இலங்கையின் பொருளாதாரத்தில் சேவைகள் துறையின் பங்களிப்பு

  

• சேவைகள் என்றால் என்ன?
• அறிஞர்களின் கருத்து
• சேவைகள் துறையின் சர்வதேச ரீதியான போக்கு
• இலங்கையில் அதன் தோற்றுவாய்

• இலங்கைப் பேரினப் பொருளாதாரக் குறிகாட்டிகளில் அதன் போக்கு

 மொத்த உற்பத்தி
 வேலைவாய்ப்பு
• இலங்கையில் அதன் தற்கால போக்கு என்பவற்றை ஆராய்வதன் மூலம் அறியலாம்.

சேவைகள் என்றால் என்ன?

ஒரு உற்பத்தியானது அல்லது பொருளானது அல்லது மூலப்பொருளானது உற்பத்தி செய்யப்பட்டு இறுதி நுகர்வோரை சென்றடையும் வரையும் அதன் பின்பும் பொருளாதார ரீதியாகவும் சமூக நலனை அனுபவிக்கக் கூடியதுமான செயற்பாடுகளில் ஒன்றே சேவையாகும்.
          இந்த வகையில் ஒரு நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பானது துரித அபிவிருத்திப் பாதையை நோக்கிச் செல்கையில் ஆரம்ப கிராமிய விவசாயத்துறையில் இருந்து பெருந் தோட்ட விவசாயத்துறை மற்றும் சிறு கைத்தொழில், கைத்தொழில் என கட்டமைப்பிலான மாறுபாடுகளையும் இவ் மாற்றத்தினை ஒருங்கிணைப்பதும் அனைத்து உற்பத்தி சார் உற்பத்தி சாரா துறைகளின் மூலம் முதற் கொண்டு முடிவு வரை பங்களிப்புச்செய்வது இந்த சேவைகள் துறையாகும். உதாரணமாக  விவசாயிகளுக்கு விதை நெல் வழங்குவது முதற் கொண்டு மானியங்கள் வழங்கல் வெளியீடாகப் பெறும் வெளியீட்டை இறுதி நுகர்வோரை சென்றடையும் வரையிலான செயற்பாட்டுக்கு சேவைகள் துறை மிக முக்கியமாகும்.இவ்வாறாக கைத்தொழில் துறையினூடாக நுட்பமான தொழிநுட்பக்கருவிகள் என புத்தாக்க கண்டுப்பிடிப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் இவற்றை தேவை மற்றும் திருப்த்தியை உச்சப்படுத்தும் வகையில் வினைத்திறனான முறையில் செயற்படுத்த உதவுவது இந்த சேவைகள் துறை ஆகும்.

அறிஞர்களின் கருத்து        
        இவ் சேவைகள் துறை பற்றி 1857ல் ஜேர்மனிய பொருளியலாளரான ஏஞ்ஜெல் ; (erust engel)  என்பவர் குறிப்பிடும் போது “குடும்பங்களின் வருமான மட்டமும் செல்வ நிலையும் முன்னேற்றமடையும் போது குடும்ப வரவு செலவுத்திட்டத்தில் சேவைகளுக்காக ஒதுக்கப்படும் தொகை அதிகரித்துச் செல்லும்” என்று விளக்கினார். இந்த வகையில் இக்கருத்தினை நாடுகளும் பின்பற்றி வருகின்றன.

சேவைகள் துறையின் சர்வதேச ரீதியான போக்கு

            பொதுவாக நாடுகள் ரீதியாக சேவைகள் துறiயின் பங்கினை நோக்கின்
ஒரு நாட்டில் மக்களது தொழில் வாய்ப்புக்களும் வருமானமும் அதிகரித்துச் செல்லும் போது நுகர்வு நாட்டங்களில் மாற்றம் ஏற்படும். அப்போது புதிய சேவைகள் உருவாக்கப்படும், அல்லது சேவைகளுக்கான கேள்வி அதிகரித்துச்செல்லும் இதே சமயம் உற்பத்தித் துறையின் வடிவமைப்புக்கள் மாற்றம் பெறும். அவை பல மாதிரிகளில் பன்முகப்படுத்தப்படும். இதனால் உற்பத்தித் துறையிலும் மாற்றங்கள் ஏற்படும். இந்த நிலைமைகள் சேவைகள் துறையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.
        இது இலங்கையில் 1977 இல் பொருளாதாரம் திறந்து விடப்பட்ட  போது உள்நாட்டு வெளிநாட்டு முதலீடுகளில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் நுகர்வு என்பன அதிகரிப்பால் வேலைவாய்ப்பு என்பன அதிகரிப்பதோடு சேவைகள் துறையின் வளர்ச்சிக்கும் வித்திட்டது எனலாம்.இந்த வகையில் சர்வதேச ரீதியிலும் குறைவிருத்தி நாடுகளின் தன்மைக்கு ஏற்பவும் வளர்ச்சியடைந்துள்ள நாடுகளின் சேவைத்துறையில் உள்ளடக்கப்படும் விடயங்கள் மாறுபடுகின்றன.

