Guidance and Counseling || ஆலோசனையும் வழிகாட்டலும் - பாகம் - 2


எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்

Guidance and counseling
Guidance


11. ஆலோசனைச் ( guidance )செயற்பாடுகள் பொதுவாக அடங்கும் பிரதான (04) பரப்புகளும் யாவை? 

உளவியல் சார் ஆலோசனை (Counseling )

கல்விசார் ஆலோசனை  ( Academic Counseling services )

தொழில்சார் ஆலோசனை ( Psychological test for employment )

குடும்பம் சார் ஆலோசனை  ( Family counseling )


12. கற்றல் வினைத்திறனையும், அடைவு நிறைவையும் அதிகரிப்பதற்கு கல்விசார் ஆலோசனையில் மாணவரின் எத்தகைய பிரச்சினைகளை கருத்திற்கொள்ள வேண்டும். 

கற்றல் இடர்பாடுகள்.

வாசித்தல் தொடர்பான பிரச்சினைகள்.

சிந்தனையை ஒழுங்குபடுத்துவதில் பிரச்சினைகள்.

வகுப்பில் கேட்டல் போன்ற  திறன்களை வளர்ப்பதற்கு கற்றுக் கொள்ளுதல்.

நேர முகாமைத்துவம். (Time managment software)

குறிப்பு எடுத்தல்.

கல்விக்கான ஊக்கம் தடைப்படுதல் போன்றவை

                    மேலும் வாசிக்க -  கல்வியியல் கட்டுரைகள் -  Click Here

13. இலங்கையில யொவுன்  மிதுரோ’ ஆலோசனைச் சேவைகள் நிகழ்ச்சித் திட்டம் 1983 இல் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் ஆலோசனைச் சேவை வரலாற்றில் இந்நிகழச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டமையை நாங்கள் ஏன் ஒரு முக்கிய நிகழ்வாக கருதுகின்றார்கள் 

இது ஓர் உண்மையான தொழில்சார் சேவையின்  ஆரம்ப நிலையாகும்.

1960 இல் ஆரம்பக்கப்பட்ட பாடசாலைத் தொழில் வழிகாட்டல் திட்டம் 1980 இல் முற்றாகக் கைவிடப்பட்டது.

கொழும்புப் பல்கலைக் கழக உளவியல் துறை, உளவியல் மருத்துவத ; துறை, தேசிய இளைஞர் சேவை ஆகியவற்றால் இச ;சேவை ஒழுங்கமைக்கப்பட்டது. 

ஆசிய அமைப்பின்  பணிப்பாளர் திரு ஜோன்கயர் இத்திட்டத்தின்  பிரதான உதவியாளராக கடமையாற்றினார். 

இதில் பாடசாலை, மூன்றாம் கல்வி நிலை, பொதுமக்கள் பிரிவு என்று மூன்று பிரிவுகள் செயற்பட்டன.

பின்னர் இது 8 மத்திய நிலையங்களில் இயங்கியது. இந்த வகையில் யொவுன்  மிதுரோ ஆலோசனை சேவைகள் அன்றைய நிலையில் ஓரளவு இயங்கியமை பரவாயில்லை என்று கூறலாம். 

மேலும் வாசிக்க -  கல்வி உளவியல்  -  Click Here

14. இருத்தலியல் கொள்கையானது ஆலோசனை கூறலின்  நோக்கம் பற்றி எத்தகைய விளக்கத்தை அளிக்கின்றது. 

தன்னைத்தானே அறியச் செய்தல் என்பதற்காக இருத்தலியல் கொள்கையின் மூன்று பரிமாணங்களான உயிரியல், உளவியல், ஆன்மீகம் ஆகிய மூன்றையும் உலகத்தையும் ஒன்றிணைத்தலும், அதற்குக் கைகொடுத்தலும் ஆலோசனை கூறலாகும்.

நாம் சுதந்திரமானவர்கள் ஆகவே எமது தெரிவுகளுக்கும் செயல்களுக்கும் நாமே பொறுப்புடையவர்கள் என்பதே இக்கொள்கை அணுகுமுறையின் அடிப்படத் தத்துவமாகும்.

ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை வழங்குபவர் உலகைப் பற்றிய தனது அனுமானங்களை ஆலோசனைகளை நாடி அடையாளம் காணவும், தெளிவுபடுத்திக் கொள்ளவும் உதவுதல்.

மத்திய கட்டத்தில் ஆலோசனை நாம் வாழ்வதற்கு ஏற்ற வாழ்வு எத்தகையதாக இருக்க வேண்டுமெனக் கருதுகின்றார் என்பதைத் தாமே தெளிவுபடுத்தி கொள்வதற்கு சிகிச்சை வழங்க உதவி செய்வதுடன்  அவரது உள்ளார்ந்த விழுமிய செயன் முறை பற்றித் தெளிவான விளக்கத்தை விருத்தி செய்வதற்கும் ஊக்குவித்தல். 

ஆலோசனை நாடி தன்னைப் பற்றிக் கற்றுக் கொண்டதை நடைமுறைப்படுத்துவதில ; கவனம் செலுத்தி சிகிச்சை செயற்பாட்டின ; ஊடாக விருத்தியடையப் பெற்ற அகக்காட்சியைக் கொண்டு செயலில் ஈடுபட ஆலோசனை நாடி ஊக்குவிக்கப்படுதல்,இருத்தலியல் கொள்கைக்கு சிகிச்சை முறையின் இயல்புகளாகும்.

