இலங்கை ஆட்சியியலும் பிரஜைகளின் பங்குபற்றலும், பகுதி- 01


  
இன்று உலக நாடுகளை பொருத்தவரையில் பிரஜைகள் அல்லது தனிமனிதன் என்னும் எண்ணக்கருவானது மிக முக்கியத்துவமான ஒரு உண்ணக்கருவாகவளர்ச்சியடைந்து வந்துள்ளது அதனடிப்படையில் ஒரு நாட்டின் நல்லாட்சி நிலவ வேண்டுமாயின் அந்நாட்டின் பிரஜைகள் அந்நாட்டு ஆட்சியியல் செயற்பாட்டில் பங்குக் கொள்வதினூடாக மட்டுமே அத்தகையதொரு ஆட்சியியலை நடத்த முடியும் அதனடிப்படையில்  இலங்கையின் ஆட்சியியளில் செயன்முறையில் கல்வியலாளர்களினதும், நிறுவனங்களினதும் கருத்துக்களுக்கு அமைவாக  மக்களின் பங்குபற்றல் எத்தகைய சாத்தியமான போக்குகளை கொண்டுள்ளது என்பதை ஆட்சி செயன்முறை என்றால் என்ன? இலங்கையில் ஆட்சி செயன்முறை,  பிரஜைகள் என்போர் யாவர்? பிரஜாவுரிமை என்பது யாது?  ஆட்சி செயன்முறையில் பிரைஜைகளின் பங்களிப்பு, சுதந்திரத்திற்கு முன் ஆட்சியியலில் மக்களின் பங்குபற்றல், கல்வியியலாளர்களின் நோக்கில் பிரஜைகளின் பங்குபற்றல், சுதந்திரத்pற்கு பின் ஆட்சியியலில் மக்களின் பங்குபற்றுகை, நிறுவனங்களின் கருத்துக்கள் அடிப்படையில் பிரஜைகளின் பங்குபற்றல். முதலிய விடயங்களின் விமர்சன ரீதியில் ஆராய்ந்து செல்வது சிறப்பானதொரு விடயமாகும்

1. ஆட்சி செயன்முறை என்றால் என்ன?
      ஒரு நாட்டின் நிலப்பரப்பு, மக்கள் தொகை, இன, மத, மொழி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களின் நலன் பேனும் பொருட்டு அவர்களுக்கு தேவையான சேவைகளை செய்யும் ஒரு அரசானது தன்னுடைய கடமைகளையும், பொறுப்புக்களையும் வினைத்திறனுடன் செய்வதற்காக தன்னை ஒரு சில கூறுகளாக வகுத்து கொண்டு ஆட்சி செய்வது “ஆட்சி செயன்முறை” என நாம் விளங்கிக் கொள்ளலாம். 

    மேலே கூறப்பட்ட அம்சங்களுக்கு அமைவாக ஒவ்வொரு அரசும் தம்மை ஒற்றையாட்சி அரசாகவோ அல்லது சமஸ்டியாட்சி அரசாகவோ பிரித்துக்கொண்டு செயற்படும். உதாரணமாக இந்தியா, அமெரிக்கா, போன்றா நாடுகள் சமஸ்டி முறையில் தொழிற்படுவதும், பிரித்தானியா, இலங்கை போன்றன ஒற்றையாட்சியாகவும் தொழிற்படுவது குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் ஒரு அரசு ஏதோ ஒரு வகையில் உள்ளுராட்சி சபைகள், மானில அரசுகள், மத்திய அரசு என பல பிரிவுகளாக பிரித்து மக்களுக்கு ஆட்சி செய்வதை இது குறித்து நிற்கின்றது. உதாரணமாக இலங்கையை எடுத்துக் கொண்டால் நகர சபைகள், பிரதேச சபைகள், மாகாண சபைகள், மத்திய அரசு என வகுத்து அவை தமது கடமைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இவ் கட்டமைப்பானது நாட்டிற்கு நாடு வித்தியாசப்படுகின்ற நிலைமையும குறிப்பிடத்தக்கது.

 மேலும் இவ்வாறான கட்டமைப்புகளிடையே அதிகார வேறுபாடுகளும் காணப்படும் அதாவது இவ்வாறான பிரிவுகளுக்குள் அதிகாரமானது உயர் ஒழுங்கில் அமைவதைக் காணலாம். உதாரணமாக இலங்கையை பொருத்தவரையில் உள்ளுராட்சி மன்றங்களை விட மாகாண அரசானது அதிகாரம் கூடியது, மாகாண அரசைவிட மத்திய அரசு அதிகாரம் கூடியது இவ்வாறு ஒவ்வொன்றுக்கும் இடையே அதிகார வேறுபாடானது வித்தியாசப்பட்டு காணப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இவை ஒவ்வொன்றுக்கும் இடையே ஏதோ ஒரு வகையில் தொடர்பு காணப்படுவது நோக்கத்தக்கது. இத்தகைய ஏற்பாடானது பரந்துபட்டு வாழும் ஒரு நாட்டின் பிரைஜகள் அனைவருக்கும் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தால் வினைத்திறனான சேவையை செய்ய முடியாது என்பதாலையே இத்தகைய ஏற்பாடு காணப்படுகின்றது. குறிப்பாக சொல்வதானால் ஒரு நாட்டில் நல்லாட்சி நிலவுவதன் பொருட்டு இவ்வாறான அதிகார ஒழுங்கானது பரவலாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

        இன்று உலக நாடுகளை பொருத்தவரையில் எந்த நாடும் அதிகாரங்கள் அனைத்தையும் தனியே ஒரு இடத்தில் குவிக்காது அதனை பல துணை  நிறுவனங்களிடம் ஒப்படைத்து அதன்வழி தமது நாட்டில் வாழும் மக்களுக்கு நல்லாட்சியை வழங்க முனைவது நோக்கத்தக்க விடயமாகும்.  எனவே இவ்வாறு பகுக்கப்ட்ட அனைத்து விடயங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் மக்களின் பங்குபற்றல் இருத்தலையும் நாம் காணலாம். அதாவது மக்களுக்கு தேவையான சேவைகளை செய்வதற்காக வேண்டி அதே மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு அரசாங்கத்தை நடாத்தி செல்லும் முறையை நாம் ஆட்சி செயன்முறை என்று விளங்கிக் கொள்ளலாம். 

