கூறப்பட்ட இரண்டு ஆட்சி முறையிலிலும் பார்க்க உள்ளுராட்சி மன்றங்களிலையே நேரடியாக பங்கு கொள்வதைக் காணக்கூடியதாய் உள்ளது. உள்ளுராட்சியில் நிறுவனத்தினால் நிறைவேற்றப்படும் பல்வித நடவடிக்கைகளை திட்டமிடும் போதும், அதை நடைமுறைப்படுத்தும் போதும் மக்களது பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்பதை ஜெ.எஸ். மில்ஸ் தெளிவாக வழியுறுத்துகின்றார். அந்தவகையில் மக்கள் உள்ளுராட்சியில் பங்குபற்றுகையால் எற்படும் நன்மைகள் எவை என்பதை நாம் கீழ்வருமாரு அடையாளப்படுத்தலாம்.
மக்கள் பங்குபற்றுகையால் எற்படும் நன்மைகள்
- உள்ளுராட்ச்சி நடவடிக்கைகள் வினைத்திறன்மிக்கதாகவும், அர்த்தமுள்ளதாகவும், பயனுள்ளதாகவும், மக்களுக்கு ஏற்றதாகவும் காணப்படும்.
- பரந்தளவிலான பங்குபற்றல் மூலம் மேற்கொள்ளப்பட்ட தீர்மாணங்கள் அமுல்படுத்தும் போது அதற்கு மக்கள் தாம் விரும்பியதொன்று என கருதுவதால் அதற்கு சுயமாகவே மனமவந்து ஒத்துழைப்பு நல்குவர்.
- மக்கள் உள்ளுராட்சியின் பங்குதாரராக செய்பட வழிவகுப்பதன் மூலம் தொடர்ச்சிய வினைத்திறனான செயற்பாடுகளை செய்யவும், குறிப்பிட்ட விடயம் தொடர்பாக பாதுகாப்பு விடயங்களையும் செய்ய மக்கள் முன்னிற்பர்.
- உள்ளுராட்சி நிறுவனங்களில் மக்கள் பங்குபற்றுதலை எற்படுத்துவதால் மக்களிடையே அன்னியொன்னிய உறவு எற்படும். ஆதே சந்தர்ப்பத்தில் நல்ல புரிந்துணர்வையும், நம்பிக்கையையும், நட்பினையும் ஏற்படுத்தவும் காரணமாக அமையும்.
- மக்களின் பங்களிப்பு என்பது உள்ளுராட்சி நிறுவனத்திற்கு கிடைக்கும் மிகப்பெரிய சொத்தாகும். எனவே கால்மாக்ஸ் கூறுவதை போல அவர்களை சமூக மூலதனமாக கருதப்படல் வேண்டும். உள்ளுராட்சி சபையின் நிகழ்வுகள் அல்லது ஒரு திட்டம் அல்லது ஒரு செயற்பாட்டை தயாரிக்கும் போதும் அதனை நடைமுறைப்படுத்தும் போதும் மக்களின் பங்குபற்றலை பெற்றுக் கொள்வதால் நன்மைபயக்கும் அதே நேரம் நிறுவனத்தின் வெற்றிக்கு துணையாக அமையும்.
- உள்ளுராட்சியானது உயிரோட்டமுடையதாகவும், பயனுள்ள செயற்பாட்டை மேற்கொள்ளககூடியதுமான நிலையை பெறவேண்டுமானால் மக்களின் பங்களிப்பை பெறுதல் அவசியமாகும்.
- உள்ளுராட்சி தொடர்பாக எத்தனை சட்டங்கள் இருப்பினும், எத்தனை சிறந்த வியூகங்கள் வகுக்கப்பட்டாலும், எத்தகைய சிறந்த செயற்பாடுகள் இருப்பினும் மக்களது பங்கேற்பு இல்லாத போது அனைத்தினது பெறுபேறுகளும் வெற்றியளிக்காது.
