சமூகவியல் நோக்கில் கல்வியின் வகிபாகம்

     சமூகவியல் நோக்கில் கல்வியின் வகிபாகம்


https://www.asiriyam.com/2019/05/blog-post_55.html


அறிஞர்களால் சமூகவியல் நோக்கில் தீர்மானிக்கப்பட்ட கல்வியின் நோக்கங்கள் இன்னும் பெறுமதி மிக்கதாகக் கல்விக் கொள்கை வகுப்போரால் கருத்திற் கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுவாக சிந்திக்குமிடத்து இளந்தலைமுறையினரை  முறையாக சமூக மயமாக்குவதே  கல்வியின் பிரதான பணி எனக்கூறலாம். அத்துடன் கல்வியின் மூலமே ஒரு சமூகம் வேண்டி நிற்கின்ற விழுமியங்கள் உடலியற் திறன்கள் அறிவுசார் திறன்கள் என்பவற்றை பெறுக்கொடுக்கவும் முடியும். இதனையே DELORS அறிக்கை பின்வருமாறு கூறுகிறது.




இணைந்து வாழக்கற்றல், மற்றவர்களுடன் வாழக்கற்றல் என்பது மற்றவர்கள் பற்றிய புரிந்துணர்வின் விருத்தியைக் கருதும் பன்மைத்துவம் வேறுபாடுகளை மதித்தல் சமாதானத்தை விரும்புதல் என்பவற்றின் அடிப்படையில் இப்புரிந்துணர்வு ஏற்படுதல் வேண்டும். தனியாட்களும் சமுதாயங்களும் நாடுகளும் ஒருவரில் ஒருவர் தங்கி வாழ்பவர்கள் என்னும் கருத்தின் விருத்தி முக்கியமானது”
DELORS அறிக்கை (1996) 21ம் நூற்றாண்டுக்கான கல்வி பற்றிய சர்வதேச ஆனைக்குழு.



   அடுத்ததாக ஒரு குறிப்பிட்ட பிள்ளையை சமூகமயமாக்கல் செயற்பாட்டில் கல்வியின் பங்கு பெறுவாரியாக செல்வாக்கு செலுத்துகின்றது. சமூகமானது காலத்திற்கு காலம் வேறுபாடுகளையும் பல மாற்றங்களையும் சந்தித்து கொண்டே இயங்குகின்றது. இவ்வாறான மாற்றங்களின் தன்மைகளை அதிகமாக உள்ளடங்கிய நிலையங்கள் கல்வி வழங்கும் நிறவனங்களே. குடும்ப பின்னனியை மட்டுமே அடிப்படையாக கொண்டு பாடசாலையில் அனுமதிக்கப்படும் பிள்ளையானது பாடசாலையை விட்டு வெளியே செல்லும் போது நடத்தை மாற்றங்களை உள்வாங்கியவனாக சமூகத்திற்கு ஏற்றாட்போல் இசைவாக்கம் மிக்கவனாக சமூகத்தில் கால்தடம் பதிக்கிறான். இவ்வாறாக சமூகவியலின் நோக்கில்  கல்வியானது இன்றிமையாததாக உள்ளது


   மேலும் கல்வியின் அடிப்படை அம்சமான பாடங்களின் ஊடாக சமூகவியல் அம்சங்கள் உள்ளடங்கி இருப்பதை அவதானிக்கலாம். குடியுரிமை கற்கை வரலாறு சமயம் வாழ்க்கைதேர்ச்சி போன்ற பாடவிதான உள்ளடக்கங்கள் சழுகத்தில் காணப்படும் ஒற்றுமை. விட்டுக்கொடுத்தல். அன்பு நற்பண்புகள் உதவி செய்தல் பெரியோரை மதித்தல் அயலவர்களின் முக்கியத்துவம் என பல விடயங்களை தன்னகத்தே கொண்டு பிள்ளைகளை சமூகமயமாக்க சூழலில் ஈடுபட வழிசமைக்கிறது. அத்துடன் பாடசாலையில் பல சமூக வகுப்பு மிக்க மாணவர்கள் வருகைத்தருவார்கள். இவர்களுடன் ஒன்று பட்டு செயற்படுவதனால் குறிப்பிட்ட மாணவன் சமூகத்தில் இவ்வாறான சமூக வகுப்புக்கள் காணப்படுகிறது என அறிந்து கொள்கிறான். மேலும் பாடசாலையில் கட்டுபாடுகளுக்கு கட்டுப்படுதல், நேரத்திற்கு வேலை செய்தல், நேரசூசி படி நடத்தல், நேர்த்தியதக இருத்தல், ஒன்றுப்பட்டு செயற்படல், தனக்கு வழங்கிய பொறுப்புகளை சரிவர செய்தல், அவ்வாறு செய்யா விடின் தண்டனைகள் கிடைத்தல் போன்ற அமசங்கள் கல்வி புகட்டுவதினூடாக இடம் பெறுகின்றது இந்த நடவடிக்கையானது எதிர்காலத்தில் அவர்களின் தொழில்சார் நடவடிக்கைகளை திறம்பட கொண்டு செல்ல உறுதுனையாக அமைகிறது.

