இலங்கையும் வறுமையும்


      மனித வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, துக்கம் என்பன மாறி மாறி வரும் இரு நிகழ்வுடையதாக காணப்படுகின்றது. இத்தகைய மனித வாழ்க்கையானது பெரும்பாலும் குடும்பம்,மதம், அரசியல், பொருளாதாரம்,சுகாதாரம்,கல்வி போன்ற பல்வேறு சமூக நிருவனங்களின் மூலம் கட்டமைக்கப்பட்ட ஒரு விடயமாகும். இவற்றுள் ஏதாவது ஒன்று பிரச்சினைக்குறியதாக மாறும் போது மனிதன் வாழ்க்கையில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவனாக உள்ளான் இத்தகைய அடிப்படையில் சமூக பிரச்சினைகளில் ஒன்றாக பொருளாதாரம் என்ற அச்சத்தினை நோக்கும் போது இதில் ஏற்படும் ஏற்ற இறக்கமானது மனிதன் ஒருவன் ஏழை,பணக்காரன் என்ற அந்தஸ்தையும் தோற்றுவிப்பதாக அமைகின்றது. இத்தகைய பொருளாதாரத்தில் பல்வேறுபட்ட அம்சங்கள் காணப்படுகின்றன அவற்றில் வறுமை என்பது முக்கியமான ஒரு அம்சமாக அமைகின்றது எனவே இவ்வறுமையின் முக்கியத்துவ நிலைமையும் அது சமூகத்தில் ஏற்படுத்தும் செல்வாக்கு தொடர்பாகவும் இலங்கையில் வறுமையின் நிலை என்ற அடிப்படையில் ஆராய்ந்து செல்லலாம்.

 வறுமை என்றால் என்ன?
     இலங்கையில் வறுமை தொடர்பாக ஆராயும் முன்பதாக வறுமை தொடர்பான சில எண்ணக்கருக்களை விளங்கிக் கொள்வது அவசியமான ஒரு விடயமாகும். அதனடிப்படையில் இவ் வறுமை என்பது எமது நாட்டில் மட்டும் இன்றி அனைத்து நாடுகளிலும் நாம் காணக்கூடிய ஒரு விடயமாகும். அத்தகைய வறுமை தொடர்பான பல்வேறுபட்ட வரைவிலக்கணங்கள் கணப்படுகின்றன. எவ்வாறெனினும் அவை எல்லாம் உணர்த்தி நிற்பது யாதெனில் இல்லாத நிலை என்பதனையாகும். இவ் 

வறுமை தொடர்பான சில வரைவிலக்கணங்களை கீழே நோக்கலாம்
அடிப்படை தேவையைக்கூட பூர்த்திசெய்துக் கொள்ள முடியாத நிலை பௌதீக மற்றும் பௌதீகமல்லாத தேவைகளை நிறைவேற்றமுடியாத நிலை

  •   பௌதீக தேவை           – உணவு,சுகாதாரம்,கல்வி.வீடு…
  •   பௌதீகமல்லாதவை   – தனிமனித அடையாளங்களை பேணுதல்               

     ஆகக் குறைந்த தேவையைகூட பூர்த்தி செய்ய முடியாத நிலை இத்தகைய வரைவிலக்கணங்கள் காணப்படுவதோடு ஐக்கியநாடுகள் சபை தாபனமும் இவ் வறுமை தொடர்பான வரைவிலக்கணத்தை முன் வைத்துள்ளமையை காணலாம் 

''ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்ய கூடியளவிற்கு கூட வருமானத்தை கொண்டிராத நிலை வறுமையாகும்'' என்கின்றது. மேலும் இவ் வறுமை  
( UNDP, 1997)
• ஒரு மனிதனின் நீண்ட ஆயுள்
• ஆரோக்கியமான வாழ்க்கை தரம்
• சுதந்திரம்
• சுய கௌரவம்
• ஏனையவர்களால் மதிக்கப்படல்
அதனைத் தொடர்ந்து 1990ம் ஆண்டு வெளியிடப்பட்ட உலகவங்கி அறிக்கையானது இவ்வாறு வறுமையை வரைவிலக்கணப்படுத்துகிறது.
''ஆகக் குறைந்த முழுமையான வாழ்க்கை தரம் ஒன்றினை கொண்டிராத நிலையே வறுமை''அதனை தொடர்ந்து அமெரிக்க அரசாங்கம் பயன்படுத்திய வறுமை அளவீடுகளை விருத்தி செய்த மொலி ஓர்ஸான்கிஸ்கி ( Molllie Orshansky)  என்பவர் வறுமை தொடர்பாக கீழ்வருமாறு குறிப்பிடுகின்றார்.
  ''எம்மை சுற்றியுள்ளவர்கள் தாம் அவற்றினை அடைவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ள பொருட்கள்,சேவைகள் மற்றும் மகிழ்வுகள் என்பவற்றை அடைந்துகொள்ள முடியாத நிலையினை வறுமை'' என்கிறார். இவ்வாறு பல வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றன இவை குறிப்பாக வருமானம்,வாழ்க்கை தரம் என்பவற்றிலயே அதிக கவனம் செலுத்துகின்றன. என்றாலும் இன்றைய இயந்திர உலகத்தில் இவற்றோடு சமூக பொருளாதார கலாசார, அரசியல் பரிமாணங்களும் இவ் வறுமை என்ற எண்ணக்கருவுக்குள் உள்ளடங்குவதை அறியலாம்.

