சோழர் காலத்துக் கோயிலும் சமூகமும்
![]() |
Asiriyam |
பாகப் பிறந்த முருகன்
முறைகளும் வேலன் வெறியாடல் அடியாகப் பிறந்த வழிபாடும் முக்கியம் பெற்றிருந்தன. குறிஞ்சி நிலமக்களின் வாழ்வியல் செயற்பாடுகளின் அடியாகத் தோன்றிய இத்தெய்வம் அவர்களின் களவு வாழ்வோடு இணைத்துக் கருதப்பட்டது.
"ஏராளமாகக் கிடைத்த வள்ளிக்கிழங்கை உணவு சேகரிப்போர் செழிப்பிற்கு அறிகுறியாக, குலக்குறியாகக் கொண்டிருக்கலாம். காலப் போக்கில் வள்ளிக் கிழங்கு வள்ளித் தெய்வமாக மாற்றமடைந்தது."
எனக் கா. சுப்பிரமணியன் குறிப்பிடுவதுபோல் உருவான வள்ளி என்னும் தெய்வக் குறமகள் முருகனின் மனைவியாக ஆக்கப்படுகிறாள். இம் முருகனோடு அணங்கும் சூரும் இணைத்துக் கூறப்பட்டன. பழங்காலக் குறவர், எயினர், தாளவர் போன்ற குறிஞ்சி நிலமக்கள் புன்செய் அல்லது நன்செய் பயிர்த் தொழிலை மேற்கொண்ட ஆரம்ப காலத்தில் தோன்றிய கடவுட் கருத்து முருகன் ஆகும
திருமுருகாற்றுப்படையும், பரிபாடலும் முருகன் பற்றிப் பலவாறு பேசுகின்றன. முருகனின் பிறப்பு, தாய் தந்தையர், அவனுறையும் இடங்கள், சூரனைக் கொன்றமை முதலான பல தொன்மங்கள் அவனுடன் இணைத்து விவரிக்கப்படுகின்றன. இவை பிற்காலங்களில் ஏற்பட்ட வளர்ச்சியாகும். ஆரிய மரபுகள் தமிழகத்தில் புகுந்தபோது இந்த மாற்றங்கள் படிப்படியாக நிகழ்ந்த ன.
"குறிஞ்சி நிலமக்களின் வாழ்வோடு இணைந்த களவு தெய்வமான முருகனின் இயல்பில் சில மாற்றங்க ஏற்படுகின்றன. குறிஞ்சி நில எல்லையைக் கடந்து நிலங்களிலும் இவ்வழிபாடு பரவுகின்றது. அங்கு சங்க அரசுருவாக்கமும் காரணமாகின்றது. இவ்வரசுருவாக்கச் குசி முருகள் வெற்றித் தெய்வமாகக் கருதப்பட்டான். இக்காலத ஏற்பட்ட ஆரிய வழிபாட்டு நெறிகளின் தாக்கத்தினால் முன் பல்வேறு தொன்மங்களுடன் இணைத்துக் கூறப்பட்டான்
தமிழர் சமூகத்தில் கோயில் உருவாக்கம்
எனப் பெ. மாதையன்" குறிப்பிடுவது இவ்விடத்தில் பொருத்த மானதாகும். பல தொன்மங்களை தன்னகத்தே ஏற்றுக் கொண்ட முருகவழிபாடானது. இடையே சிலகாலம் பின் தள்ளப்பட்டிருந்த போதிலும் இன்றுவரை தமிழகத்தின் உயிர் நாடியான வழிபாட்டு முறைமையாகக் காணப்படுகின்றது.
கல்வியியல் கட்டுரைகள் - Click Here
கொற்றவை வழிபாடும் பழந்தமிழகத்தில் முக்கியம் பெற்றுள்ளது. இவள் திராவிடரின் வெற்றித் தெய்வம். இவளுடைய வழிபாட்டைச் சித்திரிக்கும் நூற் பகுதியில் இருந்து இவள் வழிபாடு வெறியாட்டுடன் நடைபெற்றது என அறிய முடிகிறது. நெடுநல்வாடையில், போருக்குத் தலைவனைச் செலவுவிடுத்த தலைவியின் தோழிமார் தலைவன் வெற்றியுடன் மீள வேண்டுமென்று வெற்றித் தெய்வத்தை வணங்குகின்றார்கள். வணக்கத்தைப் பெறும் அவ்வெற்றித் தெய்வம் கொற்றவை யாகும். கொற்றவைக்குப் பலி கொடுத்து வாழ்த்துதலைக் கொற்றவை நிலை என்கிறது தொல்காப்பியம்,ழூ 1
கொற்றவை முருகனின் தாயாகப் பழந்தமிழ் இலக்கியங்களில் சித்திரிக்கப்பட்டுள்ளாள். "பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத் துணங்கையந் செல்வி'' என்று பெரும்பாணாற்றுப்படையும், 'வெற்றிவேல் போர் கொற்றவை சிறுவ' என்று திருமுருகாற்றுப்படையும் குறிப்பிடுகின்றன. எனினும் ஆரியரது தந்தை வழி நாகரிகம் தமிழகத்திலே கலந்து கலாசாரப் பிணைப்பு ஏற்பட்ட காலத்திலே முருகன் சிவனின் மகனாகவும் கொற்றவை உமையாகவும் உருமாற்றம் பெற்றுவிடுகின்றனர். உறவும் முறையுமுள்ள தெய்வக் குடும்ப மரபு ஒன்று தமிழகத்திலும் உருவாகிவிடுகின்றது. கொற்றவை சிவனின்றும் பிரிக்க முடியாத சக்தியாக மாற்றம் பெற்றுவிடுகின்றாள்.
சிந்துவெளி நாகரிகப் பெண் தெய்வம் பிற்காலத்தில் இந்து சமயத்தில் சக்தியாக மிளிர்ந்தது என்று நாம் கொள்ள முடியுமானால் பழந்தமிழரின் கொற்றவை சைவ சித்தாந்தத்திலும் சிவனுடைய சக்தியாக உருமாறியது என்று கொள்ளலாம் எனக் கைலாசபதி குறிப்பிடுகின்றார். எனினும் கிராம நிலையில் கொற்றவை என்ற தாய்த்தெய்வம் பல்வே பெயர்களில் தமிழகம் முழுவதும் வழிபடப்பட்டு வருகின்றது
சங்க இலக்கியங்களில் சிவன் எனும் பெயர் காணப்படவில்லை. ஆனால் இக்கடவுளைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள் காணப்படுகின்றன. சிவன் ஒரு நிலத்துக்குரிய தெய்வமாகவும் கருதப்படவில்லை. பத்துப்பாட்டில் சில இடங்களிலும் எட்டுத்தொகையில் பரவலாகவும் சிவன் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. சிவன் முப்புரம் எரித்தமை, இராவணனுக்கு அகந்தை கெடுத்து அருளியமை, நஞ்சுண்டமை, கங்கையைத் தலையிற் தாங்கியமை முக்கண்ணுடைமை, ஆல நீழலில் அமர்ந்தது, பிறை சூடியமை முதலான தொன்மங்களுடன் இணைத்தே பேசப்பட்டான். தொகை நூல்களில் சிவனது வழிபாட்டு மரபு அதிகம் இல்லாது பாட்டு நூல்களிலே மலிந்து காணப்படுவது சிவ வழிபாட்டின் பிந்திய பரவல், செல்வாக்கு ஆகியவற்றையே காட்டுகின்றது.
கல்வி உளவியல் - Click Here
தென்னாட்டிற்குரிய முல்லை நிலத் தெய்வமான மாயோனே விஷ்ணுவாகவும் கண்ணனாகவும் காட்சியளிக்கின்றான். மிகவும் பழைய நூல்களில் விஷ்ணு என்ற பெயர் வழங்கப் பெறவில்லை. மால், மாயோன் என்ற பெயர்களே வழக்கிலிருந்தன. மால் என்பதற்குப் பெரியோன் என்றும், மாயவன் என்பதற்குக் கரியவன் என்றும் கருத்துக் கூறலாம். முல்லைப்பாட்டின் மூன்றாம் அடியில் 'மால்' என்ற சொல்லும், மதுரைக்காஞ்சியில் 591 ஆம் அடியில் மாயோன் எனும் சொல்லும் வருகின்றன.
மற்ற நூல்களில் பல இடங்களில் இப்பெயர் காணப்படவில்லை எனினும் கூறப்படும் பண்புகளைக் கொண்டு அவ்விடங்களிற குறிக்கப்படும் தெய்வம் திருமால் என அறிந்து கொள்ளலாம். இந்த வழிபாடு விஷ்ணு தொடர்பான வேதக் கூறுகள் பலதேவ வழிபாடு முதலிய ஆரியர் அல்லாதாரின் வழிபாடு நெறிகள், சங்க கால மாயோன் வழிபாட்டு நெறிக ஆகியவற்றின் கூட்டுக்கலப்பான வழிபாட்டு முறைமையை கொண்டிருப்பதைப் பின் பழந்தமிழ் நூல்கள் குறிப்பாக பரிபாடல் தெளிவாகக் காட்டுகின்றது. எனவே பிற்காலங்களிலேயே திருமால் வழிபாடும் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றது எனலாம்.
