சமூக நகர்வை தூண்டும் காரணிகள்


எல்லா சமூகங்களும் அதன் அங்கத்தவர்களுக்கு சமூக நகர்விற்கான சந்தர்ப்பங்களை வழங்கிய போதும், சமமான சந்தர்ப்பம் எல்லா அங்கத்தவர்களுக்கும் கிடைப்பதில்லை. திறந்த வர்க்க சமூகங்களில் (Open class society) கூட மேல் நோக்கிய சமூக நகர்வு சமமாக இருப்பதில்லை. கீழ் வர்க்க சமூகங்களில் வாழும் சிறுவர்களுக்கு வழங்கப்படும் கல்வி வசதிகளை விட மத்திய தர வகுப்பு சிறுவர்களுக்கு, மேல் நோக்கி நகர்வதற்கான கல்வி வசதிகள் அதிகமாக வழங்கப்படுவதனை இதற்கு உதாரணமாக காட்டலாம்.

சமூக -நகர்வை  -தூண்டும் -காரணிகள்
சமூக பெயர்வு,

ஒரு சமூகத்தில் காணப்படும் கட்டமைப்பு காரணிகள் (structural factors) கூட சமூக நகர்வில் பங்களிப்புச் செய்கின்றன. பாகுபாடுகளுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகள் இவற்றில் முக்கியம் பெறுகின்றன. இத்தகைய சட்டங்கள் கீழ் வர்க்கத்தினரையும் தலித் மக்களையும் காப்பதோடு சமூக நகர்விற்கான சந்தர்ப்பங்களையும் வழங்குகின்றன. கட்டமைப்பு காரணிகளுடன் தனிநபர் காரணிகளும் (Indiviual factors)

 ஒரு தனியனின் உயர் அந்தஸ்து நிலையைத் தீர்மானிக்கின்றன. ஆற்றலுள்ள செயற்திறனுள்ள தனியன்கள் அவை அல்லாத தனியன்களை விட அதிக அந்தஸ்தை அடைந்து கொள்கின்றார்கள். ஒரு தனிநபருக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களும் அவனின் ஆற்றல்களும் சமூக நகர்விலும் அதன் வேகத்திலும் தாக்கம் செலுத்துகின்றன.

1. கல்வி

சமூக நகர்வைத் தூண்டும் முக்கியமானதொரு கருவியாகவும் சமூக கட்டமைப்பில் மேல் நோக்கிய நகர்வை கொண்டு செல்லும் ஏணியாகவும் கல்வி தொழிற்படுகிறது. உயர் பதவிகள் மூலம் பலர் சமூகத்தில் உயர் அந ;தஸ்தை பெற்றுக் கொள்ளவும் வாழ்வில் முன்னேற்றங்களை அடைந்து கொள்ளவும் கல்வி ஒரு மந்திர சக்தியாக  தொழிற்படுகிறது. அதனால்தான் கல்வியை அறிவைப் பெற்றுக் கொள்வதற்கான மூலமாக மாத்திரமன்றி உயர் அடைவை பெறுவதற்கான அற்புத வழியாகவும் அறிஞர்கள் கருதுகின்றார்கள். சாதியிலும் வர்க்கத்திலும் கீழ்நிலையிலுள்ளோருக்கு அவர்களின் அந்தஸ்தை அதிகரித்துக் கொள்ளவும் உயர்வை பெற்றுக் கொள்ளவும் கல்வியே முக்கிய கருவியாக கை கொடுக்கின்றது.