வறுமைக் கோட்டினை நிர்ணயித்தல்
நாடொன்றில் நிறைவான வாழ்க்கை தரத்தை பெற்றுக் கொள்வதற்கு தேவைப்படுகின்ற ஆகக் குறைந்த வருமானத்தின் அளவினை குறித்து நிற்பதாகும். இவ் வறுமைகோடு தொடர்பாக 1901ம் ஆண்டு Rowntree  என்பவர் இவ்வாறு வரைவிலக்கனப்படுத்துகின்றார். 
உணவு வீட்டு வசதி, உடை மற்றும் ஏனைய அத்தியாவசியத் தேவைகளை சீவனோபய மட்டத்தில் பூர்த்தி செய்வதற்கு தேவையான வருமானமே வறுமைக் கோடாகும் என்கிறார்.
 இவ் வறுமைக் கோடானது நாடுகளுக்கிடையில் வித்தியாசப்பட்டுக் காணப்படலாம். எனினும் இது மனிமனித தேவைகளை வரையரைசெய்வதில் கவனம் செலுத்துகின்றது. கீழ்வரும் அம்சங்களும் இவ் வறுமைக்கோட்டின் மீது செல்வாக்கு செலுத்துகின்றன.
• கலாசார வேறுபாடு
• அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச பொருள்,சேவை அளவு
• அன்னிய செலாவாணிவீதம்
• பணவீக்கம்
• விலைமாற்றம்

 வறுமையின் வகைகள்
உலக நாடுகளில் காணப்படும் வறுமையை பொதுவாக நாங்கள் இரண்டு வகையாக பார்க்கலாம் பிரித்து நோக்கலாம். அவையாவன

• முழு வறுமை (Absolute Poverty)
• சார்பு வறுமை (Relative Poverty) 
 
அதனடிப்படையில் இவை தொடர்பாக ஒரு சிறிய விளக்கத்தினை நாங்கள் கீழ்வருமாறு நோக்கலாம்.


முழு வறுமை (Absolute Poverty)
            முழுமையான வறுமை என்பது அடிப்படை உடற்கூற்றுக்குறிய தகுதிகாண் விதிகளை அடைவதற்கு தேவைப்படுகின்ற மிக குறைந்த நுகர்வு மட்டங்களை அடைய முடியாத நிலையே  முழுமை வறுமை  எனப்படும்.
 ஐக்கிய நாடுகள் தாபனம் (UNO)  இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது முழுமை வறுமை என்பது “உணவு பாதுகாப்பான குடி நீர், மலசலகூட வசதி, சுகாதாரம், வசிப்பிடம், கல்வி, தகவல்கள் உள்ளடங்;கலாக அடிப்படை மனிதத்தேவைகளின் கடுமையான இழப்பினால் எடுத்துக்காட்;டப்படும் ஒரு நிலை” வறுமை என்று வரையறை செய்கின்றது. மேலும் இவ் முழுமை வறுமை தொடர்பாக பார்க்கும் போது இது “வருமானத்தை அடைவதில் மட்டுமின்றி சமூக சேவைகளை அடைவதிலும் தங்கியுள்ளது” எனக் கூறப்படுகின்றது.

. ( United Nation,1995)


முழுமை வறுமையை அளவீடுவதற்கான அளவீடுகள்
  1. ஆள்வீத சுட்டெண்
  2. வறுமை இடைவெளி சுட்டெண்
  3. வறியவர்களுக்கிடையேயான வருமான பரம்பல்
  4. திரண்ட வறுமை சுட்டெண்
 சார்பு வறுமை (Relative Poverty)
 சார்பு வறுமை என்பது சமூகத்தில் நிலவும் சராசரி வாழ்க்கை நிலைமையை பேண முடியாத ஒரு நிலையாகும். நாங்கள் இதனை கணிப்பிடும் போது சராசரி வருமானத்தையே கருத்தில் கொள்வோம். இவ் வறுமைக்கு முக்கிய காரணம் எந்த நபரும் சமமான வருமானம் பெறாமையாகும்.

உலகலாவிய ரீதியில் வறுமை
 உலகலாவிய ரீதியில் வறுமை தொடர்பாக ஆராயுமிடத்து குறிப்பாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் கிராமப்புறத்தில் வறுமையானது அதிகமாக காணப்படுவதைக் காணலாம். அதாவது உச்ச வறுமை எல்லையை அனுபவிப்பவர்களாக ஏறக்குறைய 900000 மில்லியன் மக்களை குறிப்பிடலாம். அதாவது இவர்கள் அனைவரும் ஒரு அமெரிக்க டொலருக்கு  குறைவலாக வருமானம் பெருபவர்களாக காணப்படுகின்றனர். மேலும் இவர்களின் தொழிலானது விவசாயமாக காணப்படுகின்றமையும் வறுமைக்கான முக்கிய காரணமாகும். உலகிலே தென்னாசியாலும், ஆபிரிக்காவிலும் அதிக வறியவர்கள் காணப்படுகின்றனர்.
சில குறிப்பிட்ட நாடுகளின் வறுமை போக்கு


நாடு                      வருடம்                          1$ க்கு குறைவான                                              2 $ க்கு குறைவான  
                                                   வருமானம் பெறும் சனத்தொகை வீதம்              வருமானம் பெறும் சனத்தொகை வீதம்பங்களாதேஷ்       2000                                        36                                                                        82.8
இந்தியா               199-2000                                 35.3                                                                     80.6
மலேசியா             1997                                       <2                                                                        9.3
நைஜீரியா             1997                                       70.2                                                                     90.8
பாகிஸ்;தான்        1998-1999                               13.4                                                                     65.6
நேபாளம்              1995-1996                                39.1                                                                    80.9
சீனா                     2001                                       17                                                                        47
இலங்கை              1999-2000                               7.6                                                                       50.7



மூலம்  - world development indicators data base


    மேற்கூறிய அட்டவணையை நோக்கும் போது ஒரு நாளைக்கு 1$ க்கு குறைவான வருமானம் பெறும் சனத்தொகை வீதத்தில் 1997 ஆண்டுகால பகுதியில் மலேசியா 2 வீதத்திற்கும் அதிகமாக இருக்க, இலங்கையானது 1999-2000 காலப்பகுதியில் 7.6 வீதமாக காணப்படுவதனை நோக்கலாம் இவையே குறைந்த அளவுடைய வருமான வீதத்தை கொண்ட சனத் தொகை உள்ள நாடுகளாக அமைகின்றன. மாறாக நைஜீரியா 1997 படி 70.2 வீதமான மக்கள் 1$ க்கு குறைவான வருமானத்தை பெறுபவர்களாக காணப்பட்டனர். அதன் அடிப்படையில் பார்க்கும் போது எமது நாடு ஓரளவு முன்னேற்றமடைந்த நிலையை காணலாம்.