சர்வதேச ரீதியில் சேவைகள் துறை என்பது பின்வரும் அனைத்து சேவைகளையும் உள்ளடக்குகின்றது

  •  போக்குவரத்துஇ துறைமுகம், விமான நிலையம் 

  •  தொடர்பாடல்

  •  காப்புறுதி

  •  மெய்ச்சொத்துக்கள்

  •  கட்டிடவாக்கம்

  •  சுகாதார சேவைகள் 

  •  மின்சாரம்இ வாயுஇ நீர்வழங்கல் 

 பல்வேறு நாடுகளில் சேவைகள் துறை பற்றிய மதிப்பீடுகள் (மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வீதமாக 1972-1977-1992-1997ம் ஆண்டுகளுக்கான)

இலங்கையில் சேவைகள் துறையின் தோற்றுவாய்

     இந்த வகையில் இலங்கையில் சேவைகள் துறைப்பற்றி நோக்கின் எப்போது ஒருவன் தன்னிச்சையாக செயற்பட முடியாமல் இன்னொருவனில் தங்கி வாழ முன்வந்தார்களோ     அன்றே சேவைகள் துறை தோன்றியது எனலாம். அந்த வகையில் இலங்கையில் காலனித்துவத்திற்கு முற்பட்ட இராஜகாரிய முறை நிலவியக்காலத்தில் மக்களின் அன்றாடத் தேவைகளையும் சமூகத்தேவைகளையும் விரிவு செய்யும் நோக்கத்தில் அரசினால் தீர்மானிக்கப்பட்டு பல சேவைகளை ஆற்றப்பட்டன. இந்தவகையில் வீதிப் போக்குவரத்து நீர்ப்பாசனம் போன்றவற்றோடு குருகுலக்கல்வி மூலிகை வைத்தியம் போன்ற சேவைகள் ஆற்றப்பட்டன எனக் கூறலாம். இவ்வாறு ஆற்றப்பட்ட சேவைகளின் பலாபலனே இன்றைய கிராமிய விவசாயத்துறையாகும்.  இவ்வாறான செயற்பாடுகள் காலத்துக்கு காலம் ஏற்படுவதால் தொழில்வாய்ப்பு அதிகரிக்கும், நுகர்வு அதிகரிக்கும் இதனால் உற்பத்தி அதிகரிக்கும் இதனால் வளர்ச்சி ஏற்பட்டு சேவைகள் துறையும் துரித வளர்ச்சி பெற உதவியது எனலாம்.        

    இக்கட்டமைப்பானது சிறிது சிறிதாக போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் வருகையால் உள்நாட்டு பொருளாதார வளங்களையும் ஏனையவற்றையும் காவுவதற்கு அவர்கள் பல  சேவைகளையும் இலங்கையர் பல சேவைகளையும் ஆற்ற வேண்டி இருந்தது.  இந்நிலை ஆங்கிலேயரின் வருகையின் பின் முற்றாக மாற்றமடைந்து மிசனரிக் கல்விச்சேவை முதற் கொண்டு சுகாதார சேவைகளோடு தொழில் வழங்கள் மற்றும் பணப் பரிமாற்ற சேவைகளும் உருவாகிற்று. இந்த வகையில் இவர்களின் வருகையின் பின் இலங்கையில் ஒரு பகுதி கூடுதலாக கல்விச்சேவையை நுகர்கின்றவர்களாகவும் ஒரு பகுதி கிராமிய விவசாய உற்பத்தியை பெருக்குவதற்கான சேவையினை வழங்குபவர்களாகவும் மற்ற சாரார் பெருந்தோட்ட விவசாயத்தை ஒட்டிய நெடுஞ்சாலை அமைத்தல் புகையிரத போக்குவரத்து பாதைகளை அமைத்தல் கட்டடவாக்க அபிவிருத்தி போன்றவற்றினுடாக சேவைகள் துறையின் பங்களிப்பினை தொழில் வாய்ப்பு உற்பத்தி நோக்கியதாக மாற்றியமை மற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்கியதுடன் இலங்கைப் பொருளாதாரம் சிறு கிராமியக் கைத்தொழிலாக காணப்பட்டதனை பெருந் தோட்ட விவசாயம் உள்ளடங்களாக தொழில் நுட்ப வளர்ச்சிக்கும்  பாரிய பங்களிப்பினை ஆற்றினர். இருந்த போதிலும் இவர்களின் ஆட்சிக் காலத்தில் இலங்கையர் கல்வி சுகாதாரம் கீழ் மட்டத்திலான வேலைவாய்ப்பு போன்ற சேவைகளை அனுபவிக்க உயர்ந்த அந்தஸ்திலான நிருவாக மற்றும் இலாபத்தை அனுபவிக்கக் கூடிய சேவைகளை இலங்கையரைக் கொண்டு பிரித்தானியர் அனுபவித்தமை குறிப்பிடத்தக்கது

