ஒவ்வொரு தனிமனிதனும் சமூகத்தின் முக்கிய பங்காளியாக திகழ்கிறான். அதுமட்டுமின்றி குறித்த நபர் அந்நாட்டின் பிரஜையாக இருப்பதால் அந்நாட்டில் எல்லோருக்கும் இருக்கும் உரிமைகளும், சுதந்திரமும் அவனுக்கும் உண்டு எனவே தனிமனிதன் என்ற ரீதியில் அவனை புறக்கனித்தலோ, அல்லது அலட்சியப்படுத்தலோ கூடாது அவனுடைய ஒத்துழைப்பு. அவனுடைய பங்குப்பற்றல் ஆட்சியியலுக்கு எப்போதும் அவசியமானதொன்றாகக் கருதப்படுதல் வேண்டும்.
அந்த வகையில் ஆட்சியலில் பிரஜைகளின் பங்குபற்றல் எத்தகையதொரு நிலையில் காணப்பட்டுள்ளது என்பதனை கல்வியியளாலர்களின் கருத்துக்களை அடிப்படையாக வைத்து நோக்கியது போன்று, உதவி வழங்கும் நிறுவனங்களின் செயற்பாட்டின் வழியும் மக்கள் ஆட்சியியலில் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் நிறுவனங்களின் செயற்பாடு எனும் போது இன்று மக்களின் நலன் பொருட்டு அரசு எவ்வாறு நலன்புரி செயற்பாடுகளில் ஈடுப்படுகின்றதோ அது போன்று அரச சார்பற்ற நிறுவனங்களும் மக்களது நலன், முன்னேற்றத்தில் அக்கரை செலுத்துகின்றன. இத்தகைய செயற்பாட்டிற்கு நாடுகடந்த ஆட்சியியல் நடைபெறுவதும் ஒரு காரணமாக அமைகின்றது. அதாவது உலகமயமாக்கலின் விளைவாக ஒரு அரசு ஏனைய அரசகளுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது இதுதொடர்பாக கல்வியியளாலரான ரோட்ஸ் கருத்து தெரிவிக்கும் போது “சிவில் சமூகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆட்சியியலுக்குள் உள்ளடக்கப்படுகின்றன. குறிப்பிட்ட அரசின் அனுமதியோடு செயற்படும் மேற்குறிப்பிட்ட நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆட்சியியல் உள்ளடக்குகிறது.” என்று கூறுவதைக் காணலாம்.
அதனைத் தொடர்ந்து இவ் சர்வதேச நிறுவனங்களின் செயற்பாடு பற்றி விளங்கப்படுத்த ரோஸ் நோ என்பவர் “ஆட்சியியல் செயன்முறையானது தேசிய எல்லைகளை கடந்து சர்வதேச எல்லைகளில் செயற்படுகிறது இது சர்வதேச ரீதியான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதோடு சம்பந்தப்பட்டதாக உள்ளது” என்றும் குறிப்பிடுகின்றனர். இத்தகைய அடிப்படையில் ஒரு அரசானது தமது எல்லையையும் கடந்து தமது செயற்பாடுகளை, கொள்கைகளை விஸ்தரித்து செல்வதைக் காணலாம் இத்தகைய நிலைமைகளில் ஏனைய நாடுகளில் காணப்படக்கூடிய நிறுவனங்கள் தானாக முன்வந்து சில செயற்திட்டங்களை செய்யும் நிலையை நாம் காணலாம். அத்தகைய செயற்பாடானது அரசியல் ரீதியான ஏற்படுத்தப்பட்ட செயற்பாடாகவே காணப்படும் அதாவது இலங்கை எத்தகைய செயற்திட்டங்களை செய்யலாம் என்ற கொள்கையை முன்வைக்கும் அதனடிப்படையில் அவ் நிறுவனங்கள் அவற்றில் தமக்கு ஏற்ற செயற்பாடுகளை தெரிவு செய்து அதில் ஈடுப்படுவது வழக்கம்.