 அடுத்ததாக நைஜீரியா 90.8 வீதமாகவும்;, எமது நாட்டை பொருத்தவரையில் 50.7 வீதமானோரும், மலேசியாவை பொருத்தவரையில 9.3 வீதமானேரும் ஒரு நாளைக்கு 2$ க்கு குறைவான வருமானம் பெறுவதனை காணலாம். அதனடிப்படையில் மலேசியா ஓரளவு வறுமை நிலை குறைந்ததாக காணப்படுகின்றது.

   ஆபிரிக்காவில் நைஜீரியாவும் ஆசியாவில் இந்தியா,பங்களாதேஸ், பாகிஸ்தான் என்பன மிக வறுமையில் வாடும் நாடுகளாக காணப்படுகின்றன.
இலங்கையில் வறுமை
     உலக நாடுகளின் மத்தியில் எமது நாடானது அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக காணப்படுகின்றது. எமது நாடும் ஓரளவு வறுமையுடைய நாடாக காணப்படுகின்றது என குறிப்பிடலாம். வறுமையை போக்க வேண்டுமானால, உறுதியான பொருளாதார வளர்ச்சி, சமூக அபிவிருத்தி என்பன முன்னேற்றமடைய வேண்டும். அதற்கு முக்கியமாக உறுதியான அரசாங்கமானது காணப்பட வேண்டும். எமது நாடு 1948ம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததை தொடர்ந்து வறுமையை போக்கும் பொருட்டு பல நலதிட்டங்களை ஏற்படுத்தினாலும் உறுதியான பொருளாதார வளரச்சியை ஏற்படுத்த முடியவில்லை. இன்றுவரை இலங்கை வறுமையில் இருக்க முக்கிய காரணம் உற்பத்தி பெருக்கமோ வேலைவாய்ப்போ உருவாக்கப்படாமை ஆகும்.
 தென்கொரியா,தாய்லாந்து,சிங்கபூர்,போன்ற நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் சமூக நல திட்டங்களை இரண்டையும் சமனாக பேணியமையால் இன்று அவை வறுமையை பாரிய அளவில் குறைத்துள்ளதனைக் காணலாம். தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் வறுமை ஒழிப்பு தொடர்பான திட்டங்களை அமுல்படுத்தினாலும் தொடர்ந்தும் வறுமை காணப்பட்டதாகவே உள்ளது. அத்தோடு நாட்டு பொருளாதார நடவடிக்கைகளில் 70 வீதமானது மேல் மாகாணத்தில் இடம்பெறுவதும் இவ் வறுமையானது தொடர்ந்து காணப்படுவதற்கு காரணமாக அமைகின்றது. மேலும் இலங்கையில் இவ் வறுமையானது குறிப்பாக, சிறு நில விவசாயிகள், மீன்பிடிப்போர், சுயதாழில் செய்வேர், தச்சு மற்றும் மேசன் தொழில் செய்வோரிடத்திலயே வறுமை காணப்படுகின்றது.
இலங்கையின் உத்தியோகபூர்வ வறுமைக்கோடு  (1990-2008)

     ஒரு நபரின் வருமானமானது நிர்ணயிக்கப்பட்ட வருமானத்திற்கு கீழ் காணப்படுமாக இருந்தால் அந் நபர் முழு வறுமையில் இருப்பதாக நாம் கருதிக்கொள்ள முடியும். இலங்கையில் 1990-2008 வரையிலான காலப்பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட வறுமைக் கோடு பற்றிய தரவினை கீழே காணலாம்.
இலங்கையின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடுகள்
மாகாணம் 

                                மூலம்  - Department of Census & Statistics
     மேலே உள்ள அட்டவணையின் அடிப்படையில் நோக்கும் போது 1990-2008 நாடு தழுவிய ரீதியில் பார்க்கும் போது வறுமை நிலையானது 6 மடங்காக அதிகரித்திருப்பதை காணலாம். (1990 - 475, 2008 – 2824 )  
       தரவுகளுக்கு அமைவாக வறுமைக் கோடானது கொழும்பு மாவட்டத்தில் 1990/91 ஆண்டுகளில் 518 ஆக காணப்படது 2008ம் ஆண்டு 3050ஆக உயர்ந்து காணப்படுவதை காணலாம். அம்பாந்தோட்டை மாவட்டத்தை பார்ப்போமாகவிருந்தால் 2008ம் ஆண்டு 2655 ஆக காணப்படுகின்றது. ஏனைய மாவட்டங்கள் இதைவிட அதிகமாக காணப்படுகின்றன.
 மாகாண அடிப்படையில் பார்க்கும் போது வறுமை கோடானது மேல் மாகாணத்தில் கூடுதலாகவும் தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் குறைவாகவும் காணப்படுகின்றன.
    மேலும் இலங்கையின் வறுமை நிலையை தெளிவு படுத்துவதற்கு ஆள்வீத வறுமை தரவுகளையும் நாம் பயன்படுத்தலாம் அதன் அடிப்படையில் அதற்கான தரவுகள் கீழே காணப்படுகின்றது.
இலங்கையில் ஆள்வீத தேசிய வறுமை
 
                  மூலம் - Department of Census & Statistics
     மேலே தரப்பட்ட தரவுகளுக்கு அமைவாக மேல் மாகாணத்தில் 1990-2000ம் ஆண்டு காலப்பகுதிக்குள் வறுமையானது 16-6 ஆக குறைவடைந்துள்ளதைக் காணலாம்
மத்திய மாகாணத்தை பொருத்தவரையில் 1990-1995 வரையிலானப்பகுதிக்குள் வறுமை உயர்ந்து பின் 2000ம் ஆண்டில் வீழ்ச்சியடைந்துள்ளமையை காணலாம். எனினும் 1999 ஆண்டை விட உயர்வடைந்தே காணப்படுகின்றது. உதாரணமாக மாத்தளை (1990-29)இ (1995/96-42), (2000-30).