"குலங்களாகவும் குடிகளாகவும் (வுசiடிநள யனெ ஊடயளெ) மக்கள் வாழ்ந்த புராதனக் கூட்டுமுறை வாழ்க்கையிலே கொற்றவை, வேலன், வருணன் முதலிய தெய்வங்களே சிறப்புடையன வாயிருந்தன. பூசாரிகள் குருமார் எவரும் இன்றி மக்கள் பலியிடுதல், வெறியாடல் முதலிய முறைகளினால் தாமே கூட்டாக வழிபட்ட நிலையிலே சமுதாயக் கடவுளர் தேவையாயிருந்தனர். ஓரளவிற்கு இந்திரன் பிரஜாபதி முதலிய தெய்வங்கள் வேதகால ஆரியருக்கு உகந்தவராயிருந்ததைப்போல சமூகத்திலே தனியுடைமையும், ஆட்சி நிலைமையும் தோன்றிய போது தனிப்பட்ட இட்ட தெய்வங்களும் வகுப்புக்களுக்கான தனிப்பட்ட தெய்வங்களும் உருப்பெற்றன. அந்த நிலையிலேயே சிவன், விட்டுணு முதலிய தெய்வங்கள் சிறப்புறத் தொடங்கின."
எனக் கைலாசபதி" இதுபற்றிக் குறிப்பிடுகின்றார். பிற்காலங்களில் கோயில் வழிபாடும், பக்தி இயக்கச் செயற்பாடுகளும் இவ்விரு கடவுளரையும் மிகவும் முதன்மைப் பெற்ற கடவுளராக உருவாக்கின. எனினும் இவ்விரு கடவுள் வழிபாடும் தமக்கு முன்பு நிலவிய பல வழிபாட்டம்சங்களையும் கடவுளரையும் தம்முடன் இணைத்துக் கொண்டே வளர்ச்சி பெற்றன. இந்திரன் வழிபாடு பிற்காலத்தில் ஓரளவு நிலைத்து நிற்க வருணன் வழிபாடு செல்வாக்கிழந்து போய்விட்டது."
'கோயில்' - சொற்பொருள் வளர்ச்சி
ஆரம்பகாலத் தமிழ் இலக்கியங்கள் கோயில் என்பதைக் கோயில், நகரம், கோட்டம், நியமம், பொதியில், பதி முதலான சொற்களால் குறித்துள்ளன. இவற்றுள் பொதியில், பதி, நகரம் முதலிய சொற்களே ஆரம்பகாலக் கோயில்களைக் குறித்துள்ளன.
சிவனது தெய்வ வரலாற்றியல்
சிவனது பல்வேறு வடிவங்கள் பற்றிய விரிவான விளக்கத்திற்குச் சிவனது வரலாற்றியற் கருத்துக்கள் (ஆலவாழடழபல) இன்றியமையாதது வேண்டற்பாலன. இத் தெய்விக வரலாற்றினை நாம் அறியாமல் படிமங்கள் சித்திரிக்கும் அம்சங்களை உணர்வது எளிதல்ல. எனவே அடுத்து வரும் இயலில் இடம்பெறவிருக்கும் சிவனது பல்வேறு தோற்றங்கள் பற்றிய ஆய்வுக்கு முன்னோடியாக இவ்வியலில் சிவனது தெய்விக வரலாற்றினை ஆராய்வது பொருத்தமானதாகும். இத்தகைய ஆய்வுக்கு சிந்துவெளி காலத்துச் சமயச் சின்னங்கள் தொடர்பாக அறிஞரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுடன் தொன்மைமிக்க இலக்கியங்களான வேதம், பிராமணம், உபநிடதம் மற்றும் இதிகாச புராணங்கள் போன்றவையும் ஆதாரங்களாக எமக்குத் துணை புரிவன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு முழுமுதற் கடவுள் என்ற நிலையில் சிவனைப் பற்றிய கருத்த வளர்ச்சியினை நாம் அறிய முடிகின்றது.
இந்து சமயத்தின் மும்மூர்த்திக் கோட்பாட்டில் இடம்பெறும் பிரமா, வி~;ணு, உருத்திரன் ஆகிய கடவுளர் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களுக்கும் உரியவராவர். கடவுளர் வரிசையில் முக்கியத்துவம் பெறும் சிவன் சம்ஹாரம் எனக் குறிப்பிடப்படும் அழித்தலுக்கு உரியவனாக விளங்கியவிடத்தும் சைவசமயிகள் பிராமனுக்கும் விஷ்ணுவுக்கும் உரியதான ஏனைய இரு தொழில்களையும் சிவனுக்குரியவையெனக் கொள்வதும் கவனித்தற்குரியது. இவ்வகையிற் சிவன் பிரபஞ்ச கடமைகளுக்குரிய முதல்வன் ஆகின்றான். இம் மூன்று தொழில்களாகிய படைத்தல் (சிரு~;டி), காத்தல் (ஸ்திதி), அழித்தல் (சம்ஹாரம்) ஆகியவற்றுடன் மறைத்தல் (திரோபாவம்), அருளல் (அனுக்கிரகம்) ஆகிய இரு தொழில்களையும் சேர்த்து சிவன் ஐந்து தொழில்களை இயற்றுபவனாகப் போற்றப்படுவன். சமய நூல்கள் இவற்றை பஞ்சகிருத்தியங்கள் எனக் சுட்டுவன. சைவசித்தாந்த நூல்களாகிய மெய்கண்ட சாஸ்திரங்களில் இவை 'திருவிளையாடல் எனக் குறிக்கப்படுகின்றன. - சிவனது பல்வேறு வடிவங்களும் இவ் ஐந்து செயல்களில் ஒன்றுடனோ அன்றி பலவற்றுடனோ தொடர்புடையனவாக அமைவன. சிவனுக்குரிய வடிவங்கள் அறுபத்து நான்கு. இவை சிவனது மூர்த்தி பேதங்கள், சிம்மர். இவை தொடர்பாகக் கூறும் கருத்து இங்கு கவனித்தற்குரியது. சிவனத பல்வேறு தொழிற்பாடுகள் காரணமாகப் பல்வேறு அம்சங்களில் அக்கடவுள் விளங்குவதால் வழிபடுவோர் நூற்றுக்கணக்கான பெயர்களை அத்தெய்வத்திற்கு வழங்கி வந்துள்ளனர். சிவனுக்குரிய இருபத்தைந்து அம்சங்கள் 'லீலா மூர்த்தங்கள்' எனக் குறிப்பிடப்படுகின்றன. பிறிதோர் மரபின்படி பதினாறு அம்சங்கள் எனக் காணப்படுகின்றன. எனினும் இக்கணக்கற்ற அம்சங்கள் ஈற்றில் ஐந்து தொழில்களில் அடங்கிவிடுவதும் குறிப்பிடத்தக்கது. சிவனது மூர்த்தங்கள் அறுபத்து நான்காகக் காணப்படுமிடத்தும் அவற்றின் இருபத்தைந்து அம்சங்களோ அன்றி பதினாறு அம்சங்களோ தான் முக்கியத்துவம் பெற்று வந்துள்ளைதை இக் கூற்றிலிருந்து நாம் அறியக் கூடியதாக உள்ளது. ஆரம்பகால மத்திய காலத்தைச் சேர்ந்த வைதிக சமய நூல்களில் சிவன் பல்வேறு கலைகளின் தோற்றத்திற்குரியவனாகவும் அவற்றை நுட்பமாக வெளிப்படுத்துபவனாகவும் குறிப்பிடப் படுகின்றான். இவ்வகையில் குறிப்பாக ஆழ்ந்த யோகநிலை, சாஸ்திரங்களை உணர்த்தும் வியாக்கியானநிலை, இசை, நடனம் ஆகியவற்றிற் சிறந்து விளங்கும் நிலை போன்றவையும் சிவனது வடிவங்களுக்குரிய அடிப்படை அம்சங்களாக அமைவன.
எமது கல்வி வீடியோக்கள் பார்த்து பயன்பெற - Click Here
சிவனது வடிவங்களுக்குரிய தெய்வ வரலாற்றியற் கருத்துக்களைப் பற்றி ஆராயும் முன்பு 'தெய்வ வரலாறு' (ஆலவாழடழபல) பற்றிய சில கருத்துக்களையும் தெளிவாக்கிக் கொள்வது இங்கு பொருத்தமாகும். தெய்வ வரலாறு பற்றிய எல்லா அம்சங்களையும் நாம் இங்கு ஆராய வேண்டிய அவசியமில்லை ஆயினும் ஒரு சிலவற்றை ஆராயலாம்.
ஒரு சமய நெறியின் முழுமுதற் கடவுள் பற்றிய சிந்தனை வளர்ச்சி திடீரென ஏற்பட்டதொன்றல்ல என்பதை நாம் முதலிற் கவனிக்க வேண்டும். கடவுளர் தொடர்பான தெய்விக சிந்தனை இந்தியாவைப் பொறுத்தமட்டில் மிகவும் தொன்மையானது. இத்தகைய சிந்தனைகள் இலக்கியங்களிற் பெருமளவில் இடம்பெறுகின்றன. இத் தெய்விகச் சிந்தனை வரலாறு தொடர்ச்சியாகவே இருந்து வந்துள்ளது. எனவே அவற்றை நாம் எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது. சுருங்கக் கூறுவதாயின் ஒவ்வொரு சமய தத்துவ சிந்தனைக்கும் பல நூற்றாண்டுகால வரலாறு இருந்து வந்துள்ளது.