மேலும் எல்லா நிறுவனங்களும் தாம் செய்யும் செயற்திட்டத்தின் பயன் பூரணமாக மக்களை சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு செயற்படுகின்றனர். அந்த வகையில் அதன் நோக்கம் நிறைவேறாத போது தமது உதவிகளை நிருத்திக்கொள்ளவும் செய்கின்றன. அதாவது மனித சுட்டெண் விருத்தியானது உயர் மட்டத்தில் காணப்படவேண்டும் என்பதே இவர்களது கருத்துக்களாக காணப்படுகின்றது.
அந்தவகையில் இலங்கையில் மாத்திரம் கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் எண்னிக்கை 140ஐயும் கடந்து செல்வதை காணக்கூடியதாய் உள்ளது. இவை இலங்கையில் இருக்கக்கூடிய அடிப்படை சார்ந்த விடயங்களுக்கு தமது பங்களிப்பினை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசாங்கத்தின் அனுமதி மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் எத்தகைய அரசசார்பற்ற நிறுவனமே அல்லது ஏனைய நிறுவனங்களோ தமது செயற்பாடுகளை செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே இலங்கை அரசு வரையறுத்து தரும் விடயங்களுக்குள் தமது கொள்கைக்கேற்ப பொருத்தமானதை தெரிவு செய்யலம். அதனடிப்படையில் இலங்கையில் செயற்படக்கூடிய நிறுவனங்கள் சிலவற்றை கீழே நோக்கலாம். அத்தகைய நிறுவனங்களின் செயற்பாடானது மக்களின் பங்குபற்றலுக்கு உட்படக்கூடியனவாகவும் இருப்பதைக் காணலாம்.
உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி
UNDB World vision
செஞ்சிலுவைசங்கம் சார்க் அமைப்பு
அதனடிப்படையில் இவ் நிறுவனங்களின் செயற்பாடுகளை நோக்கும்போது அவற்றை ஒவ்வொரு நிறுவனங்களின் அடிப்படையில் நோக்கிச் செல்லலாம். அந்தவகையில் அவற்றின் முக்கியத்துவத்தினை கீழ்வருமாறு நோக்கிச் செல்லாம்.
அதனடிப்படையில் இவ் நிறுவனங்களின் செயற்பாடுகளை நோக்கும்போது அவற்றை ஒவ்வொரு நிறுவனங்களின் அடிப்படையில் நோக்கிச் செல்லலாம். அந்தவகையில் அவற்றின் முக்கியத்துவத்தினை கீழ்வருமாறு நோக்கிச் செல்லாம்.
உலக வங்கி (World Bank )
உலகவங்கியை பொருத்தவரையில் அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டில் நல்லாட்சி முறையான அபிவிருத்தியை அடைந்துக் கொள்வதற்கு தேவையான நிரந்தரமான சூழலை உருவாக்கவுதோடு, உறுதியான பொருளாதார கொள்கைக்கும் இது அத்தியவசியமானது என கூறுகின்றது. அதனடிப்படையில் தமது உதவிகள் வழங்கப்பட வேண்டுமாயின் அதற்கான நிபந்தனைகளாக குறித்த நாட்டில் நல்லாட்சி நடைபெற வேண்டும் என வற்புறுத்துகின்றனர். எனவே இத்தகைய உதவிகளை பெருவதற்காக வேண்டி அரசுகள் முயற்சிக்கும் போது இயல்பாகவே மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க நேரிடும் அதன் வழி மக்களும் அரசோடு தொடர்புடையவர்களாக காணப்படுவர். மேலும் பிறிடன் வூட் என்பவர் உலக வங்கி கோட்பாட்டின் அடிப்படையில் நல்லாட்சி என்பது யாதென விபரிக்கும் போது “நாட்டின் சமூக பொருளாதார வளங்களை முகாமைத்துவம் செய்வதில் உள்ள அதிகாரம்” என்கிறார்.