       இதன் பின்னர் சேவைகள் துறை படிப்படியாக வளர்ச்சியடைந்தவந்தாலும் குறிப்பாக கல்விச்சேவை குருகுலக்கல்வியில் இருந்து பாடசாலைக்கல்வி பல்கலைக்கழக கல்வி எனவும் மூலிகை மருத்துவம் ஆங்கில மருத்துவமாக விருத்தியடைந்தமையும் கால்நடைப் போக்குவரத்து புகைவண்டிப் போக்குவரத்துக்காக  மாறியமையும் சேவைகள் துறையின் பரிணாம வளர்ச்சியைக் குறிப்பிடுகின்றது. அந்தவகையில் 1905ல் வேல்ஸ் ஆணைக்குழு உள்ளுர் மொழிப் பாடசலை விரிவாக்கத்தையும் சன நெரிசலான பகுதியில் கட்டாயக் கல்வியையும் வழங்கியது. 

     1931ல் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டமையானது மக்களின் வாக்குப்பலத்தை பெறும் நோக்கோடு பல பொருளாதார சேவைகளான  சுகாதார கல்வி விவசாய சிறு கைத்தொழில் ஊக்குவிப்பு என்பன வளர்ச்சி பெற்றமையும் குறிப்பித்தக்கது. உதாரணமாக 1945ல் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தியும் அப்போது விவசாய அமைச்சராக இருந்த S. W. R. D. பண்டாரநாயக்க அவர்களால் விவசாய உற்பத்தி தொடர்பாக பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டமையும் உற்பதியை விருத்தி செய்ததுடன் சேவைகள் துறை வளர்ச்சிக்கும் வழிசமைத்தது.

இலங்கையில் சேவைகள் துறை பற்றிய மதிப்பீடானது  பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றது


1. மொத்த சில்லறை வர்த்தகம்

 இறக்குமதி வர்த்தகம்
 ஏற்றுமதி வர்த்தகம்
 உள்நாட்டு வர்த்தகம்

2. உணவகங்களும் விடுதிகளும்
3. போக்குவரத்து மற்றும் தொடர்பூட்டல்
 போக்குவரத்து
 சரக்குக் கையாளல் - துறைமுகங்களும் பணிகள் போக்குவரத்தும்
 அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பூட்டல்
4. வங்கித்தொழிலஇ  காப்புறுதி மற்றும்  உண்;மைத்துறை ஏனையவை
5. வதிவிட சொத்துரிமை
6. தனியார் பணிகள்
7. அரச பணிகள்

இலங்கைப் பேரினப் பொருளாதாரக் குறிகாட்டிகளில் சேவைகள் துறையின் போக்கு
  •  மொத்த உற்பத்தி
  •  வேலைவாய்ப்பு
மொத்த உற்பத்தியில் சேவைகள் துறையின் பங்கு

  இச்சேவைகள் துறையின் வளர்ச்சியினையும் பங்கினையும் ஆராய்வதற்கு இலங்கையில் இவ்வளவு காலமும்  மொத்த உற்பத்தியில் துறைவாரியான விவசாயத் துறை கைத்தொழில் துறை சேவைகள் துறை ஆகியவற்றினையும் இலங்கையின் மொத்த வேலைவாய்ப்பில் விவசாயத்துறை கைத்தொழில் துறை சேவைகள் துறை என்பவற்றின் பங்கினை ஆராய்வதன் மூலம் சேவைகள் துறையின் பங்கினை அறியலாம்.

       இந்தவகையில் மொத்த உற்பத்தியில் சேவைகள் துறையின் வளர்ச்சியினையும் பங்களிப்பினையும் இலங்கையின் சுதந்திர காலத்தின் பின்பு நோக்கின் 1948ல் சுதந்திரமடைந்த காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதாரத்தில் 50% சதவீதத்தினை  சமூக நல சேவைகளுக்காக ஓதுக்கியமையும் 15% பொருளாதார அபிவிருத்திக்கு பயன்படுத்தியமையும் இலங்கையின் சேவைகள் துறையை விரிவடையச்செய்தது. 

