![]() |
Eli Ginzburg 's Career guidance |
எலை ஜீன்ஸ் பேர்க்கின் (Eli Ginzbrg) தொழில் வழிகாட்டல் தெரிவுக் கொள்கையில் குறிப்பிட்ட படி மூன்று (03) கட்டத் தொழில் தெரிவுகளையும் குறிப்பிடுக.
1.கற்பனை ரீதியில் தெரிவு செய்யும் பருவம் (11 வயது வரை)
எதிர்காலத் தொழில் தொடர்பாகக் கற்பனை ரீதியிலேயே சிந்திப்பர். அனுபவங்கள்மிக வரையறைக்குள்ளானது. அறிவாற்றல்கள் விருத்தி நிலையில் உள்ளன.
காண்பதை, கேட்பதை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் முடிவுகளை எடுப்பர்.
இப்பருவத்தில் பிள்ளையின் விருப்பு வெறுப்புகளே முக்கியமாக அமைகின்றன.
தொழில் தொடர்பாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு விதமாக கருத்துத் தெரிவிப்பர். உதாரணம் ஒரு சந்தர்ப்பத்தில் வைத்தியராக வரவேண்டும் எனக் கூறும் அதே பிள்ளை மற்றுமொரு சந்தர்ப்பத்தில் பொறியியலாளராக வரவேண்டும் எனக் கூறலாம்.
மேலும் வாசிக்க - கல்வியியல் கட்டுரைகள் - Click Here
2.அனுபவ ரீதியில் தெரிவு செய்யும் பருவம் (11 – 17 வயது வரை)
இதை ஜீன்ஸ்பேர்க் 4 உப பருவங்களாகப் பிரித்துக் காட்டுகிறார்
அ) ஆர்வத்திற்கு அமையத் தெரிவு செய்யும் பருவம் (11 – 12 வயது வரை)
ஆ) இனங்கண்ட ஆற்றல்களுக்கு அடையத் தெரிவு செய்யும் பருவம் (13 – 14 வயது வரை)
இ) தாம் மதிப்பவற்றுக்கு அமையத் தெரிவு செய்யும் பருவம் (13 – 14 வயது)
ஈ) மாறு நிலைப் பருவம் (17 வயது)
3. யதார்த்த ரீதியில் தெரிவு செய்யும் பருவம் (17க்குப் பின் வளர்ந்தோர் வரை) இதில் மூன்று துணைப் பருவங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
அ) ஆய்வுப் பருவம்
ஆ) உறுதிநிலைப் பருவம்
இ) விசேட பருவம்
எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்
40. ஜீன்ஸ் ஸ்பேர்க்கின் கருத்துக்கமைய, உங்களுக்குத் துணையாக அமையக் கூடிய தொழில்சார் ஆலோசனை தொடர்பான கருத்துக்கள் யாவை?
ஒருவர் தொழில் தொடர்பாக எடுக்கும் முடிவுகள் நீண்ட காலமாக அவரிடத்தே விருத்தியடைந்துள்ள அனுபவங்களுடன் தொடர்பானவையாகும்.
தொழில்சார் அபிவிருத்தி என்பது ஒரு தொடர்ச்சியான செயன்முறையாகும்.
ஒருவர் தனது அனுபவங்களுக்கு அமையவே தனது விருப்பு வெறுப்புக்கள், மனப்பாங்குகள், நடத்தைக் கோலங்கள் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ளவும்,
திறன்களை வளர்த்துக் கொள்ளவும் செய்கின்றார். அனுபவங்களுக்கு அமையத் தனது கருத்துக்களை மாற்றிக் கொள்ளும் போக்கு ஒவ்வொருவரிடத்தேயும் காணப்படுகிறது. ஆசிரியர் ஒருவர் மேற்படி விடயங்களைத் தெழில்சார் ஆலோசனை வழங்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
அனுபவங்களின் ஊடாக திறன் விருத்திக்கு வழிகோலப்படுவதால், பல்வேறு திறன்களை விருத்தி செய்து கொள்ளும் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்தல் இச்சேவையில் முக்கியமானது.
யதார்த்த ரீதியில் தேர்வு செய்யும் பருவத்தின் போது ஒருவர் பல்வேறு தொழில்கள் தொடர்பான விடயங்களைத் தேடியறிய முயற்சிப்பதால்,வேலை உலகு தொடர்பான தெளிவான விளக்கத்தைப் பெற இப்பருவம் மிக பொருத்தமானது என்பதை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளுதல் நன்று.
மேலும் வாசிக்க - கல்வி உளவியல் - Click Here
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்