![]() |
Guidance and Counseling |
ஆலோசனை கூறலில் முக்கியம் பெறும் ஒழுக்கச் சேவைகள் நான்கினைக் (குறிப்பிடுக.
இரகசியம் பேணுதல்.
தனிப்பட்ட இலாபம் தரும் சிகிச்சை பெறாதிருத்தல்.
நட்புடைமையைத் தவிர தனிப்பட்ட தொடர்புகள் வைத்திராதிருத்தல்.
சேவையைக் கேலிக்கிடமாகாது இருத்தல்.
பொருத்தமற்ற கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடாது இருத்தல்.
பொறுப்புக்களை ஏற்காதிருத்தல்.
உதவிச்சேவையும் முகப்படுத்தும் சேவையும் வழங்குதல்.
மேலும் வாசிக்க - கல்வியியல் கட்டுரைகள் - Click Here
ஆலோசகருக்கு ஒழுக்கக் கோவையின் முக்கியத்துவத்தை விளக்குவதற்குக் காரணங்கள் இரண்டைக் (02) குறிப்பிடுக.
ஆலோசனை வழங்குதல் சேவையானது நம்பகக் தன் மையும் பயனுடைத் தன்மையுமுள்ளதாக இருத்தலுக்கு.
ஆலோசனை நாடியின் முழுமையான ஆதரவும், வெளிப்படத் தன்மையும் உறுதிப்படுத்தப்பட்டிருத்தலுக்கு.
நடுநிலைத் தன்மையும், ஊழலற்ற உண்மைத் தன்மையும் உடையவராகத் திகழ்வதற்கு.
தன்னம்பிக்கை,தற்றுணிவு, வினைத்திறன் விளைதிறன் தன்மைகள் சேவையிலும் அவரிடத்தும் அதி உச்ச தன்மையில் அமைந்ததாக இருப்பதற்கு.
பாடசாலை ஆலோசனைச் சேவைகளின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான மூன்று (03) வழிமுறைகளைக் குறிப்பிடுக.
மைய மற்றும் பரவலாக்கப்பட்டதுமான இரண்டும் கலந்த பாடசாலை ஆலோசனைச் சேவை ஒழுங்கமைப்பை ஏற்படுத்துதல். இதனால் அதிபர் தொடக்கம் அனைத்து ஆசிரியர்களையும் பொறுப்புடனும், வினைத்திறனுடனும் பங்களிப்புச் செய்ய ஊக்குவிக்கலாம்.
பெற்றோரது ஆலோசனை, உதவி, ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ளல்.நிபுணத்துவ, நிறுவனம்சார் உதவிகளைப் பொருத்தமான வழிகளில் பெற்றுக் கொள்ளலாம்.
உங்கள் பாடசாலையில் பொருத்தமான ஆலோசனைச் சேவை ஒன்றினை எவ்வாறு அமைத்துக் கொள்வர்களெனப் படிமுறையாக விளக்குக.
மேலும் வாசிக்க - கல்வி உளவியல் - Click Here
- அதிபர்,ஆசிரியர், மாணவருடன் கலந்தாலோசித்தல்.
- பாடசாலைக்கு அயலிலுள்ளவர்கள் பெற்றோர் மற்றும் பழைய மாணவர் உதவி பெறல்.
- நிபுணத்துவ உதவிகளை நாடுதல்.
- ஒன்றிணைக்கப்பட்ட அல்லது பரவலாக்கப்பட்ட அல்லது இரண்டும் கலந்த ஒழுங்கமைப்பாக இருத்தல்.
- பங்குபற்றுபவர்களுக்கான அடிப்படைப் பயிற்சி அளித்தல்.
- பௌதீக வளங்கள் - உூம் இடவசதிகள், தளபாடங்கள், உபகரணங ;கள் போன்றன பெற்றுக் கொள்ளல்.
- தகவல்கள், தரவுகளை அட்டவணைப்படுத்துவதற்கான ஒழுங்குகள். பிறசேவைகளின் உதவிகளைப் பெறுதல்.
ஆன்ரோ, முன்வைத்துள்ள தொழில் வழிகாட்டல் கொள்கையின் அடிப்படை கருத்துக்களை விளக்குக.
ஒருவர் தெரிவு செய்து கொள்ளும் தொழிலுக்கும் அவரது சிறுபாராயத் தேவைகள், அனுபவங்கள் நிறைவு பெற்ற விதத்திற்கும் இடையே தொடர்பு உண்டு என்கிறார்.
இவரது கருத்துப்படி – பிள்ளையினது விருப்புக்கள் நிறைவு பெற வேண்டியது மிக மிக அவசியமாகும்.
சிறு பிள்ளையினது பெற்றோர் கொண்டிருக்கும் மனப்பாங்குகள் அப்பிள்ளையினது தேவைகள் நிறைவடைவதில் பெருமளவு பங்களிப்புச் செய்கிறது என்பதும் இவரது கருத்து.
ஆன்ரோ தொழில்களைப் பொதுவாக சேவைகள் வணிகம் சார்ந்தவை,
ஒழங்கமைப்புக்கள் சார்ந ;தவை,தொழிநுட்பம் சார்ந்தவை, திறந்தவெளி சார்ந்தவை,
விஞ்ஞானபூர்வமானவை,பண்பாட்டு ரீதியானவை கலைகளும் ஆழகியலும் எனப்பரந்த எட்டு (08) வகைகளாக வகுத்துக் காட்டியுள்ளார். அத்தோடு ஒவ்வொரு தொழில் துறைகளுக்குமுரிய ஆளுமைப் பண்புகள் தொடர்பான விளக்கத்தையும் முன்வைத்துள்ளார்.
