![]() |
ஒப்பீட்டு கல்வி - பாகம் 01 |
எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்
01. இலங்கையில் நிலவிய புராதன கல்வி முறையின் ஜந்து (5) முக்கிய பண்புகளை விளக்குக?
முறைசாரா தன்னியல்பான கல்வி.
மானியமுறை சமுதாயத்திற்கு ஏற்ற கல்வி.
உயர்ந்தோர் சார்பானவைகளும் சாதியமைப்பு அடிப்படையிலும் அமைந்த முறை.
கலை,கட்டிடம், சோதிடம், வைத்தியம் என் பன உயர்கல்வியுள் அடங்கியிருதன.
கல்வி முறை அரசு ஆதரவுள்ளதாக இருந்தமை.
இந்தியப் பாரம்பரியங்களுடன் பிராமணக் கல்வி, குருகுலக்கல்வி கொண்டதாக உள்ளமை.
சமூகத்தேவைகளை நிறைவேற்றுக் கொள்ளும் தன ;னிறைவு நோக்கான கல்விமுறை.
ஒழுக்க நெறியையும் தனியாள் அபிவிருத்தியையும் நோக்காகக் கொண்ட கல்வி.
02. இலங்கையின் புராதன கல்வி முறையில் செல்வாக்கு செலுத்திய மூன்று (3) காரணிகளைத் தருக?
இந்தியப் பாரம்பரியங்கள், பிரமாணக் கல்வி, குருகுலக் கல்வி அம்சங்களின் தன்மை கொண்டதாக உள்ளமை.
உயரந்தோர் சார்பானதாகவும், சாதி அமைப்பு அடிப்படையிலான தன்மையும் கொண்டுள்ளமை.
மதம் - சமயத்துறை செல்வாக்குக் கொண்டுள்ளமை.
மன்னர் ஆதரவுள்ளதாக இருந்தமை.
சமூகத் தேவைகளை நிறைவேற்றும் நோக்குடனான தன்னிறைவு அடிப்படையிலான கல்வி.
ஆன்மீகத்திற்கும், ஒழுக்க விழுமியங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் கல்வி
03. பண்டைய இலங்கையின் சுதேசிய கல்வி முறைமையில் மூன்று (03) தனித்துவமான மட்டங்களைப் பெயரிடுக.
சிற்றூர் பள்ளிகள் கிராமியப் பாடசாலை, குருகெதர, பன்சல எனும் பெயர்களில் அமைந்த ஆரம்ப நிலைப்பள்ளிகள்.
கோயிற் பள்ளி, பிரிவெனாக்களில் ஒரு பகுதி - இவை இடைநிலைக் கல்வி வழங்கின.
மகா பிரிவெனா, மகா விகாரை- இவை உயர் கல்வி அல்லது மூன்றாம் நிலை வழங்கும் கல்வி நிறுவனங்களாக இருந்தன.
04. இலங்கையின் பண்டைய பிரிவெனாக்கள் பற்றியும் இவை மூலம் வழங்கப்பட்ட கல்வியின் பிரதான பண்புகள் மூன்றைப (03) பெயரிடுக.
துறவியர் துறவியரல்லாதவர் ஆகிய இரு சாராரும் கல்வி பயில அனுமதிக்கப்பட்டுள்ள கல்வி நிறுவனமாகும்.
இங்கு உச்சநிலைக் கல்வி அல்லது உன் னத நிலைக் கல்வி வழங்கும் மூன்றாம் நிலைக் கல்வி நிறுவனங்களின் அந்தஸ்துடையனவாகக் காணப்பட்டன.
பிரிவெனாக்களில் இடை நிலைக் கல்வியும், மகா பிரிவெனாக்களில் உயர்நிலைக் கல்வியும் வழங்கப்பட்டன.
ஆசிரியர்களில் பெரும்பாலானோர் பௌத்த துறவிகளாவர். காலப் போக்கில் துறவியரல்லாத கல்விமான் களும் ஆசிரியர்களாகச் சேர்ந்து கொண்டதாக அறிய முடிகின்றது.
தொடக்கத்தில் சமயக் கல்வியைப் புகட்டிய பிரிவெனாக்களின் கலைத்திட்டம் பின்னர் விரிவாக்கம் பெற்றது.
சமயத்துறை அறிவு, வேதங்கள் சிங்கள, பாளி, சமஸ்கிருத மொழிகள், வரலாறு, இலக்கணம், தர்க்கம் போன்ற பண்பாட்டுத் துறையறிவுப் பாடங்களும், உயர் சிறப்புத் தொழிற் பாடங்களான சட்டம், வானவியல், வைத்தியம், கட்டிடக் கலை, ஓவியம் போன்றனவும் கற்பிக்கப்பட்டன.
மன்னர் பேராதரவும், மக்கள் ஆதரவும் பிரிவேனாக்களுக்கு உதவியாக இருந்தமை சிறப்பம்சமாகும்
௦5. இலங்கையில் போர்துக்கேயரினால் உருவாக்கப்பட்ட நான்கு (04) கல்வி நிறுவனங்களின் பெயர்களைத் தருக.