மேலும் மக்கள் பங்குபற்றல் தொடர்பாக பார்க்கும் போது Friedrich von Hayek இன் கருத்தின் படி சிறந்த முறையிலான உள்ளுராட்சி இயங்காத எங்கும் சிறந்த ஓர் இறைமை இயங்க முடியாது. எனக்கூறுகின்றார். ஆகவே சிறந்த உள்ளுராட்சி இயங்க வேண்டுமானால் அங்கு பிரஜைகளின் பங்கபற்றல் மிக அவசியமானதாகும் அத்தகைய பங்குபற்றலானது நேரடியாகவும், மறைமுகமாகவும் உள்ளுராட்சியில் இடம்பெறுகின்றது. இத்தகைய பங்குபற்றலை கல்வியலாளரான ஜைடனின் கருத்தோடு ஒப்பிட்டு பார்க்கும் போது “முறையான மற்றும் முறையற்ற இரண்டு நிலைகளிலும் ஆட்சியியலுடன் ஜனநாயக செயன்முறைகள் தொடர்புபடுகின்றன.” அவருடைய ஒப்பீட்டு அரசியலின் வரைவிளக்கணத்தில் அரசியல் முறைகளை ஒப்பீடு செய்வதற்கான கருவியினை ஒரு செயன்முறையாக ஆட்சியியல் புரிந்துக்கொள்ளப்படுகிறது.
அந்தவகையில் மக்கள் எவ்வாறு நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்குகொள்ளலாம் என்பதனை கீழே நோக்கலாம்.
உள்ளுராட்சியில் பிரஜைகளின நேரடி பங்குபற்றல் முறை
- நிறுவன மட்டத்தில் இடம்பெறும் அலோசனை கூட்டம், வரவுசெலவு தயாரித்தல், திட்டமிடல், வட்டார குழு முதலிய விடயங்களில் பங்குக் கொளளல்
- அறிவிக்கப்படும் மாநாடுகள் வேலைதிட்டங்கள் மற்றும் கருத்துக்களை விசாரணை செய்யும் கலந்துரையாடல்களில் கலந்துக் கொளளல்
- வெளிகள மட்டத்தில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்களுக்கு தம்மால் முடிந்த உழைப்பு பொருட்கள் மற்றும் கருவிகளை கொடுத்து உதவுதல்
- உள்ளுராட்சி நிறுவனத்தால் செய்யப்பட்ட நடவடிக்கைகளை மேறபார்வை செய்து விமர்சனப்படுத்தல் உதாரணமாக தெருக்கள் அபிவிருத்தி,பொது நசந்தை, அங்களடிகள் நிர்மாணம், நூலக நடவடிக்கை, சுகாதார சேவைகள் என்பவற்றின் செயற்பாடுகளை குறிப்பிடலாம்.
- உள்ளுராட்சின் பொது சொத்துகளான வீதி முறைமைகள், வீதி வெளிச்ச முறைமை, பொது நீர் சேவை, மயான பூமி, விளையாட்டுமைதானம், பூங்கா மற்றும் வெளியரங்குகளை பாதுகாத்தல்
- சுற்றாடலை பாதுக்க உதவுதல். உதாரணமாக நீர் நிலைகள், நீர்பாதைகள், நீர்தேக்கங்கள், குளம், கால்வாய்கள், சாக்கடைகள், தெருக்கள் பாதுகாப்பு என்பவற்றை குறிப்பிடலாம்
- அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவுதல் எனும் போது மரங்களை நடுதல், நகர அலங்கரிப்பு செய்தல், செயற்கை வளங்களை எற்படுத்தல் முதலியவற்றை குறிப்பிடலாம்.
உள்ளுராட்சியில் பிரஜைகளின் மறைமுக பங்குபற்றல்
- நாட்டு பிரஜை என்ற ரீதியல் உள்ளுராட்சி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய வரி, அனுமதிபத்திர தொகை, வாடகை ஆகியவற்றை செலுத்துதல்.
- உள்ளுராட்சி சட்டத்திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடத்தல்.
- குப்பைகளையும் கழிவுகளையும் பொது இடங்களிலும், நீர் நிலைகளிலும் போடாதிருத்தல். முடியுமான சந்தர்ப்பத்தில் அக்கழிவுகளை மீள் சுழற்சி செய்தல்.
- பொது சொத்துக்களை பாதுகாத்தல் உதாரணமாக விளையாட்டு மைதானம், பொருட்கள், வீதிவிளக்ககள், நீர் குழாய்கள் முதலியவற்றை குறிப்பிடலாம்.