இந்தியாவில் சமயம்' என்ற சொல்லுக்குப் பல நிலைகளில் பொருள் கொள்ளப்படுகின்றது. மனிதன் தனக்கு அப்பாற்பட்ட சக்தி அல்லது தெய்விகம் பற்றி கருத்துக்களைப் படிமுறையாக உருவாக்கிக் கொள்வதும் அத்தகைய பொருள்களில் ஒன்று. இதற்கு அடுத்த நிலையில் தனது நன்மையின் பொருட்டு அத்தகைய ஆற்றல் மிக்க சக்தியில் தங்கியிருக்கும் தன்மையைப் பல்வேறு வழிபாட்டு முறைகளின் மூலம் வெளிப்படுத்தி நிற்றலும் சமயத்தின் பாற்படும். சமயம் தொடர்பாக மேற்கூறப்பட்ட இரு விளக்கங்களில் முன்னர் குறிக்கப்பட்ட பொருளமைதியில் தெய்விக வரலாற்று அம்சங்கள் ஓரளவு உள்ளடங்கியுள்ளன. நீண்டகாலமாக வழிபடு தெய்வங்கள் பற்றி வழங்கப்பட்டு வரும் பழைய வரலாறுகள், கதைகள், சிந்தனைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதே தெய்விக வரலாறு. ஒரு சமய நெறியின் முழுமுதற் கடவுளுக்குரியவையென கூறப்படும் வீரச் செயல்களை அறிவதற்கும் அவ்வீரச் செயல்கள் இடம்பெறுவதற்குரிய காரணம். சூழ்நிலை அவற்றின் பெறுபேறு ஆகியவற்றை விரிவாக அறியவும் தெய்விக வரலாறு துணைபரியும். தொன்மையான காலம் முதல் ஒரு சமயத்தின் மரபு ரீதியிலமைந்த பாரம்பரியத் தொடர்பை ஏற்படுத்தித் தருவதில் அவ்வரலாறு மிகுந்த அளவில் உதவியுள்ளது. எல்லா இயற்கைச் சக்திகளையும் முழுமையாக உயிரூட்டப்பட்ட சக்திகளாகக் காணும் மனிதனின் ஆரம்பகால மனப்போக்கு இத்தகைய வரலாற்றின் அடித்தளமாக விளங்கிவந்துள்ளது.
இந்திய சமயங்களில் சிறப்பாக இந்து சமயத்தின் தெய்விகச் சிந்தனைகளைப் பேணிவந்துள்ள இலக்கிய ஆதாரங்களாக முதனூல்களாகிய வேதம், ஆகமம் போன்றவற்றையும் வழிநூல்களாகிய இதிகாசம், புராணம் மற்றும் தோத்திர நூல்களையும் குறிப்பிடலாம். குறித்த இலக்கியங்களின் வடிவத்தைப் பொறுத்தமட்டில் வேறுபாடு காணப்படுமிடத்தும் அவற்றின் ஆதார சுருதியாக விளங்குவது தெய்வங்களைப் பற்றிய சிந்தனைகளே. இவ்விலக்கியங்களின் காலம், உள்ளடக்கம் ஆகியவற்றை ஆராயுமிடத்து தெய்விக வரலாற்றின் ஆரம்ப சிந்தனைகளை நாம் ஓரளவு உணரமுடியும். இவற்றுடன் பிற்பட்ட காலத்தில் கிடைக்கப் பெற்றனவாயினும், தொன்மைக்கால நாகரிகத்தில் இடம்பெற்ற சமய சிந்தனைகளை ஓரளவு பிரதிபிம்பித்து நிற்பதாகக் கொள்ளப்படும் சிந்துவெளி தொல் பொருட் சின்னங்களும் இங்கு குறிப்பிடத்தக்கன. தொன்மைக்காலத் தெய்விகக் கருத்துக்களை உறுதி செய்துகொள்ள இத்தொல்பொருட் சான்றுகள் உறுதுணை புரிவன.
சிவனது வடிவங்கள் தொடர்பான தெய்விக வரலாற்றின் ஆய்வுக்கு சிந்து வெளி நாகரிகத்தின் சமயச் சான்றாதாரங்களையும் நாம் கருத்திற் கொள்வது அவசியமாகும். இந்நாகரிக காலத்தில் பரவலாகக் காணப்பட்ட சமய நம்பிக்கைக்குரிய சின்னங்கள் பற்றி ஜோன் மார்ஷல் முன்னோடியாகத் தெரிவித்த பல கருத்துக்கள் இவ் ஆய்வின் இரண்டாம் இயலில் எடுத்துக் கூறப்பட்டன. எனினும் இங்கும் அக்கருத்துக்கள் தெய்விக வரலாற்று நோக்கில் நினைவு கூரற்பாலன. இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலத்திலிருந்தே சிவ, லிங்க வழிபாடுகள் சிந்துவெளி நாகரிகத்தில் இடம்பெற்றிருந்தன என்பதை அங்கு கண்டெடுக்கப்பட்ட சிவனது சின்னங்கள் உறுதிப்படுத்தும் என்பது அறிஞர் பலரின் கொள்கை.' இவை பற்றிய பல்வேறு கருத்து வேறுபாடுகள் அவர்கள் மத்தியில் நிலவுவதும் கவனித்தற்குரியது. சிவ வழிபாடு தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களை அங்குள்ள எழுத்தாதாரங்களை முறையாக வாசித்தறிந்து அவற்றின் அடிப்படையில் உறுதிசெய்து கொள்ளப்படும் வரை ஊகங்களாகவே நாம் கொள்ள வேண்டியுள்ளது. எனினும் சிவ வடிவங்கள் தொடர்பான தெய்வ வரலாற்றியற் சிந்தனைகளை வரலாற்றுக்கு முற்பட்ட சிந்து வெளிக் காலம் வரை கொண்டு செல்வதற்க இச்சமய சின்னங்கள் ஓரளவு வழிகோலியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இங்கு காணப்பட்ட சின்னங்களையும் முத்திரைகளையும் நுட்பமாக ஆராய்ந்த ஜோன் மார்ஷல் பல நெறிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டுச் சமயநெறி காணப்பட்டதெனக் குறிப்பிடுவர். பல சமய நெறிகள் சமகாலத்தில் நிலவியபோதும் அவற்றிடையே எவ்வித முரண்பாடுகளும் காணப்படவில்லை எனக் கருத்துத் தெரிவித்து உள்ளார். இவ்வழிபாட்டு நெறியில் சிவ வழிபாடும் தாய்வழிபாடும் குறிப்பிடத்தக்கன. இங்கு காணப்பட்ட பல சின்னங்களிலிருந்து இவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். சைவம், சாக்தம் என இரு வேறுபட்ட வழிபாட்டு நெறிகளாகத் தனித்தனியே வளர்ச்சியடைந்த போதும் தாய் வழிபாடு சிவ வழிபாட்டின் உள்ளுறுப்பாகவே இணைந்து விடுவதையும் அவதானிக்கலாம். தாய் வழிபாட்டு நெறியின் முழுமுதலாகிய சக்தி சிவனின் துணைவியாக இணைந்து விளங்கும் பண்பினை ஆகமங்களும். புராணங்களும் சித்திரிக்கும் விக்கிரகவியலில் நாம் காணலாம்.
சிவனது வடிவமைப்போடு தொடர்புடைய தெய்வ வரலாற்றியற் சிந்தனையைப் பொறுத்தமட்டில் வெளியிற் காணப்பட்ட இவ்விரு வழிபாட்டு மரபுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. சிந்து வெளி கால எழுத்து வடிவங்கள் வாசித்தறியப்படாத நிலையில் சிவனுக்குரிய பல்வேறு வடிவங்களாகிய பசுபதி, திரிமூர்த்தி, யோகி போன்ற தெய்விக அம்சங்களை இனங்கண்டு கொள்வதற்கு வேதாகம புராண தெய்விக மரபில் எழுந்த விளக்கங்களே பெருமளவில் ஆய்வாளருக்கு உதவியிருக்க வேண்டும்.
எமது கல்வி சார் காணொளிகளை காண கீழே உள்ள லிங்கை click செய்யவும்
வேத இலக்கியங்களில் ஒன்றாகிய யசுர் வேதத்தில் வரும் ஒரு குறிப்பை இங்கு எடுத்துக் காட்டலாம். அதில் இடம்பெறும் சதருத்தியம் உருத்திரனோடு தொடர்புடைய பெயர்கழளயும் வழிபாட்டையும் எடுத்துக் கூறும் பகுதியாகும். சிவனது தெய்வ வரலாற்றியல் கருத்துக்களுக்கு உறுதுணை புரியும் இப்பகுதி பின்னர் விரிவாக ஆராயப்படுமெனினும் அதில் வரும் ஒரு குறிப்பினை இச்சந்தர்ப்பத்தில் எடுத்துக்காட்டுவது பக்கமாகும். 'உயிரினங்களின் நாயகராகிய உமக்கு வணக்கம்' என்ற கொடர் இங்கு கவனிக்கத்தக்கது. உருத்திரன் இங்கு எனர் என்ற பரினால் குறிப்பிடப்படுகின்றான். சிந்து வெளியில் கூர்மானத்தில் மூன்று கலைகளுள்ள ஓர் உருவம் மிருகங்கள் சூழவுள்ளதாக ஒரு சின்னத்தில் காணப்படுவது சிவபசுபதி அம்சத்துடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. பசுபதி என்ற பெயர் சிவனுக்குரியதாகவம் உருத்திரனுக்குரியதாகவும் வழங்கப்படுவது கவனிக்கத்தக்கது. எனவே உருத்திர சிவனுக்குரிய பொதுப் பெயராகவே இப்பெயர் விளங்குவதை இச்சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன.