   1947-1953 வரையான காலப்பகுதில் பொருளாதாரம் பிரித்தானியரின் கொள்கை சார்பளவிலான திறந்த பொருளாதார உற்பத்தி நோக்கிய ஊக்குவிப்பு காணப்பட்டதாலும் ஏனைய நாடுகளுடன் கூடிய அளவான உறவு நிலை காணப்பட்டமையினாலும் அரச துறை தனியார்த்துறை என்பன அபிவிருத்தி அடைந்ததுடன் சேவைகள் துறையின் விருத்தியினை பறை சாற்றிற்று. இதனைத் தொடர்ந்து வந்த 1953ல்  SLFP கட்சியினர் ஆட்சியைப்பிடித்தவுடன் அரசு பொருளாதாரத்தில் கூடியளவான ஆதிக்கத்தினை செலுத்த முற்பட்டதனால் தனியார் துறையின் பங்கு குறைய ஆரம்பித்தது முன்னர் காணப்பட்டதிலும் பார்க்க சேவைகள் துறையின் பங்களிப்பானது குறிப்பிட்ட வளர்ச்சியை அடையவில்லை என்றே கூற முடிகின்றது. இதனைத்தொடர்ந்து 1960 தொடக்கம் 1965 காலப்பகுதியில் சுமார் 42%, 45% வளர்ச்சியே சேவைகள் துறையில் காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து 1965–1970 வரையான காலப்பகுதியில் 45% மாக காணப்பட்ட சேவைகள் துறையின் வளர்ச்சி 49மூஇ 48மூ சதவீதமாக அதிகரித்தது இதற்குக்காரணம்  UNP அரசாங்கத்தின் திறந்த பொருளாதாரக் கொள்கையின் தன்மையும் முதலாலித்துவக் கொள்கையுமாகும். 

    1970–1977 வரையான காலப்பகுதியில் சேவைகள் துறையின் வளர்ச்சி 41மூஇ 43மூமாக காணப்பட்டது இதற்குக்காரணமாக  SLFP கட்சியினர் ஆட்சியைப் பிடித்தவுடன்  மூடிய பொருளாதாரக் கருத்தினையும் சோசலிசக் கட்சிகளின் கூட்டணியினால் சோசலிசப் பொருளாதாரத்தினை இலங்கையில் ஏற்படுத்தும் நோக்குடனும் பல திட்டங்கள் முன்வைக்கப் பட்டமையானது பொருளாதார வளர்ச்சியில் தளம்பலினை ஏற்படுத்தியதோடு சேவைகள்துறை பங்களிப்பினையும் குறைத்தது.

     இதனைத்தொடர்ந்து வந்த 1977–1994 வரையான காலப்பகுதியினை நோக்கின் 46%, 48% மாகவும் காணப்பட்டது.  இக்காலத்தில் முன்னைய காலத்திலும் பார்க்க துரித வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு காரணம் UNP அரசாங்கத்தின் திறந்த பொருளாதாரக் கொள்கையினை யாப்பு ரீதியாக அறிமுகப்படுத்தி; முதலாலித்துவக் கொள்கையின் செல்வாக்கினை அதிகரித்ததாலும் பொருளாதாரத்தில் தனியார் துறையின் பங்களிப்பு அதிகரித்தமையுமே ஆகும். இக்காலத்தில் கைத்தொழித்துறையின் பங்களிப்பினை அதிகரிக்கச் செய்தமையும் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தமையும் ஐஆகுஇ றுவுழு மற்றும் உலக வங்கி என்பனவற்றின் கடன் உதவி வெளிநாட்டு உதவிகள் என்பன நாட்டின் வேலைவாய்ப்பினை அதிகரிக்கச் செய்ததோடு உற்பத்தியையும் பெருக்கியது. இதனால் சேவைகள் துறை முன் எப்போழுதும் இல்லாத வகையில் துரித வளர்ச்சி கண்டது. 

