தொடர் மொழிக்கு ஒரு மொழி

தொடர் மொழிக்கு ஒரு மொழி
தொடர் மொழிக்கு ஒரு மொழி


            எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்


பாகம்  1 


மேலும் வாசிக்க -  கல்வியியல் கட்டுரைகள்  - Click Here


பாகம் 2 
 


 1. அகர வரிசைப்படி சொற்களுக்குப் பொருள் தருவது - அகராதி
 2. தாய் தந்தையரை இழந்தவன் - அநாதை
 3. சிறைத் தண்டனை பெற்றவன் - கைதி . ஒருவர் ஒரு பொருள் தன் கதையைக் கூறுவது - சுயசரிதை
 4. வழக்கைத் தாக்கல் செய்ப்பவன் - வாதி .
 5. வழக்கில் குற்றம் சாட்டப்படுபவன் - பிரதிவாதி .
 6. சுதந்திரமற்று வாழ்பவன் - அடிமை
 7. அரண்மனையில் பெண்கள் வாழுமிடம் - அந்தப்புரம்
 8. வீண் செலவு செய்ப்பவன் - ஊதாரி
 9. தேர்தல் ஒன்றில் போட்டியிடுபவன் - வேட்பாளர்
 10. நடக்க இருப்பவற்றை முன்கூட்டியே கூறுபவன் - தீர்க்கதரிசி
 11. விசாரணை முடிவில் நீதிபதியால் வழங்கப்படுவது - தீர்ப்பு
 12. முனிவர்கள் (துறவிகள்) வாழுமிடம் - ஆச்சிரமம்
 13. நூலுக்கு இன்னொருவரால் வழங்கப்படும் உரை - அணிந்துரை .
 14. மற்றவர்களைப் பற்றி அக்கறையில்லாதவன் - சுயநலவாதி
 15. அறிஞர் பலர் முன்னிலையில் புதிதாக அல்லது முதல்முதலில்
 16. நூலையோ, கலை நிகழ்ச்சியையோ செய்தல்- அரங்கேற்றம் .
 17. வயோதிபம் அடையாமல், எதிர்பாராமல் இறத்தல் -அகாலமரணம்
 18. ஒரேநேரத்தில் எட்டு விடயங்களை அவதானிக்கும் ஆற்றல் படைத்தவன்- அட்டாவதானி
 19. மாலையில் அல்லது இரவில் கூடும் சந்தை- அல்லங்காடி
 20. உலக நடையறிந்து ஒழுகுதல்- ஒப்புரவு
 21. ஒருவர் இறந்த பின் அவரின் உறவினர் (பெண்கள்) அவரை நினைத்து புலம்பி அழுதல் - ஒப்பாரி
 22. மேடையேற்றுமுன் எந்த நிகழ்ச்சியையும் சரி பிழை பார்த்தல் - ஒத்திகை
 23. தனக்கான உணவை வேறோர் பிராணியிடமோ, தாவரத்திலோ இருந்து உறுஞ்சி வாழுவது - ஒட்டுண்ணி
 24. ஐந்து உணர்வுகள் - ஐம்புலன்
 25. தாமே எல்லாப் பொருளையும் அனுபவித்தல் - ஏகபோகம் • ஆணோ, பெண்ணோ அல்லாதவர் - அலி
 26. ஒருவருக்குரிய சொத்துக்கள் - ஆதனம்
 27. தாமே தமது நோய்க்கு செய்யும் மருந்து - கைம்மருந்து
 28. ஒருவரிடம் தன்னை ஒப்படைத்தல் - சரணாகதி
 29. சமயப்பணி செய்யும் இடம் - ஆதினம்
 30. புத்தக வடிவில் வரும் பத்திரிகை - சஞ்சிகை
 31. அறிஞர் கூடி வாதிடும் களம் - பட்டிமன்றம் .
 32. ஒருவர் தோன்றி மறையும் வரையுள்ள காலம் - தலைமுறை
 33. கடற்கரையில் மீன் பிடித் தொழிலாளர் தங்கி இருக்கும் இடம் -வாடி
 34. கடவுளுக்கோ பெரியோருக்கோ சமர்ப்பிக்கப்படும் பொருள் - காணிக்கை
 35. கொலை, களவு, கள், காமம், குருநிந்தை எனும் ஐந்தும் - பஞ்சமாபாதகம் .
 36. அனைத்து உடைமைகளையும் இழந்தவன் - அகதி
 37. போர் வீரர் அணியும் பாதுகாப்புக் கருவி/உடை - கவசம்
 38. ஒருவருக்கு ஏற்பட்ட நட்டத்துக்கு வழங்கப்படும் பணம் - நட்டஈடு .
 39. பிள்ளை இல்லாது இருப்பவள் - மலடி
 40. இறந்தவர்களுக்குச் செய்யப்படும் கடன்கள் - பிதிர்க்கடன்
 41. கற்று மணம் முடிக்காது இருப்பவன் - பிரமச்சாரி
 42. குழைந்தை உறங்கப்பாடும் பாட்டு - தாலாட்டு . ஏற்றுமதி / இறக்குமதிப்
 43. பொருட்கள் மீது விதிக்கப்படும் வரி - சுங்கவரி
 44. மனைவியை இழந்தவன் - தபுதாரன்
 45. கணவனை இழந்தவள் - விதவை
 46. முனிவர்கள் தவம் செய்யும் காடு- தபோவனம்
 47. ஒருவர் தன்னைப் பற்றி தானே எழுதுவது - சுயசரிதை
 48. புராதன பொருட்களைச் சேமித்து வைக்கும் இடம் - நூதனசாலை
 49. நூலாசிரியர் நூலைப்பற்றி தானே எழுதும் உரை - முன்னுரை
 50. தனது நாட்டை நேசிப்பவன் - தேசாபிமானி
 51. எதிர் காலத்தை அறியும் ஆற்றல் படைத்தவன் - தீர்க்கதரிசி
 52. நிலத்தின் கீழ் அமைக்கப்படும் வழி - சுரங்கம்
 53. பல விடயங்களைத் திரட்டித் தரும் நூல் - கலைக்களஞ்சியம்
 54. ஒருவராலும் படைக்கப்படாமல் தாமே தோன்றுவது - சுயம்பு
 55. மேலும் செலுத்தப் படவேண்டிய தொகை - நிலுவை
 56. ஒரு சொல்லையோ, சொற்றோடரையோ இருபொருள் படத் தொடுப்பது - சிலேடை

Post a Comment

3 Comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்