    அதனடிப்படையில் இதனை பல்வேறுவகையாக வரைவிலக்கனப்படுத்தி நோக்குவதும் குறிப்பிடத்தக்கது ஆட்சியியல் சம்பந்தமான அர்த்தமும் விளக்கமும் கிரேக்க வார்தையான குபர்ணன் என்னும் வார்த்தை நல்லாட்சியியலை குறிப்பதற்கு பயன்படுகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால் மக்களையோ அல்லது திட்டத்தையோ தலைமைத்தாங்கி வழிநடத்துவது என்பதாகும். பிளேட்டோ ஒரு குறிப்பிட்ட முறைமையின் விதிகளை எவ்வாறு வடிவமைப்பது தொடர்பாக இந்த சொல்லைப் பயன்படுத்தியிருந்தார். மத்திய கால வார்த்தையான ‘கியூபர் நாரே’ வழிநடத்துவது சட்டவிதிகளை உருவாக்குவது என்றோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.. oxford  ஆங்கில அகராதி பின்வரும் அர்த்தங்களை இந்த சொல்லுக்கு குறிப்பிடுகின்றது. ஆளுகின்ற செயன்முறை, ஆளுதல், அதிகாரத்துடன் ஆளுதல், கட்டுப்படுத்துவது, ஆளப்படுவது என்பனவாகும்.

     உதவி முகவர் கட்டளை படிமம், அரச சந்தை உறவுகளின் மீது தனது கவனத்தை செலுத்துகிறது. இதன் அடிப்படையில் இந்த சொல் கொள்கை உருவாக்கம் மற்றும் அதனை நடைமுறைப்படுத்த உதவுதல் என்பதுடன் தொடர்புபட்ட வகையில் அரசின் இயலுமை மற்றும் சிறந்த மேலாண்மை என்பவற்றைக் குறிக்கிறது. 
  
அதனைத் தொடர்ந்து ரோட்ஸ் என்பவரின் கருத்துப்படி “சிவில் சமூகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆட்சியியலுக்குள் உள்ளடக்கப்படுகின்றன. குறிப்பிட்ட அரசின் அனுமதியோடு செயற்படும் மேற்குறிப்பிட்ட நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆட்சியியல் உள்ளடக்குகிறது. இன்னொரு வகையில் கூறுவதாயின் பொதுக்கொள்கை மற்றும் பொதுமுகாமைத்துவம் போன்றவற்றால் இருக்கின்ற அறிஞர்கள் ஆட்சியியல் என்றால் என்ன? என்பதை புரிந்து கொள்கின்றார்களோ அதுவே ஆட்சியியல்” குறிப்பிடுகின்றார்.    இவ்வாறாக ஆட்சி செயன்முறை தொடர்பாக பலரும் பல்வேறு முறைகளில் விளங்கப்படுத்த எத்தனிப்பதை உணரலாம். மொத்தத்தில் நல்லாட்சியை மக்களுக்கு எவ்வாறு வழங்கலாம் என்பதை நோக்காக கொண்டே கருத்துக்கள் வழுப்படுவதை காணலாம். 

2. இலங்கையில் ஆட்சி செயன்முறை
     இலங்கையில் ஆட்சி செயன்முறை எனும்போது பொதுவாக மூன்றாக வகுத்து ஆட்சி செய்வதைக் காணலாம். அதாவது மத்திய அரசு, மாகாண அரசு, உள்ளுராட்சி மன்றங்கள் என பிரிக்கப்பட்டு ஆட்சியானது நடாத்தப்படுகின்றது. இதன் ஆட்சியாளர்கள் அனைவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டு மக்களை பிரதிதநிதித்துவம் செய்பவர்களாகவே இருக்கின்றனர். அதனடிப்படையில்  அவற்றின் முக்கியத்துவத்தை கீழ்வருமாறு தலைப்புகளின் கீழ் ஆராயலாம்.
 மத்திய அரசாங்கம்
 மாகாண சபை
 உள்ளுராட்சி மன்றங்கள்


மத்திய அரசு
    மத்திய அரசை பொருத்தவரையில் இது எமது நாட்டில் தலைவராக ஜனாதிபதி காணப்படுவார். இதில் சட்டத்துறை நிர்வாகத்துறை, நீதித்துறை என மூன்று பிரிவுகள் காணப்படும். அதன் அடிப்படையில் சட்டமியற்றும் துறையில் 225 போர் அங்கத்துவம் வகிப்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்களில் 196 போர் மக்களால் நேரடியாக வாக்களிக்கப்பட்டு தெரிவு செய்யப்ட்டவர்கள் மிகுதி 29பேர் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்கு விகிதாசாரத்திற்கமைய துறைசார்ந்த வல்லுணர்களில் இருந்து தெரிவு செய்யப்படுவர். இச்சட்டத்துறையின் செயற்பாடு நாட்டை நிர்வாகிக்க தேவையான சட்டங்களை உருவாக்குதல் ஆகும்.

   அதனைத் தொடர்ந்து நிர்வாகத்துறையை பொருத்தவரையில் நிர்வாகத்துறைக்கு தலைவராக ஜனாதிபதி காணப்படுவார் இவர் 6 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெரும் புறம்பானதொரு தேர்தலில் மக்களால் அதிக வாக்குகளை பெற்றுக்கொண்டவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். மந்திரிசபையை பொருத்தவரையில் மந்திரிகளுக்கு பொறுப்பாக பிரதமர் காணப்படுவார் இவர் 6 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெரும் தேர்தலில்  அதிக வாக்குகளை பெற்றவர் பிரதமராக ஜனாதிபதியால் தெரிவு செய்யப்படுவார். மேலும் சட்டத்துறையில் இருந்து சில மந்திரிகளும் பெற்றுக்கொண்ட அதிக வாக்குகளுக்கு இனங்க தெரிவு செய்யப்படுவர். இவர்களது செயற்பாடு உருவாக்கப்பட்ட சட்டங்களை அமுல்படுத்துவதும், அவற்றிற்கு தேவையான உபவிதிகளை உருவாக்குதலும் ஆகும்.