   பல்வேறுபட்ட கலாசாரங்களை கொண்ட பிள்ளைகள்  கல்வி கற்க வருகைத்தருவார்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் வேறுபட்ட கலாசார சமூகத்தின் நடவடிக்கைகளை கற்றுக்கொள்வதுடன் சமூகத்திற்கு செல்லும்போது அக்கலாசாரத்தை பொருத்தமான முறையில் கையாளவும் செய்கிறான். இதன் போது கல்வியானது சமூகவியல் அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது எனலாம். இவ்வாறாக சமூகவியல் சார்ந்த எண்ணக்கருக்கள் கல்வியின் காணப்பட்டாலும் பல்வேறுப்பட்ட முரண்பாடுகள் மிக்க தன்மைகளையும் நாம் கல்வியில்; அவதானிக்கலாம். இவற்றின் அம்சங்களை நாம் கீழ்வரும் முறையில் அவதானிக்கலாம்

01.  பாடசாலையில் பிள்ளைகள் பெறுகின்ற சமூகமயமாக்கல் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதுடன் கல்வி நடவடிக்கைகளின் போது சில பிள்ளைகள் சிறந்த பெறுபேறுகளையும் வெற்றிகளையும் அடையும் பொருட்டு அவர்களை ஊக்குவிக்கின்றனர் (தரம் 5 புலமைப்பரிசில்) அதேவேளை வேறு சிலரை சலிப்படையவும் செய்கின்ற. அதனால் அவர்கள் வலவற்றவர்களாகவும் விரக்தியுள்ளவர்களாகவும் வந்துவிடுகின்றனர்.


02. மறைவான கலைத்திட்டம் பிள்ளைகள் வாழ்க்கையில் தங்கள் இடம் எது என்பதை அறிந்து அதில் தம்மை நிலை நிறுத்திக் கொள்ளச் செய்கிறது.




03. மேலும் கல்வி வழங்கும் செயன்முறையில் கூட மாற்றங்கள் காணப்படுவதால் சமூகமயமாக்களின் போது ஒரே வகையாக சமூகமயமாக்கல் இடம்பெறுவதில்லை. எடுத்துக்காட்டாக: அரச இடைநிலைப் பாடசாலைகள் தொழிநுட்ப பாடசாலைகள் தனியார் பாடசாலைகள் தேசிய பாடசாலைகள் 1AB¸1C, type2, type3  என பல பாடசாலைகள் காணப்பட்ட போதிலும் இப்பாடசாலைகள் அனைத்தும் ஒரே தேசியக் கலைத்திட்டம் ஒரே மாதிரியான பாடநூல்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி என்பவற்றை கொண்டிருப்பினும் நாடு முழுவதும் பிள்ளைகளுக்கு ஒரே மாதிரியான  சமூகமயமாக்கல் நடைபெறுவதில்லை.



04. பாடசாலையில் குறிப்பிட்ட கலாசாரத்தை கொண்டு ஒரே விதமான சமூகமயமாக்கல் இடம்பெறுவதில்லை. ஏனெனில் ஒவ்வொரு கலாசாரத்திற்கும் உப கலாசாரங்கள் பல உள்ளன.இதன் பலனாக பாடசாலைக்கு பாடசாலை எதிர்பார்க்கப்படும் சமூகமயமாக்கற் தன்மை வேறுபடுகிறது.
  இவ்வாறாக சமூகவியல் நோக்கில் கல்வியை அணுகும்போது கல்வி நடவடிக்கைகளில் பெரும்பாலான இடங்களில் சமூகமயமாக்கல் தன்மை காணப்பட்ட போதிலும் உள்ளார்ந்த ரீதியில் உற்று நோக்கும்போது  பாடசாலையில் நடைபெறும் கல்வி நடவடிக்கையானது அனைவருக்கும் ஒரே விதமான சமூகமயமாக்கல் தன்மைகளை வழங்க வேண்டும் ஆனால் அவ்வாறு நடைபெறுவதில்லை. ஒவ்வொரு கல்வி நிலையங்களும் வெவ்வேறு விதமாக கல்வியை வழங்கும்போது வெவ்வேறு விதமான சமூகமயமாக்கள் தன்மைகளே கல்வியின் மூலம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதனால் சமூகத்தில் அனைவரும் சமம் என்ற கூற்று என்றுமே வரப்போவதில்லை மாறாக தற்போது காணப்படும் இதே சமூகமயமாக்கல் என்ற தொடர்ச்சியே எதிர்காலத்திலும் காணப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Post a Comment

0 Comments