எனவே அவரது கருத்துப்படி
குடும்பத்தின் உளவியல் தொடர்புக் கோலம், பெற்றோர் - பிள்ளை தொடர்பான உளவியல் தாக்கங்கள் பற்றி ஆலோசனை வழங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்கல் தொடர்பாகவும் அவர்களது மனப்பாங்குகள், நடத்தைக் கோலங்கள் பற்றியும் கவனத்திற்கெடுக்க வேண்டும்.
வெவ்வேறு தெழில்துறைக்கேற்ப இவரால் முன்வைக்கப்பட்டுள்ள ஆளுமைப் பண்புகள் இரு பகுதியினருக்கும் கனிசமான வழிகாட்டலைத் தரும்.
ஒருவர் தமக்குப் பொருத்தமான, திருப்தி தரக்கூடிய ஒரு தொழில் கிடைத்தால் மட்டுமே அர்ப்பணிப்புடன் அத்தொழிலில் ஈடுபடுவார் என்றும் குறிப்பிடுகின்றார்.
எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்
தொழில் வழிகாட்டலில் அடங்கக் கூடிய முக்கிய நான்கு கூறுகளையும் குறிப்பிடுக.
நாட்டங்கள், விழுமியங்கள், திறமைகள், ஆளுமை கூறுகள்,என்பவற்றில் தனியார், மேலதிக சுய விளக்கத்தைப் பெறுவதற்கு உதவி செய்தல்.
மாணவர்கள், தொழில்கள் வேலைகள் பற்றிய மேலதிக விளக்கத்தைப் பெறுவதற்காக அவர்களை வளங்களுடன் தொடர்புபடுத்தல்.
தமது சொந்த நாட்டங்கள், விழுமியங்கள், திறமைகள், ஆளுமைக் கூறுகள் என்பவற்றுடன் பொருந்தக் கூடிய தொழில்களைத் தேர்ந்தெடுப்பதற்கு மாணவர்களைத் தீர்மானம் மேற்கொள்ளும் செயன் முறையில் ஈடுபடச் செய்தல்.
மாணவர் தமது தொழில் மார்க்கத்தைத் தாமே நிருவகித்துக் கொள்ளவும்
தமது வாழ்நாள் வாண்மைத்துவ விருத்திக்காக வாழ்நாள் நீடித்த கற்போனாகவும் வருவதற்கும் தனியாட்களுக்கு உதவுதல்.
ஆலோசனைச் சேவை செயன் முறையில் தரவு சேகரிக்கும் முறைகளின நுட்பங்கள் ஐந்தினைக் (05) குறிப்பிடுக.
அவதானித்த பின்னர் தரவுகளை அறிக்கைப்படுத்தும் சுருக்கச் செய்திக் குறிப்புகளை ஒழுங்கமைத்தல் தரவு சேகரிக்கும் முறை எனப்படும்.
குறித்த ஒரு சூழலில் ஒரு மாணவரது யாதேனும் ஒரு நடத்தை தொடர்பான சுருக்க விளக்கமே இதில் முதலில் இடம் பெற வேண்டும்
அவதானிக்கப்பட்ட நடத்தைகள் செம்மையாகவும் குறித்த விடயத்திற்கு அமைவானதாயும் சுருக்கமாகவும் குறிப்பிடப்படல் வேண்டும்.
தொடர்ச்சியாகப் பதிவு செய்யப்படல் வேண்டும்.
திரள் முறையில் நிகழ்வுகளைப் பதிவு செய்தல் நன்றாகும்.
ஒரு குறித்த காலத்துள் முறையாகப் பேணப்படுதல் வேண்டும்.
பதிவுகள் செய்தல் குறித்த வகுப்பாசிரியரிடத்து ஒப்படைக்கப்படலாம்.
மேலும் வாசிக்க - கல்வியியல் கட்டுரைகள் - Click Here
தனியாள் ஆய்வு நுட்பமுறையின் பயன்பாடுகள் மூன்றினைத் (03) தருக?
மாணவனின் தகவல்களை சுருக்கிக் காட்ட இம்முறை பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.
மாணவனின் குடும்ப வரலாறு, சுகாதார நிலைமை, கல்வித் தகவல்கள், பரீட்சைப் பெறுபேறுகள், வேண்டுகோள்கள்,பொழுது போக்குகள், விருப்பு வெறுப்புக்கள் போன்ற பல்வேறுபட்ட தகவல்கள் - தரவுகளைக் கொண்ட மாணவனது முழுமையான ஆளுமை பற்றியறிய இது உதவும்.
மாணவனின் தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்துகின்ற காரணிகளின் இடைத் தொடர்புகளையும், அபிவிருத்திகளையும் பற்றிய ஆழமாக ஆய்வதற்கு இது பயன்படும்.
நேர்காணல், அவதானித்தல், வினாக் கொத்து, சோதனைகள் போன்ற பல்வகை நுட்பமுறைகள் மூலம் பெறப்பட்ட தகவல்கள் தனியாள் ஆய்வு அறிக்கையில் இடம் பெறுகின்றன.
தனியாள் ஆய்வு என்பது பல தகவல்களையும் நன்றாக ஆராய்ந்த பின்னரேயே தயாரிக்கப்படுவதால் ஆலோசகருக்கு, பாடசாலை உள வைத்தியருக்கு குறித்த மாணவன் தொடர்பான படத்தை இலகுவில் அறிந்து – அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவியாக அமையும்.
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்