  தென் மாகாணத்தில் காலியில் தொடர்ச்சியாக வறுமை அதிகரித்துள்ளது 1990-2000 வரையான காலப்பகுதிக்குள் (30இ32இ36). ஆனால் மாத்தறையில் சற்று அதிகரித்து பின் வீழ்ச்சியடைந்துள்ளது. (29/35/27)
    வடமேல் மாகணத்தை பார்க்கும் போது 1990-2000 காலப்பகுதிக்குள் குருணாகலில் சிறிய அளவிலான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதைக் காணலம் (27இ26இ25). ஆனால் புத்தளத்தை நோக்கும் போது அதிகரித்து செல்வதை காணலாம்.
   வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரத்தை நோக்கும் பொது 1995 ஆண்டு காலப்பகுதியில் உயர்ந்துச்சியடைந்தள்ளது. (24/27/20) பொலனறுவையில்  வீழ்ச்சியடைந்து மீண்டும் உயர்ந்துள்ளது. (24/20/24)

 ஊவா மாகாணத்தில் பதுளை, மொனராகலை, ஆகிய இடங்களில் தொடர்ச்சியான அதிகரிப்பே காணப்படுகின்றது (31/41/37), (34/56/37) இவ் மாகாணமே அதிகமான வறுமையை உடையதாக காணப்படுகின்றது.



 சப்ரகமுவ மாகாணத்தை பார்க்கும் போது இங்கும் தொடர்ந்து அதிகரித்த நிலையே காணப்படுகின்றது.1990ஃ95 பகுதிகளில் கடுமையான வறுமை காணப்பட்டதை பார்க்கலாம்.முழு நாடளவிய ரீதியில் பார்க்கும் போது 1995/96ம் ஆண்டுகாலப் பகுதியில் 28.8ஆக  வறுமை அதிகரித்து பின் 2002ம் ஆண்டு 22.7ஆக விழ்ச்சியடைந்திருப்பதைக் காணலாம்



இலங்கையில் வறுமையை கீழ்வருவனவற்றின் அடிப்படையில் ஆராயலாம்
  •  பண அடிப்படையில் இட வேறுபாடு
  •  உணவு சக்தி நுகர்வின் அடிப்படையில்
  •  கல்வியறிவு, சிசு மரண வீதம்
  •  பண அடிப்படையில் இட வேறுபாடு                                                 
     எமது நாட்டின் வறுமையை பண அடிப்படையிலும் நோக்கி செல்லலாம். அந்த வகையில் 2007ம் ஆண்டு தகவல்களின் படி 15.2மூ  வறுமை காணப்பட்டாலும் இது எல்லா இடங்களிலும் ஒரு அளவு காணப்படவில்லை. காரணம்
  • வளங்கள் கிடைப்பதில் உள்ள வேறுபாடு     உட்கட்டமைப்பு சார்ந்த வேறுபாடு
  • பொருளாதார, சமூக, அடிப்படையிலான வேறுபாடுகள்                   (கிராமம்,நகரம்,தோட்டம்)
  எனவே துறை சார்ந்த அடிப்படையில் வறுமையை பார்க்கும் போது நகரம் -6.7%, கிராமம்-15.7%, தோட்டம் -32.0% என்ற அடிப்படையில் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1995/96 பகுதிகளில் தலாவருமான வறுமைகோட்டெல்லையாக 791.67 ஆக காணப்பட்டது. இதில் நகரம் -14.7%, கிராhம் -27%, தோட்டபுறம் -24.9% ஆக காணப்பட்டது.
  மாகாண அடிப்படையில் நோக்குமிடத்து 2007ம் ஆண்டு மத்திய மலைநாட்டு மாகாணங்கள் அதி கூடிய வறுமையை உடைய மாகாணமாக காணப்படுகின்றது. அதி கூடிய வறுமையுடைய மாகாணமாக ஊவா மாகாணமானது காணப்படுகின்றது.
  • ஊவா 27% ,     சப்ரகமுவ 24.2%   ,   மத்திய 22.3%   ,  மேல் 8.2%
    வடமத்திய, வடமேல், தென்மாகாணம் என்பவற்றில் சராசரியாக 14.0% மாக காணப்பட்டது. 2006ஃ2007 பகுதியில் இலங்கையில் துறைகள், தலைக்குறிய மாதாந்த மொத்த வருமானம், தலைக் கணிப்பு வறுமைக் குறிக்காட்டி, வறியவர்களின் எண்னிக்கை, மொத்த வறுமைக்கான பங்களிப்பு தொடர்பான தரவுகள் கீழே காட்டப்பட்டுள்ளது.



மூலம் - வீட்டு வருமானம் ம்றும் செலவு அளவீடு -2006ஃ2007 தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணக்களம்.இலங்கை
 உணவு சக்தி நுகர்வின் அடிப்படையில்
       வெறுமனே பணம் மட்டும் வறுமையை தீர்மாணிக்கும் காரணியாக அமையாது அதனோடு உணவு பலக்கவழக்கங்கள், சுகாதாரம், விலைகள், தனிநபர் போசாக்கு போன்றனவும் வறுமையை வெளிபடுத்துகின்றன. இலங்கையின் உணவு போசாக்கு மட்டத்தைக் கொண்டு வறுமை இனங்காணப்படுகின்றது உதாரணமாக 2002ம் ஆண்டு வீட்டு வருமானம் செலவீடு அளவீடாக 2030 கலோரி அளவான உணவு சக்தி நுகர்வு அடிப்படையிலான அடிப்படை அளவீடு பயன்படுத்தப்பட்டது. 2006ஃ07ம் ஆண்டுகளில் அது 2118 கலோரியாக மாற்றமடைந்தது.
 மேலும் ஏழையானவர்கள் 1696 கிலே கலரியை நுகர்வாகக் கொள்ள வறுமையற்வர்கள் 2194 கலோரி அளவு நுகர்வாகக் கொள்கின்றனர். மேலும் நாளாந்தம் 50.7மூ உணவு சக்தி வீதத்தை விடவும் குறைவாகவே ஓரு நாளைக்கு நுகர்கின்றனர். இவை வறுமையின் நிலையை உணர்த்துகின்றது.
துறைகள், மாகாணங்கள் என்ற அடிப்படையில் உணவு சக்தி நுகர்வின் மூலம் வெளிபடுத்தப்படும் வறுமை நிலை – 2006/2007