அதனடிப்படையில் இலங்கையிலும் அத்தகைய எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு தமது செயற்திட்டங்களை உலக வங்கி செய்திருப்பதைக் காணலாம். குறிப்பாக 160 மேற்பட்ட செயற்திட்டங்களை இலங்கை அரசில் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அதனடிப்படையில் செய்த செயற்திட்டங்களில் ஒரு சிலவற்றை கீழே காணலாம்.
அதனடிப்படையில் இலங்கையிலும் அத்தகைய எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு தமது செயற்திட்டங்களை உலக வங்கி செய்திருப்பதைக் காணலாம். குறிப்பாக 160 மேற்பட்ட செயற்திட்டங்களை இலங்கை அரசில் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அதனடிப்படையில் செய்த செயற்திட்டங்களில் ஒரு சிலவற்றை கீழே காணலாம்.
- இரண்டாவது சுகாதார அபிவிருத்திதிட்டம்
- பண்டகசாலை ரசிதுகள் திட்டம்
- பள்ளியை ஒரு அறிவு மையமாக உருவாக்கல்
- மோதலுக்க பின் வடகிழக்கு பகுதியை சுத்தப்படுத்தல்
- இலங்கை அணுகல் சகாதார செயற்திட்டம்
- மாகாண பாதைகள் பணரமைப்பு
- சுனாமி அனர்த்த முகாமைத்தவ செயற்பாடு
- புத்தளம் வீட்டுத்திட்டம்
- மோதலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சமூகத்தின் வாழ்வாதார திட்டம்
அதனைத்தொடர்ந்து செஞ்சிலுவை சங்கத்தை நோக்கும் போது இந்நிறுவனமானது மோதல் மீட்புத்திட்டம், அனர்த்த முகாமைத்துவம், சுகாதார அபிவிருத்தி, முதலிய விடயங்களில் கவணம் செலுத்துவதைக் காணலாம். எனவே இந்நிறுவனங்கள் அரசின் ஒரு கூறாக செயற்பட்டு தேவை உள்ள தரப்பினருக்கு உதவிசெய்வதன் ஊடாக அவர்களின் தேவை நிரைவேற்றப்படுகின்றது. எனவே ஒரு அரசு தம் பிரஜைக்கு செய்ய வேண்டியதை இந்நிறுவனங்கள் செய்கின்ற நிலைமையானது மக்கள் இந்நிகழ்ச்சிகளினூடாக ஆட்சியியலில் பங்குப்பற்றுவதைக் காணலாம்.
அதனைத் தொடர்ந்து ஆசிய அபிவிருத்தி வங்கியை நோக்கும் போது இவ் நிறுவனமம் பல்வேறு நிகழ்ச்சி திட்டங்களை செய்திருப்பதைக் காணலாம உதாரணமாக
- கல்வி அபிவிருத்தி திட்டம்
- பச்சைபவர் அபிவிருத்தி மற்றும் எரிசக்தி திறன் மேம்படுத்தல்
- பாதைகள் புணரமைப்பு
- கொழுபு நீர்வழங்கள் திட்டம்
- வெள்ள அனர்த்த திட்டம்
- முல்லைதீவு போக்குவரத்து
முதலியவற்றைக் குறிப்பிடலாம். அந்தவகையில் இச்செயற்பாடுகள் குறித்த பிரதேச மக்களை நோக்கி செய்யப்படுவதால் அத்திட்டம் தொடர்பாக அப்பிரதேசமக்கள் தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடபடுவர். அதனைத் தொடர்ந்து UNDBR நிறுவனத்தை நோக்கும் போது அதன் செயற்பாடுகளும் மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதாக அமைகின்றது. அதனடிப்படையில் இந்நிறுவனம் செய்த சில செயற்பாடுகளை கீழே நோக்கலாம்.