- அனுமதியற்ற நிர்மானங்கள் மற்றும் வியாபாரங்களை செய்யாது விடல்.
- தம் வீட்டு சுழலக்கு அருகாமையில் உள்ள வீதிவிளக்குகள், காண்கள் என்பவற்றை துப்பரவாக வைத்திருத்தல்.
- தெருக்களில் இருக்கக்கூடிய ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றுதல்
- தொடர்ந்து மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கு அழுத்தத்தை வழங்கக்கூடிய குழுவாக செயற்படல்.
அதனைத் தொடர்ந்து ஏற்கனவே கூறியது போல உள்ளுராட்சின் கடமைகளில் ஒன்று மக்களை அல்லது பிரஜைகளை உள்ளுராட்சியில் பங்குகொள்ள செய்வதாகும். எனவே பிரஜைகளை ஆட்சியியலில் பங்ககொள்ள செய்வதற்கான வழிகளாக கீழ்வருவனவற்றை குறிப்பிடலாம்.
பிரஜைகளின் பங்களிப்பை உயர்த்துதல்
- உள்ளுராட்சி நடவடிக்கைகளுக்காக மக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு ஆலோசனை வழிகளை பிரதானமாக இரண்டாக வகுத்துக்கொள்ளுதல் வேண்டும். நிறுவன துறையில் மக்கள் பங்களிப்பை வளர்த்தல் செயற்பாட்டின் ஊடாக மக்கள் பங்களிப்பை வளர்த்தல்
- மக்கள் பங்களிப்பிற்கு உரிய முதன்மை தேவைகளாக கருதப்படும் அறிந்து வைத்திருத்தல், நம்பிக்கையை எற்படுத்தல் என்பன கவணத்தில் கொள்ள வேண்டடியவனவாகும்
- அறிந்திருத்தல் - உள்ளுராட்சியின் நடவடிக்கையின் தன்மை, அதன் குணம், மற்றும் அவற்றை செய்யும் முறை
- உள்ளுராட்சிமன்றங்கள் மக்களுக்கு செய்யவேண்டிய சேவைகள் மற்றும் அவற்றை பெற்றுக் கொள்வதற்கான உரிமை
- உள்ளுராட்சி நிறுவனத்திற்கு மக்கள் செய்ய வேண்டிய கடமைகள்
- உள்ளுராட்சி செயற்பாடு மேலும் பயனுள்ளதாக மாற மக்கள் செய்ய வேண்டிய விடயங்கள்
- உள்ளுராட்சி தொடர்பான விடயங்களை நாடு முழுவதிலும் தெரியப்படுத்துவதுடன் அத்தகைய அறிவை கல்வி ஊடாக வழங்கள்
- குறுகிய கால நடவடிக்கை, நீண்டகால நடவடிக்கைகளை இனங்கானுதல்.
- இது தொடர்பாக கல்வித்தறை, அச்சகத்துறை, மாநாடுகள்,நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொள்ளல்.
- நம்பிக்கையை ஏற்படுத்தல் - தாம் செய்யும் செயற்பாடுகளில் மக்களுக்கு நம்பிக்கை எற்படுதல் வேண்டும். இவ்வாரன சந்தர்பத்தில் மக்களும் அட்சியியல் செயற்பாட்டில் பங்கெடுக்க முன்வருவர்.
- நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைககளும் ஆழ்ந்த, சிக்கனமான திறமையான, பயனுள்ளதாக அமைய வேண்டும். அந் நடவடிக்கைகளில் மக்களின் நல் வாழ்வு, வசதிகள் மற்றும் சேம நலத்திற்கு உரியவறு நிறைவேற்றப்படுவது அதை சார்ந்ததாகும்.