    அதனைத்தொடர்ந்து நீதித்துறையை பார்த்தால் பொறுப்பான உயர் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி தெரிவு செய்வது குறிப்பிடத்தக்கது.  இவர்களின் கடமை பொறுப்புக்களை பார்த்தால் நாட்டில் ஆக்கப்பட்டு அமுல்படுத்தபட்ட சட்டங்களை மீறும்போது அவற்றிற்கு தண்டனை வழங்குவதோடு அதற்கு விளக்கமளிக்கக் கூடியவர்களாகவும் இவர்கள் காணப்படுவர். முழு நாட்டிற்கும் பொறுப்பு சொல்லக்கூடிய தன்மை மத்திய அரசுக்கே காணப்படுகின்றது. இலங்கை என்ற அடிப்படையில் சர்வதேசம் நோக்கும் போது தமது செயற்பாடுகள் யாவம் மத்ததிய அரசின் அனுமதியின் பெயரிலையே நடத்தல் வேண்டும். உதாரணமாக இலங்கையில் பல பாகங்களிலும் தொழிற்படும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மத்திய அரசில் பதிவு செய்யப்பட்ட பின்பே தமது சேவையை மாகாண மற்றும் உள்ளுராட்சி பிரதேசங்களில் மேற்கொள்ளலாம். உதரணமாக 140ற்கும் மேற்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்கள் இலங்கையில் பதிவு செய்யப்பட்டு தமது செய்பாடுகளை செய்து வருகின்றன. எனவே அதிகாரங்கள் ஏனைய பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டாலும் அதிகார ஒழுங்கில் உச்சக்கட்டத்தை உடையதாக மத்திய அரசே காணப்படுகின்றது.

மாகாண அரசு
  இவ் மாகாண அரச முறைமையானது சுதந்திரத்திற்கு பின் உருவாக்கப்பட்ட இரண்டாம் குடியரசின் பிரகாரம் உருவாக்கபட்ட ஒரு விடயமாகும் இதற்கு முன்னைய யாப்புகளில் இத்தகைய நிலை காணப்படவில்லை. அந்தவகையில் மாகணங்களுக்கு ஆட்சியியல் அதிகாரங்களை பகிர்வதன் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது வட கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட இன முரண்பாட்டை நீக்கும் பொருட்டு இத்தகைய ஏற்படு 1987ம் அண்டு ஜே.ஆர் ஜயவர்தனாவுக்கும் இந்திராகாந்திக்கும் இடையில் கைசாத்திடப்பட்டது.  எனினும் இத்தகைய ஏற்பாடானது தனி நாட்டு கோரிக்கைக்கு வழிவகுக்கும் என்ற காரணத்தால் அதிகமானோர் இக்கொள்கையை எதிர்த்ததும் குறிப்பிடத்தக்கது. இன்றும் இவ் மாகாணசபை அரசாங்கமுறை தொடர்ந்து பிரச்சினைக்குறிய ஒருவிடயமாக இருந்துவருகின்றது. இத்தகைய நிலையை போக்கும் பொருட்டு இன்று அரசானது திவிநெகும எனும் செயற்திட்டத்தை அமுல்படுத்தி பொதுவான பாதையில் பயணிக்க முயற்சிப்பது குறிப்பிடத்தக்கது.


    அதனடிப்படையில் இலங்கை மாகாண சபையை பொருத்தவரையில் ஆளுனர், முதலமைசர், அமைசசரவை, மாகாணசபை உருப்னபிர் என்போர் உள்ளடங்குவர். இங்கும் ஆட்சி செய்பவர்கள் 4 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெரும் மாகாணசபைத் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றவர்கள் இதன் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுவர். இவர்களிற்கான அதிகாரம் எனும் போது முக்கியமாக கல்வியும் கலாசாரமும், காணியும் காணி அபிவிருத்தியும், சட்டமும் ஒழுங்கும், இளைஞர் விவகாரம், என்பன தொடர்பில் அதிகாரம் மிக்கதாக காணப்படுகின்றன. இத்தகைய ஆட்சி செயன்முறையிலும் மக்களின் பங்குபற்றல் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

உள்ளுராட்சி சபைகள்
       உள்ளுராட்சி சபையானது மாகாண சபைக்கு அடுத்து இயங்கும் ஒரு சபையாகவே காணப்படகின்றது. இங்கும் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் 4 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெரும் தேர்தலில் தெரிவு செய்யப்படுவர். இதில் நகரசபைகள், பிரதேச சபைகள் என இரு பிரிவுகள் காணப்படுவது  குறிப்பிடத்தக்கது. உள்ளுராட்சி முறை என்பது ஆட்சியரசியலில் அடிநிலை மக்களைப் பங்கு பற்றச் செய்வதோடு மத்திய அரசின் மத்தியப்படுத்தப்பட்ட, ஒரு முகப்பட்ட செயற்பாட்டை தூரமாக்குவதுடன் தீர்மானம் எடுத்தல், அமுல்படுத்தல், அரசாங்க செயற்பாட்டினை மேற்பார்வை செய்தல், என்பவற்றை மக்களுக்கு கூடியளவு பகிர்ந்தளிப்பதாகும். இது கூடியளவு மத்திய ஆட்சியை விட நன்மையைப் பெற்றுத்தருகின்றது.
  மத்திய ஆட்சியில் இருந்து அதிகாரமும் சரி கொள்கை அமுலாக்கமும் மேலிருந்து கீழ் நோக்கி அதாவது மத்திய அரசால் கொள்கைகள் தீர்மானிக்கப்பட்டு மாகாண, பிரதேச உள்ளுராட்சிகளுக்கு நடைமுறைப்படுத்துவதற்காக அனுப்பப்படுகின்றது. இதில் மக்களின் விருப்பு, பங்களிப்பு இருக்காது அதே நேரம் உள்ளுராட்சி முறையில் கொள்கைகள், தீர்மானங்கள், திட்டங்கள் மக்களின் பங்கு பற்றுதலுடன் விருப்புடன் கீழிருந்து மேலாகச் செல்கின்றது இங்கு ஆட்சியாளர்களின் விருப்பை விட மக்களின் விருப்பே முக்கியமாக நோக்கப்படுகின்றது. இவ்வாறான அமைப்பாகவே உள்ளுராட்சி காணப்படுகின்றது. 