15. சிக்மன்ட் புரொயட்டின் பிரகாரம் ஒருவருடைய நடத்தையில் நனவலி உள்ளம் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றது 

குழந்தைப் பருவத்தில் நிறைவேறாத ஆசைகள்  தேவைகள்  போன்றன அடக்கப்பட்டவையாக நனவலி நிலைக்குத் தள்ளப்படுவதால் அவை எக்காலத்தில் நடத்தைப் பிறழ்வுகளுக்கு காரணமாக அமைகின்றன. இதனால் உளக்கோளாறு, நரம்புப் பிணி போன்றன ஏற்படவும் வழி ஏற்படலாம் .  

 மேலும் வாசிக்க -  கல்வியியல் கட்டுரைகள் -  Click Here

16. ஆலோசனை கூறல் கொள்கைகள்   பற்றிய அந்த ஆசிரியர் ஒருவருக்கு தேவை எனக் கருதுகின்றீரா? இரண்டு பிரதான காரணங்கள் 

மாணவர்களது கற்றல் தொடர்பான  – எதிர்கால கல்வி நிலை தொடரபான  பிரச்சினைகள் அதற்கான காரணங்களை இனங்கண்டு – பொருத்தமான ஃ சரியான முறையில் வழிகாட்டி  உதவி புரிதல்.  

ஆசிரிய தொழிலின் மகத்துவத்தை மேலும் மெருகூட்டலும் மேம்படுத்தலும். தேசிய கல்வி நோக்கஙக் ளுக்கேறப் ஆளுமை படைத்த மாணவர் சமூகத்தை உருவாக்கவும் - பொருத்தமான வகையில் சமூகமயமாக்கவும்.  

 

17. பாடசாலை ஆலோசனை கூறலில் தனியாள் திறள் பதிவேடுகள் (Case Records) எத்துணையளவிற்கு பயன்படுத்தலாமென்பதைக் காட்டுக.  

மாணவர் பின்னணி – வரலாறு குறித்து பல்வேறு தகவல்களையும் தரவுகளையும் பெற்றுக் கொள்ளல். 

சூழ்நிலைகளுக்கேறப் பரிகார நடவடிக்கைகள், தீர்வுகளை மேற்கொள்ளல். 

பின்னணி பற்றி  அறிந்து படிமுறையான முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுத்தல். 

எதிர்கால வளரச் சிக்கு – முன்னேற்றத்திற்கு ஏற்ற நடவடிக்கைகளை இதனடிப்படையில் மேற்கொளள் உதவியதாக இருத்தல். 

             மேலும் வாசிக்க  - கல்வி தத்துவம்  ( Academic essays) - Click Here

18. ஆலோசனை கூறல் கொள்கையிலிருந்து ஆலோசகர் பெறக் கூடிய அணுகூலங்கள் 

அடிப்படைத் தத்துவம், சிகிச்சை செயன்முறைத் தன்மை, செயல் ஒழுங்குகள்  போன்றவற்றைக் கோட்பாடடு ரீதியாக ஒழுங்கமைக்கலாம்.  

மாணவர்கள்  ஆலோசனை நாடிகளின் பிரச்சினைகளைப் புறவயமாக இனங்கண்டு விளங்கிக் கொளள்லாம். 

பிரச்சினைகளை மாணவர்கள்  திறம்பட  முகங்கொடுக்க உதவலாம்.

சுய திருப்தி காணலாம். பரஸ்பர உதவிகள்  இடம்பெற வழிவகுக்கும். 

19.ஆலோசனை கூறுதலின் போது பயன்படுத்தப்படும் சோதன நுட்ப முறைகள் மற்றும்  சோதனையில்லாத நுட்ப முறைகள் 

 சோதனை முறைகள் :-  (Observation Research Method )

அடைவுச் சோதனை 

உளச் சார்பு சோதனை    

தகுதி காண் சோதனை 

சோதனையல்லாத முறைகள்:- 

        அவதானித்தல் 

  நேர்காணல் 

  வினாக் கொத்து 

  சுயசரிதை 

  தனியாள் ஆய்வு 

20. பாடசாலை வழிகாட்டல் ஆலோசனைச் (Guidance) சேவைகளின் வெற்றிக்குப் பெற்றோரின் ஈடுபாடு அவசியம் என்பதற்கான காரணங்கள் 

வீட்டு சூழல் தொடர்பான  தகவல், தரவுகள் வழங்குதல். 

பிள்ளையின் வீட்டுச் சூழல் தொடர்பான பிரச்சினைகளை இனங்காணவும், பிரச்சினைகளுக்கு உதவவும் முயற்சித்தல். 

குறிப்பாக வகுப்பு அசிரியர்களுடன் தொடர்பு  கொண்டு ஒத்துழைப்பு வழங்குதல் - பிள்ளைகள் குறித்து அவர்களுடன் தொடரச்சியான தொடர்புகளைப் பேணுதல், அவர்களது எதிர்காலக் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுதல் - கல்விச் சூழலை வீட்டிலும் அமைத்தல், ஊக்கம் கொடுத்தல் போன்றவை.   

எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்


Post a Comment

0 Comments