- சுழலை பேனுதல் மற்றும் அனர்த்தத்தை எதிர்கொள்ளல்
- வறுமை ஒழிப்புத்திட்டம்
- நெருக்கடிகளை தவிர்த்தலும் மீட்டலும்
- சுற்றுபறசுழல் மற்றும் எறிசக்தி
அப்படியாக எல்லா நிறுவனங்களும் நாட்டில் நல்லாட்சி நிலவுகின்றதா என்பதனை கவனத்தில் கொண்ட நல்லாட்சியை நிலைநாட்டும் பொருட்டு உதவி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதனை எமது நாடுகள் எந்த அளவுக்கு சரியாக செயற்படுத்துகின்றனர் என்பது கேள்விக்குறியானதொரு விடயமாகும் காரணம் மக்களின் தேவைகள் நிறைவேற்றுவதற்காக ஒதுக்கும் நிதியை முற்று முழுதாக குறித்த செயற்பாட்டிற்கு பயன்படுத்துவது இல்லை உதாரணமாக பாதை புணரமைப்பை எடுத்துக்கொண்டால் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தாமல் ஒரு பகுதியை மட்டும் பயன்படுத்தி ஏனையவற்றை தாம் சுரண்டிக்கொள்ளும் தன்மையை நாம் இன்று பார்க்கலாம். அவை குறுகிய காலத்திலையே மீண்டும் உடைந்து விடுகின்றது. எனவே அவை மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லாத நிலை ஏற்படுகின்றது. இவ்வாறு எத்தனையோ திட்டங்கள் ஒழுங்கான முறையில் அமுல்படுத்தியதன் விளைவாக தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளை எதிர் நோக்கும் அதே நேரம் போராட்டங்களில் ஈடுப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான முறையில் நிறுவனங்களின் செயற்பாட்டால் விளையும் பயன்களை அனுபவிக்கக்கூடியவர்களாக மக்கள் அதில் பங்கெடுப்பது குறிப்பிட்டுக் கூறக்கூடியதொன்றாகும். இலங்கை ஆட்சியில் செயன்முறையில் கல்வியியலாளர்களின் கருத்தப்படியும், நிறுவனங்களின் கருத்துப்படியும் மக்களின் பங்கேற்றலானது இடம்பெற்றாலும் கூட பாரிய அளவில் எதிர்பார்த்த நாட்டில் நல்லாட்சி எற்படும் வகையில் மக்களின் பங்குபற்றல் உள்ளதா என்று பார்க்கும் போது அது கேள்விக்குறியான ஒரு விடயமாகவே உள்ளது.
இவ்வாறான முறையில் நிறுவனங்களின் செயற்பாட்டால் விளையும் பயன்களை அனுபவிக்கக்கூடியவர்களாக மக்கள் அதில் பங்கெடுப்பது குறிப்பிட்டுக் கூறக்கூடியதொன்றாகும். இலங்கை ஆட்சியில் செயன்முறையில் கல்வியியலாளர்களின் கருத்தப்படியும், நிறுவனங்களின் கருத்துப்படியும் மக்களின் பங்கேற்றலானது இடம்பெற்றாலும் கூட பாரிய அளவில் எதிர்பார்த்த நாட்டில் நல்லாட்சி எற்படும் வகையில் மக்களின் பங்குபற்றல் உள்ளதா என்று பார்க்கும் போது அது கேள்விக்குறியான ஒரு விடயமாகவே உள்ளது.
அதாவது மக்கள் ஆட்சியில் பங்கு கொள்கின்றனர் என்றாலும் அவர்கள் தொடர்ந்து செயற்படுகின்றார்களா என்பது சந்தேகம் காரணம் தேர்தலின்போது மக்கள் ஆட்சியலில் தம்மை மும்முரமாக நிறுத்திக்கொணள்வர் உதாரணமாக வாக்களித்தல், போட்டியிடல், பிரசாரம் செய்தல், கலவரங்களில் ஈடுப்படல், பேரணிகளை நடாத்துதல் என்ற அடிப்படையில் பங்குப்பற்றுவதைக் காணலாம் எனினும் அதற்கு பிறகு நடைபெறு ம் செயற்பாடுகளில் எந்த அளவு பங்குகொள்கின்றார்கள் என்று பார்க்கும் போது அதில் உள்ளுராட்சி சபையில் ஓரளவு தொடர்பு அதிகமாக காணப்படுவதைக் காணலாம். ஆனால் மத்திய அரசு, மாகாண அரசுகளை நோக்குமிடத்து அதற்கான பதில் பிரஜைகளின் பங்குபற்றுதல் எப்போதாவது இடம்பெறலாம் என்பதாகும். குறித்த சிலர் தமது தேவையை நிறைவு செய்வதற்காகவேண்டி தொடர்ந்து அரசியல் வாதிகள், கட்சிகளுடன் தொடர்பு கொண்டாலும். பெரும்பான்மையான மக்கள் தேர்தலுக்கு பிறகு அடுத்த தேர்தலிலையே ஆட்சியாளனையும், அவனுடைய செயற்பாடுகளையும் காண நேருகிறது.
