எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்
![]() |
Guidance and Counseling |
21. ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை ஆலோசகர் ஒருவர் நேரடியாக தீர்த்து உதவக் கூடிய பிரச்சினைகள் சிலவற்றைக் குறிப்பிடுக.
கற்றல் இடர்பாடுகள் - கற்றற் குறைபாடுகள்
பார்த்தல், கேட்டல், பேச்சுக் குறைபாடுடைய பிள்ளைகள் நோக்கும் பிரச்சினைகள்.
பாடசாலையில், வகுப்பில் பொருத்தப்பாடடைவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள்.
சாதாரண உளவியல் ரீதியான குறைபாடுகள்.
கற்றலில் பாதகமான தாக்கத்தை உண்டு பண ;ணும் பொருளாதாரக் கஷ்டங்கள்.
அதி தொழிற்பாட்டு நடத்தை, அழித்தல் சார்ந ;த நடத்தை, சமூகத்திலிருந ;து
பின்வாங்கல் போன்ற சாதகமற்ற நடத்தைகள்.
மேலும் வாசிக்க - கல்வியியல் கட்டுரைகள் - Click Here
22. இடைநிலை பாடசாலை மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் கல்விசார் பிரச்சினைகள் யாவை ?
பாடத்தில் கவனம் செலுத்த முடியாமை.
கற்றல் செயற்பாடுகளில் ஆர்வம் குறைவு.
கற்றவற்றை நினைவிலிருத்திக் கொள்வதில் கஷ்டம்.
பாடப்பிரிவை தெரிவு செய்வதில் உள்ள சந்தேகம்.
வாசித்தல், எழுதுதல் போன்றவற்றிலுள்ள கஷ்டம்.
பாடசாலைக்குச் செல்வதில் நாட்டமின்மை, சோம்பல்தன்மை.
பரீட்சை பற்றிய பதற்றம் - பயம் ஆகியவை.
23. பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை (School guidance counseling ) சேவையொன்று பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டல்கள்
வழிகாட்டல் ஆலோசனைச் சேவை தொடர்ச்சியானதாக இருத்தல் வேண்டும்.
முக்கியமான நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு ஆரம்பப் பாடசாலையிலிருந்து தொடர்ச்சியாக இடைநிலை, அதற்கு அப்பாலும் சேவை ஒழுங்கமைக்கப்படுதலும்
செயற்படுதலும் நடைபெற வேண்டும். ஒழுங்கில் உருவாக்கப்பட்ட பெற்றோரின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதாக தொடர்ச்சியாக அமைய வேண்டும்.
சேவை நெகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும்.
மாணவர் தேவைகள், பாடசாலை அமைவிடம், பிரதேச சூழல், சமூக அமைப்பு, சமூக, பௌதீக வளங்களுக்கு அமைவாக நெகிழ்ச்சித் தன்மையுடையதாக அமைய வேண்டும்
சேவை ஒரு கற்றற் செயன்முறையாக இருக்க வேண்டும் அதனைப் பெற்றுக் கொள்வதற்கும் - பொருத்தமான மனப்பாங்குகளை வளர்த்துக்கொள்வதற்கும் உதவுதல் வேண்டும்.
கற்றற் செயன்முறையாவதற்குத் தேவையான சூழலைப் பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை ஒழுங்கமைப்பு கட்டியெழுப்ப வேண்டும்
கற்றல் சந்தர்ப்பங்களை அமைத்து உதவ வேண்டும்.
எல்லா முயற்சிகளும் ஒருங்கிணைந்ததாக இருத்தல் வேண்டும்.
சேவை ஒழுங்கமைப்புடன் தொடர்புபட்ட எல்லா முயற்சிகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்
எல்லோருக்குமிடையில் ஓர் இணைப்பு அவசியம்.
எளிமையான ஒருங்கமைப்பு, சுதந்திரமான – ஜனநாயக ரீதியில் இயல்பு நிலை, பொருத்தமான நபர்கள், மனப்பூர்வமான பங்களிப்பு தேவை.
பாடசாலை சூழலுடன் இடைத் தொடர்பு பேணல் பாடசாலை குறிக்கோளுடனான ஒன்றிணைப்பு பேணப்படல் வேண்டும்.
24. பாடசாலை சேவையொன்றில் ஒழுங்கமைப்பு முறைகள் எவ்வாறு அமையலாம் என்பது பற்றிக் குறிப்பிடுக.
ஒன்றிணைக்கப்பட்ட (மைய நாட்ட) முறை.
பரவலாக்கப்பட்ட (மைய நீக்க) முறை.
ஒன்றிணைக்கப்பட்டதும் பரவலாக்கப் பட்டதுமான பண்புகள் கலந்த முறை.
மேலும் வாசிக்க - கல்வி உளவியல் - Click Here
25. ஒன்றிணைக்கப்பட்ட வழிகாட்டல் ஆலோசனைச் சேவையின் அனுகூலங்கள், பிரதிகூலங்கள் எவை?