  சமூக அடுக்கமைவு - மேலதிக தகவல்கள் 

நவீன கைத் தொழில் சமூகத்தில் ஒருவர் பெற்றுக் கொள்ளும் தொழிலின் தராதரம் அவர் கொண்டிருக்கும் கல்வியின் தராதரத்திலேயே தங்கியிருப்பதனால் மேல் நோக்கிய சமூக நகர்வில் கல்வி முக்கிய பாத்திரம் வகிப்பதாக சமூகவியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அமெரிக்க சமூகத்தில் தந்தையை விட அவரது மகன் உயர் சமூக அந்தஸ்த்தை நோக்கி நகர்கின்றான் என்றால் அது மகன் பெற்றுக் கொண்ட கல்வியின் உயர் அடைவினாலேயே சாத்தியமாகின்றது என பீட்டர் பிளா மற்றும் ஒடிஸ் டங்கன் (Peter Blau and Otis Duncan) குறிப்பிடுகின்றார்கள். மறுபுறம் குறைந்த கல்வித் தரம் கொண்ட மக்களுக்கும் அவர்களது சமூக நகர்வின் தன்மைக்கும் தொடர்பிருப்பதனையும் சமூகவியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள். குறைந்த கல்வித் தரம் சமூக நகர்வின் வாயிலை திறந்துவிடுவதில் கட்டுப்பாட்டை விதிக்கின்றது.

பாரம்பரிய சமூக அடுக்கமைவு முறைமையை கண்டிப்பாக பின்பற்றி வரும் சமூக அமைப்பில் கல்வியானது அச் சமூகத்தில் காணப்படும் சமமின்மைகளை உடைத்து விடுவதில் ஓரளவு பங்களிப்புச் செய்கின்றது. முறைசார் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பின் சாதி முறையின் ஆதிக்கத்திற்குட்பட்டு குறைந்த அல்லது மத்திய சமூக அந்தஸ்த்தைக் கொண்ட மக்கள் உயர் சமூக அந்தஸ்த்தை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கின்றார்கள்.

கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

கல்வியும் சமூக நகர்வும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த ஒன்று. வளர்ச்சியை தூண்டிவிடவும் பின்னடைவை அகற்றி விடவும் கல்வி சக்தி பெற்றிருக்கின்றது. உயர்நிலை மற்றும் உயர் அந்தஸ்த்து போன்றவற்றை நோக்கி தனிநபர்களை தூண்டி விடுவதில் கல்வி மகத்தான ஒரு கருவியாகும். சமூகத்தில் உயர்நிலையை அடைந்து கொள்ள முனையும் ஒருவர் கல்வியை பெற்றுக் கொள்ள முண்டியடிப்பதை அதிகம் காணலாம்.

எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்

கல்வியின் அளவு (Amount of Education)

ஒருவர் பெற்றுக் கொள்ளும் கல்வியின் அளவைப் பொறுத்து அவரின் சமூக அந்தஸ்த்தின் அளவும் வேறுபடுகின்றது. பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரை விட பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு அதிக அந்தஸ்த்தும், பேராசிரியர் ஒருவருக்கு  அந்தஸ்த்தும் சமூகத்தால் கொடுக்கப்படுகின்றது. இந்தக் கல்வியின் அளவு பல்வேறு முன்னேற்றங்களை அதன் உறுப்பினர்கள் மீது ஏற்படுத்தி விடுகின்றது.

பாடத்திட்டம் (Educational Curriculum)

சமூக நகர்விற்கும் பாடத்திட்டத்திற்கும் தொடர்பிருப்பதாக கல்வியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். ஒவ்வொரு கற்கைக்கும் ஒவ்வொரு பெறுமதி இருக்கின்றது. பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற விஞ்ஞானம் சார்ந்த பாடங்கள் ஏனைய சமூக விஞ்ஞானப் பாடங்களைவிட முதன்மையானதாக சமூகத்தால் கருதப்படுகின்றன. இதனால் சமூக விஞ்ஞானிகளை விட இயற்கை விஞ்ஞானிகளுக்கு சமூக அந்தஸ்த்து ஒப்ப்Pட்டு ரீதியில் அதிகமாக காணப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

கல்வியடைவு (Academic Achievement)

கல்வியடைவிற்கும் சமூக நகர்விற்கும் தொடர்பிருக்கின்றது. சில மாணவர்கள் உயர் அந்தஸ்த்தை சில கற்கைகளில் சிறப்புத் தேர்ச்சி, பாண்டித்தியம் மற்றும் ஆராய்ச்சி போன்ற கல்வி அடைவு மட்டங்கள் மூலம் பெற்றுக் கொள்கின்றார்கள்.