இவ்வாறான செயற்பாடுகளை செய்வதன் மூலம் உள்ளுராட்சியில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்கலாம் என கருதப்படுகின்றது மேலும் இவற்றோடு மக்களின் பங்களிப்பை உயர்த்த ஆலோசனை குழுக்களை அமைத்தல், மக்கள் தொடர்பான உத்தியோகஸ்தரை நியமித்தல், வட்டாரக்குழுவை அமைத்தல், வரி செலுத்துவோரின் அமைப்பு, சனசமூக அமைப்புக்களை உருவாக்கி கொடுத்தல் முதலியவற்றை ஏற்பாடு செய்து அதில் மக்களை ஈடுபட செய்யலாம். இதனூடாக சிறந்ததொரு நல்லாட்சியை எற்படுத்தவும் வாய்புண்டு.
அதனைத் தொடர்ந்து பேராசிரியர் டைசியின் கருத்தின் படி உள்ளுராட்சியின் மக்களின் பங்களிப்பானது மத்திய அரசின் சர்வதிகாரத்தை குறைவடையச் செய்கின்றது. என குறிப்பிடுகின்றார் அந்தவகையில் இதனை நோக்கும் போது ஒரு நாட்டில் சர்வாதிகார ஆட்சியை தவிர்த்து நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு இவ் உள்ளுராட்சி முறைமையானது சிறந்தது என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். நாட்டில் அதிகாரம் செலுத்தும் ஒரே ஒரு நிறுவனம் மட்டும் காணப்படுமாயின் அதன் செயற்பாடுகள் எப்பொழுதும் சர்வதிகார போக்குடையதாக காணப்படும் அதே நேரம் பரந்துபட்டவகையில் நல்லதொரு ஆட்சியை வழங்க முடியாமல் போகும். உதாரணமாக கிராம புறங்களில் வாழும் மக்களின் தேவைகள் நிறைவேறாமல் போகும். காரணம் ஆட்சியாளர்களும் பரந்துபட்ட அடிப்படையில் செயற்படுவதால் குறிப்பிட்ட சில சிறிய பகுதிகள் கவணத்தில்கொள்ளப்படாது. அவர்கள் தட்டிக்களிக்கப்படுவார்கள். எனவே அத்தகைய நிலையை இல்லாது செய்து அடிநிலை மக்களின் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு இடமாக உள்ளுராட்சி சபை விளங்குகிறது. அதே நேரம் நாட்டின் நல்லாட்சியை பல கூறுகலாக பகுத்து செய்வதால் மத்திய அரசின் ஆட்சி சுமை குறையும் அதே வேலை நல்லாட்சியும் ஏற்படும். மாறாக மத்திய அரசானது கொள்கை உருவாக்கத்தின் போது தான்தோன்றித்தனமாக செயற்படும் போது இவ் உள்ளுராட்சி சபைகள் தமது அதிருப்தியை தெரிவிக்கும் இவ்வாறானதொரு நிலை இருப்பதால் பொதுவாக நாட்டில் ஏற்படுத்தப்படும் சட்டமூலங்களில் சர்வதிகார போக்கற்றத்தன்மையை ஏற்படுத்துவதாக அமைகின்றது.
மேலும் உள்ளுராட்சி தேர்தல்களில் வாக்களித்தல், பிரதிநிதியை தெரிவுசெய்தல், வேற்பாளராக நிற்றல், பேரணிகளையும் ஊர்வளங்களையும் நடாத்துதல், ஒரு கட்சியை பிரதிநிதித்துவம் செய்தல், தேர்தல்சார் நடவடிக்கையில் ஈடுபட்டு முரன்பாடுகளில் பங்குகொள்ளுதல், மற்றும் கொள்கை உருவாக்கள் முதலிய விடயங்களில் பங்கெடுத்து உள்ளுராட்சி சென்முறையில் பங்கெடுக்கின்றனர்.
மாகாணசபை அரசாங்க முறையில் மக்கள் பங்குபற்றுகை
உள்ளுராட்சி சபையைவிடவும் அதிகாரமிக்கிதாக மாகாணசபை அரசாங்க முறையானது காணப்படுகின்றது இங்கு ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்குமிடையே உள்ளுராட்சியில் போன்று நெருங்கிய தொடர்பு காணப்படாது. எனினும் இவ் ஆட்சிமுறையிலும் மக்கள் பங்கெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது அதனடிப்படையில 1987ம் ஆண்டு 13 அரசியல் அமைப்பு சீர்த்திருத்த்தின் வழி உருவாக்கப்ட்டதே இவ் மாகாணசபை முறைமையாகும். இதன் கட்டமைப்பு தொடர்பாக அரசியலமைப்பு உருப்புரை 154(அ) பிரிவு தெளிவாக விளங்கப்படுத்துகின்றது.