சிவ - உருத்திரன் என்ற இப்பெயர் சிவாகமங்களிலும் இடம்பெறுகின்றது. சிவாகமங்கள் சிவபேதம் எனவும் உருத்திரபேதம் எனவும் இரு வகைப்படுத்தப்படுமிடத்து இப்பெயர் வழங்கப்படுகின்றது. சிவபேதத்தில் பத்து ஆகமங்களும் உருத்திர பேதத்தில் பதினெண் ஆகமங்களும் இடம்பெறுவன. ஏனையோருக்கு உணர்த்தப்பட்டவகையில் இவ்விரு பேதங்கள் கூறப்படினும் அவை யாவும் சிவாகமங்களே. எனவே சிவ - உருத்திர என்ற பெயர்கள் சிவனுக்குரிய பெயர்களாகவே ஆகமங்களிற் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சிந்து வெளியிற் கிடைத்த இச்சின்னத்தில் இதிகாச புராண காலத்தில் போற்றப்படும் சிவனுக்குரிய பல்வேறு பண்புகள் காணப்படுவதை நாம் அவதானிக்கலாம். இவ்வொப்பீட்டு ஆய்வினால் இதிகாச புராணங்களில் சிவனது தெய்வ வரலாற்றியற் கருத்துக்கள் பன்னெடுங் காலத்திலிருந்து இடம்பெற்று வந்தள்ளதை நாம் உறுதிப்படுத்திக்கொள்ள முடிகின்றது. இச் சின்னத்தில் உள்ள உருவம் இருக்கும் நிலை ஒருவரது கவனத்தை ஈர்க்கவல்லது. இவ்வுருவம் கால்களை மடித்து யோக நிலையிற் இருக்கின்றது. மேலும் கால்கள், குதிகால், கைகள் ஆகியவை ததில் இருப்பதைத் தெளிவுறுத்துகின்றன. யோக அம்சத்தை மிக எளிமையாக சிவனோடு தொடர்புபடுத்தலாம். புராணங்களில் இப்பண்பு சிவனுக்குரியதொன்றாக அடிக்கடி எடுத்துக் காட்டப்படுகின்றது. சிவனது தட்~ணாமூர்த்தி வடிவம் பிரதிபிம்பிப்பது யோக நிலையையே. இதன் காரணமாய் யோக தட்சணாமூர்த்தி என்ற பெயரும் வழங்கப்படுகின்றது. இம்மூர்த்தம் சைவத்தில் மிக முக்கியத்துவம் உடையதொன்று.
இங்கு காணப்படும் உருவத்தில் உள்ள மற்றொரு அம்சமும் எமது கவனத்தை ஈர்க்கவல்லது. மூன்று முகங்கள் இதில் தெளிவாகக் காணப்படுகின்றன. இதற்குப் பல்வேறு விளக்கங்கள் தரப்படுகின்றன. இந்நிலை திரிமூர்த்தி அம்சத்தோடு தொடர்பு படுத்தப்படுகின்றது. பிரபஞ்சத்தின் மூவித தொழிற்பாடுகளை எடுத்துக்காட்ட சிந்துவெளி நாகரிகச் சிற்பி இத்தகைய மூன்று முகங்களைக் கொண்ட சிவ அம்சமாக உருவாக்கியிருக்கலாம் எனவும் அறிஞர் கருதுவர். கடவுள் யாவற்றையும் கண்டறிய வல்லவர் என்ற கருத்தை வலியுறுத்தவும் இம் மூன்று முகங்கள் தரப்பட்டிருக்கலாமெனவும் சிலர் கருதுவர். பிற்காலத்தைய திரிமூர்த்தி அம்சத்தின் முன்னோடியாக இவ்வுருவம் விளங்கி இருக்கலாமென்பதே பொதுவான கருத்தாகவுள்ளது. சிவனது தெய்வ மரபில் ஐந்து முகங்கள் அவனுக்குரியனவாகக் குறிப்பிடப்படுகின்றது. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கடமைகள் கூறப்பட்டுள்ளன. சில இடங்களில் நான்கு முகங்களும் குறிக்கப்படுகின்றன. இங்கு ஆய்வுக்குரிய உருவத்தில் நான்காவது முகம் பின் புறத்தில் அமைந்திருக்கலாமெனக் கொண்டால் சிவனோடு தொடர்புபடுவதாகக் கொள்ளலாம். பின்னர் இடம்பெறும் சதாசிவ வடிவமைப்பில் இதனை விரிவாக ஆராயலாம்.
இவ்வுருவத்தின் தலையிற் காணப்படும் கொம்புகள் தெய்விகத் தன்மையை எடுத்துக்காட்டுவதாக இருக்கலாம். தென்னிந்திய சிவாலயங்களிற் காணப்படும் சிவ வடிவங்களில் பிரபலமாக விளங்கும் சிவனது தலையிலுள்ள ஜடாமகுட அலங்காரத்திற்கு இந்நிலை வழிவகுத்திருக்கலாமென கருதப் படுகின்றது. மார்ஷல் இதனை சிவனது திரிசூலத்தின் முன்னோடி அம்சமெனக் கருதுவர். "" சிந்து வெளிக் காலத்து பசுபதிக்குரிய இக் கொம்புகள் இதிகாச புராண காலத்து பிறைச் சந்திரனோடு தொடர்புபடுத்தப்படுவதும் கவனித்தற்குரியது.
சிந்து வெளியிற் காணப்பட்ட இலிங்கக்கற்கள் இலிங்க வழிபாட்டைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. சிந்துவெளி இலிங்க வழிபாடு பற்றி அறிஞரிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகளும் நிலவுகின்றன. சிந்துவெளி இலிங்க கற்கள், பசுபதி வடிவம் பிற்பட்ட காலக்தில் சிவனோடு தொடர்புடைய வடிவங்களுக்கு முன்னோடியாக விளங்கியிருக்கலாமென்பதே பெரும்பாலான அறிஞரின் கருத்தாகும்.
மேற்குறித்த சிந்துவெளி நாகரிகச் சின்னங்களின் ஆய்விலிருந்து நாம் பெறும் முடிவுகளைத் தொகுக்கும்பொழுது சமயச் சின்னங்களெனக் - கருதப்படுபனவற்றிற்; காணப்பட்ட உருவம் சிவனது வடிவமைப்பின் முன்னோடியாக பல அம்சங்களைக் கொண்டுள்ளதெனலாம். தாய் வழிபாடு. தி வழிபாடு ஆகியவை காணப்பட்டுள்ளவிடத்தும் அவை இரண்டும் வக்க சிவசக்தி ஐக்கிய நிலைக்கும் வழிவகுத்திருக்கலாம். மொகஞ்சதாரோ சமயம் பற்றி உறுதியான முடிவுக்கு வாம் அங்கு நன்கு உருவாகிய சமயக் கருத்துக்கள் நிலவியமைக்கு இச்சின்னங்கள் தகுந்த சான்றுகளாகும். இந்நிலை எதிர்கால தெய்விக வரலாற்றியலுக்கு அடித்தளமாக அமையும் அளவுக்குச் சிறப்பாகக் காணப்பட்டிருக்க வேண்டுமென்ற கருத்தும் கவனித்தற்குரியது. சிந்துவெளி எழுத்துக்கள் வாசிக்கப்பட்டு இக்கருத்துக்கள் உறுதிப்படுத்தப்படும் வரை நிச்சயப்படுத்த முடியாத ஊகங்கள் என்றே இவற்றைக் கொள்ள வேண்டும்.
வேதகாலத்துச் சமய சிந்தனைகளும் சிவனது தெய்விக வரலாற்றுக் கருத்துக்களை உருவாக்குவதற்குத் துணைபுரியக் கூடியன. வேத இலக்கியம் தொகுப்பாக எமக்குக் கிடைப்பதால் அவற்றிலிருந்து சில உறுதியான கருத்துக்களை நாம் அறியலாம். இந்திய சமய வரலாற்றினைப் பற்றி அறியும் எவருக்கும் வேதங்கள் இன்றியமையாதவையே.
இருக்குவேதம் சித்திரிக்கும் சமயம் இயற்கை வழிபாட்டோடு தொடர்புடையது. உலகில் இயல்பாகக் காணப்படும் நீர், நிலம், விண், தீ, காற்று, வெய்யோன். விடியற்பொழுது ஆகிய இயற்கைக் கூறுகளை வேதகால மக்கள் வழிபாடு செய்து வந்தனர். இச்சமய மரபுக்குச் சான்றாக விளங்குபவை இருக்குவேதப் பாடல்களே. இயற்கைப் பொருள்கள் தம் இயல்பான நிலையுடன் தெய்வப் பண்புகளும் சிறிது சிறிதாக விரவப் பெற்று நாளடைவில் தெய்விக நிலை எய்திய வரலாற்றை இருக்குவேதம் தெளிவுபடுத்துவதாக கைலாசநாதக் குருக்கள் கூறுவர். இருக்குவேத காலத்தில் இயற்கைச் சக்திகளைத் தெய்விக நிலைப்படுத்தி வழிபாடு செய்த பின்பு சிவனது தெய்விக மரபுடன் தொடர்புபடுத்தக் கூடியதொன்று. சிவனது வக அம்சத்திலும் இத்தகைய இயற்கை அம்சங்கள் காணப்படுவன. இவ்அம்சங்களை உள்ளடக்கிய நிலையில் சிவனுக்கு அஷ~;டமூர்த்தி என்ற சிறப்பு பெயர் காணப்படுகின்றது. புராணங்கள் இப் பெயரினை வழங்கி வருவன சிவனுக்குரிய இந்த அம்சத்தில் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், யஜமானன் என்ற எட்டு அம்சங்கள் இடம்பெறுவன்
கைலாசநாதக் குருக்கள் இது தொடர்பாகக் கூறுமிடத்து,
பிரபஞ்சம் முழுவதும் இறைவன் நிறைந்து நிற்பன் ஆதலால் இப்பிரபஞ்சத்தின் கூறுகளான இவ்வெட்டுப் பொருள்களிலும் இறைவனை உணருகின்றோம். இவ்வெட்டு அம்சங்களையடைய பரமன் இது பற்றி அட்டமூர்த்தி எனச் சிறப்புப் பெறுவன் இவ்வம்சங்களில் இறைவன் எழுந்தருளலைக் காணல் அவனைக் காணலேயாகும் என்பர்.
