Guidance and Counseling | கல்வி வழிகாட்டலும் ஆலோசனை கூறலும் - 03

 


Guidance and Counseling | கல்வி  வழிகாட்டலும் ஆலோசனை கூறலும் - 03
Guidance and Counseling 

மாணவர் பொருத்தப்பாட்டிற்கும் பயன் மிகு கற்றலுக்கும் இடையேயுள்ள தொடர்பினை விளக்குக. 

 பொருத்தப்பாடின்மை கற்றல் கற்பித்தல் செயன் முறைகளைப் பாதிக்கும்.

மாணவர்கள் பாடத்தில் - கற்றலில் ஆர்வமின்றியிருத்தல்.

ஆசிரியர் மாணவர் தொடர்பையும், நல்லுறவையும் பாதிக்கும்.

ஏனைய மாணவர்களின்  கற்றல் நடவடிக்கைகளுக்கு இடைஞ்சலாகவும் அமையும்.

பாடசாலை இடைவிலகல் - ஒரே வகுப்பில் மீண்டும் தங்கியிருத்தல் என்பனவற்றின் விகிதாசாரம் அதிகரிக்கும்.

விரக்தி மனப்பாங்கு – சமூக விரோத நடவடிக்கை நிலைகள் ஏற்பட இடமளிப்பதால் இவை கல்வி நடவடிக்கையைப் பெரிதும் பாதிக்கும். 

மேலும் வாசிக்க -  கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

 இயற்கை அனர்த்தம் ஒன்றிலிருந்து உயிர்பிழைத்த பாடசாலைச் சிறுவர்களுக்கு 

ஆலோசனை கூறலின் தேவை பற்றிய உங்கள ; கருத்துக்களைச ; சுருக்கமாகத் தருக? 

i. முன்னைய பழைய நிலைக்கு அவர்களது உள மனவெழுச்சி நிலைகளை மாற்ற முயற்சித்தல்.

ii. பிள்ளைகளின் பின்னணி பற்றிச் சரியாக அறிந்து, இனங்கண்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுத்தல்.

iii. படிமுறையாக அவர்களது முன்னேற்றத்தை ஏற்படுத்துதல்.

iஎ. இயற்கை அனர்த்த ஆபத்து அனுபவங்களிலிருந ;து மீள்வதற்கான உளப்பிணியாய்வு பற்றிய நடவடிக்கைகள் மேற்கொள்ளல்.

எ. பொருத்தமாக அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின்  ஆலோசனை, உதவிகளைப்  பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தல். 

 பிள்ளைகள் பொருத்தப்பாடான – ஆளுமை விருத்தி செய்வதில் எதிர் நோக்கும் இடர்பாடுகளுக்கான இரண்டு (02) குடும்ப அடிப்படையிலான காரணிகளைப் பரிசீலனை  செய்க. 

i. பெற்றோர் அடிக்கடி கடுமையாக சண்டையிடல்.

ii. தந் தையின்  குடிபோதை நிலையும் - கடுமையான வார்த்தைப் பிரயோகங்களும்

iii. குடும்ப அங்கத்தவர் தாக்கப்படுதல் - சிறைப்படுத்தப்படல் - கொலை செய்யப்படுதல் போன் றவற்றைப் பிள்ளை பார்க்கும் நிலையில் அதன்  மனதில் ஏற்படும் தாக்கமும் அதனால் கல்வி பாதிப்புக்குள்ளாவதும்.

64. பிள்ளை ஒன்றின் உளச்சுகத்திற்கும்  கற்றல் - கற்பித்தல் செயன்  முறைக்குமிடையில் உள்ள தொடர்பினைப் பரிச Pலிக்குக. 

i. உளச் சுகம் நன்றாக இருந்தால் கற்றல் கற்பித்தல் செயன்முறை இலகுவாக அமையும்.

ii.உளச் சுகமின ;மை பொதுவாகப் பிள்ளையின்  கற்றலையும் - கற்றல் அடைவுகளையும் பாதிக்கும்.

iii. ஆசிரியரின் சுமுகமான கற்பித்தலுக்கு இடையூறாக அமையும்.

iஎ. பிள்ளை கல்வியில் ஆர்வம் காட்டாது சோம்பல் நிலைக்குத் தள்ளப்படும் - தனித்து ஒதுங்கும் தன்மையில் ஈடுபடும். இவை யாவும் பிள்ளைகளின்  கற்றல் கற்பித்தல் செயன் முறையைப் பெரிதும் பாதிக்கும் எனலாம். 

 எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்

 வகுப்பறையில் உங்களின்  அவதானத்துக்குட்படக்கூடிய நடத்தைப் பிரச்சினைகளால் அவர்களது அடைவில் எவ்வாறு தாக்கம் ஏற்படுகின்றது என்பதைச்  சுருக்கமாக கூறுக? 

 நடத்தைப் பிரச் சினைகளால் மாணவர் மத்தியில் உளக்கோளாறு, நெருக்கிடை, மன உளைச்சல், தனித்து ஒதுங்கியிருத்தல், சமூகத்திலிருந்து விலகியிருத்தல், பாடசாலையை வெறுத்தல்,பாடசாலை  சொத்துக்களை சேதப்படுத்தல் போன்ற நிலைகள் ஏற்படும். இவை மாணவரது கற்றல் அடைவுகளில் தாக்கமுறுத்தும்.

அத்தோடு நடத்தைப் பிரச்சினைகளால் ஆசிரியர் தனது கற்பித்தல் வகுப்பறைக் கட்டுப்பாடு என்பனவும் கேள்விக்குட்படுவதாலும் வாழ்வில் கற்றல் கற்பித்தல் செயன்முறை பாதிப்புற்று – கற்றல் அடைவுகளும் பெருமளவு குறைவுறும்.

அதி தொழிற்பாட்டு நடத்தை பற்றிய உங்கள் விளக்கம் யாது? 

பிள்ளை தனது கை கால் தொடர்பாக மட்டுமின் றி, எண்ணங்கள் தொடர்பாகவும் கட்டுப்பாடற்ற நிலையில் காணப்படுதலே அதிதொழிற்பாட்டு நடத்தை என்பதாய்க் கருதப்படுகின்றது. 

ஆசிரியர் பற்றிய விடயமொன்றை விபரிக்கும் போது பிள்ளை அதிக கவனம் செலுத்துவது கடினமாகவிருக்கும். உடல் உறுப்புக்களின்  அடக்கத்தைப் பேணுவதும் கஷ்டமாக இருக்கும். கவனம் கலைக்கப்படுவது இயல்பாக இவர்களுக்கு அமையும்.

  மேலும் வாசிக்க -  கல்வி உளவியல்   - Click Here

இவர்கள் தமக்கு ஒப்படைக்கப்பட்ட வேலைகளை நிறைவு செய்யலாம். ஆசிரியர் கற்பிக்கும் போது அனுமதிக்கப்படாத வேறு வேலைகளில் ஈடுபடலாம். ஏனைய பிள்ளைகளின்  கவனத்தைக் கவரத்தக்க விதத்தில் அவர்கள் வேறு விதமாகச் செயற்படலாம். 

வகுப்பறைச் செயற்பாடுகளில் உரிய கவனமின்றி வேறுவித நடத்தைகளில்ஈடுபடுடலாம். இது பொதுவாகக் கற்றல் கற்பித்தல் செயன் முறையைப் பாதிக்கும் ஒரு நடத்தையாகும். 

 

 அழித்தல்சார் நடத்தைகள் என்பதால் நீங்கள் பெறுகின்ற விளக்கம் யாது?

ஏனைய மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையிலான நடத்தைகளைக் காட்டுவதை அழித்தல்சார் நடத்தைகள் உள்ளடக்கும்.

உூம் 

i. ஆசிரியர் கற்பிக்கும் வேளையில் அடிக்கடி மற்றைய பிள்ளைகளுடன் கதைத்தல்.

ii. வகுப்பறையில் தேவையற்றுக் கூச்சலிடல்.

iii. கற்றல் பணியில் ஈடுபட்டிருக்கையில் பேனை, பென்சில், உபகரணப் பெட்டி போன் றவற்றைக் கீழே போடுதல்.

iஎ. பிள்ளைகளுக்கு பட்டப் பெயர் சூட்டி அழைத்தல்.

எ. சவர அலகு, கத்தி, பிளேட் போன ;றவற்றால் மேசை, கதிரை, புத்தகம், கொப்பி, புத்தகப்பை போன்றவற்றை  வெட்டுதல். 