மூலம் - வீட்டு வருமான மற்றும் செவு அளவீடு 2006/2007 தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்
 ஊவா மாகாணத்தலில்  மட்டுமே 38.4 சதவீததத்தினர் குறிப்பிட்ட அளவினை விட குறைவான உணவு சக்தி நுகர்வினை பெறுபவர்களாக உள்ளனர்.
  கல்வியறிவு சிசுமரணவீதம் ன்பவற்றின் மூலமான வறுமையின் இடம் சார் வேறுபாடுகள்
     பிரதேச அபிவிருத்தியை மையஙமாகக் கொண்டு தேசிய அரசு பல கொள்கை திட்டங்களை வகுத்தாலும்கூட இன்றும் பல துறைகளில் குறிப்பிடத்தக்க சமத்துவமின்மையை அடையாளம் காணக்கூடியதாய் உள்ளது. உதாரணமாக கல்வி அறிவு வீதம், சிசு மரணவீதம் என்பவற்றை குறிப்பிடலாம்.
               2001ம் ஆண்டு தொகை புள்ளிவிபரவியல் திணைக்கள ஆய்வின்படி  நாடு முழுவதிலும் 90.7 சதவீதம் கல்வியறிவு உடையவர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது. கல்வியறிவு மறுக்கப்படுகின்ற பிரதேசங்களில் இவ் வறுமை நிலையானது அதிகமாக் காணப்படுகின்றது. உதாரணமாக நுவரெலியா, பதுளை, இரத்னபுரி, மொனராகலை, அம்பாறை 15-20 சதவீதத்தின் கல்வியறிவு குறைந்தவர்கள். 2001ம் ஆண்டினை பார்க்கம் போது நுவரெலியா 81.7 சதவீதமும்,பதுளை 84 சதவீதமும் கல்வி அறிவு உடையோராகக் காணப்பட்டனர். கொழும்பு கம்பாஹா,காலி போன்ற இடங்களை பார்க்கும் போது 8 சதவீதமானோரே குறைவான கல்வி அறிவுடையோராக காணப்படுகின்றனர்.
          பால், கல்வி அறிவு அடிப்படையலும் வேறுபாடுகள் காணப்படுகின்றது. இவையும் வறுமையை அளவிடும் ஒன்றாகக் காணப்படுகின்றது. இன்று வiறுமையை அளவிடும் புதிய அளவீடுகளில் பெண்களுக்கான சம அதிகாரம் என்பனவும் உள்ளடக்கப்படுகின்றது. ஊதியத்தில் ஆண்களைவிட பெண்;களுக்கு குறைவாகவே வழங்கப்படுகின்றது. உதாரணமாக நெல்வயலில் வேலை செய்தல்,வீதிகளில் செப்பனிடல், குப்பை கூலங்களை கூட்டி அகற்றுதல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

 கல்வியறிவும் பெண்களைவிட ஆண்களே சகல மாவட்டங்களிலும் அதிகமாகக் காணப்படுகின்றனர். 1991/1991,2001 வீட்டு வருமானம் மற்றும் செலவுகள் பற்றிய தொகை மதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளிஜயிட்ட தகவல்களின்படி நுவரெலியா 1991ல் ஆண்களின் கல்வியறிவு வீதம் 82.6 ஆகவும் பெண்களினது 64.8 சதவீதமாகவும் காணப்பட்டது. 2001ம் ஆண்டில் ஆண்கள் 87.1 சதவீதமாகவும், பெண்கள் 76.6 சதவீதமாகவும்  அமைந்ததைக் காணலாம். முன்னெற்றமான கம்பாஹா மாவட்டத்தில் கூட ஆண்கள் 0.7 சதவீதத்தினர் பெண்களைவிட அதிகமாக கல்விக் கற்றவர்களாகக் காணப்படுகின்றனர்.

சிசு மரண வீதம்
  சிசு மரண வீதத்திலும்  இடம்சார் பால்சார் வேறுபாடுகள் காணப்படுகின்றது அதனடிப்படையில் பதிவாளர் நாயக திணைக்களத்தால் வெளியிடப்படும் வருடாந்த அறிக்கையின் பிரகாரம் 2002ல் வட மத்திய மாகாணத்தில் 100000 பிறப்புக்கு 17 இறப்பும், வட மாகாணத்தில்100000 பிறப்புக்கு 7 இறப்பு எனவும்,தெண்மாகாணத்தில் 100000 பிறப்பிற்கு 8 எனவும் குறிப்பிடப்படுகின்றது.
 பெண்கள் புறந்தள்ளப்படுகின்றளர் என்றாலும்  இலங்கையில் பெண்களைவிட ஆண் சிசு மரண வீதமானது அதிகமாகக் காணப்பட்டதனைக் காணலாம். உதாரணமாக 1991ல் 100000 பிறப்பிற்கு 19.9 வீத ஆண் சிசுக்கள் இறப்பு அதே ஆண்டில் பெண்கள் 5.4 சத வீதம். 2002ம் ஆண்டு பார்க்கும் போது ஆண்கள் 12.5 ஆகவும் பொண்கள் 10.2 வீதமாகவும் சிசு மரண வீதம் காணப்பட்டதனைக் காணலாம்.
இலங்கையில் வறுமை தொடர்பான அவதானிப்புக்கள் 
  • இலங்கை வறுமை ஒழிப்பு திட்ட முறையில் பூரணமடையவில்லை காரணம் இன்னும் 1ஃ5 பங்கினர் வறுமையில் வாடுகின்றனர்
  • நாட்டின் அபிவிருத்தி சமச்சீர் அற்ற தன்மை காரணம் மாகணங்களுக்குள்ளேயும், அதற்கு வெளியேயும் பாரிய வேறுபாடு காணப்படுகின்றமை.
  • விவசாயம் அதிகமாக உள்ள பிரதேசம், பெருந்தோட்ட துறைகளிளும் வறுமை; உயர்வாக காணப்படுகினறன.
  • கைதொழில் காணப்படும் பிரதேசத்தில் வறுமை சார்பளவில் குறைவு
  • தனிமைப்படுத்தப்பட்ட, பின்தங்கிய மாவட்டங்கள் தொடர்ந்து வறுமையில் உள்ளன.
இலங்கையின் துறை ரீதியான முழு வறுமையின் தோற்றப்பாடு
   இது தொடர்பான விடயங்களை அறிந்துக் கொள்வதற்கு கீழ்வரும் தகவல்களை பார்க்கலாம். 