3. பிரஜைகள் என்போர் யாவர்?
        ஒரு அரசாங்கத்தின் பாதுகாப்பு மற்றம் உரிமையை பெற்றுக்கொண்ட சொந்த அல்லது இயற்கையான நபர் பிரஜை என வரைவிலக்கணப்படுத்திக் கொள்ளலாம். அதாவது ஒரு வரையருக்கபட்ட நட்டில் வாழும் மக்கள் அனைவரும் அந்நாட்டு பிரஜைகள் எனும் வட்டத்துக்குள் வந்து சேர முடியாது. மாராக ஒரு நாட்டின் மீஉயர் சட்டமான யாப்பு சட்டத்தில் எவர் எவர் நாட்டின் பிரஜைகளாக இருக்க முடியும் என்ற நிபந்தனைக்கு அமைவாக இருப்பவர்களே பிரஜைகள். அந்தவகையில் ஒருவர் எப்போது குறித்த நாட்டின் பிரஜையாக மாறுகிறார்கள் என்றால் அந்நாட்டில் அவர் குறித்த ஒரு தேர்தலில் தாம் விரும்பிய ஒரு பிரதிநிதியை தெரிவு செய்யும் பொருட்டு வாக்களிக்க தகுதியானவறாக இருப்பாரானால் அவரே நாட்டின் பிரஜையாகவும், பிரஜாவுரிமை பெற்றவராகவும் கருதப்படுவர். ஆனால் ஏனைய மக்கள் நாட்டில் உள்ள அனைத்து விடயங்களையும் அனுபவித்தாலும் யாப்பு சட்டத்திற்கு உள்வாங்கப்படாதபோது அவர்கள் பிரஜைகளாக கருதமாட்டார்கள். அதாவது யாப்பில் கூறப்பட்ட அடிப்படை உரிமைகளை அனுபவிக்க முடியாதவர்களாக ஏனையோர் காணப்படுவர். ஏனையோர் அடிப்படை உரிமை தவிர்ந்த ஏனைய உரிமைகளை மட்டுமே பிரஜைகள் அற்ற ஏனையோர் அனுபவிக்க நேரிடும். 

     மேலும் பிரஜைகள் என்போர் குறித்த நாட்டின் அரசியல், பொருளாதாரம், கலாசாரம், கல்வி முதலிய எல்லாவிடயங்களிலும் தமது உரிமையை அனுபவிக்ககூடியவர்களாக காணப்படுவர். “பிரஜைகள் என்போர் பொது நலத்திலும், பொருளாதார வள உற்பத்தியிலும், ஈடுபட்டு அதற்கு மேலான எதிர்பார்க்கக்கூடிய முறையில் அரச ஸ்தாபனத்தின் உரிமை பொறுப்பு பொது பகிர்வு என்பவற்றின் ஊடாக சமூகத்திலும் அதே போல் அரச ஸ்தாபனத்திலும் இயக்கப்பாட்டுடைய பங்குபற்றுனர்களாக விளங்குவர்” என பிரஜைகள் தொடர்பாக ருன்ஸன் மற்றும் ஸ்டுவட் 1989ம் ஆண்டு காலப்பகுதியில் கருத்து தெரிவித்தனர்.

4. பிரஜாவுரிமை என்பது யாது?
    பிரஜாவுரிமை எனும் போது ஒரு மனிதன் ஒரு நாடு அல்லது மானிலம், அல்லது மானில சங்கங்களிடையே ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய இணைப்பைக் குறிக்கின்றது. மேலும் அரசியல் பொருளாதார கலாசார சார்ந்த உரிமைகளுக்கு உரித்துடையவனாய் குறித்த நபரானவர் காணப்படுவார். மேலும் இப்பிரஜாவுரிமையானது பிரஜை என்போன் யார் அவனுக்கு இருக்கவேண்டிய தகுதிகளும், கடமை, பொறுப்புக்கள் எவை என்பதை சுட்டிநிற்கும். ஒரு மனிதனின் தனிபட்டநிலையில் இருந்து தவிர்க்கப்பட்டு சட்ட ரீதியிலான ஒரு அங்கிகாரம் பிரஜாவுரிமை ஆகும். 


       இவ் பிரஜாவுரிமை தொடர்பான கருத்தானது ஆரம்பகாலங்களில் இருந்து முக்கியத்தவம் வாய்ந்ததொன்றாகக் காணப்படுகின்றது. ஆரம்கத்தில் அமெரிக்கா, பிரித்தணியா, பிரான்ஸ் அகிய நாடுகளிலயே இவ் எண்ணக்கருவானது முக்கியத்துவம் பெற்றது. பின்பு 18ம், 19ம் நூற்றாண்டுகளில் ஆசியா ஆபிரிக்கா பேன்ற கண்டங்களை நோக்கி பரவலாயிற்று. ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் ஏற்பட்ட பழைய ஆட்சிகளின் சீரழிவு மற்றும் 20ம் நூற்றாண்டில் ஆசிய ஆபிரிக்க கண்டங்களில் ஏற்பட்ட பேரரசுகளின் வீழ்ச்சியும் பிரஜாவுரிமை மற்றும் தேசியம் சம்பந்தமாக தத்துவத்தின் மறு உருவாக்கத்திற்கு காரணமாக இருந்தது. 