எi. ஏனைய பிள்ளைகளுக்கு உடல் ரீதியான தொந்தரவு செய்தல்.

எii. பொதுச் சொத்துக்களைச்  சேதப்படுத்தல்.

எiii. பிராணிகளுக்குத் தொல்லை கொடுத்தல் - போன்றவை.

 சமூகத்திலிருந்து பின் வாங்கல் என்பதால் நீங்கள்; விளங்கிக் கொள்ளும் மாணவர் நடத்தை யாது? 

தன்முனைப்புடன்  வாழ்க்கையை ஆரம்பிக்கும் பிள்ளை படிப்படியாக சமூக முனைப்பை பெறுகின ;றது. இதனால் மற்றைய பிள்ளைகளுடன் இடைத் தொடர்புகளைப் பேணும் போக்கு அதாவது சமூகமயமாதல் ஏற்படுகின்றது.

ஆனால் மற்றைய பிள்ளைகளுடன் உகப்பான தொடர்புகளைப் பேணாது அவர்களுடன் ஒத்துப் போகாது விலகி, ஒதுங்கிச் சில பிள்ளைகள் இருக்கலாம்.இவர்கள் மற்றைய பிள்ளைகளின்  சமூகமயமாதல் நடத்தைகள் பொருத்தமானவாறு துலங்கல் காட்டுவதுமில்லை. ஆசிரியர்களுடன் பேண வேண்டிய சமூகத் தொடர்புகளும் பேணப்படுவதுமில்லை. இவர்கள் சமூகத்திலிருந்து பின்வாங்கும் நிலைப் போக்கிற்குத் தள்ளப்படுகின்றனர். 

இவை வகுப்பறைக் கற்பித்தலில் பாதகமான விளைவுகளை உருவாக்கலாம்.

குறிப்பாக இம்மாணவர்களின்  சமூகத் திறன ;கள் பாதிப்புக்குள்ளாவதுடன் ; சமூகமயமாக்கலிலும் பின்னடைவு ஏற்படலாம். 

எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்  

பேச்சுக் குறைபாடுடைய பிள்ளைகளின் குறை இயல்புகள் ஐந்தினைப் (05) பட்டியற்படுத்துக. 

i. சொல் உச்சரிப்பு சரின்மை  – உச்சரிக்கும் போது எழுத்துக்கள் விடுபடல் -எழுத்துக்களை வேறுபட்ட விதத்தில் உச்சரித்தல்.

ii. குரல் சீரின்மை, பொருத்தமற்ற வகையில் குரலில் பேசுதலும், மிகத் தாழ்ந்த  குரலில் பேசுதலும்.

iii. சொல் வெளிப்பாட்டுச் சரின்மை  – திக்குதல் - கொன்னுதல் - வாயிலிருந்து சொற்கள் வரத் தாமதமாதல் - ஒரு சொல்லை பல முறை சொல்லுதல்.

iஎ. விரைவில் மற்றவருடன் கோபப்படல் - சினந் து பேசுதல் - பிடிவாதத் தன்மை காணப்படுதல்.

எ. வகுப்பில் பேச விரும்பாமை – பேசத் தயங்குதல் - பேச வெட்கப்படுதல் போன்றன. 

 மேலும் வாசிக்க -  கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

மீத்திறன் மாணவர்கள்  உயர் திறமையுடைய மாணவர்களின் குறையியல்புகள் ஐந்தினைக் (05) பட்டியற்படுத்துக. 

i. பொதுவாக மிகுந்த அறிவுசார் திறமை.

ii. குறிப்பிட்ட கற்றலுக்கான மிகப் பொருத்தமான உளச ;சார்பு.

iii. ஆக்கபூர்வ, விளைவு தரும் உயர் சிந்தனை.

iஎ. தலைமைத்துவத்  திறன்கள் அதிகமாயிருத்தல்.

எ. கட்புல மற்றும் அரங்கக் கலைகள் (visual and Performing arts  ) நிலைத்திருத்தல்

எi. உடலியக்கத் திறன் கள் மிகிந்திருத்தல்.

எii. அறிவு, ஆக்கம், அடைவு , செயல் போன்றவற்றில் விடாப்பிடித்தனம் இருத்தல்.



Post a Comment

0 Comments