உள்ளுராட்சி சபையைவிடவும் அதிகாரமிக்கிதாக மாகாணசபை அரசாங்க முறையானது காணப்படுகின்றது இங்கு ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்குமிடையே உள்ளுராட்சியில் போன்று நெருங்கிய தொடர்பு காணப்படாது. எனினும் இவ் ஆட்சிமுறையிலும் மக்கள் பங்கெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது அதனடிப்படையில 1987ம் ஆண்டு 13 அரசியல் அமைப்பு சீர்த்திருத்த்தின் வழி உருவாக்கப்ட்டதே இவ் மாகாணசபை முறைமையாகும். இதன் கட்டமைப்பு தொடர்பாக அரசியலமைப்பு உருப்புரை 154(அ) பிரிவு தெளிவாக விளங்கப்படுத்துகின்றது.
அந்தவகையில் மாகாணசபைக்கு தேவையான உருப்பினர்கள் அனைவரும் ஒரு மாகாணசபை பொதுத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவர் இங்கு அதிக வாக்குகளை பெற்றுக் கொண்டவர் முதலமைச்சராக தெரிவு செய்யப்படுவர் அவரோடு அதிகூடிய வாக்குகளை பெற்றவர்கள் நால்வர் மேலும் நான்கு அமைச்சர்களாக தெரிவு செய்யப்படுவர். அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் கீழ்வரும் விடயங்களுக்கு அமைச்சராக தெரிவு செய்யப்படுவர்.
- சட்டமும் ஒழுங்கும்
- காணியும் காணியமர்வும்
- விவசாயமும் கைத்தொழிலும்
- கல்வியும் கலாசாரமும்
அத்தோடு ஒவ்வொரு மாகாணத்திற்கும் நிதி ஆணைக்குழுவையும், மேல் நீதிமன்றத்தையும் கொண்டிருக்கும். அந்தவகையில் ஏனைய அமைப்பில் போன்றே மக்கள் தேர்தல் சார்விடங்களில் ஈடுபடும் அதே நேரம் வாக்களித்தல், கொள்கை உருவாக்கம், கட்சியை பிரதிநிதித்துவம் செய்தல், முதலிய செயற்பாடுகளில் ஈடுப்படுகின்றனர்.
மேலும் மேலே கூறப்பட்ட அதிகரங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது மாகாணசபையில் மக்களின் தொடர்பு எத்தகைய நிலைமையில் உள்ளது என்பதை அந்துக் கொள்ளலாம்.
அந்தவகையில் கல்வியியலாரான மாசல் என்பவரிக் கருத்தனது “ஒரு மனிதன் சுதந்திரத்தோடு தொடர்புடைய அரசியல் என்பதில் குறிப்பிடப்படுவது யாதெனில் வாக்களிப்பதற்கு உள்ள சுதந்திரம் மற்றும் சமூகம் என்பது ஜனநாயகத்தின் ஊடாக பங்குபற்றல் இடம்பெருவதோடு கல்வி மற்றும் சுகாதாரம் என்பவற்றுக்கு அரசினால் வழங்கப்படுகின்ற சலுகையினை பெறுவதற்கு தனி மனிதனுக்குள்ள உரிமை சமூக ரீதியான பிரஜாவுரிமைக்கு உட்படுத்தப்படுகின்றது. மேலும் அரசியல் பங்குப்பற்றலை விருத்தி செய்தல், பாடசாலை நிர்வாக சபை போன்ற அமைப்புக்களில் பிரஜைகளின் பங்குப்பற்றலை காணக்கூடியதாய் உள்ளது.” என்கிறார்.