  •  1969/70-1973 இடைப்பட்ட காலத்தில் வறுமையானது நாட்டில் இரு மடங்காக அமைந்திருந்தமையைக் காணலாம். 1896ஃ87 காலப் பகுதியில் அதன் வளர்ச்சி 27.6 ஆக உயர்தமை குறிப்பிடத்தக்கது. சுதந்திரத்தின் பின்னரும் நாட்டில் 1/5 பங்கினர் இன்னும் முழு வறுமையில் வாழுகின்றனர்.
  • வறுமையானது நகரங்களில் குறைவாகவும் ஏனைய பிரதேசங்களில் அதிகமாக காணப்படுகின்றது. 1990களில் பெறுந்தோட்டத் துறையில் அதிகமான வறுமை காணப்பட்டதனை காணலாம். 
  • நகர்புற பகுதியில் வறுமை குறைவாக உள்ளது காரணம் கைத்தொழில்  துறைகாணப்படுவதாகும்.
உலக வங்கியின் மதிப்பீடுகளின் அடிப்படையில் இலங்கையின்  வறுமை 

வருமான சமமின்மை
01. உடனடி விளைவிற்கான நிகழ்ச்சிதிட்டம்

 உணவு மாணியத்திட்டம்

       இது பிரித்தாணியரால் அமுல்ப்படுத்தப்பட்டது. இதனை அரசாங்கம் இது வரைக்காலமும் அமுல்ப்படுத்தி வருகின்றது. நாட்டின் பொருளாதார நிலமை மோசமடைந்ததன் விளைவாகவும,; பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததன் விளைவாகவும், பல நலன்புரி செயற்பாடுகள் குறைக்கப்பட்டன எனினும் மானிய விலையில் அரிசி வழங்கும் முறையானது தொடர்ந்தும் அமுல்ப்படுத்தப்பட்டது. 1951ல் கோதுமைக்கான மானியத்தை மீள அறிமுகப்படுத்தியது. 1950ம் ஆண்டு அரிசியின் விலை இறக்குமதி விலையில் அரைவாசியாகக் குறைத்து கொடுக்கப்பட்டது. 1952இல் நாட்டின் அபிவிரத்திக்கான செலவைவிட கோதுமை, அரிசியின் விலையானது உயர்ந்து காணப்பட்டது. பின்னய காலங்களில் இவ் மானியம் குறைக்கப்பட்டதையடுத்து ஆர்ப்பாட்டங்கள் என்பனவும் இடம்பெற்றது. இதன் பிரதிபளிப்பாக 1956ம் அண்டு இடம்பெற்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தோல்விகண்டது.

 உணவு முத்திரை திட்டம் 

    1977ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த  அரசாங்கமானது  மீண்டும் மானிய செலவை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தது அதன் விளைவாக மாதம் 700 ரூபாவிற்கு குறைவான வருமானம் பெறும் நபருக்கு இவ் உணவு முத்திரை வழங்க முடிவு செய்தது. இவ் முத்திரை வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை, வயதமைப்பு என்பனவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்டது. அத்தோடு மண்ணெண்ணை முத்திரையும் வழங்கப்பட்டது. பணவீக்கம் ஏற்பட்டதால் இவ் முத்திரைகளின் கொள்வனவு சக்தி வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.

 ஜனசவிய

   1989ம் ஆண்டு பதவிக்கு வந்த அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்  கருத்து  மக்களின் பலம் என்பதாகும். இது மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும்  வகையில்  அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கு குறிப்பாக மாதாந்தம் 700 ரூபாவிற்கு  குறைவாக  வருமாணம் பெரும் நபர்களையே சேர்த்துக்கொண்டனர். அத்தோடு அவர்களுக்கு  உலர் உணவு வழங்கப்பட்டது. மேலும் இவர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா வழங்கப்பட்டது.  இது தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு வழங்கப்பட்டது.  தற்போதைய நடைமுறையில் இத்திட்டமில்லை.
 
   பாடசாலை மாணவர்களுக்கு  மதிய உணவு வழங்கள்
   
   இதன் முக்கிய நோக்கம் பாடசாலை மாணவர்களின் போசாக்கு மட்டத்தை உயர்த்துவதாகும்.  ஆரம்பத்தில் 10,000ம் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்காலத்தில் ஏறக்குறைய   நான்கு மில்லியன் பிள்ளைகள் இவ் 3 ரூபா முத்திரியை பெற தகுதிவாய்ந்தவர்களாக காணப்பட்டனர். இதனால் பின்தங்கிய பிரதேச பிள்ளைகள் பாடசாலைக்கு அதிகமாக  சென்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை தொடர்ந்து இலவச சீருடை வழங்கும்  நிலையும் ஏற்பட்டது.