கல்வி நிறுவனங்களின் முக்கியத்துவம்

நன்மதிப்பு பெற்ற பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிறுவனங்களில் கற்ற மாணவர்களுக்கு ஏனைய கல்வி நிறுவனங்களில் கற்ற மாணவர்களை விட அதிக மதிப்பும் மரியாதையும் அந்தஸ்த்தும் கிடைக்கின்றது. பல பொழுதுகளில் தொழிலுக்கான நேர்முகப் பரீட்சையில் கூட இவ்விடயம் கருத்தில் கொள்ளப்படுகின்றது.

2. தொழிலும் பொருளாதார செயல்களும்

தந்தை செய்த தொழிலிருந்து தனயன் வேறு தொழில் செய்யும் போதும், தான் செய்த சாதாரண தொழிலிருந்து வேறு தொழிலை செய்யும் போதும், ஒரே தொழிலில் பதவி உயர்வு கிடைக்கும் போதும், தொழிலில் முதுநிலையை அடையும் போதும் சமூக நகர்வு இயல்பாக தூண்டப்படுகின்றது. சமூக நகர்விற்கான சந்தர்ப்பங்களை பொருளாதார நடவடிக்கைகள் வழங்குகின்றன. இந் நடவடிக்கைகள் மூலம் கிடைக்கும் வருமானம் மேல் நோக்கிய சமூக நகர்வை தூண்டுகின்றன.

3. சமய நிறுவனங்கள்

சமயங்களும் சமய நிறுவனங்களும் சமூக நகர்வை முடுக்கி விடுகின்றதா அல்லது பின் தள்ளுகின்றதா என்பதில் வேறுபட்ட கருத்துக்கள் காணப்பட்ட போதும், நிலைக்குத்தான சமூக நகர்வை நோக்கி சமூகத்தை நகர்த்தி விட்டதில் சமயத்திற்கும் பங்கிருக்கின்றது என்பது மெக்ஸ் வெபர் போன்ற சமூகவியலாளர்கள் கருத்தாகும். அபரிமிதமான வளர்ச்சியுடன் கூடிய இன்றைய மேற்கு நாடுகளின் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கும் அந்நாடுகளில் வாழும் தனிநபர்களின் முன்னேற்றத்திற்கும் புரட்டஸ்தாந்து சமயத்தின் தோற்றமே காரணமென்பது அவர் கருத்து.

4. அரசியல் நிறுவனங்கள்

சமூக நகர்வை முன்னெடுத்துச் செல்வதில் அரசியல் நிறுவனங்களுக்கு பங்கிருக்கின்றன. அரசியல் வாழ்வுக்குள் நுழையும் ஒருவருக்கு கிடைக்கும் அதிகாரத்தினால் பல நிலைமாற்றங்களை பெறுகின்றார். அவர் சார்ந்த சமூக உறுப்பினர்களும் பல மாற்றங்களுக்குள் கொண்டு வரப்படுகின்றார்கள். இந்திய அரசாங்கத்தில் கொண்டு வரப்பட்ட ஒதுக்கீடு கொள்கை (Reservation Policy) தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் ஏறு நிலையை அடைந்து கொள்ள உதவியது. போர்க்களத்தில் காட்டிய அதி தீவிர அர்ப்பணங்கள் காரணமாக சாதாரண குடிமகன் கூட தேசிய வீரனாக மாறிய பல சந்தர்ப்பங்கள் வரலாற்றிலே உண்டு. அரசியல் சந்தர்ப்பங்கள் பல தனிநபர்களை பெரும் தலைவர்களாகவும் பெரும் நிர்வாகிகளாகவும் மாற்றியிருக்கின்றன. குண்டு ராவோ போக்குவரத்து கம்பெனியில் தான் வேலை செய்தார். ஆனால் அவருக்கு கிடைத்த அரசியல் சந்தர்ப்பம் கர்நாடகத்தின் முதல்வராக வலம்வர கைகொடுத்தது.

