ஒப்பீட்டு கல்வி - பாகம் 2

 

ஒப்பீட்டு கல்வி  - பாகம் 2
www.Asiriyam.com

             

எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார்              காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்

ஒப்பீட்டு கல்வி பாகம் 1 - Click Here

கோல்புறூக் குழுவினரால் கல்வி தொடர்பாகச் செய்யப்பட்ட மூன்று சிபாரிசுகளைக் குறிப்பிடுக.

1. கல்விப் பரிபாலன வேலைகளுக்கு ஒரு பாடசாலை ஆணைக்குழு நியமிக்கப்பட

வேண்டும்.


2. கற்பித்தல் மொழி ஆங்கிலமாக இருத்தல் வேண்டும்.


3.சுய மொழி ஆரம்பப் பாடசாலைகளை மூடிவிட்டு, அதற்குப் பதிலாக ஆரம்பக் கல்வி தொடக்கம் ஆங்கிலம் கற்பிக்கும் பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டும். III. ஆங்கிலக் கல்வியின் முன்னேற்றத்திற்காக ஓர் ஆங்கிலக் கல்லூரி நிறுவப்பட வேண்டும்.


4. ஆங்கிலப் பாடத்தைப் பயின்ற இளைஞர்களை அரச சேவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


5. திருச்சபையால் நடாத்தப்படும் பள்ளிகளுக்கு ஊக்கமளித்தல்.


6. எல்லா ஆசிரியர்களுக்கும் ஆங்கில அறிவு அவசியமாக்குதல்.


7. ஆசிரியர் பயிற்சிக்குப் பல்கலைக்கழகம் போன்ற ஒரு கல்லூரி அமைக்கப்பட வேண்டும்.


மேலும் வாசிக்க -  கல்வியியல் கட்டுரைகள்  - Click Here


1867ல் மோர்கன் குழுவினரால் முன்வைக்கப்பட்ட ஐந்து (5) விதப்புரைகளைக் குறிப்பிடுக.

1. ஆளுநருக்குப் பொறுப்பான பணிப்பாளர் ஒருவர் தலைமையில் பொதுப் போதனைத் திணைக்களம் நிறுவப்பட வேண்டும்.


02. இலவசக் கல்விக்காக நாட்டு மொழிப் பள்ளிகள் நிறுவப்பட வேண்டும்.


03.முதலில் தாய் மொழியிலும் பின்னர் ஆங்கில மொழியிலும் கல்வி புகட்டும் மொழிக்கலப்புப் பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும்.


04.மத்திய பள்ளிகள் நடைமுறைப் பிரயோக நோக்கு வழங்குவதன் மூலம் மத்திய பாடசாலை ஆணைக்குழு நிறுவி, மத்திய பள்ளிகள் சீர்திருத்தம் செய்யப்படல் வேண்டும்.


05.கொழும்பு கல்விக்கழகம் இங்கிலாந்திலுள்ள தனியார் பள்ளிகளை முன்மாதிரியாகக் கொண்ட நிலையமாக மறுசீரமைக்கப்பட்டு தொடர்ந்து பேணப்பட வேண்டும்.


06. இராணிக் கல்லூரி உயர்கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யாமையால் உயர் கல்விக்காக இங்கிலாந்து செல்ல ஆண்டு தோறும் இரண்டு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட வேண்டும்.


07. கைத்தொழில் பள்ளி ஒன்று நிறுவப்பட வேண்டும்.


08. ஆங்கில ஆசிரியர்கள் கொழும்பு கல்விக் கழகத்திலும் சுதேச மொழி ஆசிரியர்கள் கைத்தொழில் பள்ளியிலும் பயிற்சி பெறவேண்டும்.


09. பெண்கள் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.


10. கல்வியின் பொறுப்பை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். சமய குருமார்களுக்கோ, சமயக் குழுக்களுக்கோ இதை ஒப்படைக்கக் கூடாது.


11. தீவின் சகல மாவட்டங்களுக்கும் ஆங்கிலத்துடன் சுதேச மொழி ஒன்றினையும் தெரிந்த பரிசோதகர்கள் ஒவ்வொருவர் நியமிக்கப்பட வேண்டும்.