இவ்வெட்டு அம்சங்களுடன் சிவன் கொண்டு விளங்கும் நிலையை மணிமேகலை குறிப்பிடுகின்றது. அந்நூலில் வரும் 'சமயக் கணக்கர் தந்திறங்கேட்ட காதை'யில் மணிமேகலை சைவவாதியை நோக்கி, 'நீ வழிபடும் நின் தெய்வம் எவ்வியல்பிற்கு' எனக் கேட்க சைவவாதி சிவனது இவ் வியல்பினைக் கூறுவன்." இவ்வெட்டினையும் தனக்கு உடம்பாய்த் தான் அவற்றிற்கு உயிராய் அமைந்து நிற் வன் என்ற கருத்து இங்கு தெளிவாகவுள்ளது.
வேதகாலத்துச் சமயத்தில் தெய்விகம் வாய்ந்த இயற்கைக் கூறுகள் சிவனோட தொடர்புற்று விளங்கும் நிலையினை ஆகமங்களின் துணை கொண்டும் நிறுவலாம். இவ்வியற்கை அம்சங்களை சிவனோடு தொடர்புபடுத்தும் கிரியையே ஆகமங் குறிக்கும் பிரதிஷ்டையாகும். இறைவனை முற்றிலும் புலனாகாத நிலையிலிருந்து விக்கிரகத்தில் வெளிப்பட வைப்பதற்காக விண், காற்று, நெருப்பு, நீர், மண் ஆகிய ஐந்தினையும் அவாவி நிகழ்த்தும் கிரியையே கும்பாபிஷேகக் கிரியை இயற்கைக் கூறுகளைப் படிப்படியாகப் பிம்பத்தில் ஒடுக்குவதே இக்கிரியையின் உட்பொருள். இந்நிலையை தைத்திரிய உபநிடதம் குறிப்பிடுகின்றது. 24
ஆகமம் கூறும் கும்பாபிஷேகக் கிரியையில் யாககுண்டத் தீ, நீர் ஆகிய அம்சங்களில் இறைவன் தோற்றுவிக்கப்பெற்று இறுதியில் மண அம்சம் கொண்ட திருவுருவத்தில் வந்து நிறைவெய்துகின்றது. சிவனது எட்டு அம்சங்களுக்காகத் தனித்தனியாகக் குண்டங்கள் யாகசாலைய அமைக்கப்படுவன. நீர் நிறைந்த கும்பத்தில் வெளிப்பட்டு நிற்கும் அவன் இயல்பு வாய்ந்த விக்கிரகத்தில் ஒடுக்கி, அதனில் நிலைபெறச்செய்து என்மக்கப்பட்டவனாய் விளங்கும் நிலை சிவன் இயற்கைக் கூறுகளோடு பண்டு விளங்கும் தொடர்பைக் காட்டுவதாகும். இறைவனைப் பிரதிஷ்டை செய்யும் பொருட்டுத் தேர்ந்தெடுக்கப்படும் படிமங்கள் மண்ணியல்பு வாய்ந்தவை. இவ் விக்கிரகங்கள் மண்ணோடு உறவு கொண்ட மலைகளில் பிளந்தெடுத்த கருங்கல்லில் சமைக்கப்படுவன. சில மண்ணில் அகர்ந்து எடுக்கப்படும் ஐவகை உலோகங்களில் வடிக்கப்படுவன. சில மண்ணில் வளரும் மரங்களிற் செதுக்கப்படுவன. இன்னுஞ் சில மண், சுண்ணாம்பு முதலியன கலந்த சுதையால் அமைவன. இவ்வாறு மண்ணில் அம்சத்தைக் கொண்டு அமையும் விக்கிரகத்தை நிறுவி, இறைவனைப் படிப்படியாக ஏனைய இயற்கை அம்சங்களினூடே விக்கிரகத்தில் எழுந்தருளுவிப்பது கும்பாபிஷேகக் கிரியையின் அடிப்படைத் தத்துவம். - இயற்கைச் சக்திகளைத் தெய்விக நிலையில் வைத்துப் பேணும் வைதிக சமய மரபை ஆகமங்களும் பிறிதோர் வகையில் பின்பற்றுவதை இக்கிரியை குறிக்கின்றது. இவ்வகையில் வழிபடப்படும் உயர் தெய்வம் சிவனேயாவன். எனவே வேதங் கூறும் தெய்விக அம்சங்களில் உள்ளுறைந்து விளங்கும் பரம்பொருள் தத்துவம் சிவனோடு தொடர்புடையது எனலாம்.
இருக்குவேதம் பல தெய்வங்களை விளித்துக் கூறும் பாடல்களில் பரம்பொருள் பற்றிய இயல்புகளும் காணப்படுவன. அத்தகைய இயல்புகளில் ஒளியுடன் பிரகாசிக்கும் தன்மை , தெய்விக ஆற்றல், உயர் அறிவாற்றல், வழிபடுவோனுக்கு நன்மை செய்தல் ஆகியவை சில. பிரபஞ்சக் கடமைகள் கூட இத் தெய்வங்களுக்கு உரியவையே. இருக்குவேதம் குறிப்பிடும் இத்தகைய இயல்புகள் பொதுவாக வழிபாட்டு நெறியொன்றில் முழுமுதலுக்குரிய இயல்புகளாகவும் அமைவன. சிவனைப் பொறுத்தவரை பிரபஞ்சக் கடமையாகிய ஐந்தொழில்கள் சிவனுக்குரியவையே. இருக்குவேதத்தில் இப்பிரபஞ்ச ஒழுங்குடன் தொடர்புறும் தெய்வங்களில் வருணன், ஹிரண்யகர்பன், புருஷன், இந்திரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்.
வைதிக சமயத்தில் உள்ள பிறிதோர் முக்கிய தெய்விகப் பண்பு ஒருமையிற் பன்மையும் பன்மையில் ஒருமையும் காணும் நிலையாகும்.வாந ஊரடவ ழக வாந ழுநெ in அயலெ) இப்பரம் பொருள் நிலையை வேதம் - எனச் சுட்டும். இருக்கு வேதத்தில் பத்தாம் மண்டலத்தில் வரும் மல 'அந்த ஒன்று தோற்றம் பெற்றது' எனக் கூறும். பல களாக 'அந்த ஒன்று தோற்றம் பெறுவதாகக் கூறப்படினும் அவை
சத்தியமாக ஒரு பொருளின் வேறு தோற்றங்களே என்ற கருத்தினையும் இருக்குவேதம் குறிப்பிடும். அந்த ஒன்றையே பலவாறாகக் கற்பிக்கின்றனர். எனக் கூறப்படும் கருத்தும் கவனித்தற்குரியது. உயர் பரம்பொருளைக் சுட்டும் இத்தகைய இருக்குவேதக் கருத்துக்கள் சிவனது தெய்வ வரலாற்றில் முக்கியத்துவம் பெறுவன. பல்வேறு வடிவங்களில் தோற்றம் பெறுமிடத்தும் அவற்றில் உள்ளுறைந்து விளங்குபவன் சிவனே. சிவனே யாவற்றிலும் சாந்நித்தியமாக இருப்பவன் என்பதைச் சைவ சித்தாந்த நூல்கள் தெளிவுபடுத்துவன. இருக்குவேதம் சுட்டும் பரம்பொருள் தத்துவம் சிவனது தெய்விக நிலையோடு நன்கு பொருந்துவதாகும்.
இவ்வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் இடம்பெறும் பிறிதோர் சூக்தமாகிய புருஷ சூக்தத்தில் சிவனுக்குரிய ஈசானன் என்ற பெயர் இடம்பெறுகின்றது. அவனே பிரபஞ்சம் எங்கணும் வியாபித்து விளங்குபவன். 32 இப்பரம புருஷனிடமிருந்தே சூரியன், சந்திரன், அக்கினி, வாயு, ஆகாயம், பூமி போன்றவை தோற்றம் பெற்றன என இக்சூக்தம் குறிப்பிடும் கருத்து'' சிவனோடு தொடர்புபடுவன. புருஷன் எல்லாத் திக்குகளிலும் வியாபித்து நிற்பவன் என்ற கருத்து' சிவனது சதாசிவ நிலையோடு ஒப்பிடத்தக்கது. எங்குமுள்ள உயிரினங்களை அவனே படைத்தவன்; சிவன் பசுபதியாக விளங்கும் நிலையை இது காட்டும். சிவன் யாவற்றிற்கும் தலைவனாக விளங்கும் அம்சம் ஹிரண்யகர்ப சூக்தத்தில் காணப்படுகின்றது.''
இதிகாச புராண காலத்துச் சிவனுக்குரிய அம்சங்கள் வைதிக காலத்திலும் அதற்கு முற்பட்ட காலத்து தெய்விக அம்சங்களிலும் காணக் கூடியதாகும் என பனர்ஜி குறிப்பிடுகின்றார். சிவனது வைதிக அம்சம் இருக்குவேத உருத்திரனில் பொருந்தி விளங்குகின்றது. உருத்திர அம்சம் சிறப்பாக இருக்குவேத உருத்திரன் பற்றிய பாடல்களிலும் யசுர்வேத சதருத்திரியத்திலும் சிறப்பாகக் காணப்படுகின்றது. வேதத்தில் வரும் உருத்திரனிலேயே இதிகாச காலத்து சிவனை இனங்காண முடிவதாக கைலாசநாதக் குருக்கள் கருதுவர். வருணன் என்ற தெய்வத்தின் அம்சங்களிலும் சிவனோடு தொடர்பு படுத்தக்கூடியவை பல உள.
