![]() |
Globalization |
இது பூகோளமயமாதல் கோளமயமாதல், பூகோளமயமாதல், அகிலமயமாதல், பூகோள கிராமம் ஆகிய பதங்களால் அழைக்கப்படுகின்றன. பூகோளமயமாதல் தொடர்பாக தாக்கத்தை ஏற்படுத்தும் பிரதான காரணியாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் விளங்குகிறது. பூகோளமயமாதல் என்பது "Globalization" என்று ஆங்கில பதத்தில் கருத்துருவாக்கம் ஆகும். தமிழில் "உலகமயமாக்கம்" என்ற சொல்லும் சில தருணங்களில் Globalization என்று ஆங்கில பதத்தின் ஊடாக பயன்படுத்துவதுண்டு. இவ் சொற்பதங்கள் இரண்டிலும் பொருள் வேறுபாட்டை கவனிக்க முடியும். பூகோளமயமாதல் என்பது தானாக விரியும் ஒரு செயற்பாடு. பூகோளமயமாக்கம் என்பது யாரோ அதன் பின் இருந்து ஆக்குவதாக பொருள் கொள்ளப்படும்.
தென்னிந்திய இலக்கிய வரலாறு - Click Here
1981 ஆம் ஆண்டளவில் பூகோளமயமாதல் என்ற எண்ணக் கரு பொருளாதார துறையில் பயன்படுத்த தொடங்கியது. தியோடோர் டேவிட் ( Theodore Devitt) என்பவர் எழுதிய "சந்தைகளிகல் பூகோளமயமாதல்" (Globalization Of Markets) எனும் நூலில் பூகோளமயமாதல் என்பது பொருளதாரம் தொடர்பில் பயன்படுத்தப்பட்டது.
பூகோளமயமாதல் என்பது பல்வேறு நோக்கங்களில் பார்வையிடப்படுகிறது.
• வளர்ந்து வரும் நாடுகளுக்கு அதிகரித்த வாழ்க்கை தரத்தையும் வளத்தையும் கொண்டு வருகிறது. முதலாம் மூன்றாம் நாடுகளினதும் நிதி பலத்தை பெருக்க உதவுகிறது.
• பொருளியல்,சமூக மற்றும் சூழலியல் அடிப்படையில் பூலோகமயமாதலை எதிர்மறையான விரும்பத்தகாத ஒரு விடயமாக கருதுகிறது. இதன் அடிப்படையில் பூகோளமயமாதல் வளர்ந்து வருகின்ற சமுதாயங்களின் மனித உரிமைகளை நகர்த்துகிறது.
• இத்தகைய "பூகோளமயமாதல்" என்ற எண்ணக்கரு இவ்வுலகில் மற்றும் மனித வாழ்வியலில் பல மாற்றங்கள் மற்றும் பண்புகளில் சிதைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இன்றைய நவீன உலகின் முக்கிய சவால்களை பூகோளமயமாதல் மனிதன் முன்னிலையில் நிறுத்தி சென்றுள்ளது.
• இவ்வுலகமயமாதல் இன்றைய கலாசாரத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாட்டினதும் அபிவிருத்திக்கு அடிகோலிட்டு பூகோளமயமாதல் பல்வேறு வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. பூகோளமயமாதலால் கலாசார ரீதியான மாற்றம்; ஏற்பட்டுள்ளது. என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
எமது கல்வி வீடியோக்கள் பார்த்து பயன்பெற - Click Here
• பூகோளமயமாதலின் தாக்கம் உணவு, உடை, அழகு சாதன பொருட்கள், தொலைத்தொடர்பு சேவை, தொலைத்தொடர்பு சாதனங்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக வலைத்தளங்கள் போன்றன நவீனமயமாக்களுக்கு உட்பட்டு மாற்றமடைந்து வருகிறது.
இன்றைய நவீன உலகில் மக்களது உடைகளில் பல மாற்றங்கள் உள்வாங்கப்பட்டுள்ளது. முக்கியமாக டெனின் கலாசாரம் ஆரம்பித்தமைக்கு இப்பூலோகமயமாதல் முக்கிய காரணமாகிறது. உடைமட்டுமின்றி உணவிலும் உலகமயமாக்கம் தனது செல்வாக்கை செலுத்தியுள்ளது. "உடனடி உணவு" என்ற சொற்பதம் உலக மக்களிடையே பிரசித்தம் அடைய ஆரம்பித்தது. முகுஊஇ Pணைணய-ர்ழவஇ டீரசபநச போன்ற நிறுவனங்கள் விநியோகிப்பதுடன் இவ்நிறுவனங்கள் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்தது.
இன்றைய நவீன இயந்திரமான மனித உலகில் உடனடி உணவுகள் கடவுள் போன்று வரம் தருபவையாக அமைகிறது. Pணைணயஇ டீரசபநசம ழேழனடைநள போன்ற உணவுகள் இன்றைய அவசர உலகில் நண்பனாக அமைகிறது. பூகோளமயமாதல் மனிதனின் சகல விடயங்களிலும் தன் ஆதிக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இன்றைய உலகில் ஒவ்வொருவரும் தன்னை அழகுப்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர்.தன்னை அழகுப்படுத்திக் கொள்ள தேவையான சகல வசதிகளையும் இவ்அழகு சாதன பொருட்கள் வழங்குகின்றன. அதோடு இன்றைய நவீன உலகில் உட்கட்டமைப்பு மீதும் அதிக கவனம் செலுத்தப்படுகின்றன.