   இதனைத் தொடர்ந்து வந்த காலத்தில் 1994 – 1999 வரையான காலப்பகுதியில் சேவைகள் துறையானது 51% யும் 2000 ஆண்டு 53% யும் மாக மட்டுமே SLFP கட்சியின் ஆட்சிக்காலத்தில் காணப்பட்டது. ஆனால் UNP கட்சியின் 2002ம் 2003ம் ஆண்டுகாலத்தில் சேவைகள் துறை 52% தொடக்கம் 55% ஆக காணப்பட்டது. இக்கால வளர்ச்சிக்கு முக்கிய காரணமானது  UNP கட்சியின் தனியார்த்துறையை ஊக்குவிக்கும் கொள்கையும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கச் செய்தமையுமே காரணமாகும். இதனைத் தொடர்ந்து 2004 – 2006 வரையான காலத்தில் 56% மாக காணப்பட்டமையும் இன்று சேவைகள் துறையின் பங்கு 59.6% ல் இருந்து 62.4% மாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே இலங்கையின் பொருளாதாரத்தில் ருNP கடச்சியின் ஆட்சிக்காலத்தில் பொருளாதார வளர்ச்சியிலும் இதில் சேவைகள் துறையின் பங்கும் அதிகரித்து காணப்படுகின்றது. சேவைகள் துறையின் வளர்ச்சிக்கு சுதந்திர வர்த்தக வலயத்தினதும் உலக மயமாக்கல் சிந்தனையின் வளர்ச்சியும் ஏற்றுமதி ஊக்கப்படுத்தல் நெறியாள்கையும் யுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதுகாப்பு சேவையின் வளர்ச்சியும் காரணம் எனக் கூறப்பட்டது.

பொருளாதார வளர்ச்சிக்கும் சேவைகள்துறைக்கும் இடையே பின்வருமாறு தொடர்பு காணப்படுகின்றது.





         இவ்வரைபின் படி 1972 தொடக்கம் 2008 வரையான காலப்பகுதில்  மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சேவைகள் துறையின் வளர்ச்சிக்கு இடையிலான தொடர்பு விளக்கப்படுகின்றது.

         இதனை நோக்கின் 1972ல் அரசின் மூடியபொருளாதாரக் கொள்கையின் விளைவாக சேவைகள் துறை வீழ்ச்சியடைந்து உள்ளதையும் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்து உள்ளதையும் காணலாம். இதனைத் தொடர்ந்து  வந்த 1977தொடக்கம் 1987 வரையான காலப்பகுதியில் மீள்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதையும் வரைபு விளக்குகின்றது. இதற்கு அரசின் திறந்த பொருளாதாரக் கொள்கையே காரணம் எனவும் உலகமயமாக்கலின் பங்களிப்பு என்பனவற்றின் கீழ் இலங்கை தன்னை ஈடுபடுத்திக்கொண்டமையும் என பலகாரணங்கள் எடுத்துரைக்கப்பட்டது. இதன் பிறகு வந்த காலப்பகுதியில் தொடர்ந்து சேவைகள துறை விருத்தி அதிகரித்துள்ளதையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி அதிகரித்துள்ளது எனவும் இவ்வரைபு விளக்குகின்றது. இதற்கு பாதுகாப்பு சேவை உற்பட பல சேவைகளின் பங்களிப்பு அதிகரித்தமை காரணமாகும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்களிப்பில் சேவைகள் மற்றும் தயாரிப்பு, விவசாயம், மூலப்பொருள், உற்பத்தி, கட்டடவாக்கம் என்பவற்றின் பங்களிப்பு (1950 தொடக்கம் 2000 வரையான காலப்பகுதியில்)
உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் மூலப்பொருள் தயாரிப்பு கட்டடவாக்கம் சேவைகள் துறையின் பங்களிப்பு
சேவைகள் துறையின் வேலைவவாய்ப்பு பற்றி நோக்கின்
   1953-1996 காலப்பகுதியில் விவசாய துறையிலான வேலைவாய்ப்புக்கள் 0.8 வீதத்தினால் அதிகரித்தன. விவசாயத்தில் வேலைவாய்ப்பு பெற்றோரின் விகிதாசாரம் 1946இல்53% இருந்தது. இது படிப்படியாகக் குறைவடைந்து 1996 இல் 38% காணப்பட்டது. ஏனைய துறைகள் அநேகமானவற்றின் விகிதாசாரம் அதிகரித்தது. ஆயினும் மொத்த வேலைவாய்ப்பு என்ற நியதியில் விவாசாயத்துறையே தொடர்ந்து ஆதிக்கம் வகிப்பதாயிருந்துள்ளது. தொழிற்படைக்கு வேறு துறைகளில் கிடைக்கும் புதிய ஈடுபாடுகளோடு ஒப்பிடுகையில் விவசாயத் துறை கவர்ச்சி குறைந்ததாகியுள்ளது. 