இருக்கு வேதத்திலுள்ள உருத்திரன் பற்றிய பாடல்களில் அத்தெய்வத்தின் உருவத் தோற்றப் பொலிவு தெளிவாகவுள்ளது. உருத்திரன் தலைமயிரைச் சடாமுடியாகக் கட்டியுள்ளான்; இவன் கவிட்டு நிறத்தினன்; இரு கரங்களை உடையவன் தங்கத்திலான அணிகலன்களை அணிந்தவன், அழகிய உதடுகளையுடையவன்; உரியன் போன்று பளபளப்பான ஒளி பொருந்தியவன்; இவன் வில்லையும் அம்பையும் தாங்கியவன், கையில் வச்சிராயுதத்தைத் தாங்கியவன் சிவன் வில்லைத் தாங்கிய நிலையைப் பிற்காலத்திலும் காணலாம். இவன் சாங்கிய வச்சிரம் பிற்காலத்தில் திரிசூலமாக மாறியிருக்க இடமுண்டு." உருத்திரனுக்குரிய இருவேறுபட்ட பண்புகளில் பயங்கரமானவனாகவும் அழிக்கும் ஆற்றலுடையவனாகக் குறிப்பிடப்படும் அதேசமயம் அன்புடன் கூடியவனாகவும் விளங்குவன், இவன் அறிவுக் கூர்மையானவன். வரையாது வழங்கும் ஆற்றல் மிக்கவன்; பரந்த உலகினுக்கு அவனே ஈசானன்; உருத்திரனுக்கு 'ஈசானன், என்ற அடைமொழியும் வழங்கப்படுவது போல் சிவனுக்கு ஈஸ்வரன் என்ற பெயர் வழங்கப்படுவதும் கவனித்தற்குரியது. பிரபஞ்சம் அவனது ஆணைக்குட்பட்டிருப்பதால் அவன் எல்லோரது செயல்களையும் நன்கறிவான்; இவன் உலகின் தந்தை வரையாது வழங்கும் ஆற்றல் மிக்கவன்; இப்பண்பு இவனுக்குரியதாக அடிக்கடி குறிப்பிடப்படுகின்றது. இந்நிலையே சிவனது அனுக்கிரகப் பண்புக்கு உரியதாகின்றது. விஷ்ணுவனுக்கிரக மூர்த்தி, கண்டேசானுக்கிரக மூர்த்தி போன்ற அனுக்கிரக மூர்த்திகள் குறிப்பிடத்தக்கன. இவன் மங்களகரமானவன்: ( கயலை: 'இக்கருத்தை உணர்த்தும் சிவன் என்னும் அடைமொழி இவனது நன்மை செய்யும் பண்பைச் சுட்டுகின்றது. பிற்கால வேத நூல்களும் சம்ஸ்கிருதத்தில் எழுந்த சமய நூல்களும் இதர நூல்களும் சிவனெனப்படும் இவ்வடைமொழியையே இவனது சிறப்புப் பெயராகக் குறிப்பிடுவதைக் காண்கின்றோம். உருத்திரன் என்னும் பெயர் சிறிது சிறிதாக மறைந்து சிவனென்னும் பெயரே நிலைபெற்று விடுகின்றது. " பாதுகாப்புக்கு மாத்திரமின்றி அருள் புரிய வேண்டியும்" இவன் வழிபடப்படுவன்: உயிரினங்களுக்கு நல்வாழ்வு வழங்குபவனும் இவனே. உருத்திரனின் அருள் வழிபடுவோனை நோயினின்று குணப்படுத்துவதாகவும் அமையும், நோயைக் குணப்படுத்தும் ஆற்றலிற் சிறந்தவன்; இவன் வைத்தியருள் சிறந்த வைத்தியனாவான், உருத்திரன் காலத்தில் சிவனுக்குரிய பண்பாக அமைந்து ஜூவரதேவர். வைத்தீசுவரர் என்ற பெயர்களுக்கு முன்னோடியாக அமைந்து விளங்கியது. சிவனுக்குரிய திரியம்பகன் என்ற பெயர் உருத்திரனுக்கு உரியதாக இருக்குவேதம் குறிப்பிடும். இப்பெயர் இவனுக்குரிய மூன்று தாய்களையோ அன்றி சகோதரிகளையோ குறிப்பதாகவும் கொள்ளப்படுகின்றது." இவன் மந்தைகளைக் காப்பவன்; உருத்திரன் முனிவர்களுடன் கொண்டு விளங்கும் தொடர்பும் குறிப்பிடத்தக்கது." பிற்காலத்தில் சிவனுக்கும் முனிவர்களுக்கும் இடையே விளங்கும் தொடர்பினை தட்சணாமூர்த்தி வடிவத்தில் காணலாம்.
இருக்கு வேதத்தில் உருத்திரன் பற்றிய கருத்துக்கள் பரந்து காணப்படுவதுபோன்று அதர்வ வேதத்திலும் இடம்பெறுவன. உருத்திரனின் தெய்வ மரபு பவன், சர்வன் ஆகியவர்களோடு இணைந்து மேலும் தெளிவாகின்றது. பவன், சர்வன் ஆகியோர் இவனுடன் இணைத்தே கூறப்படுகின்றனர். அதர்வ வேதத்தில் இத்தெய்வம் தொடர்பான பண்புகள் தெளிவாகக் காணப்படுகின்றன. இவ்வேதத்தில் உருத்திரன் பல தடவைகளில் பசுபதி எனக் குறிப்பிடப்படுகின்றான். ஐந்து வித மிருகங்கள் அவனது ஆணைக்கு உட்பட்டன. உலகத்தினதும் மோட்சத்தினதும் தலைவன் இவனே; இவன் அந்தகனை அழித்தவன் '' இவ்வேதத்தில் இடம்பெறும் விராந்த்திய பாடல்களிலும் உருத்திரன் இடம்பெறுவன்.
யசுர் வேதம் உருத்திரனை மிக உயர்நிலையில் போற்றுகின்றது. வைதிகக் கடவுள் வரிசையில் முக்கியத்துவம் பெறும்வகையில் உருத்திரனும் பிரஜாபதியும் உயர்ச்சி பெறுகின்றனர். வைதிக கால முடிவிலும் இதிகாச கால தொடக்கத்திலும் இவ்விரு தெய்வங்களும் விஷ்ணுவுடன் சேர்ந்து தமக்குள்ளே மும்மூர்த்தி என்ற, தெய்விகக் குழுவை ஏற்படுத்தும் அளவுக்குச் சிறப்புப் பெறுகின்றனர். இதிகாச காலத்தில் வேத காலத்திற்கு அந்நியமான திரிமூர்த்திக் கோட்பாடு உருவாகியது.
சதருத்திரியம் வாஜசநேயி தைத்திரீய சம்ஹிதையில் உள்ளடங்கி யுள்ளது. வழிபடுவோனுக்கும் உருத்திரனுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு இதில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. சதருத்திரியம், இருவகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. உருத்திரன் இதிகாச காலச் சிவனோடு இனங்கண்டு கொள்வதற்கு ஏதுவான பல்வேறு பொதுப் பெயர்களைக் கொண்டு விளங்குகிறான். சிவ விக்கிரகவியல் பற்றிய விளக்கத்திற்கும் சிவனது தெய்வ வரலாற்றியல் பற்றிய கருத்துக்களை அறியவும் யசுர் வேத சத ருத்திரியம் முக்கியத்துவமுடையது. பிற்பட்ட காலத்தில் இடம்பெறும் சிவாலய வழிபாட்டின் போது இடம்பெறும் அர்ச்சனை என்ற கிரியையின் ஆரம்ப நிலையையும் குறித்து நிற்கின்றது.
யசுர்; வேதம் குறிக்கும் உருத்திரனின் அம்சங்களை ஆராய்வோம்.! பனின் வில்லும் அம்பும் மங்களகரமானவை. இவை தெய்வீக நிலையில் சிறப்பிக்கப்படுகின்றன. உருத்திரனின் மேனி மங்களமூட்டுவதாகவும் இவ்வுடம்பில் ஆத்ம தத்துவம் மீட்டுவதாகவும் வழிபடுவோன் வேண்டுவன்; இவனது உடல் காமிகம் போல் சிவந்து பொன்னிறமாகவும் விளங்கும்; இவன் கேசம் பொன்னிறமானது; கோள்களும் அந்நிறத்துடன் விளங்குவன் இவன் நீலகண்டன்; அழகுற அமைக்கப்பட்ட சடையினன்;" பூணூல் தரித்தவன்; புலித்தோலை அணிக்கவன்; ' சிவன் பிற்பட்ட உருவமைப்பில் வேறு சில சமயங்களில் யானைத் தோலைப் போர்த்தியவனாகவும் சிங்கத் தோலை உடுத்திய வனாகவும் குறிப்பிடப்படுவன். கஜாசுர சம்ஹார மூர்த்தியில் யானைத் தோலைப் போர்த்தியவனாகச் சித்திரிக்கப்படுவன். உருத்திரன் தாங்கும் ஆயுதங்களில் வில்லும் அம்பும் பயங்கரமானவையாகவும் விளங்குவன. இவ்வில்லின் கயிற்றை அவிழ்த்து கையில் உள்ள பாணங்களை மறைத்துவிடும்படி வழிபடுவோன் கேட்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக கைலாசநாதக் குருக்கள் தமது ஆய்வில் குறிப்பிடும் கருத்து எமது கவனத்தை ஈர்க்கவல்லது. 'சிவனது வில் பொதுவாகக் கையிலிருந்து மறைய புராணத்தில் வரும் சிவனது கைகளிலும் தென்னிந்தியக் கோயில்களில் நிறுவப்படும் சிவ உருவங்களிலும் மானும் மழுவும் இடம்பெறுகின்றன. மற்றைய இரு கரங்கள் அபய வரதமாக விளங்குவன. எனினும் சிவனது இரு வடிவங்கள் மாத்திரமே வில்லைத் தாங்கி நிற்பன. ஒன்று கிராத வடிவம் அர்ச்சுனனுக்கு தெய்விக ஆயுதத்தை வரமாக அளித்த நிலை. மற்றையது திரிபுராந்தகர் - முப்புரம் ளித்த நிலை. இக்காரணம் பற்றி சிவனுக்கு பிநாகி என்ற பெயரும் சமய உலகில் பிரபலம் பெற்றது. சிவனுக்குரிய சிறப்பான அம்சங்களில் இதுவும் ஒன்று.'' உருத்திரன் வாளையும் தாங்கி நிற்பவன்; இவன் வாழுமிடம் மலை; சிவனுக்குரிய இருப்பிடமாக கைலாசமலை குறிக்கப்படுவதும் ஒப்பிடுவதற்குரியது. இவனே உயிரினங்களின் தலைவன்: அவனே உலக நாயகன்; சீரும் சிறப்பு மிக்கவன் எனவே சிவன் எனப்படுவன்: நன்மையைச் செய்பவன். ஆகவே சங்கரன் என்ற பெயரைப் பெறுவன்; பிற்பட்ட கால தெய்விக வாற்றில் சிவன், சங்கரன் என்ற இரு பெயர்களும் நிலைபெற்று இன்றன. சிவனது வடிவங்களோடு தொடர்புடைய பல பெயர்கள் யசுர் வேதத்தில் இடம்பெறுவன. இவ்வேதத்தில் உருத்திரன், உக்கிரன், பீமன் பவன், சர்வன், பசுபதி, நீலகிரீவன், ஸ்ரீகண்டன் போன்ற பெயர்கள் தெளிவாக இடம்பெறுவது கவனிக்கத் தக்கது. இப்பெயர்கள் பிற்காலத்தில் சிவனுக்குரிய பெயர்களாக அமைந்து விடுகின்றன. யசுர் வேதத்தில் தென்னாட்டு வழக்கில் காணப்படும் ஒரு பகுதியில் சிவனது விக்கிரக வடிவங்களோடு தொடர்புடைய பல பெயர்கள் இடம்பெறுகின்றன.'