அதனடிப்படையில் தேர்தல் காலங்களில் மட்டுமே ஒரு பிரஜை நாட்டின் ஆட்சி செயன்முறையில் பாரிய தாக்கத்தை உண்டுப்பன்னுபவனாக இருக்கின்றானே தவிர ஏனைய காலங்களில் அவனுடைய குரல் மங்கிப்போகின்றது. இதற்கு முக்கிய காரணம் தேர்தல் வரயிலும் ஆபேட்சகராக இருந்தவர்கள் தலைமைத்துவத்தை பெற்றுக்கொண்டதால் அவர்கள் தம்சார்பாக தொழிற்படுவர் என்ற என்னமேயாகும். அத்தலைமைகள் குறிப்பிட்ட சிலரின் கருத்துக்களை தவிர பெறும்பான்மையான மக்களின் கருத்துக்களை எற்காமல் புறக்கனிக்கும் சந்தர்ப்பத்தில் பிரஜைகள் அரசியல் ரீதியான செயற்பாட்டிற்கு அதிருப்தியை தெரிவிப்பவராகவும், அதிலிருந்து புறம்பாக ஒரு பாதையில் செல்லக்கூடியவர்களாகவும் இருக்கின்ற நிலையை நாம் இன்றும் காணக்கூடியதாய் உளள்ளது. சிலர் தாம் நாட்டின் ஆட்சிக்கும் தனக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லாததுபோல் நடந்துக்கொள்வார்கள். இவர்கள் அனைவரும் எதோ ஒரு வகையில் அரசியல் செயற்பாடு, ஆட்சியியலின்போது ஏதோ ஒரு வகையில் புறக்கணிக்கப்பட்டவர்களாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பகாலத்தை போல் அல்லாமல் பல்வேறுபட்ட குழுவினர் ஆட்சியியல் செயற்பாடுகளில் கலந்துக்கொளவது நோக்கத்தக்கது. குறிப்பாக தனிநபராக அரசியல் செயற்பாடுகளில் பங்குகொள்ளல் ஏதோ ஒரு அடிப்படையில் ஒரு சிறிய குழுவாக அமைத்துக்கொண்டு தமது தேவைகளையும் விருப்பங்களையும் தமது பிரதிநிதிகளின் கவனத்திற்கு எடுத்து செல்லக்கூடிய தன்மை காணப்படுகின்றது.காரணம் தனிமனிதனாக செல்லும்போது அவருக்கான அந்தஸ்து கிடைக்காமல் போகும் அதே நேரம் ஒவ்வொரு தனி மனிதனின் பிரச்சினையையும் எவ்வாறு தீர்த்து வைப்பது என்ற கேள்வியோடு ஆட்சியாளர்களும் தட்டிகளித்து விடுவர். எனவே அத்தகைய நிலையில் தவிர்த்துக்கொள்ள இன்று தனிநபர்கள் தனிநபர் பிரச்சினையான ஒரு விடயத்தையும் குழுவாக சென்று அது குறிப்பிடட குழுவின் பிரச்சினையாக கருதி அதனை வெற்றிகரமாக முடிக்க எத்தனிப்பதனூடாக பங்குபற்றல் நிலமையானது அதிகரித்த நிலையை நோக்கி நகர்வதும் குறிப்பிடத்தக்கது
மேலும் இன்று மக்கள் தமது பிரச்சினைளை வேறு வகையிலும் அனுகுவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. அதாவது தமது பிரச்சினைகள் ஆட்சியியளாலர்களால் கவனிக்கப்படாது விடப்படும் போது அதனை வெற்றிக் கொள்வதற்காக பொதுசன ஊடங்களை நாடும் தன்மையும் குறிப்பிடத்தக்கது. அதனூடாக தம் பிரதேச பிரதிநிதியின் செயற்பாடோ அல்லது நாட்டின் ஆட்சியியலையோ படம்பிடித்து ஆட்சியாளர்களுக்கு காட்டுவதன் ஊடாக தமது தேவைகளை நிறைவு