 சமூர்த்தி  
1994ம் அண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது தேசிய அளவில் வறுமையை ஒழிக்கும்  நோக்கில் ஒழிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இது பெரும்பாலும் குடும்ப அபிவிருத்தியில் கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. அதாவது இங்கு முக்கியமாக குடும்பம் ஒன்று தனியாரோடு அல்லது கூட்டாக இணைந்து தொழில் தொடங்குவதன் ஊடாக குடும்ப பொருளாதாரத்தை விருத்தி செய்வது இதன் முக்கிய நோக்கமாகும். இதனூடாக வேலைவாய்பை அதிகரிப்பதும் நோக்கமாக அமைந்தது. இதனை அவதானித்து வழிநடத்த சமூர்த்தி அதிகார சபை காணப்பட்டது. இச் சமூர்த்தி திட்டமானது பல்வேறு வறுமை ஒழிப்பு திட்டங்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. அவையாவன

  •  கட்டாய சேமிப்பு
  •  சுய விருப்பிலான சேமிப்பு
  •  சனசமூக செயற்திட்டங்கள்
  •  சமூர்த்தி கொடுகடன் திட்டம்
  •  துரிதப்படுத்தப்பட்ட கடன் திட்டம
  •  சமூர்த்தி அபிவிருத்தி கடன் திட்டம்
  •  சமூர்த்தி தொழில் முணைவு கடன் திட்டம்
  •  சமூர்த்தி குத்தகை திட்டம்
  •  சமூர்த்தி வங்கி சங்க நிகழ்ச்சி திட்டம்
  •  விவசாய அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம்
  •  சமூர்த்தி விற்பனை நிலயங்கள்
  •  சமூக சமூர்த்தி பாதுகாப்பு நிதியம்
கட்டாய சேமிப்பு



   வறியோர் நிவாரண திட்டத்தின் கீழ் ரூ.3500 மற்றும் 1000 பெற்று வரும் குறிப்பிட்ட சமூரத்தி குடும்பத்தின் பயன் பெறுபவரின் பெயரில் ஆரம்பிக்கப்படும். ஒரு வங்கி கணக்கில் முறையே ரூ.100 மற்றும் ரூ.200 வைப்பு செய்யப்படுகின்றத. இத்;திட்டத்தின் கிழ் 2000 ஜீன் முடிவு வரையில் சேமிக்கப்பட்டுள்ள மொத்த தொகை ரூ.5893.86 மில்லியன்.




சுய விருப்பிலான சேமிப்பு



   சமூர்த்தி திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழுக்கள் சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு சுய விருப்பிலான சேமிப்புக்கள் அவர்களின் சேமிப்புகளாக காணப்படுகின்றது. அவர்களுடைய சிறுகடன் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு பயன்படுத்தப்படுகின்றது. மிகுதி தொகை சமூர்த்தி வங்கிகளில் கூட்டுக்கணக்கொண்றில் வைக்கப்படும்..



சனசமூக செயற்திட்டங்கள்
 சமூகத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு  அவசியமான உள்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்கமாகும். சமூர்த்தி பயன் பெறுவோர்கள் செய்திட்ட செலவுகளில் 10-25 வீதத்தை தமது பங்களிப்பை செலுத்துவர். இந்த செயதிட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும் வசதிகள்.
  • விவசாயத்துக்கு அவசியமான பாதைகள், மதகுகள் மற்றும் சிறு பாலங்கள் என்பவற்றை நிர்மாணித்தல்.
  • சிறு அளவிலான நீர்பாசன திட்டங்களை நிர்மாணித்தல்
  • கிராம விற்பணை நிலயங்களை உரூவாக்குதல்
  • நன்னீர் மீன்பிடி வளர்ப்பு மற்றும் கடற்றொழில் துறைமுகங்கள் என்பவற்றை நிர்மானித்தல்
  • சிறிய நீர்பாசன கட்டமைப்புகளை புனருத்தாபணம் செய்தல்
  • சுகாதாரம் மற்றும் நலன்புரி திட்டங்களில் பங்கேற்றல்
  • சமூர்த்தி வங்கிச் சங்கங்கள் மற்றும் பிராந்திய அலுவலங்கள் என்பவறங்றுக்கான கட்டங்களை நிர்மாணித்தல்.

சமூர்த்தி கொடுகடன் திட்டம் 



  சமூர்த்தி நலன் பெருவேருக்கு பெருந்தொகையான கடன்வழங்கள்களை செய்து வருகின்றது. வருமானங்களை உருவாக்கும் செயற்திட்டங்களை ஆரம்பித்தல், தற்போதைய செயற்திட்டங்களை பலப்படுத்துதல் என்பவற்றுக்கான உதவி வழங்கப்படுகின்றது.



துரிதப்படுத்தப்பட்ட கடன் திட்டம்



    1996 தொடக்கம் 46 பிரதேச செயலாக பிரிவுகளில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. சமூர்த்தி நலன் பெறுபவர்கள் முறைசாராத மூலங்களில் இருந்து கடன்களைப் பெற்றுக் கொள்வதிலிருந்தும் அவர்களை தடுப்பதே இச்செயற்திட்டத்தின் நோக்கமாகும். இதில் நுகர்வு, அவசர கடன், அபிவிருத்தி கடன் வழங்கப்படுகின்றது. மக்கள் இலங்கை வங்கி என்பவற்றுடன் இணைந்து செயற்படுகின்றது.  



   சமூர்த்தி அபிவிருத்தி கடன் திட்டம்

  இக்கடன் திட்டமானது மக்கள் வங்கி, இலங்கை வங்கி என்பவற்றின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதில் பெறக்கூடிய ஆகக் கூடிய கடன் தொகை 10000 ஆகும். இக்கடனுக்கு 10 சதவீத வருடாந்த வட்டி வழங்கப்படுகின்றது. பின் 2000ம் ஆண்டு காலப்பகுதியில் இக்கடன் வழங்கும் பொறுப்பை சமூர்த்தி வங்கிகள் பெற்றுக் கொண்டன.