போர்துக்கேயர் காலத்தில் :-
பிரான ;சிஸ்கன் பிரிவு :- 1543
ஜெசூட்ஸ் ஃ இயேசு பிரிவு :- 1602
அகஸ்டீனியன ; பிரிவு :- 1606
டொமினிக்கன ; பிரிவு :- 1606
பரிஷ் பங்குப் பாடசாலைகள் அல்லது கோயிற் பற்றுப் பாடசாலைகள்:-
இவற்றில் வாசிப்பு, எழுத்து, எண்கணிதம் என்பன போதிக்கப்பட்டன
ஆரம்ப பாடசாலை:-
பரிஷ் பங்குப் பாடசாலைகளில் சுதேச மொழிகள் மட்டுமே கற்பிக்கப்பட்டமையால் அராபி, இலத்தீன் கிரேக்கம் ஆகிய மொழிகளைக் கற்பிக்க இவை ஆரம்பிக்கப்பட்டன.
ஆரம்பத்தில் சிலாபம், மாதம்பையில் இரு பாடசாலைகள் அமைக்கப்பட்டு தர்க்க சாஸ்திரம், பேச்சு, பேச்சு வன்மை என்பனவும் இங்கு பயிற்றுவிக்கப பட்டன.
ஜெசூட்ஸ் கல்லூரிகள்:-
ஜெசூட்ஸ் தலைவர்களால் நிறுவப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள்.
சமயத்தையே விஷேடமாக கற்பிக்கும் போக்குடையவை. சமயக் குருமாரைப்
பயிற்றுவிப்பது இதன் பிரதான நோக்கம். இலத்தீன் இறையியல் என்பனவும்
கற்பிக்கப்பட்டன.
அநாதைப் பாடசாலைகள்:-
அநாதைகளான குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி வழங்கவும், தொழிலுக்கும்
வழிகாட்டவும் முகத்துவாரத்தில் அமைக்கப்பட்டவை இப்பாடசாலைகள்.
கல்லூரிகள்
போர்த்துக்கேயப் பிள்ளைகள் இங்கு கல்வி பயின்றனர். மதப்போதகர்களாக
விரும்பியவர்களும் இதில் கல்வி கற்றனர். சமயம், வாசிப்பு, எழுத்து, துதிபாடுதல், இலத்தீன் மொழி, நற்பழக்கங்கள் போதிக்கப்பட்டன
எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்
06. ஒல்லாந்தரால் கல்விக்கென அமைக்கப்பட்ட பிரதான அமைப்பின் பெயரையும் அதன் கடமைகளையும் குறிப்பிடுக.
ஸ்கொலாக்கல் கொமிசன் என்பது அதன்பெயர்
(பாடசாலைக் கல்வி ஆணைக்குழு)
இதன் கடமைகள்:-
பாடசாலைப் பரிசோதனை– பரிசோதகரான மதகுரு ஒருவர் ஒழுங்காகவும், சீராகவும் வருடாவருடம் பாடசாலைகளைப் பரிசோதித்தல்
குறிக்கப்பட்ட பாடசாலை வருடத் தொகையைப் பூர்த்தி செய்த பிள்ளைகளுக்கு “லாஜர்டீன ;” எனும் விடுகைப் பத்திரம் வழங்குதல்.
ஞானஸ்நானம் அல்லது கிறிஸ்தவ நாமகரண வைபவம் பெற விரும்பும் பெற்றோரைப் பரிசிலித்து அதனை வழங்குதல்.
சமய ஆராதனை நிகழ்த்தல், திருமணப்பதிவு செய்தல், சிற்றூர்களின் சமய நடவடிக்கைகள் பற்றிய பூரண பரிசீலனை செய்தல்.
-பாடசாலைக் கட்டிடங்கள், வரவு செலவுகளைப் பரிசோதித்தல்
ஆசிரியர்களைப் பதவி உயர்வுக்காகச் சிபாரிசு செய்தல், தண்டனை வழங்குதல்,பிள்ளைகளின் வரவைக் கட்டாயமாக்குதல் என்பனவும் இதன் கடமைகளாகும்
07. இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட போர்த்துகேய கல்வி முறைமையின் மூன்று (3) பண்புக்கூறுகளைத் தருக
கல்விக் குறிக்கோள்களாக,
உள்நாட்டவர்களை றோமன்கத்தோலிக்க மதத்திற்கு மாற்றுதல்.
தமது மதத்தைத் தழுவியவர்களுடாக வியாபார அலுவல்களை விருத்தி செய்து கொள்ளல்.
தமது ஆதிக்கத்துக்குட்பட்ட பிரதேச மக்களின் ஆதரவை மதத்தின் மூலம் பெற்று ஆட்சியை வலுப்படுத்திக் கொள்ளல்.
றோமன் கத்தோலிக்க மதத்தைத் தழுவியவர்களுக்கு எழுத்து வாசிப்பு, எண்கணிதம் போன்றவற்றைக் கற்பித்துக் கொடுத்தல்.
போர்த்துகேய கலாசாரத்தைத் தழுவிய ஒரு கூட்டத்தாரை உருவாக்குதல்.