  அதனடிப்படையில் இலங்கையில் இப்பிரஜாவுரிமை சட்டமானது 1948ம்ஆண்டு கொண்டுவரப்பட்டது . அக்காலப்பகுதியில் இலங்கையை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. இந்தியாவில் இருந்து வருகைத்தந்த மலையக தமிழருக்கு பிரஜாவுரிமை மருக்கப்பட்ட சந்தர்பத்தை நாம் நினைவு கூறலாம். எனவே இலங்கையில் உள்ள அனைத்து விடயங்களையும், அனைத்து உரிமைகளையும் அனுபவிக்கும் சுதந்திரம் இலங்கை பிரஜைக்கு மட்டுமே என்ற ஏற்பாடு முரன்பாடுகளை தோற்றுவிக்கலாயின. ஆகவே ஒரு நாட்டில் வாழும் அனைவரும் பிரஜைகளாக கருதப்படமாட்டார்கள் மாராக யாப்பு சட்டம் எவ்வாறு பிரஜை என்ற என்னக்கருவுக்கு இலக்கணம் கூறுகிறதோ அதற்குள் உள்வாங்கப்படுபவர்களே பிரஜைகளாவர். அப்படிப்பட்ட பிரஜைகளுக்கு மட்டுமே யாப்பில் உருதிபடுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளை அனுபவிக்க முடியும். மாராக எனைய மக்கள் அனைவரும் பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளை அனுபவிக்கலாம்.

5. ஆட்சி செயன்முறையில் பிரைஜைகளின் பங்களிப்பு

   ஆட்சி முறையில் பிரைஜைகள் எவ்வாறு பங்குபற்றல் தொடர்பாக ஆராயும்போது குறித்த நாட்டின் அரசியல் சார்ந்த செயற்பாடுகளை தீர்மானம் செய்பவராக அந் நட்டின் பிரஜைகளே காணப்படுகின்றனர். அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுப்படும் நிலையை காணலாம். அதனடிப்படையில் அதன் முக்கியத்துவத்தினை கீழ்வரும்  தலைப்புகளின் கீழ் ஆராய்ந்து செல்லாம்.ங்கு கொள்கின்றனர் என நோக்கும் போது அவற்றை கீழ்வரும் நோக்கலாம்

  •  வாக்களித்தல்
  •  கட்சியை பிரதிநிதித்துவம் செய்தல்
  •  கொள்கை உருவாக்கம்
  •  தேர்தல் செயற்பாடுகளில் ஈடுப்படல்
  •  அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுப்படல்
  •  அரசியல்சார் மோதல் முரன்பாடுகளில் ஈடுப்படல்

 வாக்களித்தல்
     ஒரு மனிதன் அல்லது பிரஜை முதல் முதலாக அவன் அந் நாட்டு பிரஜை என்ற அந்தஸ்த்தை பெற்றுத்தருவது வாக்குறிமை ஆகும் அதனடிப்படையில் தமக்கு விருப்பமான அதே நேரம் தமது நோக்கத்தை நிறைவு செய்யகூடியவர் என கருதும் ஒருவரை தான் வாக்கை பிரயோகிப்பதன் ஊடாக அரசியலில் பங்குபற்றுதல்.

கட்சியை பிரதிநிதித்துவம் செய்தல்
   அதாவது ஒரு பிரஜை தமக்கு இருக்கக்கூடிய உரிமையை பயன்படுத்தி வாக்களிக்கும் அதே நேரம் தாம் விரும்பினால் தாம் குறித்த நாட்டின் பிரஜையாக இருந்தால் தாமே வேற்பாளராக களமிறங்கி போட்டியிடவும் முடியும் அதனூடாக பிரஜைகள் அரசியலில் பங்குபற்றுவர்.

கொள்கை உருவாக்கம்
   ஒரு நாட்டிற்கு தேவையான கொள்கைகளை உருவாக்கும் போது இக் கொள்கையானது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளினூடாக உருவாக்கப்படும் ஆகவே அத்தகைய பிரதிநிதிகள் உருவாக்கும் கொள்கைகள் தம்மை தெரிவு செய்தவர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு கொள்கைகளை உருவாக்குவர். அவ்வாறு தவரும் பட்சத்தில் மக்கள் அடுத்த தேர்தலில் தமது வாக்கை பயன்படுத்தி அவரை ஆட்சியில் இருந்து விளக்குவர் எனவே மக்கள் கருத்து மக்களின் விருப்பு கொள்கையாக பிரதிபலிப்பதன் ஊடாக மக்கள் கொள்கை உருவாக்கத்தில் பங்கெடுக்கின்றனர்.


தேர்தல் செயற்பாடுகளில் ஈடுப்படல்
    பிரஜைகள் என்ற வகையில் மக்கள் ஏதோ ஒரு வகையில் அரசியலிலல் பங்குபற்றுவதைக் காணக்கூடியதாய் உள்ளது. அதாவது மேலே கூறப்பட்டது போன்று வாக்களித்தல் மற்றும் வேற்பாளராக நிற்றல் என்பதற்கும் புறம்பாக மக்கள் தேர்தல் காலங்களில் பல்வேறு வழிகளில் அரசியலில் ஈடுப்படுவது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுப்படல், பதாதைகளை ஏந்துதல், தேர்தல் கூட்டங்களை ஏற்பாடு செய்தல் பேரணிகளை நடாத்துதல் முதலிய விடயங்களை குறிப்பிடலாம்.


அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுப்படல்
   ஆட்சி நிறுவனத்தினால் கொண்டுவரப்படும் கொள்கைத்திட்டங்களை அமுல்படுத்தும்போது அது தொடர்பில் மக்களும் கரிசனைக்காட்ட வேண்டியவர்களாக உள்ளனர். அதாவது அபிவிருத்தி செயற்பாட்டில் மக்களும் பங்கெடுத்து குறித்த திட்டத்தை வெற்றிகொள்ள செயவதில் மக்கள் துணைபுரிகின்றனர். உதாரணமாக பாதை புணர் நிர்மாண வேலைகள் செய்யும் போது குறித்த பிரதேசத்தை சேர்ந்த மக்கள் சிரமதான வேலைகள் ஊடாக தம்மால் முடிந்த வேலைகளை செய்தல்.

அரசியல்சார் மோதல் முரன்பாடுகளில் ஈடுப்படல்
   பிரஜைகளை பொருத்தவரையில் ஆட்சியியலில் பங்குபற்றும் போது அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்குபற்றுவது போன்று ஆக்கமான செயற்பாடுகளிலும், அழிவான செயற்பாடுகளிலும் பங்குகொள்கின்றனர். உதாரணமாக தேர்தல் காலங்களில் தமது வேற்பாளருக்கு ஆதரவாக இருக்கும் அதே நேரம் வேறு வேற்பாளரின் உதவியாட்களுடன் முரன்பாடுகளை ஏற்படுத்தும் நிலையை நாம் இன்றும் காணக்கூடியதாய் உள்ளது.

6. சுதந்திரத்திற்கு முன்னைய காலங்களில் மக்களின் பங்குபற்றல்
       இலங்கையானது காலனித்துவ ஆட்சியின் கீழ் காணப்பட்ட நாடுகளில் ஒரு நாடாக கணப்படுகின்றது. அந்தவகையில் காலணித்துவ ஆட்சிகாலத்தில் இருந்து இலங்கை விடுபட்டு சுதந்திரத்தை பெற்ற பின்பு தாமாக உருவாக்கிய அரசியல் யாப்பு வரையிலான செயற்பாடுகளில் மக்களின் பங்குபற்றல் தொடர்பாக ஆராயும் போது அதனை நாம் சுதந்திரத்திற்கு முற்பட்ட அரசியல் பங்குகொளல், சுதந்திரத்தின் பிற்பட்ட பங்குகொளல் என்ற தலைப்புகளின் கீழ் விளக்கிச் செல்லலாம்.

    அந்தவகையில் 1948.02.4ம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்தது அதற்கு முன்னைய காலத்தை பார்க்கும் போது ஆட்சியில் மக்களின் பங்கு என்பது குறைந்தளவானதாகவே காணப்பட்டது. அதனடிப்படையில் 1833ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கோல்புருக் கமரன் சீர்திருத்தத்தின் பிரகாரம் இனவாரி பிரதிநிதித்துவமுறையானது அறிமுகப்படுத்தப்பட்டது.  அதனடிப்படையில் தமிழ்ர் ஒருவரும், சிங்களவர் ஒருவருக்குமான வாய்ப்பு வழங்கப்பட்டது அதனடிப்படையில் தாம் இனம்சார்ந்த ஒருவரை தெரிவு செய்வதற்கான வாய்ப்பை மக்கள் பெற்றுக்கொண்டதோடு  அரசியலிலும் பங்கெடுக்கலாயினர். இவர்களும் படித்த மத்தியத்தர வர்க்கத்தினராக காணப்பட்டனர் சாதாரணமாக அடிநிலைமக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத ஒரு நிலை இக்காலத்தில் ஏற்பட்டது. 

   அதனைத்தொடர்ந்து 1912ம் ஆண்டு தேசிய இயக்கமானது உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1919ம் அண்டு தேசிய காங்கிரஸ் உருவாக்கப்ட்டது. இவற்றின் பொது நோக்கமாக பார்க்கும் போது பொதுவானதொரு இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதையும், காலனித்துவத்திலிருந்து முற்றாக விடுதலை பெருவதையும் அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டனர். எனவே சுதந்திரத்தின் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட செயற்பாடுகளின் போது மக்களும் அதில் பங்குகொண்டு செயற்பட்டனர். மேலும் இக்காலத்தில் உருவாக்கப்ட்ட தீவிரவாத தேசியவாதிகள் ஒன்று சேர்ந்து பூரணமான சுதந்திரத்தைக்கோரி மக்களை இணைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்துதல், பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடல், வேலை நிருத்தம் போன்ற செயற்பாடுகளில் ஈடுப்பட்டனர்.

      அதனைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட மனிங் டிவென்சர்  அரசியல் சீர்திருத்தமானது 1924ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட இனவாரி பிரதிநிதித்துவம் இல்லாது செய்யப்பட்டு பிரதேசவாரி பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையானது தமிழரின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதாக இருந்தது. அதே சமயம் சிஙகள இனத்தவர் 13 பேர் அங்கத்துவம் பெறக்கூடிய நிலையையும் காணப்பட்டது எனினும் தமிழர் 3 போர் அங்கத்துவம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் மக்களின் பங்குபற்றல் இதன்வழி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் சிஙகளவர் தமிழர் என்ற பேதமின்ற அனைவரும் ஒற்றுமையாக தமது நாடு என்ற ரீதியில் குரல் கொடுத்தனர். உதாரணமாக சேர் பொண் அருணாசலம் இவர்களை தேசிய இயக்கத்தின் தலைவராக நியமித்தமையை குறிப்பிடலாம். ஆனால் பின்னைய காலங்களில் தமது இன பிரதிநிதித்துவம் குறைந்தமையால் இனங்களுக்கிடையே பிளவு ஏற்பட காரணமாயிற்று. எனினும் மக்கள் முரண்பாட்டின் வழியோ அல்லது தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் நோக்கிலோ அரசியலில் மும்முரமாக ஈடுபட்டதை பார்க்கக்கூடியதாக இருந்தது.