  1946-1996 காலப்பகுதியில் தயாரிப்பு உற்பத்தித்துறையிலான வேலைவாய்ப்பு வருடாந்தம் 2.6%ஆல் வளர்ச்சியுற்றது தயாரிப்பு உற்பத்தித் துறையில் தொழிலாளரை சேர்த்துக்கொள்ளும் ஒப்பீட்டு பங்கு 1946ல் 8.6% ஆக இருந்து 1996ல் 14.5%ஆக அதிகரித்தது  குறிப்பாக நகர்ப்புற மற்றும் கிராம பிரதேசங்களில் ஆடைக் கைத்தொழில்களை நிறுவியதன் பின்னர் மென்ரகதயாரிப்பு உற்பத்தி கைத்தொழில்களான பணியாளர்களின் எண்ணிக்கையில்  கணிசமான அதிகரிப்புக்கள் காணப்பட்டன.

    1946-1996 காலப்பகுதியில் கட்டிடவாக்க நடவடிக்கைகளிலான வேலைவாய்ப்புக்கள் வருடந்தோறும் 4.8% ஆல் அதிகரித்தது. மொத்த வேலைவாய்ப்பில் கட்டிடவாக்க துறை பங்கு 1946ல் 1.2% இருந்து 1996ல் 6%ஆக வளர்ச்சி கண்டது. 1950களின் நடுப்பகுதியில் இருந்து கட்டிடவாக்க வேலைவாய்ப்புக்கான ஒரு சாத்திய மூலமாக  எண்ணப்பட்டது. ஆயினும் விவசாய துறை அரச துறை கட்டிடவாக்க  நிகழ்ச்சி திட்டங்கள் ஆரம்பமாகி பொருளாதார உட்கட்டமைப்புக் கருத்திட்டங்கள் அபிவிருத்தியடைந்ததோடு ஒரு புதிய வேலைவாய்ப்பு மூலமென்ற வகையில் அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.
1946-1996 காலப்பகுதியில் பணிகள் துறைகளான வேலைவாய்ப்பு வருடம் தோறும் 1.7% அதிகரித்தது. பணிகளிலான வேலைவாய்ப்பில் சதவீதம் 1946ல் 37% ஆக இருந்து 1996ல் 40% வீதமாக அதிகரித்தது. 

1991ல் வேலைவாய்ப்புக்களை வழங்கும் ஒரு பிரதான மூலமாக அரசு துறையின் முக்கியத்துவம் குறைந்துள்ளது. 


1991ல் பணியாற்றும் மொத்த தொழிற்படையின் 26% வீதமானவர்களுக்கான வேலைவாய்ப்புக்களை அரச துறையே வழங்கியது. 1996ல் இந்த விகிதாசாரம்  21% வீதமாக குறைவடைந்தது. 

1996ல் அரச துறையில் வேலைவாய்ப்பு பெற்றோரின் தொகை 1,307,000 ஆகவிருந்தது. இது 1991ல் இருந்த தொகைக்குச் சமனானதாகும்.

    நிருவாக செயற்திட்ட குழுவின் ஆட்குறைப்பு திட்டத்தின் விளைவாக 40000 அரசாங்க ஊழியர்கள் சொந்த விருப்பத்தின் பேரில் இளைப்பாறினர். இருந்த போதிலும் 1973 ஆம் ஆண்டு மத்திய வங்கி நடாத்திய நுகர்வோர் நிதி அளவீடுகளின் பிரகாரம் வேலையின்மை 24%வீதமாக மதிப்பிடப்பட்டது. இது இலங்கையின் பொருளாதாரத்தில் ஆகக்கூடிய அளவு வேலையின்மை வீதம் உள்ள காலமாக காணப்பட்டது. இக்காலத்தில் 1970ல் 2.8%, 1971ல் 1%,1973ல் 3.1%, 1974ல் 6.6%, ஆகவும் 1975ல் 4.8%, 1976ல்4.8%,1977ல் 1%, உம் ஆக காணப்பட்டது. ஆனால் 1978ல் 4.8% மாக உயர ஆரம்பித்தது.

     அரச தொழிற் முயற்சிகளின் தனியாhர் மயமாக்கல் காரணமாகவும் அரச துறையின் வேலைவாய்ப்புக்கள் குறைவடைந்தன. தனியார்த்துறை கைத்தொழில்கள் மற்றும் பணிகளின் விரிவாக்கம் தொழிற்படையில் புதிதாக பிரவேசித்தோருக்கு அதிகரித்த அளவு வேலைவாய்ப்பினை வழங்கியது.