செய்துகொள்ளும் வழிமுறையும் ஒரு வகையில் ஆட்சியில் பங்குபற்றலாகும். அதாவது பிரஜைகளின் பங்குபற்றல் இருந்தாலே நல்லாட்சி என்பது இடம்பெரும் ஆகவே தொடர்ந்து பிரஜைகள் தாம் அதிகாரம் படைத்தவர்கள் என்பதை ஆட்சியாளருக்கு நினைவூட்ட மறக்கக்கூடாது. தமது பிரதிநிதி தமக்கான தேவையான நல்லதொரு ஆட்சியை நல்காத போது அவர்கள் தொடர்பாக கருத்துதெரிவிக்கவும், கேள்வியெழுப்பவும் சுதந்திரம் குறித்த பிரஜைக்கு இருப்பதால் அதனை செய்யும் போது ஆட்சியாளனும் தமது கடமை பொறுப்புக்கள் எவை என்பதை அறிந்துக்கொண்டு செயற்பட வாய்ப்பாக அமையும். எனவே நிறுவனங்களினதும் கல்வியியலாளர்களினது கருத்து நாட்டு பிரஜைகள் ஆட்சியியலில் பங்குபற்ற வேண்டும். அவ்வாரு பங்குபற்றும்போதே ஒரு நாட்டில் நல்லாட்சியும், நல்ல ஆட்சியியல் செயன்முறையும் நடக்கும் அதனடிப்படையில் இலங்கை கட்டமைப்பும் மக்கள் பங்குபற்றலை அதிகரிப்பதற்காக எற்பாடுகளை செய்திருந்தபோதும் உள்ளுர் மட்டத்தில் அதிகளவான பங்களிப்பு காணப்படுகின்றது ஆனாலும், ஏனைய இரு மட்டங்களிலும் பெரிதளவான பங்குபற்றல் இல்லை என்பதோடு மக்கள் அவ் நிறுவனங்களில் இருந்தும் தூரப்படுத்தப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். எனவே நல்லதொரு ஆட்சி நடைபெற வேண்டுமானால் இலங்கையின் மூன்று கட்டமைப்பிலும் மக்களின் பங்குபற்றுதலை அதிகரிக்க்ககூடிய செயற்பாடுகளை செய்தல். வேண்டும் உதாரணமாக அதற்கான எற்பாடுகள் இன்று இலங்கையில் காணப்படுகின்றது. அதாவது மாகாண, மத்திய ஆட்சியியளாளர்களை மக்கள் சந்திப்பத்தற்காக குறித்த நாள் ஒதுக்கி அவர்களுடைய பிரச்சினைகளை கலந்துறையாடுவதை காணலாம். எனினும் அதற்கான கால அவகாசமானது மக்களை காக்கவைப்பதாகவும், சில நேரங்களில் ஆட்சியாளர்கள் சந்திக்க நேராத போது குறிப்பிட்ட நாள் வீனாக செல்வதும் மக்கள் இதனால் அதிருப்தியடையக்கூடியவர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே ஒரு நாட்டை பொருத்தவரையில் இன, மத, மொழி என்ற வேறுபாடுகள் இன்றி அனைவரையும் நாட்டின் பிரஜையாக கருதுவதன் ஊடாக அரசியல் ரீதியான சம வாய்ப்பினை அனைவருக்கும் வழங்குவதால் நாட்டின் மக்கள் அனைவரையும் ஏதோ ஒருவகையில் ஒரு கருத்தொருமைப்பாட்டின் கீழ் அவர்களை ஒன்றினைக்க முடியும் இத்தகைய செயற்பாடு தொடர்ந்தும் மக்களை ஆட்சியியலில் ஈடுபட வைக்க துனைபுரியும். அதே நேரம் தொடர்ந்து தம் ஆட்சி தொடர்பாக மக்கள் என்ன கருதுகின்றனர் என்ற மதிப்பீட்டினையும் பெற்றுக்கொள்வதற்கு உதவியாக இருக்கும். இத்தகைய நிலைமை வெற்றிகரமான ஒரு நல்லாட்சிக்கு உருதியை வழங்குவதாக அமையும்.