    அதனைத் தொடர்ந்து அறிமுகப்படுத்ப்பட்ட டெனமூர் அரசியல் அமைப்பினை நோக்கும் போது இதில் இலங்கையரின் ஆட்சி பொறுப்பு மற்றும் பங்குபற்றுதல் என்பது பாரிய அளவில் அதிகரிக்கின்ற தன்மையை காணக்கூடியதாய் உள்ளது. அதாவது சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டமையானது இதற்கு முன் இருந்த வாக்குரிமை சம்மந்தமான எண்ணக்கருக்களை சிதைவடைய செய்தது. அதாவது படித்த 21வயதிற்கு  மேற்பட்ட ஆண்களுக்கு மட்டும் என்ற எற்பாடு சர்வசன வாக்குறிமையால் மாற்றம் கண்டது. அந்த வகையில் இலங்கை சனத்தொகையில் 4 வீதமானோரே அரசியலில் ஆரம்பத்தில் பங்கு கொண்டனர் அந்தநிலை மாற்றமடைந்து ஆண், பெண் அனைவரும் அரசியலில் பங்குகொள்ள வாய்பளித்தது இவ் சர்வசன வாக்குரிமையாகும். மேலும் அரசியல் ஆட்சியாளர்களுக்கு இதற்கு முன்னைய காலங்களைவிட அரசியல் செயற்பாடகளில் அதிக முக்கியத்துவமளிக்கப்பட்டு அவர்களுக்கு அரசியல் சார்ந்த பயிற்சிக்களமாகவும் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

   அதனைத்தொடர்ந்து 1948ம் ஆண்டு அறிமுகப்படுத்தபட்ட சோல்பரி யாப்பினூடாக மக்கள் பங்குபற்றுகையை பார்க்கும் போது சிறுபான்மை, பெரும்பான் சமூத்தவரின் நலன்களை பேனக்கூடியவகையில் ஏற்பாடுகள் காணப்பட்டன. அந்த வகையில் சிறுபான்மை நலன் குறைவாக காணப்படுகின்றது என்ற காரணத்தினால் அதனை ஈடு செய்யும் பொருட்டு 29ம் சரத்தானது விசேடமாக எற்பாடு செய்யப்பட்டது. அத்தோடு செனட் சபையில் 6 அங்கத்தவர்கள் தேர்தல் மூலமாக பிரதிநிதித்துவம் பெறதா மக்களை பிரதிநிதித்துவம் படுத்த உதவுவதாக உள்ளது. இக்காலப்பகுதியிலயே பிரஜாவுரிமை எனும் ஏற்பாட்டினையும் அறிமுகம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக சுதந்திரத்திற்கு முற்பட்டகாலத்தில் மக்களின் பங்குபற்றல் காணப்பட்டதனைக் குறிப்பிடலாம்.  

7. சுதந்திரத்pற்கு பின் ஆட்சியியலில் மக்களின் பங்குபற்றுகை
       அதனைத் தொடர்ந்து சுதந்திரத்திற்கு பிட்பட்ட காலத்தில் ஆட்சியியல் செயற்பாட்டில் மக்களின் பங்குபற்றல் தொடர்பாக நோக்கும் போது அதனைக் கீழ்வருமாரு நோககி செல்லாம். அந்தவகையில் 1948ம் ஆண்டுக்கு பின் முதலாம், இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு இலங்கை பிரஜைகளால் ஏற்படுத்தப்பட்டதொரு விடயமாக காணப்படுகின்றது. அதனடிப்படையில் இக்காலப்பகுதியில் மக்களின் அரசியல் பங்குபற்றுகையும் அதிகமாக காணப்பட்டதனைக் காணலாம். அதாவது பல்வேறுவகைப்பட்ட புதிய பரிணாமங்களுக்குள் பிரவேசிக்கும் தன்மை மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஏற்பட்டது. அதாவது தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத போது அதற்கு எதிராக முரண்படும் வகையில் அரசியலில் பங்குபற்றும் நிலையானது நோக்கத்தக்கதாக இருக்கின்றது.


   அதாவது சுதந்திரத்திற்கு பின் உருவாக்கப்பட்ட யாப்பு, ஒப்பந்தங்கள் திருத்தச்சட்டங்கள் யாவம் தமிழ் மக்களுக்கு உரிமை மறுப்பாக காணப்பட்டது உதாரணமாக 1948 பிரஜாவுரிமை சட்டம், 1949 தேர்தல் திருத்தச்சட்டம், 1956 தனி சிங்கள மொழிச்சட்டம், 1964 ஸ்ரீமாசாஸ்த்திரி ஒப்பந்தம், 1970  உயர்கல்வி தரப்படுத்தல்,  முதலிய பல்வேறுவிடயங்கள் சிறுபான்மையினத்திற்கு பாதகமான விடயங்களாக அமைந்தன. 

   எனவே அரசியலில் பங்குகொள்ளாது தள்ளி இருந்த தமிழ் மக்களும் போராட்டத்தின் ஊடாக தமது உரிமைகளையும் கோரிக்கைகளையும் மீட்டெடுக்க முயற்சி செய்தனர் உதாரணமாக 1950 ஆண்டு சோல்பரி குழுவினர் யாழ்பாணத்திற்கு சென்றபோது அவர்களை எதிர்த்தமை, யாழ்பாணத்திற்கு வந்த பிரதமர் ஜோன் கொத்தலாவல அவர்களை எதிர்த்து கருப்புக்கொடி ஆர்பாட்டம் செய்தமை, 1956 காலிமுகத்திடலில் சத்தியாகிரக போராட்டம், திருக்கோணமலை பாதயாத்திரை முதலிய செயற்படுகளின் ஊடாக தமிழ் மக்களும் அரசியலில் பங்குகொள்ளும் நிலை ஏற்பட்டது.  