அனுகூலங்கள்:
எல்லா மாணவர்களுக்கும் சேவைகளை வழங்க முடித்தல்.
சேவையின் ஒழுங்கு முறைமை – சீராக அமைதல்.
பின்னூட்டல் மூலம் சேவையை அபிவிருத்தி செய்தல்.
வினைத்திறனுடன் செயற்பட முடியும்.
பிரதிகூலங்கள்:
பாடசாலையிலுள்ள எல்லா ஆசிரியர்களும் அதில் சிறப்புடன ; பங்குபற்ற முடியாமை.
நிர்வாக, நடத்தைச் செயல்கள் அதிகமாகத் தேவைப்படுதல்.
அதிபர் மட்டுமே பொறுப்பேற்று நடத்துவதில் சர்வாதிகாரப் போக்கு காணப்படல்.
26. பரவலாக்கப்பட்ட வழிகாட்டல் ஆலோசனைச் சேவையின் நன்மை, தீமைப் பற்றி குறிப்பிடுக.
நன்மைகள்:
பொதுவாக சகல ஆசிரியர்களிடமும் வழிகாட்டல் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.
சனநாயகத் தன்மை பேணப்படும்.
செலவுக் குறைகள் ஏற்பட இடமுண்டு.
தீமைகள்
விசேடத்துவ சேவை இல்லாது இருத்தல்.
இனங்காணப்படும் நிருவாகமும் ஒருங்கிணைக்கப்பட்ட முறை போன்று வினைத்திறன் மிக்கதாக அமையும்.
மேலும் வாசிக்க - கல்வியியல் கட்டுரைகள் - Click Here
27. பாடசாலை வழிகாட்டல் சேவையில் ஓர் அதிபரின் வகிபங்கு பற்றிக் குறிப்பிடுக.
செயற்பாடுகளை ஒன்றிணைத்தல்.
பல்வேறு அதிகாரிகளுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தல்.
உரிய வளங்களைத் தேடுவதும், வழங்குதலும்.
சேவை தொடர்பானதீர்மானங்களை எடுத்தல்.
செயற்பாடுகளைத் திட்டமிடுதலும், செயற்படுத்தலும்.
மாணவர், ஆசிரியர் பெற்றோர் மத்தியில் சாதகமான விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
சேவையில் ஒருங்கிணைப்பாளராகச் செயற்படுதல்.
மேலும் வாசிக்க - கல்வி தத்துவம் ( Academic essays) - Click Here
28. பாடசாலை ஆலோசனைச் சேவையில் ஆசிரியர் ஒருவரின் வகிபங்கு, பொறுப்புகள் எவை?
இது பாடசாலை ஆலோசனைச் சேவை ஒருங்கமைப்பு அடிப்படையில் சற்று வேறுபடக் கூடும். எனினும் பொதுவாக, ஆலோசனை தேவைப்படும் மாணவரை இனங்காணல்.
அம்மாணவர் பற்றிய விபரங்களைச் சேர்த்தல் - ஆலோசனை வழங்குதல்.
பதிவேடுகளைப் பேணல்.
அதிபர் - பிற ஆசிரியர், பெற்றோர்,வெளியிலுள்ள வாண்மையாளர்கள், நிறுவனங்களுக்கிடையில் தொடர்புகளைப் பேணல்.
பாடசாலைச் சேவை பற்றிய விழிப்புணர்வை மாணவர்,ஆசிரியர், பெற்றோர் மத்தியில் ஏற்படுத்துதல்.
பொருத்தமான பயிற்சி ஆலோசகரிடம் மாணவரை அனுப்புதல்.
பின்னூட்டல் வழங்குதல்.
29. பாடசாலை வழிகாட்டல் ஆலோசனைச் சேவையில் நடைமுறையில் உள்ளதும் மிகப் பொருத்தமானதுமான ஆலோசனைச் சிகிச்சை முறைகளுக்கான அணுகு முறைகள் -( Approaches to learning )
1. உளப்பகுப்பாய்வு அணுகு முறைகள்.
2. தனியாள்மைய அணுகு முறைகள்.
3. நடத்தைவாத அணுகு முறைகள்.
4. பகுத்தறிவுவாத அணுகு முறைகள்.
5. இருத்தலியல் அணுகு முறைகள்.
30. ஆலோசனைச் சேவை பற்றிய கொள்கைகளுள் ஒன்று தனியாள் ஒருவரிடம் மூன்று பரிமாணங்கள் உண்டு எனக் கூறுகின்றது. இக்கொள்கையையும் இக்கொள்கையில் குறிப்பிட்டுள்ள மூன்று (03) பரிமாணங்களின் பெயர்கள்
இருத்தலியற் கொள்கையாகும். இதில் கூறப்பட்டுள்ள மூன்று பரிமாணங்களாவன.
உயிரியல்
உளவியல்
ஆன்மீகம்
என்பவை.
எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்