உலக விடயங்கள், பொது அறிவுகள் மற்றும் கல்வித் தொடர்பான உள்;ர் மற்றும் சர்வதேச விடயங்களை அறிந்து கொள்வதற்கு வேறுபட்ட அலைவரிசைகள் தனித்தனியாக காணப்படுகிறது. இதுமட்டுமன்றி பூகோளமயமாதல் இன்று சமூக வலைத்தளங்களில் பாரிய பங்களிப்பினை செய்கிறது. பூகோளமயமாதலால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மேன்மையடைந்துள்ளது. இதனால் புதிய உலக யதார்த்தம் உணரப்பட்டது இவ்வுலகம் கைத்தொழில் சமூகத்தில் இருந்து விடுப்பட்டு தொழில்நுட்ப சமூகத்தில் கை கோர்த்துள்ளது. இவ் தொழில்நுட்ப வளர்ச்சி ஆழமான சமூக, பொருளாதார, அரசியல் மாற்றத்திற்குள்; உலகினை கொண்டுள்ளது. இதுவும் பூகோளமயமாக்களின்; தாக்கம் ஆகும்.
கல்வியியல் கட்டுரைகள் - Click Here
இப்பூகோளமயமாக்களின் காரணமாக பல பாதக நிலைகள் காணப்படுகிறது. பாரம்பரியமிக்க கலாசாரம், போசனை உணவு உட்கொண்ட மனிதன் தற்போது உடனடி உணவு பிரபல்யம் கொண்ட உணவு விடுதிகளில் உணவு உண்ணுதல் என்பவற்றிற்கு இன்றைய சமூகம் அடிமையாகி உள்ளது. இன்றைய இளைஞர் மற்றும் முதியோர் சமூகம் வரை உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் பொதி செய்யப்பட்ட உணவுகள் பக்கற்களின் உணவுகள் என்பவற்றை விரும்பி வாங்கி உண்ணும் பழக்கம் பூகோளமயமாதலின் பாதிப்பு ஆகும். நவீனத்துவம் போர்வையில் சிக்கித் தவிப்பதும் இவ்வுலகமயமாதலின் தாக்கமாகும் இன்றைய இளைஞர்கள் தம் அழகினை இரசாயன கலவை கொண்ட பதார்த்தங்களினால் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டு வருவதை காணலாம்.
இன்று அதிகமானோர் மத்தியில் மருந்து வில்லைகளின் பாவணையை காணலாம். இன்றைய சமூகம் சிறிய தலைவலிக்கு கூட வில்லைகள் பயன்படுத்துகின்றன. பூகோளமயமாதல் என்பது பல மாற்றங்களை ஏற்படுத்தினாலும் நன்மைகளும் தீமைகளும் கலந்து தான் செயல்படுகிறது. இவ் மாற்றங்களையும் அதனால் எதிர்வு கூறும் சவால்களையும் எதிர்த்து இன்றைய மனித சமூகம் போராட வேண்டி இருக்கிறது.
எவ்வாறாயினும் பூகோளமயமாக்கல் காலப்போக்கில் பல தொடர்ச்சியான நன்மைகள் மற்றும் தீமைகளை உருவாக்கியுள்ளது. மனித உறவுகள் வலுப்பெற்றுள்ளன, பொழுதுபோக்கு வாய்ப்புகள் விரிவடைந்துள்ளன, தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்துள்ளதோடு தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் உடனுக்குடன் தகவல்களை அறிந்து கொள்ளவும் துணை புரிகிறது. பொருளாதார ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தியுள்ளதுடன் வளர்ந்த நாடுகளில் வேலையின்மையும் அதிகரித்துள்ளது. காரணம் பன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளில் அலுவலகங்களையும் திறக்கின்றன. ஏனெனில் அங்கு கிடைக்கும் உழைப்பு மற்றும்; மூலப்பொருட்கள் மலிவானவை என்பதனால் வளரும் நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் பல அறிமுகம் செய்யப்படுகின்றன. நாடுகளுக்கு இடையிலான தொடர்புகள் அதிகரிப்பதன் விளைவாக தேசிய அடையாளம்,பண்பாடு, கலாச்சாரம் என்பவற்றில் கலப்பு ஏற்படுகிறது. இதனால் பழங்குடி மரபுகள், பழக்கவழக்கங்கள் மாற்றமடைகின்றன. சமூக சமத்துவமின்மை ஏற்படுகிறது.
பூகோளமயமாதலால் இன்று பண்பாடு மற்றும் தனித்துவம் என்பன மாற்றம் அடைந்து வருவதை காணக்கூடியதாய் உள்ளது. என்னதான் மாற்றங்கள் எதிர் வந்த போதிலும் நமது மக்கள் நமது பண்பாட்டை இழத்தல் ஆகாது. குறிப்பாக மேலை நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும்; நம்மவர்கள் நமது பண்பாட்டை பேணிக்காப்பவர்களாக விளங்க வேண்டும். ஆகவே எங்கும் எதிலும் நன்மை தீமை இரண்டும் கலந்தே இருக்கும் என்பதை உணர்ந்து உலகத்தோடு ஒத்து வாழ்வோம் நமது தனித்துவத்தை பேணி காப்போம்
கஜேந்திரன் நிரோஷனி
ஆசிரியர்
கல்வி உளவியல் - Click Here
எமது கல்வி வீடியோக்கள் பார்த்து பயன்பெற - Click Here
கல்வியியல் கட்டுரைகள் - Click Here
எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்