சமூகம் சார் தொடர்புறு பிரச்சினைகள் அதாவது உள்ளிருந்து உருவாகும் தேவைகள் சக்திகளை நிறைவேற்றும் அதே சமயத்தில் வெளியே சமூக தேவைகள்,சக்திகளையும் திருப்திப்படுத்த முகங்கொடுக்கச் செயற்படுகின்ற உளச் செயன்முறையைப் பொருத்தப்பாடடைதல் எனலாம். மேற்படி இரண்டிற்கும் இடையில் பொருத்தப்பாட்டை ஏற்படுத்தும் உளச் செயன்முறை என்றும் கூறலாம்.

 

மாணவர் மத்தியில் மன முரண்பாடுகளையும், விரக்தியையும் தோற்றுவிக்கும் பொதுவான காரணிகளைக் குறிப்பிடுக. 

i. பொருளாதாரக் காரணியால் கல்வி பெறுவதில் ஏற்படும் பிரச்சினைகள் கல்வி முறிவடைதல்.

ii. தமது ஆசைகள், தேவைகள் ஆகியவற்றை நிறைவேற்றிக் கொள்ள முடியாமை.

iii. பெற்றோர்களுக்கிடையில் காணப்படும் எதிர்ப்புக்கள் காரணமாகத் தமக்கு தேவையான அன்பு, அரவனைப்பு, பாதுகாப்பு, கணிப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியாமை.

iv. சமூகத் திறன்களை வளர்த்துக் கொள்வதில் வசதியின்மை, தடைகள் ஏற்படுதல்.

v. பாலியல் தொடர்பான முரண்பாட்டுச் சூழல் பிரச் சினைகள்.

எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்

பொருத்தப்பாடுடைய முடியாமல் போதல் ஒரு கல்விப் பிரச்சினையா? 

i. தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முற்படும் போது எழுகின்ற பிரச்சினைகளுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கும் திறன் ஆற்றல்கள் பிள்ளைகளிடம் குறிப்பாக இல்லாமை ஒரு கல்விப் பிரச்சினையாக மாறுகின்றது. வீட்டின்  பொருளாதாரப் பிரச்சினை காரணமாகப் போதுமான உணவுத் தேவைகள் பூர்த்தியடையாமை, அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமை போன்றன. இதனால் பாடசாலை வரவு ஒழுங்கீனம், கற்றல் கற்பித்தல் செயன்முறையில் பயன்தரும் வகையில் பங்குபற்றமுடியாமை உருவாகும்.

ii. பல்வேறு சூழல்கள் காரணமாக (வீடு  பாடசாலை) மாணவனின்  உள்ளத்தில்உருவாகும் உளச் கூழலும் கல்வியைக் கடுமையாகப் பாதிக்கும். சூழல் கேள்விகளுக்கும் இயல்பான விருப்புகளுக்கும் இடையில் மோதல் ஏற்படுவதால்உளப் பிரச்சினைகள் உருவாகும்.இதை வெற்றிகரமாக முகம் கொடுக்க முடியாதவர்கள் கவலைப்படுவர், செயலிழந்து போவர், தனித்திருப்பர், கற்றலில் கவனம் காட்டமாட்டார், கற்றலில் பூரண பலன் பெறமுடியாது தவிப்பர், சிலநேரம் கோபமடைதல், பொறாமைப்படுதல், களவாடுதல், குரோதம் கொள்ளல், பழிவாங்குதல் போன்ற பிறழ்வான நடத்தைகளையும் வெளிக்காட்டலாம். இவை கல்வியில் பொதுவான பிரச்சினைகள் தோன்ற அடிப்படைகளாக அமையும். 

பொருத்தப்பாடான ஆளுமைகளைக் கட்டியெழுப்புவதால் காணப்படுகின்ற பொதுவான பிரதான தடைகளைச்  சுருக்கமாக குறிப்பிடுக. 

i. நனவலிக் காரணி:- இதன் செல்வாக்கு உளத்தடைகள் ஊடாக சிக்கலான தன்மைகள் உருவாக்கி மோதல் முரண்பாடுகளை ஏற்படுத்தி ஆளுமையைப் பாதிப்பை உருவாக்கலாம். 

ii. குடும்பக் காரணி:- குடும்ப பிரிவு –பிளவுகள், தாய் தந ;தை முரண்பாடுகள், நோய்ப்பாதிப்பு என்பன பிள்ளையிடத்தும் உளவியல் பாதிப்பு – மன அழுத்தங்கள் உருவாக்கலாம்.