அதனடிப்படையில் கல்வி மற்றும் சுகாதார அடிப்படையிலான செயற்பாடுகளில் மக்கள் பங்கெடுக்கின்றனர் என்பதை தமது கருத்தில் மாசல் குறிப்பிட்டுள்ளார் அதன் அடிப்படையில் பார்க்கும் போது மாகாணசபைக்கான அமைச்சுகளில் ஒன்றாக கல்வியும் கலாச்சாரமும் காணப்படுகின்றது என்பது சுட்டிக்காட்டத்தக்கது. மேலும் மாகாணசபைகளுக்கு இரண்டாம் தர கல்வி வரைக்குமே அதிகாரம் கணப்படுகின்றது. ஆனால் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்கி நடத்தலாம் எனவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் பாடசாலைகளை பொருத்தவரையில் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ள பாடசாலைகள், மாகாண சபையின் அதிகாரத்திற்கு கீழ் உள்ள பாடசாலைகள் என வகுத்து நோக்கக் கூடிய நிலையில் பாடசாலைகள் காணப்படுகின்றன. அதனடிப்படையில் மாகாணசபைக்கு சொந்தமான பாடசாலைகளில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக குறித்த பாடசலையை சேர்ந்த பெற்றோர்கள் மாகாணசபை கல்வி அமைச்சரை சந்தித்து பிரச்சினைகளை கலந்துறையாடுவதைக் காணலாம். உதாரணமாக ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்பக்கோரி மக்கள் செல்வது வழக்கமாக உள்ளது. மேலும் ஒவ்வொரு மாகாணசபையும் இசை, நடனம், கலை என்பவற்றை ஊக்குவிப்பதோடு மக்களை அவற்றில் பங்குபற்ற செய்தலும் வேண்டும். ஆகவே அதன்வழி மக்கள் அரசியலில் பங்குபற்றுவதை காணலாம்.
அதனைத் தொடர்ந்து காணியமர்வினையும் நாம் நோக்கும் போது இன்று காணியமர்வு மாகாணசபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதைக் காணலாம். எனவே பாடசாலை, ஆலயம், சனசமூக நிலையங்கள் போன்ற பொது நலன் பேனக்கூடிய கட்டிடங்களை அமைக்கும் போது அதற்கான அதிகாரத்தை வழங்கும் பொறுப்பு மாகாணசபையில் இருப்பதால் குறிப்பிட்ட ஒரு குழுவாகவோ சங்கமாகவே இணைத்து தமது கோரிக்கைகளை நிறைவேற்ற மக்கள் மாகாணசபைக்கு செல்வதைக் காணலாம்.
விவசாயம் மற்றும் கைதொழில் தொடர்பான அதிகாரத்தின்வழி மக்களின் பங்குபற்றலானது எவ்வாறு காணப்படுகின்றது என்றால் விவசாயம் மற்றும் கைதொழில்களை மேற்கொள்பவர்களுக்கு தேவையான விவசாய திட்டத்தை தயாரித்தல், அபிவிருத்தி செய்தல், சந்தைப்படுத்தல் மாகாண சபையால் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் மாகாண சபைகள் தமது பிரதேசத்திற்கு எற்றவகையான தொழில்களை உருவாக்கி மக்களை அதில் ஈடுபட செய்யும். இதனூடாக தமக்கு இத்தகைய தொழில் முயற்சிக்கு அதரவு வழங்குவதால் மக்கள் தொடர்ந்து அவர்களை தேர்தல் காலங்களில் ஆதரிப்பதனூடாக அரசயலில் பங்கு கொள்வதைக் காணலாம்.
இவ்வாறாக மாகாண சபைகளுக்கு இருக்கும் அதிகாரங்களை பயன்படுத்தும் போது அதில் வரும் நன்மைகளை அனுபவிக்க்கூடியவர்களாக மக்கள் காணப்படுகின்றனர். மேலும் அதன்வழி தமது தேவைகளை நிறைவு செய்யப்படுவதற்காக தொடர்ச்சியாக அரசியலில் பங்குபற்றுவதைக் காணலாம்.