    மேலும் வாசிக்க -  கல்வி உளவியல்   - Click Here


1932 ஆம் ஆண்டின் கிராமியக் கல்விச் சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக.

*இது ஹந்தேசத் திட்டம் என்றும் அழைக்கப்படும்.


* அரசு புறக்கணித்த கிராமப் பள்ளிகள் புகட்டும் கல்விக்குத் தொழிற் பயிற்சிச் சார்பு

அளிப்பதே இதன் முக்கிய நோக்கம்.


* சுகாதாரம், சூழலறிவு, உள்ளூர் தொழில்கள் இலக்கியம் சித்திரம், இசை என்பன கலைத்திட்டத்தில் இடம் பெறும் முக்கிய பாடங்களாகும்.


* நாளொன்றில் காலை நேரப்பகுதியில் செய்முறைப்பயிற்சியும் பிற்பகல் பகுதியில் ஏற்கனவே செய்த வேலை தொடர்பான நூற் கல்வியும் நடைபெறும்.


இத்திட்டத்திற்கு இணங்க பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் அடைவு ஏனைய பாடசாலைகளிலிருந்து தேர்வு எழுதிய சகாக்களின் திறமைக்குச் சமமானதெனத் தெரிவிக்கப்பட்டது.


இப்பாடசாலைகளில் படித்த மாணவர்கள் ஏனைய பாடசாலை மாணவர்களிடம் இல்லாத பயனுள்ள தொழிற் திறன்களைப் பெற்றுக் கொண்டனர்.


ஒப்பீட்டு கல்வி பாகம் 1 - Click Here


கல்வியையும் வேலை உலகையும் இணைப்பதற்காக இலங்கையில் 1972 இல் தொடங்கப்பட்ட இடை நிலைப் பாடசாலை மட்ட கலைத்திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பாடம் யாது? அதன் தோல்விக்கு இட்டுச் சென்ற காரணிகள் யாவை?

தொழில் முன்னிலைப் பாடம் 1


தொழில் முன்னிலைப் பாடம் II -


சூழல் வளங்களின் பாவனை தொடர்பாக போதிய விளக்கம் பெற்றிருக்காத பாடசாலை நிருவாகம் - ஆசிரியர்கள் காணப்பட்டமை.


மூல வளங்கள் பரவலாக இல்லை .

* சரியான தொழில்கள் பாடசாலைகளால் தேர்ந்தெடுக்க முடியாதிருந்தமை.

* பெற்றோர் மனப்பாங்கு சாதகமாக இன்மை. போதியளவு ஆதரவு கிடைக்காமை.


கலாநிதி CWW கன்னங்கராவினால் அறிமுகப் படுத்தப்பட்ட மத்திய பாடசாலை முறைமையின் பிரதான இயல்புகள் நான்கு (04) கிளை விளக்குக.

* தேர்தல் தொகுதிகள் தோறும் சகல வசதிகளும் வளங்களும் கொண்டதாக மத்திய பாடசாலைகள் அமைய வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.


* இவை 06 ஆம் வகுப்புக்கு மேற்பட்ட 13 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளைக்

கொண்டிருந்தன.


* 03 - 06 மைல் வரை எல்லை வட்டத்தினுள் அமைந்திருந்த தொடக்க நிலைப் பாடசாலைகளின் மாணவர்கள் 05 ஆம் வகுப்பின் பின்னர் இதில் அனுமதிக்கப்படுவர்.


05 ஆம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாகாண ரீதியிலான மாணவர்கள் இப்பாடசாலைகளில் அனுமதிக்கப்படுவர்.


இவர்களுக்கு இலவச விடுதி, விளையாட்டுத் திடல், ஆய்வு கூட வசதிகளுடன் போதிய ஆளணி வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.


* ஏட்டுக் கல்விப் பாடங்களும் செய்முறைத் தொழிற்பாடங்களும் கொண்ட சமநிலைக் கலைத்திட்டம் பின்பற்றப்படும்.