உருத்திரனுக்கு வழங்கப்படும் இப்பெயர்கள் பிற்காலத்தில் சிவனுக்குரிய பெயர்களாக ஆகிவிடுகின்றன. இவற்றுடன் சபாபதி, விசுவரூபன், தக்ஷன் போன்ற பெயர்களும் உருத்திரனுக்கு உரியவையாகக் குறிப்பிடப்படுகின்றன. சிவனது விக்கிரகவியலுக்குத் தேவையான பல விளக்கங்களை நாம் சதருத்திரியம் என்ற பகுதியிலிருந்து அறியமுடிகின்றது. சிவ வடிவங்கள் பற்றி புராணங்களில் விரிவாக இடம்பெறுவதற்கு முன்னோடியாக யகர் வேதத்தில் இடம்பெறும் இக்கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் உடையவை. உருத்திரனுக்கென கூறும் தோற்றப்பொலிவு, அவன் கொண்டு விளங்கும் ஆயுதங்கள் மற்றும் ஏனைய அம்சங்கள் சிவனது தெய்விக வரலாற்றை உருவாக்குவதற்குத் துணைபுரிவன.
பிராமணங்களில் ஐதரேயம், கௌசீதகி, சதபதம், சாங்கியானம் போன்றவை உருத்திரனைப் பற்றித் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வேதத்திலும் சங்கிதையை அடுத்துக் காணப்படும் பிராமணங்கள் மிகவும் விரிந்த நூல்கள். யார் வேதத்தைக் காட்டிலும் மிக விரிவாக அமைந்துள்ள பிராமணங்கள் சமய மரபுகளை அறிய இன்றியமையாதன. பிராமணங்கள்! தேவர்களைவிட வேள்விக்கு முக்கியத்துவமளித்தவிடத்தும், இருக்குவேதத்தில் மிகவும் அருகிக் குறிப்பிடப்பட்டுள்ள விஷ்ணுவும் உருத்திரனும் பிராமணங்களில் பெரும் தெய்வங்களாக உயர்த்திக் கூறப்படுகின்றனர். இங்கு பிரஜாபதியும் முக்கிய தெய்வங்களுள் ஒருவன ஐதரேய பிராமணமும் கௌசிகசி பிராமணமம் ஏனைய தெய்வங்களைவிட உருத்திரனை மிக உயர்நிலையில் கூறுவன. சிவனுக்குரிய பெயர்களாக மகாதேவன், ஈசானன், பவன், சர்வன், பசுபதி, உருத்திரன், உக்கிரன், அசவ போன்ற பெயர்களை பிராமணங்கள் வழங்கும்.
உருத்திரனுக்கு இப்பெயர் வந்த வரலாறு சதபத பிராமணத்தில் கூறப்படுகின்றது. பிரஜாபதி ஒரு மகவைப் பெற விரும்பியவராய் உஷையின் மூலம் ஒரு மகனைப் பெற்றார். பிறந்த உடனேயே அக்குழந்தை அழுதது. அக்குழந்தை அழுவதன் காரணத்தைத் தந்தை வினவ, தனக்கொரு பெயரில்லை எனக் குழந்தை கூறியது. பிரஜாபதி அக்குழந்தைக்கு 'உருத்திரன்' எனப் பெயரிட்டழைத்தார். அக்குழந்தை அழுதபடியால் இப்பெயர் வந்தது. பெயர் வழங்கியவுடனேயே அவன் அக்கினியின் வடிவத்தைப் பெற்றான். குழந்தை மேலும் பல பெயர்களைக் கேட்க, பிரஜாபதி 'சர்வன்' என்ற பெயரையும் வழங்கினான். இவ்வாறு பிரஜாபதியிடமிருந்து உருத்திரன், சர்வன், பசுபதி, உக்கிரன், அசவி, பவன், மகாதேவன், ஈசானன் ஆகிய எட்டுப் பெயர்களைப் பெற்றான். இந்த எட்டுப் பெயர்களும் முறையே அக்கினியில் தத்துவங்களோடு தொடர்புடையன. அவை முறைய அக்கினி, நீர், தாவரம், வாயு, மின்னல், பர்ஜன்யன், சந்திரன், ஆதித்தியன் ஆகியவையாகும். சிறுவனாகிய குமாரன் ஒன்பதாவதாக விளங்கி இவ்வெட்டு அம்சங்களை ஏற்றான். அவன் அவ்வாறு ஏற்றபடியால் மக்கள் அக்கினியைக் குமாரனாகக் காணாமல் இவ்வடிவங்களிலேயே காண்பர்." இக்கதை சாங்கியான பிராமணத்திலும் கௌசீதகி பிராமணத்திலும் இடம்பெறுகின்றது. உருத்திரன் பற்றிய பிற்பட்டகால புராணக் கருத்துக்களுக்கும் சிவனது அஷ்டமூர்த்தி என்ற அம்சத்திலும் இக்கதை அடிப்படையாக அமைகின்றது. |
உபநிடத காலமும் சிவனது தெய்விக வரலாற்றைப் பற்றி அறிய துணை புரிவன. உருத்திரன் பிரமனோடு இணைத்துக் கூறப்படுகின்றான். உபநிடதங்களில் சுவேதாசுவதர உபநிடதமே உருத்திரனைப் பற்றி அதிகம் கூறுவதாகும். இவ்வுபநிடதம் கிருஷ்ண யசுர் வேதத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வுபநிடதம் உருத்திரனை எங்கணும் கண்களையுடையவன் எனவும் எட்டு முகங்களையுடையவன் எனவும் எங்கும் கரங்களை உடையவன் என்றும் எங்கும் கால்களையுடையவன் எனவும் கூறும்.' இவன் ஒருவனே தெய்வன்; உருத்திரன் முகம் மனதுக்கு உகந்தது;", இவன் வழிபடுவோனின் பாவங்களைப் போக்குபவன்; " எல்லா உலகையும் ஆள்பவன் இவனே; இவனே ஹிரண்யகர்பன் ; இவனே ஹிரண்யகர்ப்பத்தை தோற்றுவித்தவன்; அது தோற்றம் பெறுவதை பார்த்தாலும் அவனே. சுவோதாஸ்வர உபநிடத்திலேதான் முதன் முதலாக படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய பிரபஞ்ச கடமைகள் உருத்திரனுக்குரியதாக குறிக்கப்படுகின்றன.
இக்காரியங்கள் இவனுக்குரியதாகும். இவனே பிரமனைப் படைத்து வேதங்களை அவனுக்கு வழங்கியவன். இவன் எல்லாப் பெருமைக்குரியவன் யாவற்றையும் ஆள்பவன்; இவ்வுலகில் இவனுக்குத் தலைவன் இல்லை. இவனே தலைவன். இவனே யாவற்றையும் படைக்கும் விஸ்வகர்மன்: 108 இவனே இரு கால் நான்கு கால் உயிரினங்களுக்குத் தலைவன்:109 சம்சாரத்தில் வாழ்வதற்கும் விடுதலை பெறவும் பந்தம் தொடர்வதற்கும் இவனே காரணன்; ' இவன் யாவும் அறிந்தவன், '' உரிய காலத்தில் உலகைப் பாதுகாப்பவன்; சிவனே யாவற்றக்கும் மேலானவன் என்ற கருத்து சைவ சமயத்தில் சிறப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்று. உருத்திரனுக்கு மேலானவர் எவருமிலர் என்ற கருத்தே இவனது பரம்பொருள் நிலையைச் சுட்டும். புராணங்களும் இதே நிலையை வற்புறுத்துவன. இவ்வுலகை என்றும் ஆள்பவன் இவனே; சிவன் எல்லா உயிரினங்களிலும் மறைபொருளாக விளங்குபவன்; இவன் எங்ஙணும் வியாபித்து விளங்குபவன். இவனே யாவற்றுக்கும் தலைவன்; தெய்வங்களுக்கு எல்லாம் மேலான தெய்வன்; தெய்வங்களுக்கு அதிபதி, ''
சிவனது தெய்வ வரலாற்றினை அறிந்து கொள்வதற்கும் அவனது வடிவங்கள் பற்றிய ஆரம்பகால சிந்தனைகளை அறியவும் சுவேதாஸ்வதர உபநிடதம் முக்கியத்துவம் பெறுகின்றது. இவ்வுபநிடதம் முழுவதுமே உருத்திரனை சிவனோடு இனங்காணக் கூடிய பல்வேறு பெயர்களை நாம் காணலாம். இவ்வுபநிடதத்தில் சிவன் -- உருத்திரன் மிக நெருங்கிய தொடர்புகொண்டு விளங்குவதால் பிராமண காலத்தின் இறுதியில் இவ்விரு தெய்வ அம்சங்களும் ஒன்றுடன் ஒன்று முற்றாக இணைந்து விடுகின்றன. வேதம், பிராமணம், உபநிடதம் ஆகிய இலக்கிய சான்றுகளிலிருந்து சிவனது தெய்விக அம்சம் படிப்படியாக வளர்ச்சி பெறுவதைக் காணமுடிகின்றது. " உருத்திர பசுபதி அம்சங்களும் சிவ அம்சங்களுடன் படிப்படியாக தொடர்புகொள்வதையும் காணமுடிகின்றது.