    அதனைத் தொடர்ந்து மக்களை அரசியலில் நேரடியாக ஈடுப்படுத்திய மற்றுமொரு சந்தர்பத்தை குறிப்பிடலாம் அதாவது 1978ம் ஆண்டு யாப்பின் பிரகாரம் மக்கள் தீர்பபு எனும் ஏற்பாடு மிக முக்கியமானது. அதாவத நாட்டின் நலன் போனும் ஒருவிடயத்தை பாராளுமன்றம் மருத்தாலும் அதனை ஜனாதிபதி நேரடியாக மக்களின் தீரமானத்திற்கு விடும் முறையும் மக்களை அரசியலில் ஈடுப்படுத்தும் ஒரு செயற்பாடாகும். உதாரணமாக 1978ம் ஆண்டு காலப்பகுதியில் தமது ஆட்சி பொறுப்பை நீடிப்பதற்காக பண்டாரநாயக்கா அவர்கள் மக்கள் தீர்பை நடியமையை குறிப்பிடலாம். 

   மேலும் புதிதாக ஏற்படுத்தப்பட்ட தேர்தல்களில் மக்கள் அனைவரும் தம் இனம், பிரதேச அடிப்படையில் தமது பிரதிநிததியை தெரிவு செய்வதில் பெரிதும் அக்கரைகாட்டி வந்துள்ளனர். அதனடிப்படையில் பார்க்கும் போது சுதந்திரத்திற்கு முன்னும், பின்னும் மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கை ஆட்சியலில் ஈடுப்பட்டிருப்பதோடு, அவர்கள் ஆட்சியியல் ஆக்கத்திற்கும், அழிவுசார் விடயங்களினுடாகவும் தமது பங்களிப்பை அரசியல் செயன்முறையில்  செலுத்தியுள்ளதைக் காணலாம்.

8. கல்வியியலாளர்களின் நோக்கில் பிரஜைகளின் பங்குபற்றல்
      கல்வியியலாளர்கள் எனும் போது கற்று தெளிந்த ஏதோ ஒருவகையில் துறைசார்ந்த வல்லுணர்கள் தமது அறிவு, தாம் வாழ்ந்த சூழல் மற்றும் தமது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு பிரஜைகள் எவ்வாறு அரசியலில் பங்குபற்றுகின்றனர் என்று தெரிவித்த கருத்துக்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு அத்தகைய கருத்துக்களுக்கு ஏற்றவகையில் பிரஜைகள் என்போர் எவ்வாறு இலங்கை ஆட்சியலில் அல்லது ஆட்சி செயன் முறையில் பங்கெடுக்கின்றனர் என்பதை கீழே நோக்கி செல்லாம். அதனடிப்படையில் ஏற்கனவே மேலே கூறப்பட்டது போன்று இலங்கையில் ஆட்சியியலானது மூன்று கட்டமைப்பை உடையதாக காணப்படுகின்றது அதாவது மத்திய அரசாங்கம், மாகாண அராங்கம், உள்ளுராட்சி மன்றம் என்ற அடிப்படையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு ஆட்சி நடைபெருகின்றது இவ்வாட்சியில் கல்வியியலாளர்களின் கருத்துபடி மக்கள் தொடர்பு எவ்வாறு உள்ளது என்பதை நாம் நோக்கலாம்.

உள்ளுராட்சி சபையில் மக்கள் பங்குபற்றுகை
அதனடிப்படையில் முதலாவதாக உள்ளுராட்சி சபை தொடர்பாக பார்க்கும் இவ் உள்ளுராட்சி சபைகள் இலங்கையை பொருத்தவரையில்  உள்ளுராட்சி சபையானது நகர சபைகள், பிரதேசசபைகள் என பிரிதது ஆட்சிசெய்யப்படுவதை காணலாம், ஆரம்ப காலங்கனில் இச்சபைகள் பட்டினசபைகள், கிரமோதய சபைகள், என்ற அமைப்பில் காணப்பட்டது. அதடிப்படையில் 1987ம் இலக்கம் 15ம் பிரிவின் பிரகாரம் இவ் உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்கப்படடிருப்பதைக் குறிப்பிடலாம் . இவ் உள்ளுராட்சி சபை உருவாக்கப்பட்டதன் நோக்கம் மக்கள் இதில் பங்குபற்றும் விதம் தொடர்பாக மேலே குறிட்ட சட்டத்தின் 2 (1) வது பிரிவானது விரிவாக கறிப்பிடுகின்றது. அதாவது “உள்ளுராட்சி நிறுவனம் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளைக் கொண்ட சபையினால் நடாதத்தப்படுகின்றது. அதற்கமைய உள்ளுராட்சி நிறுவனத்தின் முக்கிய நோக்கம், இலக்கு மக்களாகவே அமைதல் வேண்டும்”  எனவும் உள்ளுராட்சி நிறுவனம் மக்களிடமிருந்து பெரப்படும் நிதியில் இயங்குவதாகவே அமைகின்றது அத்தோடு மக்களது நல்வாழ்க்கை மற்றும் நலன்புரி ஆகிய வசதிகளை செய்து கொடுப்பதே அதன் கடமையாகும். எனவும் கூறப்பட்டுள்ளது. 

 மேலும் மக்களை உள்ளுராட்சியில் பங்குபற்ற செய்வது உள்ளுராட்சி மன்றங்களின் கடமையாகும். மக்களின் பங்குபற்றல் தொடர்பாக கல்வியியலாளர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கலாம். அந்தவகையில் உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பாகவும் அதில் மக்கள் பங்குபற்றுதல் தொடர்பாகவும் கல்வியியலாலரான து.ளு ஆடைடஇன் கருத்தின் படி ஜனநாயகம் என்பது மக்களின் பிரதிநிதிகளை நேரடியாகப் பங்குபற்றச் செய்கின்றது. அதே நேரம் உள்ளுராட்சியானது மக்களை ஆட்சி அரசியலில் பங்குபற்றச் செய்கின்றது. எனறு கூறுவதை நோக்கலாம். 
                                                                                    தொடர்ச்சி- பகுதி 02                                                                                   

Post a Comment

0 Comments