     மேலும் வாசிக்க -  கல்வியியல் கட்டுரைகள்  - Click Here


17 ஆம் ஆண்டு கல்விச் சீர்திருத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட கலைத்திட்ட மாற்றங்கள் (03) மூன்றைக் குறிப்பிடுக.

* ஆரம்பக் கல்வி: 1-5 தரத்தில் தனிப்பாடக் கலைத்திட்டத்திற்குப் பதிலாக ஒருங்கிணைந்த பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இப்பாடத்திட்டம் விரியும் சூழலை ஆதாரமாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தொனிப்பொருள்களின் மொழி, எண்கணிதம், அழகியற் கலைகள் அமைக்கப்பட்டன. வாழ்க்கை அனுபவங்களோடு தொடர்புபடுத்தப்பட்டன. செயற்பாடுகள் சார்ந்ததாக இவை அமைக்கப்பட்டன


இடை நிலைக் கல்வி -- கனிஷ்ட இடை நிலை. 6-9 தரம் 10 கட்டயாப் பாடங்கள் இடம் பெற்றன.

01. முதன் மொழி

02. இரண்டாம் மொழி (சிங்களம் தமிழ்)

03. சமயம்

04. சுகாதாரமும் உடற்பயிற்சிக் கல்வியும்.

05. ஒருங்கிணைந்த விஞ்ஞானம். 06. கணிதம் 07. சமூக அறிவியல்

08. நுன்கலைப்படம்

09. தொழில் முன்னிலைப் பாடம் 1

10.தொழில் முன்னிலைப் பாடம் II


புவியில், வரலாறு, குடியியல் பாடங்களுக்குப் பதிலாக சமூகக் கல்வியும், உயிரியல், இரசாயணம், பௌதீகம் எனும் தனிப்பாடங்களுக்குப் பதிலாக ஒருங்கிணைந்த விஞ்ஞானம் என்ற பாடமும் அறிமுகப்படுத்தப்பட்டன.


*சிரேஸ்ட இடைநிலையில் மாணவர்கள் பல்வேறு துறைகளுக்குப் பிரிக்கப்பட்டனர். எனினும் பல பொதுப்பாடங்களை கட்டாயமாக படிக்க நேரிட்டது. இப்பாடங்களில் சோசலிச் கோட்பாடுகள். புள்ளி வரைவியல் செயற்திட்டப்பணி என்பன இடம் பெற்றன.


இலங்கையின் கல்வியில் சமத்துவத்தை வழங்குவதற்கு கட்டாயக் கல்வியை ஓர் உபாயமாக நடைமுறைப்படுத்தியதன் தாக்கம் யாது?

- 1999 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க கல்விச் கட்டளைச் சட்டம் கட்டாயக் கல்வியை வலியுறுத்தியது.

எனினும் பின்னருள்ள 6 தசாப்தங்களாகக் கட்டாயக் கல்வியை வலியுறுத்துவதற்கான ஒழுங்கு விதிகள் திட்ட வட்டமாக ஆக்கப்படவில்லை .


1997ல் தேசிய கல்வி ஆணைக் குழுவானது கல்வியை கட்டாயமாக்குவதற்கு ஒழுங்கு விதிகள் திட்டவட்டமாக ஆக்கவேண்டுமென்றது.


இவ்வொழுங்கு விதிகள் 1998 ஜனவரியிலிருந்து அமுலுக்கு வந்தன. இதைக் கண்கானிப்பதற்கு (2) இரு பாடசாலை வரவுக் குழுக்கள் நியமிக்கப்பட்டன.


பாடசாலை செல்லாத சிறுவர்களுக்கென முறைசாராப் படிப்பறிவு நிலையங்களை ஒழுங்கு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டது.


எவ்வாராயினும் கட்டாயக் கல்வி ஒழுங்கு விதிகள் பல்வேறு காரணங்களால் பயன்தக்க முறையில் அமுலாக்கப்படவில்லை என ஆய்வுகள் கூறுகின்றன.