iii. வாழ்க்கை நெருக்கிடைகள்சார் காரணி - இவை குடும்பச்சூழல் , பாடசாலைச்  சூழல் காரணமாக அன்றாடம் பிள்ளையிடத்து நெருக்கிடைகளை ஏற்படுத்தும்.

iv . பதகளிப்பு சார்ந்த காரணி:-உள் முரண்பாடுகள் - வெளித்தொல்லைகள் காரணமாக பதகளிப்பு எனும் சிக்கலான மனவெழுச்சி ஆளுமை பாதிக்கும்.

v . உடலியற் காரணி:- இயல்பான உடல் வளர்ச்சி குறைவு, எலும்புகளின் அமைப்பும், சுரப்பிகளின் தொழிற்பாடும், மரபணுக் காரணிகள் போன்றவற்றின்  தாக்கம் ஆளுமையைப் பாதிக்கும்.

    தமிழ் இலக்கணம் click Here

பொருத்தப்பாடுடைய ஆளுமையை விருத்தி செய்வதில் பாடசாலை ஒழுங்கமைப்பு உதவக் கூடிய ஐந்து வழிமுறைகளைக் குறிப்பிடுக. 

i. வகுப்பறை, பாடசாலைச் சூழலை பொருத்தப்பாடான ஆளுமை விருத்திக்கு வழிவகுக்கும் வகையில் அமைக்க – பாடசாலைச் சூழல் விருப்புடையதாக அமைத்தல் - வகுப்பறைச்  சூழலை சாதகமாக ஏற்படுத்தல்.

ii. மாணவர்களை அன்புடன் கருணையுடன்,விளங்கிக் கொண்டு நடத்தல் - அவ்வாறான முறையில் அணுகுதல்.

iii. அவர்களது நிலைமைகளுக்கான தன்மையை இனங்கண்டு தீர்வுகள் வழங்க முடியுமையின் உடனடியாகச்  செயற்படுத்தலும், வழிப்படுத்தலும்.

iv. நன்நடத்தைகள் பற்றிய ஒரு பட்டியலை பாடசாலையில், குறிப்பாக வகுப்பறையில்  காட்சிப்படுத்தலும் - நினைவூட்டலும். 

vi மாணவனின்  நல்ல வெளிக்காட்டல்களுக்கு கணிப்புக் கொடுத்தல்,பாராட்டுதல், பரிசு கொடுத்தல் போன ;றவை.

vi. கற்றல் இடர்ப்பாடுகள் தவிர்க்கும் முகமாக பொருத்தமான நடவடிக்கைகள் வகுப்பறையில் மேற்கொள்ளுதல் - மீளவலியுறுத்துதல்.

 

வகுப்பறையில் உங்கள் அவதானத்திற்கு உட்படக் கூடிய மாணவர்களின் நடத்தைப் பிரச்சினைகளுக்கு காரணமாக அமையக் கூடிய இரண்டு காரணிகளைப் பெயரிடுக. 

குடும்பம்சார் காரணிகள்:- 

  • தாய் தந்தைக்கும் இடையில் மோதல், முரண்பாடு ஏற்படுதல்.
  • தகப்பனின்  தலைமைத்துவம் தாயினால் ஏற்கப்படாமை.
  • தாய் அல்லது தந்தை குடும்பத்திற்கு வெளியே காதல் கள்ளத்தொடர்பு வைத்திருத்தல்.
  • தந்தையின்  முரட்டுத்தனமான போக்கு.
  •  தாய் அல்லது தந்தையின்  ஆளுமைக் குறைபாடு.
  • தாய் அல்லது தந் தை அல்லது இருவரும் உள நோயால் பாதிக்கப்பட்டிருத்தல். 
     மேலும் வாசிக்க -  கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

 பாடசாலை சார் காரணிகள் 

  • பாடசாலைச்  சூழல் பொருத்தமற்றிருத்தல் - வளக்குறைபாடுகள்
  • நீண்ட  காலம் கற்றுக் கொண்டிருக்கும் பாடசாலையை மாற்றுதல்.
  • பாடப் பொருள் - கற்பித்தல் முறையை கவர்ச்சிகரமாக ஃ பொருத்தமாக அமையாமை.
  • ஆசிரியரின் சர்வாதிகாரப் போக்கு – அழுத்தங்கள்
  • முரட்டுத்தனமான பிள்ளைகளுடன் கற்க நேரிடுதல்.
  • தனது நல்ல நன்பன், நண்பி நீண்ட கால நோயாளியாதல் - அல்லது மரணித்தல்.
  • விருப்பத்திற்குரிய வகுப்பறைச ; சூழல் - ஆசிரியர் - சகபாடிகள் அமையாமை.

Post a Comment

0 Comments