5. குடும்பமும் திருமணமும்

பீட்டர் வேர்ஸ்லி (Peter Worsley) சுட்டிக் காட்டுவது போல் மேல் நோக்கிய சமூக நகர் வை கொண்டுவருவதில் குடும்பம் பிரதானமானதொரு கருவியாக காணப்படுகின்றது. படிப்பில் அல்லது வியாபாரத்தில் பல உன்னத நிலைகளை அடைந்து சமூகத்தில் உயர் நிலையை தமது பிள்ளைகள் பெற வேண்டும் என்பதற்காக அயராது உழைக்கும் பெற்றோர் பலர் இருக்கின்றார்கள். வெளிநாடு சென்று இரவு பகலாக உழைத்து அனுப்பும் பணத்தினால் தமது பிள்ளைகள், சகோதரர்கள், குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்கள் மிளிர வேண்டும், வாழ்வு ஒளி பெற வேண்டும் என எண்ணும் உள்ளங்கள் குடும்பத்தில் பல இருக்கின்றன. கணவனின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் ஏணியாய் தூக்கி விடும் மனைவியும் குடும்பத்திலே தான் காணப்படுகின்றாள். திருமணங்கள் கூட பலரது வாழ்வில் நகர்வைக் கொண்டு வந்திருக்கின்றன. கீழ் வர்க்கத்தை சேர்ந்த ஒருவன் அல்லது ஒருத்தி, மேல்வர்க்கத்தைச் சேர்ந்த ஒருத்தி அல்லது ஒருவனை திருமணம் முடிக்கும் போது கீழ் வர்க்கத்தைச் சேர்ந்தோர் மேல் நிலை நோக்கி தள்ளப்படுவதோடு வாழ்வு முறையும் மாறத் தொடங்குகின்றது.

6. எதிர்பாராத அதிஸ்டம் (Windfall or the luck factor)

முடியுமான எல்லா வழிகளில் முயன்றும் வெற்றியின் கதவை பலரால் திறக்க முடிவதில்லை. ஆனால் சிலருக்கு அதிஸ்டம் வெற்றியின் சாவியை கையில் கொடுத்து விடுகின்றது. சிலரது முயற்ச்சி விரைவில் வெற்றிக் கனியைக் கொடுத்து விடும் அதேவேளை பலரின் முயற்சி பாலைவனத்தில் விழுந்த மழைத் துளியாய் போய்விடுகின்றது. பலரது வாழ்வில் அதிஸ்டம் மேல் நோக்கிய நகர்வை கொண்டு வரும் காரணியாகி விடுகின்றது என சில சமூகவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள். எத்தனையோ வறியவர்கள் அதிஸ்ட இலாபச் சீட்டிழுப்பின் மூலம் சமூக உயர்நிலைக்குச் சென்றிருக்கின்றார்கள்.

7. அடைவுகளும் தோல்விகளும் (Achievements and Failures)

ஒரு மனிதன் பெற்றுக் கொள்ளும் அடைவுகள் பெரும்பாலும் அவனை இன்னும் மேலே செல்லத் தூண்டுகின்றது. ஒரு அறியப்படாத எழுத்தாளன் கலையுலக விருது ஒன்றை பெறும் போது அது அவனை மேலும் தூண்டி விடுகின்றது. அதே போல் தோல்வி, அவமானம், இழப்பு போன்றவை ஒரு தனியனை கீழ் நோக்கி நகர்த்தி விடுகின்றது. சில காரணிகளால் பணத்தை இழந்து விட்ட ஒரு தனியன் உயர் வகுப்பிலிருந்து கீழ் வகுப்பை அடைவதனை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

8. திறமையும் பயிற்சியும் (Skills and Training)

ஒவ்வொரு சமூகமும் தமது இளையவர்களது திறமையையும் பயிற்ச்சியையும், விருத்தியாக்கிக் கொள்வதற்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. விருத்தியாக்கப்பட்ட திறமையும் பயிற்சியும் உயர் பதவியை அடைந்து கொள்வதற்கான உபாயமாகவும் பொருளாதார பலன்களை சந்தர்ப்பங்களையும் அள்ளி வழங்கும் அதேவேளை முன்னரிலும் படுமோசமான நிலையை அடையவும் சில நேரம் காரணமாக அமைந்து விடலாம். வறிய மக்களாக வாழ்ந்த பலர் வெளிநாடுகளுக்குச் சென்று பணத்துடன் திரும்பி வந்து நிலம் வாங்கி, வீடு கட்டி, கார் வாங்கி, காணி வாங்கி சமூக அந்தஸ்த்திலே உயர்வானவர்களாக மாறியிருக்கின்றார்கள். அதே போல் கிராமத்தில் வாழ்ந்த பலர் கொழும்பு போன்ற நகரங்களுக்கு சென்று முன்னேறியிருக்கின்றார்கள். அதேநேரம் கிராமத்தில் தொடர்ந்து வசிக்கும் அவர்களது உறவினர்கள் பலர் அதே அந்தஸ்த்தில் தொடர்ந்தும் நிலை கொண்டிருக்கின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