சமூர்த்தி தொழில் முணைவு கடன் திட்டம்



  இத் திட்டமானது மக்கள் வங்கி, இலங்கை வங்கி என்பவற்றின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன் கீழ் 10000 - 50000 வரை கடன்கள் வழங்குவதோடு அவற்றுக்கு வருடத்திற்கு 10சதவீத வட்டியும் அறவிடப்படுகின்றன. இவ் கடனை பெருவதற்கு சமூர்த்தி பெறும் மற்றொரு நபரின் பிணை அவசியம்.



சமூர்த்தி குத்தகை திட்டம்



  இத்திட்டமானது சமூர்த்தி பெறுபவர்களது வருமானத்தை உயர்த்துவதும் வருமான உருவாக்கத்துக்கு கிடைக்கும் புதிய நிதிகளை அறிமுகம் செய்வதுமாகும். இக்கடன் திட்டம் பீபல் லீஸிங் கம்பனியுடன் இனைந்து செய்யப்படுகின்றது. இங்கு தனிநபர், குழுக்களுக்கு கடன் வழங்கப்படுகின்றது. தனிநபருக்கு 75000 – 150000 வரையும், குழுக்களுக்கு 150000-300000 வரையும் கடன் வழங்கப்படுகின்றது. இக்கடனுக்கு 10 வீத வட்டி அரவிடப்படுகின்றுது. அத்தோடு இக்கடனை 48 மாதங்ளில் கட்டி முடிக்க வேண்டும்.



சமூர்த்தி வங்கி சங்க நிகழ்ச்சி திட்டம்



 சமூர்த்தி பெறுவோரிடையே உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கடன்வழங்களே இத்திட்டமாகும். 2000ம் ஆண்டு காலப்’பகுதியில் ஒவ்வொரு சமூர்த்தி வலயத்தையம் 6 கட்டங்களாக பிரித்த 905 வங்கி சங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. மேலும் சமூர்த்தி வங்கி சங்கங்கள் ஐந்து வகையான கடன்களை வழங்கி வருகின்றன. அவை
1.சுயதொழில்   2.விவசாயம்   3.கடற்றொழில் 4.நுகர்வு 
5.அவசரத் தேவைகள்



விவசாய அபிவீருத்தி நிகழ்ச்சி திட்டம்



    சமூர்த்தி உதவி பெருபவர்களை விவசாய நடவடிக்கைகளை அபிவிரத்தி செய்தல், அவர்களுடைய வருமான மட்டத்தினை உயர்த்துதல் மற்றும் விவசாய அடிப்படையிலான கைத்தொழில்களை  அபிவிருத்தி செய்வதன் மூலம் வேலை வாய்ப்புக்கள் அதிகரித்தல் என்பன இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். இதற்காக பின்வருவன அமுல்படுத்தப்படுகின்றது.

1. வீட்டு தோட்டம்
2. சுய தொழில் பயிற்சி
3. புதிய விவசாய நுட்பங்களை அறிமுகம் செய்தல்
4. மரநடுகை மற்றும் மூலிகை நடுகை
5. விசேட விவசாய திட்டங்கள்  
 
02.நீண்டகால விளைவிற்கான நிகழ்ச்சிதிட்டம்

இலங்கையில் வறுமையை குறைப்பதற்கு சாத்தியமான வழிகள்



1. வேலைவாய்க்கை அதிகரித்தல் கறிப்பாக கிராமப் புறங்களில்.

2. வறுமையொழிப்பு திட்ட அமுலாக்கத்தின் போது வறுமையுடயவர்கள் 
    நன்மையடையும் வகையில் அமுல்ப்படுத்தல்

3. வறுமையொழிப்பு திட்ட அமுலாக்கத்தின் போது அரசியல் தலையீடுகள்    இல்லாதிருத்தல்.

4. வீதி போக்குவரத்துக்களை விஸ்த்தரிப்பதன் ஊடாக கிராம நகர           
   புறங்களிடையே அபிவிருத்தியை மெற்கொள்ளல்

5. விவசாயத்தை மேற் கொள்பவர்களுக்கு அத் தொழில் சாராத வேறு  
  தொழில்களிளும் திறன்களை வளர்த்தல்.  கோடை,வெயில்   
    காலங்களில் வேறு தொழில் ஈடுபட இவை உதவியாக அமையும்.

6. வறுமைக்கு மற்றுமொரு முக்கிய காரணம் கல்வியறிவின்மை எனவே  
    நல்ல கல்வியை வழங்கள்.

7. மழை நீரை சேமித்தல், அத்தோடு கடலில் வீனே கலக்கும் நீரை திசை 
   திருப்பி அபிவிருத்திக்கு பயன்படுத்தல்.( மின்சாரம்ஈவிழவசாயம்.)

8. மக்கள் தமது அன்றாட வாழக்கைக்காக பயன்படுத்த வீட்டுத்  
    தோட்டங்களில் பிரிடல்

9. உற்பத்தியை அதிகரிக்க்கூடிய வழிமுறைகளை அதிகரித்தல்.

10. போசனை சம்மந்தமதான அறிவினை குறிப்பாக கர்பவதியாய் உள்ள
     பெண்களுக்கு வழங்கள்.

11.மேல் மாகணத்திலேயே அதிகமாக முதலிடப்பட்டுள்ளது அதனை 
  ஏனைய மானாணங்களிலும் முதலிடுவதன் மூலம் அதிக வேலை
   வாய்ப்பை ஏற்படுத்தலாம்.

12. உறுதியான பொருளாதார சூழலை பேனுதல்

13. கிராம விவசாயத்துறையை மாற்றமடைய செய்தல்

14. உட்கட்டுமான வசதிகளை அதிகரித்தல்

15. அமைப்பு ரீதியான மாற்றங்கள்

16. மனித வளம் மற்றும் ஊளிய சந்தையை விருத்தி செய்தல்

17. புதிய சீரமைக்கப்பட்ட வறுமையொழிப்பு திட்டம்

18. சமூக மூலதனத்தை கட்டியெழுப்பல், சிறிய வியாபார முயற்சிகளுக்கு உதவுதல்



Post a Comment

0 Comments