எனவே ஆப்ரகாம் லிங்கன் சொல்லியது போல “மக்களால் மக்களுக்கு மக்களாகவே அமைத்துகொண்ட ஆட்சியே மக்களாடசி ஆட்சி” என்பதற்கினங்க ஒரு நாட்டில் ஜனநாயக ஆட்சியும் அதன்வழி நல்லாட்சியும் இடம்பெற வேண்டுமானால் அவ் ஆட்சியின் ஊடாக ஏற்படும் நன்மை தீதமைகளை அனுபவிக்கப்போகும் மக்களின் பங்குபற்றலானது ஆட்சியியல் செயன்முறையில் இருக்குமாயின் நாட்டின் அரசியல் ஸ்த்திரத்தன்மை ஏற்படும் அதே நேரம் பொருளாதார கட்டமைப்பிலும் வளர்ச்சியைக் காண்டு நாட்டிற்கும் தம் நாட்டு பிரஜைகளுக்கும் நல்லதொரு ஆட்சியை வழங்கமுடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
உசாத்துணை நூல்கள்
யோதிலிங்கம்.சி.அ 2004 “இலங்கை அரசியல் யாப்பு” குமரன் புத்தக இல்லம் :கொழும்பு
குணரத்திணம்.வே. (2008) “இலங்கையின் அரசியல் திட்டத்தின் பரிணாம வளர்ச்சி”குமரன் புத்தக இல்லம் கொழும்பு
யோதிலிங்கம்.சி.அ 2004 “இலங்கை அரசியல் யாப்பு” குமரன் புத்தக இல்லம் :கொழும்பு
குணரத்திணம்.வே. (2008) “இலங்கையின் அரசியல் திட்டத்தின் பரிணாம வளர்ச்சி”குமரன் புத்தக இல்லம் கொழும்பு
லயனல்.கு, 2004,இலங்கைதேசிய இனத்துவப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் 2ம் பதிப்புஇலங்கை மாற்றுகொள்கை நிலையம் கொழும்பு 7
சிவராஜா.அ,2002, “இலங்கை அரசியல்”; 5ம் பதிப்பு, குமரன் புத்தக இல்லம் கொழும்பு -12
அமிர்தீன்.வீ.(2001) :பொதுத்துறை நிர்வாகம் ஓர் அறிமுகம்” தகவல் நலன்புரி அமைப்பு : பேராதனை
லயனல் குருகேஇ (2008) “அன்றும் இன்றும்”இ சமூகப்பங்களிப்பு நிகழ்சித்திட்டப் பிரிவு மாற்றுக் கொள்கைக்கான நிலையம்
முத்துக்குமாரன். சஇ (1999)இ“நாட்டுமக்களும் நல்லாட்சியும்”இ திருநெல்வெலி சைவ சித்தாந்த நுட்பதிப்புக் கழகம் சென்னை – 18.
உப்புல் அபேவாத்தன(2007) , உள்ளுராட்சி நிறுவனங்கள் சமூகப்பங்களிப்பு நிகழ்சித்திட்டப் பிரிவு மாற்றுக் கொள்கைக்கான நிலையம் 273/1யுஇ கொழும்பு- 10.
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்