மத்திய அரசாங்க முறையில் மக்கள் பங்குபற்றுகை
மத்திய அரசாங்கத்தில் பிரஜைகளின் பங்குபற்றுகை எனும் போது எல்லா நிறுவனங்களிலும் அதிகாரம் கூடிய ஒரு நிறுவனமாக இவ் நிறுவனமானது காணப்படுகின்றது. அந்த வகையில் முழு நாட்டிற்குமான பொதுவான கொள்கைகளை உருவாக்கி நாட்டின் நல்லாட்சிக்கு வழிவகுக்கும் ஒரு இடமாக மத்திய அரசாங்கமானது காணப்படுகின்றது. அந்தவகையில் இங்கு மக்களின் தொடர்பானது எவ்வாறு காணப்படுகின்றது என நோக்கும் போது தம்சார்பாக தமது விருப்பு வெறுப்புக்களுக்கு விருப்பமான ஒருவரை பிரதிநிதியாக தெரிவு செய்து அனுப்புவதன் ஊடாக மக்கள் மத்திய அரசின் ஆட்சி செயன்முறையில் ஈடுபடுகின்றனர்.
மேலும் மக்கள் மத்திய அரசுக்கான தமது விருப்ப பிரதிநிதியை தெரிவு செய்வதற்கு இரண்டு தேர்தல் முறையை எதிர்நோக்கும் அதே நேரம் தேவைப்படின் மக்கள் தீப்பினை வழங்கக்கூடியவர்களாகவும் காணப்படுகின்றனர். அதாவது நாட்டின் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக 6 வருடங்களுக்க ஒருமுறை இடம்பெறும் தேர்தலில் தாம் விரும்பும் ஒருவருக்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்கும் முறைமை செயற்பாட்டில் ஈடுப்படல். அதே போன்று பாராளுமன்றத்திற்கான 196 பேரை தெரிவு செய்யும் 6 வருடத்தற்கு ஒருமுறை இடம்பெறும் தேர்தலிலும் மக்கள் தம் பிரதிநிதியை தெரிவுசெய்கின்றனர்.
இதற்கு அப்பால் சென்று பார்க்கும் போது சில சந்தர்பங்களில் நாட்டு நலன் கருதும் ஒரு விடயத்தை ஜனாதிபதி தனது விருப்பத்தின் பேரில் மக்களின் தீர்ப்பிற்காக விடலாம் அப்போது மக்கள் அரசியலில் பங்கெடுக்க நேரிடும் அப்படிபட்ட ஒரு சந்தர்பம் இலங்கையில் நடந்தது உதாரணமாக ஜெ.ஆர் ஜயவர்தனா அவர்களின் பதவி நீடிப்பதற்காகாக வேண்டி இம்முறை பயன்படுத்தப்பட்டு அதில் வெற்றியும் கண்டார். இவ்வாறாக தேர்தல் ஊடாக மக்கள் மத்திய அரசின் ஆட்சியலில் பங்குகொள்கின்றனர். இத்தகைய தனி ஆட்சி அல்லது ஏக இறைமை பொருந்திய ஆட்சியையே கல்வியியலாளரான ஹொப்ஸ் முன்வைக்கின்றார். அதாவது அவசர நிலைமைகளில் தீடிர் தீர்மானத்தை எடுக்கக்கூடிய அதிகாரம் ஒருவரிடத்தில் காணப்படுமாயின் அங்கு உடனடி தீர்வு கிடைக்கும் எனவே எல்லோரையும் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்ததொரு அதிகாரம் படைத்த நிலையை குறிபிட்டார் அதன்வழி மேற்கூறிய சந்தர்ப்பம் மக்களை அரசியலில் பங்குக்கொள்ள செய்கின்றது.
மேலும் கல்வியிளாலர் ஹொப்ஸ் குறிப்பிடும் போது அரசானது மக்களின் சம்மதத்தால் தோற்றம் பெற்றது என்கின்றார் அதனடிப்படையில் பார்க்கும் போது இன்று பெரும்பான்மையானோர் யாரை அல்லது எக்கட்சியை ஆதரிக்கிறார்களோ அவர்கள் ஆட்சி செய்வதை காணக்கூடியதாய் உள்ளது எனவே கல்வியலாளரின் கருத்துபடி மக்களின் விருப்பம் மக்களின் பங்கு பற்றல் ஆட்சியியலை தீர்மானிப்பதாக உள்ளது.