9. கைத்தொழில்மயமாக்கம்

கைத்தொழில் மயமாக்கம் புதியதொரு சமூக முறைமையினை (socialsystem) கட்டமைத்து,   அந்தஸ்த்தானது   ஒரு   சமூகம்   கொண்டிருக்கும்  ஆற்றலினாலும் பயிற்சியினாலும் தீர்மானிக்கப்பட வேண்டும் எனும் கருத்தை உருவாக்கியிருக்கின்றது. ஒரு திறந்த சமூக அமைப்பில் சாதி, மதம், மரபினம் (race) இனத்துவம் போன்றவை செல்லாக் காசுகளாக வலுவிழந்து போகும் நிலையும் தோன்றும். மக்கள் உழைப்பின் பால் ஊக்கப்படுத்தப்பட்டு அந்தஸ்த்து அடைந்து கொள்ளக் கூடிய ஒன்றுதான் என்பதனை கைத்தொழில் மயமாக்கம் ஏற்படுத்தியிருக்கின்றது.

10. சட்டமியற்றல் (Legislation)

சமூக நகர்வை ஏற்படுத்துவதில் சட்டத்துக்கு பாரிய பங்கிருக்கின்றது. அரசாங்கம் கொண்டு வரும் சட்டங்களுக்கு குடி மக்கள் கட்டுப்படும் போது திட ;டமிட்ட மாற்றங்கள் சமூகப் பரப்பிலே தோன்றுகின்றன. நீதி, குற்றம், சமவுரிமை, பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் 10 தொடர்பான சட்டங்கள் பல்வேறு நகர்வுகளை சமூகப் புலத்திலே ஏற்படுத்தியிருப்பதனை பல நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அமெரிக்காவில் இயற்றப்பட்ட இனப் பாகுபாட்டுக்கெதிரான சட்டங்கள் (Racial  AntiDiscrimination) அங்கு வாழும் கறுப்பினத்தவரிடையேயும், பெண்களிடையேயும் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தன என்பது ஆய்வாளர்கள் கூறும் கருத்தாகும்.

11. நவீனமயமாக்கம் (Modernization)

விஞ்ஞான அறிவையும் நவீன தொழிநுட்பத்தையும் பயன்படுத்துவதையே நவீனமயமாதல் செயன்முறை குறிக்கின்றது. மேலும் நவீனமயமாக்கம் பகுத்தறிவின் பயன்பாட்டையும், சமயச்சார்பற்ற வாழ்வு முறையையும் குறித்து நிற்கின்றது. விஞ்ஞானத்தினதும், தொழிநுட்பத்தினதும் இராட்சத வளர்ச்சி பல்வேறு அதிர்வுகளையும், மாற்றங்களையும் சமூகத்தில் முடுக்கி விட்டிருக்கின்றது. புதிய புதிய தொழில்களும் அதனை மையப்படுத்திய உயர் அந்தஸ்த்துக்களும் தனி நபர்களுக்கு நவீனமயமாக்கம் மூலம் கிடைக்கின்றன. அதே நேரம் விரக்தி, ஏமாற்றம், மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற உளவியல் நோய்களையும் சமூக விரிசல்களையும் நவீனமயமாக்கம் தோற்று வித்திருக்கின்றது.


கல்வி உளவியல்   - Click Here

  சமூக அடுக்கமைவு 

எமது கல்வி வீடியோக்கள் பார்த்து பயன்பெற - Click Here

கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்


Post a Comment

0 Comments