இந்தவகையில் 1950ஆம் ஆண்டு தொடக்கம் 2000 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியின் துறைவாரியான வேலைவாய்ப்பினையும் வேலையின்மை வீதத்தினையும் நோக்கின்



          1977க்குப் பின்னர் பொருளாதார தாராளமயப்படுத்தலோடு வேலையின்மை வீதம் பெருமளவில் வீழ்ச்சியுற்றது 1978/1979 களில் நுகர்வோர் நிதியளவீடுகளின் பிரகாரம் வேலையிண்னை வீதம் 14.8 சதவீதமாக குறைந்த போது இப்போக்கு 1980 களின் ஆரம்பம் வரை நீடித்தது. இக்காலத்தில் சேவைகள் துறையின் வேலைவாய்ப்பு 38வீதமாகவும் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 7.6வீதமாகவும் காணப்பட்டது. இதன் உற்பத்தி வாரியான பங்கு  46% தொடக்கம் 48%மாகவும் அதிகரித்து காணப்பட்டது.

1950 தொடக்கம் 2000வரையான காலப்பகுதியில் சேவைகள் துறை உற்பட ஏனைய துறைகளின் பங்களிப்பு

1950 தொடக்கம் 2000ஆம் ஆண்டு வரையான காலப்பகுதில் விவசாயம் தயாரிப்பு, மூலப்பொருட்கள், கட்டுமானம் மற்றும் சேவைகள் துறையின் பங்களிப்பானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எந்தளவு தாக்கத்தினை செலுத்தியது என்பதனை பிற்செலவுப் பகுப்பாய்வின் மூலம் நோக்கின்
 


இவ்பிற்செலவு பகுப்பாய்வில்
X1 -  விவசாய உற்பத்தி
X2 -  மூலப்பொருட்கள் உற்பத்தி
X3 -  தயாரிப்பு உற்பத்தி
X4 -  கட்டுமானமான உற்பத்தி
X5 -  சேவைகள் துறை     என்பவற்றை குறிக்கின்றன.

பிற்செலவு வளையி= a + a1X1 + a2X2 + a3X3 + a4X4 + a5X5  என எடுத்தோமானால் வளையி இவ்வாறு அமையும்
                  Y = 0.300 + 0.297X1 + 0.008X2 + 0.181X3 + 0.053X4 + 0.397X5

பிற்செலவு பகுப்பாய்வின் படி விவசாய உற்பத்தி  மூலப்பொருட்கள் உற்பத்தி  தயாரிப்பு உற்பத்தி  கட்டுமான உற்பத்தி சேவைகள் துறை என்பவற்றின் எந்தவித பங்களிப்புமே இல்லாமல் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 0.300 சதவீதமாக அதிகரிக்கின்றது எனக் காட்டுகின்றது.

        இதே நேரம் விவசாய உற்பத்தியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கு 0.297 சதவீதமாக பங்களிப்பினை செய்தது எனவும் மூலப்பொருட்கள் உற்பத்தியானது 0.008 வீத பங்களிப்பினை செய்தது. இவ்வாறே  தயாரிப்பு உற்பத்தியானது 0.181சதவீத பங்களிப்பினையும் கட்டுமான உற்பத்தியானது 0.053சதவீத பங்களிப்பினையும் சேவைகள் துறையானது 0.397சதவீத பங்களிப்பினையும் செய்தது என விளக்குகின்றது.

பிற்செலவு பகுப்பாய்வின் படி விவசாய உற்பத்தி  மூலப்பொருட்கள் உற்பத்தி  தயாரிப்பு உற்பத்தி  கட்டுமான உற்பத்தி சேவைகள் துறை என்பவற்றின் எந்தவித பங்களிப்புமே இல்லாமல் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 0.300 சதவீதமாக அதிகரிக்கின்றது எனக் காட்டுகின்றது.

   இதே நேரம் விவசாய உற்பத்தியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கு 0.297 சதவீதமாக பங்களிப்பினை செய்தது எனவும் மூலப்பொருட்கள் உற்பத்தியானது 0.008 வீத பங்களிப்பினை செய்தது. இவ்வாறே  தயாரிப்பு உற்பத்தியானது 0.181சதவீத பங்களிப்பினையும் கட்டுமான உற்பத்தியானது 0.053சதவீத பங்களிப்பினையும் சேவைகள் துறையானது 0.397சதவீத பங்களிப்பினையும் செய்தது என விளக்குகின்றது.