மேலும் மக்களால் தெரிவு செய்யப்படடவர்கள் தம்மை தெரிவு செய்தவர்களை அப்படையாகக் கொண்டு கொள்கை உருவாக்க செயன்முறையில் ஈடுபடகின்றனர். அதாவது முழு நாட்டிற்கும் தேவையான கொள்கைகளை உருவாக்கும் போது அவர்கள் செய்யவேண்டியது எது என்பதை கல்வியியலாளரான பேர்னேயிஸ் “பொதுமக்களின் தொடர்பகள்” எனும் நூலில் கொள்கை உருவாக்கத்தின் போது கீழ்வரும் விடயங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்கிறார்.
- கொள்கை தொடர்பாக பொது மக்களுக்க வழங்கப்படும் தகவல்
- அது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் செயற்பாடுகளை உருவாக்குதல்
- மக்களின் கருத்துக்களையும் அமைப்பின் கருத்துக்களோடு இனைத்துக்கொள்ள முயற்சித்தல் வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்.
அதாவது உருவாக்கப்பட போகும் கொள்கை தொடர்பாக மக்களுக்கு பிரசாரம் செய்து அவர்களின் கருத்துக்களை பெற்றுக் கொண்டாலே பின்பு அக்கொள்கையை அமுல்படுத்தும் போது வெற்றியளிக்கக் கூடியதாக அமையும் என்கிறார். மேலும் பொதுஜன அபிபிராயத்தை எப்பொழுதும் பெற்றுக்கொள்ள வேண்டியவர்களாக மத்திய அரசினர் காணப்படுகின்றனர் தாம் உருவாக்கும் கொள்கை தொடர்பாக மக்கள் மத்தியில் எத்தகைய நிலைப்பாடு காணப்படுகின்றது என்பதனை அறிந்துக்கொள்ளுதல் ஒரு நல்லாட்சிக்கு சிறந்ததாகும். உதாரணமாக சொல்வதானால் பொருளாதார மற்றும் பேர் சமாதான உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் போது மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளுவது நல்லது இத்தகைய செயற்பாட்டின்போது மக்கள் மத்திய அரசின் ஆட்சியியலில் பங்குகொள்ள நேரிடும்.
மேலும் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட பொருளாதார, அரசியல், கலாசார ரீதியான அனைத்து விடயங்களும் எதோ ஒரு வகையில் மக்கள் பங்குபற்றுதலை அடிப்படையாகக் கொண்டுள்ளதை காணலாம். எடுத்துக்காட்டாக இன்று அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்ளின் சிந்தனையில் உதித்த தேசத்திற்கு மகுடம் சுடுதல் ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட ஒரு மாகாண அல்லது மாவட்ட எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு செயற்படும்போது அதன் ஆரம்ப செயற்பாடாக மக்களின் அடிப்படை விடயங்கள் தொடர்பாக உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதைகாணலாம் அதாவது காணிபதிவுகள், அடையாள அட்டை செய்து கொடுத்தல், பிறப்பு சான்றிதழ் பெற்றுதர முதலிய பல்வேறு விடயங்கள் செய்யப்ட்டு வருவதும் அதில் பிரஜைகள் பங்குபற்றுவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று பரப்பரப்பாக பேசப்படும் திவிநெகும என்ற செயற்பாட்டையும் குறிப்பிடலாம் எத்தனையோ பிரஜைகளுக்கு சுயதொழில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்திருப்பதை காணலாம்.
அவ்வாறே கமநெகும எனும் திட்டத்தை அமுல்படுத்தும் போது அதிலும் மக்கள் பங்குபற்றுகையை எற்படுத்துவதைக் காணலாம் உதாரணமாக கிராமத்தக்கு சொந்தமான பாதைகளை புணர்நிர்மாணம் செய்யும் போது அப்பிரதேச மக்களை இணைத்தக்கொண்டு சிரமதான பணிகளில் ஈடுபடுகின்ற தன்மை சுட்டிக்காட்டத்தக்கது. இவ்வாறாக மக்கள் மத்திய அரசினூடாக பல்வேறு வழிகளில் பங்குபற்றுவதனூடாக தமது நாட்டை ஒழுங்கான முறையில் நல்லாட்சியின்பால் கொண்டு செல்வதற்கு மக்களுடைய பங்குபற்றலானது முக்கியத்தவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்