* 2003 ல் பெரேரா என்பவரின் ஆய்வின் படி 1998 இன் பின் மாணவர் சேர்ப்பு அதிகரித்துள்ளதாகவும், இடை விலகல் குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


*குறைந்த வருமானமுள்ள கிராமியப் பிரதேசங்கள், பெருந்தோட்டப்பகுதிகளில் கட்டாயக் கல்வி நடவடிக்கைகள் முழுப்பயன்களைத் தரவில்லை எனலாம்.


            எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்


1961 ஆம் அண்டு தேசிய கல்வி ஆணைக்குழு முன்வைத்த 05 முக்கிய

விதப்புரைகளை விளக்குக.

  • அனுமதி வயதும் கட்டாயக் கல்வி வயதும்:
அதாவது பாடசாலை முன்னிலைக் கல்விக்குரிய வசதிகள் இல்லாமையால் பாடசாலை அனுமதி வயது 5+ ஆக இருக்க வேண்டும். கட்டாய பாடசாலைக் கல்வி வயது நாட்டில் நிலவும் நடைமுறைச் சிரமங்கள் காரணமாக 05-14 எல்லையில் இருக்க வேண்டும். 

  • பயிற்று மொழி ஊடகம் :

ஆங்கிலம் பயிற்று மொழி ஊடகமாக இருக்கும் நிலை காலப் போக்கில் அற்றுப் போக வேண்டும். பெருந்தோட்டப் பாடசாலைகள், சிங்கள தமிழ் பாடசாலைகளோடு ஒருங்கிணைக்கப்பட வேண்டும். 5 ஆம் வகுப்புத் தொடக்கம் ஆங்கிலம் விருப்பத் தெரிவுக்குரிய இரண்டாவது மொழியாக கற்பிக்கப்பட வேண்டும்.

  • கூட்டுக் கல்வி:

ஏற்கனவே ஒரு பாலாரைக் கொண்டவை தொடர்ந்தும் அவ்வாறே செயற்படலாம். ஏனைய பாடசாலைகள் யாவும் இருபாலாரும் கல்வி பயிலும் கூட்டுக் கல்விப் பாடசாலையாக இருக்க வேண்டும்.

  • பாடசாலை வலயங்கள்

ஒரு குறிப்பிட்ட புவியியற் பகுதியிலுள்ள பிள்ளைகளை ஒரு பாடசாலையில் சேர்த்துக் கொள்ள உதவும் முகமாக பாடசாலை வலயங்கள் அமைக்கப்பட வேண்டும்.

  • பட்டதாரி ஆசிரியர் பயிற்சி உருவாக்கம்:

பயிற்சி பெறாத பட்டதாரிகள் பெருமளவு இருப்பதால் வித்தியோதய, வித்தியாலங்காரப் பல்கலைக் கழகங்களும் இவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். அத்தோடு பயிற்சிக்காக பகுதி நேரக் கற்கை நெறிகளும் தொடங்கப்பட வேண்டும்.

  • கல்வி மாணிக் கற்கை நெறி

ஆசிரியத் தொழிலை விரும்புவோருக்கு உதவும் முகமாக நூற் கல்விக் கூறுகளும், உயர் தொழிற்சார் கல்விக் கூறுகளும் கொண்ட 04 வருடகாலக் கல்விமாணி (B.Ed) பட்டக் கல்விநெறி தொடங்கப்பட வேண்டும்.


இலங்கை கல்வி முறைமையில் பாகுபாடுகளை குறைத்து சம வாய்புக்களை உறுதிப்படுத்தக் கூடிய 3 புதிய உத்திகளை முன்மொழிக.

1. பொதுவான தேசியக் கலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தி அமுலாக்குதல்.

II. தேவையான வகையில் சமமான முன்னுரிமைப்படுத்தப்பட்டு வளப்பகிர்வுகளை வழங்குதல்.

III. கல்வி முகாமைத்துவம், நிருவாகம் என்பன தொடர் கண்கானிப்பு, மேற்பார்வை கொண்டதாகவும், அர்ப்பணிப்புடன் இயங்குதல்.


எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்

Post a Comment

0 Comments