    இந்தவகையில் நோக்குகின்ற போது ஏனைய விவசாயம் மற்றும் சேவைகள் துறையுடன் ஒப்பிடுகையில் மூலப்பொருட்கள் உற்பத்தியும் கட்டுமான உற்பத்தியும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கு மிகச்சிறிய அளவு பங்களிப்பினையே செய்துள்ளது எனலாம் அதாவது 0.008% உம் 0.053% பங்களிப்பும் ஆகும். இருந்த போதிலும் விவசாயத்துறை 0.297% பங்களிப்பினை ஏனைய மூலப்பொருட்கள் உற்பத்தி மற்றும் கட்டுமான உற்பத்தி என்பவற்றுடன் ஒப்பிடுகையில் கூடியளவு பங்களிப்பினை செய்துள்ளது எனலாம். இருந்தாலும் சேவைகள் துறையுடன் ஒப்பிடுகையில் 0.397 சதவீதத்துடன் குறைந்த அளவே விவசாயத்துறையின்  பங்களிப்பு காணப்படுகின்றது என கூறமுடியும். எனவே முடிவாகக் கூறப்போனால் ஏனைய உற்பத்தி துறைகளுடன் ஒப்பிடுகையில் சேவைகள் துறையே மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கு கூடியளவு பங்களிப்பு செய்துள்ளது எனலாம்

    ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது 1950 தொடக்கம் 2000 வரையான காலப்பகுதில் விவசாயஇ மூலப்பொருட்கள்இ தயாரிப்புஇ கட்டுமான, சேவைகள் துறை என்பன மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கு 0.964 சதவீத பங்களிப்பினை செய்துள்ளது எனலாம்.
இந்தவகையில் 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆண்டு வரையான காலப்பகுதியில் சேவைகள் துறையில் பிரதான பங்கு வகிக்கும் துறைவாரியான பங்கினை நோக்கின் இவ்வாறு காணப்படுகின்றது.







         இலங்கையில் கல்வித்துறையானது குறுங்காலத்தில் எந்தவித இலாபத்தினையும் ஈட்டித்தராததும் தற்போது நஸ்டத்தில் காணப்படுவதும் ஆரம்பம் தொட்டு இன்று வரை இலவசமாக வழங்கப்படுவதும் இன்று தனியார்துறையின் பங்கு அதிகரித்துவரும் துறையாகவும் காணப்படுகின்றது. இலங்கையில் ஒரு கட்டத்தில்(1948 – 1970) பொருளாதார அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிய வேளை ஓருகட்டத்தில் (1970 – 1980) சனத்தொகை வளர்ச்சிக்கும் ஊழியப்படையில் அதிக இளைஞர்களை சேரத்தூண்டி இலங்கைப் பொருளாதாரத்தை அதிரவைத்த துறையான சுகாதாரத்துறையின் செயலாற்றமும் 1950 – 2000 வரையான காலப்பகுதில் இதன் சேயலாற்றத்தை நோக்கின்.



முடிவு :
இலங்கையில் 1948 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 வரையான காலப்பகுதியினை ஒப்பிட்டு நோக்குகின்ற போது ஆரம்ப காலத்தில் சமூகச்செலவுக்காக ஒதுக்கப்பட்டு சேவைகள் துறை வளர்ச்சி பெற வழி சமைத்ததோடு இன்று பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம, ஆசிரியர் சேவைகள் என்பவற்றின் மீதும் அதிக செலவினைச் செய்கின்றது. இதன் அடிப்படையில் நோக்குகின்ற போது விவசாயத்துறையின் பங்களிப்பு குறைந்து கொண்டு வருவது பொருளாதாரத்துக்கு சாதகமானதாக இருந்தாலும் உள்நாட்டு நுகர்வுத் தேவையைக் கூட நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

   இவ்வாறே கைத்தொழில் துறையை நோக்குகின்ற போது 1977ல் தாராளமயமாக்கத்தில் இருந்து 28 சதவீதமாக வளர்ச்சி பெற்றது இன்று வரை 27 சதவீதத்திலே இருப்பதும் இலங்கையில் விவசாயம் உட்பட கைத்தொழில் துறையானது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்தது இனியும் வழிவகுக்குமென கூற முடியாதுள்ளது. 

    இவ்வாறே வேலைவாய்ப்பிலும்  1977 தொடக்கம்  ஆடைத்தொழிலை மட்டும் வேலைவாய்ப்புக்காக கைத்தொழில் துறை நம்பியிருப்பதும் விவசாயத்துறையில் இன்றுவரை 32 சதவீதமாவர்கள் வேலைவாய்ப்பில் இருக்கின்றமையும் உற்பத்திசாரா மற்றும் பொருளாதாரத்தில் பெரிதும் பங்களிப்பு செய்யும் துறைகளில் சேவைகள் துறையை திருப்பாமையும் இலங்கையின் பேரினப்பொருளாதார குறிகாட்டிகளில் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக இன்று பணவீக்கமானது 22.5 சதவீதமாக (2008) இருக்கின்றமை அபிவிருத்தியை கேள்விக்குறியாக்குகிறது  எனும் முடிவுக்கு வரலாம்.


Post a Comment

0 Comments