கல்வியூடாகத் தமது நிர்வாகத்தை நிலை நாட்டலும், விரிவாக்குதலும்.
08. ஒல்லாந்தர் காலப்பகுதியில் கல்வி எவ்வாறு பொதுமக்களுக்கு விரிவு படுத்தப்பட்டது என விளக்குக.
ஒல்லாந்தரின ; நோக்கமும் தமது புரட்டஸ்தாந்து சமயத்தைப் பரப்புவதும்,தமது ஆட்சிக்கு, வியாபார நலனுக்கு உகந்த ஒரு உள்ளுர் கூட்டத்தைக் கட்டியெழுப்புவதுமாகும். இதற்குக் கல்வியை ஒரு கருவியாக கையாண்டனர்.
ஸ்கொலக்கல் கொமிசன் எனும் பாடசாலைக் கல்வி ஆணைக்குழு ஒன்றை அமைத்துக் கல்வி நடவடிக்கைகளை ஒழுங்கமைத்து தம் கட்டுப்பாட்டிலுள்ள சகல பகுதிகளுக்கும், சிற்றூர்கள் உட்பட கல்வி விஸ்தரிப்புச் செய்தனர்.
கல்விக்கூடங்களிலிலே ஆண்டு தோறும் பரிசீலனை நடத்தி காலை வேளையில் பாடசாலைக் கல்வி தொடர்பாகவும், மதியத்திற்குப் பின்னர் ஊரின்சமய நடவடிக்கைகள் மதமாற்றம், ஞானஸ்நானம் வழங்குதல் போன்றவற்றினுள் ஈடுபட்டமை.
சமயப் போதகரை விட சமயப் போதகரல்லாதவர்களுக்கும் ஆசிரியர் பயிற்சியளித்து அவர்களது சேவைகளையும் பெற்றுக் கொண்டமை.
கட்டாயக் கல்விச் சட்டத்தை அமுல்படுத்தி 15 வயது வரை மாணவர்கள் பாடசாலை செல்வதை கட்டாயப்படுத்தினர். பின்னர் இது 19 வயது வரை நீடிக்கப்பட்டது.
சிறந்த தேர்ச்சியுள்ள மாணவர் கல்வி ஏணியில் மேலேறிச் சென்று உயர் கல்வியும் ஆசிரியர் பயிற்சியும் பெறும் வாய்பைப் பெற்றனர். ஒரு சிலர் கடல் கடந்து உயர் கல்வி பெறும் வாய்ப்புக்கும் வழிவகுக்கப்பட்டிருந்தது.
09. இலங்கையில் கட்டாயக் கல்விச் சட்டத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒல்லாநதர் கையாண்ட வழிமுறைகளைச் சுருக்கமாகக் கூறுக.
“ஸ்கொலாக்கல் கொமிசன் எனும் பாடசாலை ஆணைக்குழு ஒன்று நிறுவி அதன்மூலம் கல்வி நிருவாகத்தைச் சீர்படுத்தியமை.
வருடாவருடம் பாடசாலைப் பரிசோதனையின்போது மாணவரின் மொத்த வருகை பரிசீலிக்கப்பட்டு முறையாகப் பூர்த்தி செய்தவர்களுக்கு “லாஜிர்டீன எனும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
15 வயது சகலருக்கும் கல்வி கட்டாயமாக்கப்பட்டது. பின்னர் 17 வயது மற்றும் 19 வயது வரை படிப்படியாக நீடிக்கப்பட்டது.
பெற்றோர் பிள ;ளைகளின் பாடசாலை வருகைக்கு பொறுப்புக் கூற
வேண்டியவர்களாக்கப்பட்டனர். பாடசாலைக்கு வராத பிள்ளைகளின் பெற்றோருக்கு ஒருவகைத் தண்டப்பணம் அபராதமாக விதிக்கப்பட்டது. இதனால் பெற்றோர் தம்பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் கவனம் காட்டினர்.
10. ஒல்லாந்தர் இலங்கையில் வழங்கிய கல்வி முறையின் பிரதான குறிக்கோள்கள் யாவை?
சுதேச மக்களுடன் றோமன் கத்தோலிக்க உள்நாட்டவர்களையும் புரட்டஸ்தாந்து மதத்திற்கு மதம் மாற்றம் செய்தனர். றோமன் கத்தோலிக்க மதத்தின் பலத்தை இங்கு வலுவிலக்கச் செய்தல்.
தமது மதத்தைத் தழுவியர்களுக்கு எழுத்து, வாசிப்பு போன்ற ஆரம்பக் கல்வியை வழங்குதல்.
கல்வி மூலம் தமது அரசியல் அதிகாரத்தைப ; பரப்புதலும், அதை உறுதிப்படுத்தலும்.
புரட்டஸ்தாந்து மதத்தைப் பரப்புவதற்காக விரிவுரையாளர்களையும் ஆசிரியர்களையும் தாய் மொழி மூலம் பயிற்றுவித்தல்.
நிருவாகத்திற்கு உதவக்கூடிய மத்திய வகுப்பினைக் கொண்ட தமக்குச் சார்பான புத்தி ஜீவிகளை உருவாக்குதல்.
எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்