ருத்திர காலங்களிலும் உருத்திரனுக்குரிய முக்கிய பெயர்கள் இடம்பெறுகின்றன. மகாதேவன், ஹரன், மிருடன், சர்வன், சிவன், பவன், பீமன், பசுபதி, உருத்திரன், சங்கரன், ஈசானன் போன்ற பெயர்கள் குறிப்பிடத்தக்கன.
இதிகாச புராணங்கள் பிரமா, விஷ~;ணு. உருத்திர - சிவன் ஆகிய கடவுளர் முன்னணியில் இடம்பெறுவதைக் காட்டுகின்றன. இக்காலப் தெதியில் வைதிக தெய்வங்கள் முக்கியத்துவம் இழந்து விடுவதையும் நாம் காணலாம். இதிகாசங்களில் பிரமா, விஷ்ணு, சிவன் ஆகியோர் சுதந்திரமாகவே விளங்குவதைக் காணலாம். இவ்விலக்கியத்தில் கிரிமர்த்திக் கோட்பாடு பற்றி எதுவித குறிப்பும் இல்லை. 21 வேக்காலங்களில் பிரஜாபதியாகிய பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகியோரால் நிறைவேற்றப்பட்ட படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களும் ஒன்றிணைந்த தனியம்சமாகக் கொள்ளப்பட்ட காலத்தில் இவற்றை ஆற்றும் கடவுளரும் ஒரு குழுவாகக் கணிக்கப்பட்டனர். 22 திரிமூர்த்திக் கோட்பாடு இலக்கியங்களிலேயே சிறப்பாகக் காணப்பட்டதோடு திரிமூர்த்தி அம்சம் சிற்பங்களிலும் இடம்பெறுகின்றது. திரிமூர்த்தி பற்றிய குறிப்பு முதன் முதலில் மைத்திராயண உபநிடதத்தில் காணப்படுகின்றது. உருவமற்ற பரம்பொருளின் தோற்றங்களே இம்மூன்று கடவுளர் எனக் கூறும். 21 இவ்வுபநிடதத்தில் இடம்பெறும் பிறிதோர் குறிப்பு இக்கோட்பாடு தத்துவச்சாயல் கொண்டதெனக் குறிப்பிடும். பிரகிருதிக்குரிய மூன்று நிலைகள் முறையே சத்வம், ரஜஸ், தமஸ் என விளங்குவன. - பரம்பொருளே இம்மூன்று கடவுளரிலும் தோற்றம் பெற்ற விடத்து தத்துவ நிலையில் விளங்கியது. அந்நிலையில் சத்வமாக விஷ்ணுவும், ரஸஜ் ஆக பிரமனும் தமஸ் ஆக சிவனும் விளங்கினர் என்ற கருத்தும் கவனித்தற்குரியது. இதுவே இக்கோட்பாட்டின் ஆரம்பநிலை எனலாம். பின்னர் ஒவ்வொரு வழிபாட்டு நெறியும் தமக்கேயுரிய முழுமுதற் கடவுளை உயர் பிரமத்துடன் இனங்கண்ட பொழுது திரிமூர்த்தியில் இடம்பெற்ற ஒவ்வொருவருக்கும் தெளிவான தனியம்சம் உருவாயிற்று."
இராமாயணத்தில் சிவன் முக்கிய கடவுளாக இடம்பெறுவன். எனினும் இவனைப் பற்றிய சில குறிப்புகளே காணப்படுவன. தேவர், மனிதர் ஆகியோருக்கு விஷமானது இன்னல் விளைவிக்கவிருந்தவேளை விஷ்ணுவே சிவனை அணுகி அதனை அருந்தும்படி கேட்டபொழுது, எல்லாத் தெய்வங்களைவிட உயர்ந்த ஒருவனாகவே சிவனை விளிப்பது இங்கு குறிப்பிடத்த்க கது. 27 சிவனது சாமாரி, 12 கங்காதரன் ஆகிய அம்சங்கள் பற்றிய குறிப்பு இராமாயணத்தில் இடம்பெறுகின்றது. இவவிதிகாசத்தில் சிவனது ஏனைய சிறப்புப் பெயர்களிற் சில ஆங்காங்கு இடம்பெறுவதைக் கொண்டு அவை அக்காலத்தில் மக்கள் மத்தியில் அறிமுகமாயிருத்தல் வேண்டும். இராமாயணம் சிவன் அந்தகலை அழித்தமை பற்றியும் கூறும். முப்புரம் ளித்த வரலாறும் இடம்பெறுகின்றது. தக்ஷனது யாகத்தை அழித்த வரலாறு பற்றிய குறிப்பும் உண்டு .
மகாபாரதம் சிவனைப் பெருங் கடவுளாகவே குறிப்பிடும். சிவனது பல்வேறு வீரச் செயல்கள் பற்றி இதில் கூறப்படுகின்றன. பாசுபது அஸ்திரத்தை சிவன் அர்ச்சுனனுக்கு வழங்கியமை இவ்விதிகாசம் குறிப்பிடும் முக்கியமானவற்றில் ஒன்று. பகிரதனுக்கு அருள் புரிந்தமை பற்றியும் முப்புரம் ளித்த கதையும் இதில் இடம்பெறுவன. தக்ஷனின் யாகத்தை அழித்த வரலாற்றை மகாபாரதமும் குறிப்பிடுகின்றது. இதிகாசங்களைவிட புராணங்களிற்தான் சிவனது வீரச் செயல்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இதிகாசங்கள் மூன்று தெய்வங்களான பிரமா, விஷ்ணு, உருத்திரன் பற்றித் தனித்தனியே சிறப்பித்துக் கூறுவன. இவர்களுள் சிவனே முக்கியத்துவம் பெறுவதும் குறிப்பிடத்தக்கது. இவ்வகையில் இவனது வீரச்செயல்களை இவ்விதிகாசங்கள் இரண்டுமே ஆங்காங்கு கூறிச்செல்கின்றன.
சிவனைப் பற்றி இதிகாசங்கள் கூறும் தெய்விக வரலாற்றுக் கருத்துக்களின் வளர்ச்சி நிலையையே புராணங்களிற் காணமுடிகின்றது. புராணங்கள் பதினெட்டும் ஏறக்குறைய நான்கு அல்லது ஐந்து இலட்சம் சுலோகங்களைக் கொண்டுள்ளன. இவற்றோடு பல உப புராணங்களும் உண்டு. சிவ வடிவங்களின் தெய்விக மரபுகளை விளக்கமாக அறிவதற்குப் புராணங்களே பெரிதும் துணைபுரிவன. புராணங்கள் தென்னாட்டின் சமயக் குருவூலம் என்பர் கைலாசநாதக் குருக்கள். 15 இக்கூற்றுக்குரிய காரணம் சற்று விரிவாக விளக்கப்பட வேண்டியதொன்று. புராணங்கள் கூறும் வர்ணனைகளுக்கமைய சிவனுக்குரிய வடிவங்களை அமைத்து, வழிபட்டு வரும் மரபு தென்னாட்டிற்றான் சிறப்பாக உண்டு. அவை கூறும் விளக்கங்களுக்கமையவே இறைவனைப் பல கோலங்களில் அமைத்துக் தென்னாட்டு மக்கள் வழிபட்டு வரலாயினர். தென்னாட்டுச் சிவாலயங்களில் சிவனைப் பிக்ஷாடனராகவும், கிராதமூர்த்தியாகவும், திரிபுராந்தக மூர்த்தியாகவும், அர்த்தநாரீசுவரராகவும், உருவங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருவது கண்கூடு. இக்காரணம் பற்றியே மாணிக்கவாசகர் "தென்னாடுடைய சிவனே போற்றி" எனப் போற்றியுள்ளமை இங்கு கவனித்தற்குரியது. சிவ வடிவங்களின் வரலாறுகளைப் புராணங்கள் பல இடங்களிற் கூறுகின்றன. புராணங்கள் விரித்துக் கூறும் ஆட்ட வீரட்டங்கள் எனப்படும் எட்டுத் திருவிளையாடல்களும் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இடங்கள் தென்னாட்டிலேயே காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வீரச் செயல்கள் நிகழ்ந்த இடங்களை 'அட்ட வீரட்டானம்' எனக் கூறுவர். வடமொழிப் புராணங்களைப் போல தமிழ் மொழியிலும் புராணங்கள் காணப்படுவன. தமிழில் எழுந்த புராணங்களில் மதுரையில் எழுந்தருளியுள்ள இறைவனின் திருவிளையாடல்களைக் கூறுவது திருவிளையாடற் புராணம். ஸ்தல புராணம் எனப்படுவது தென்னிந்தியாவில் உள்ள ஒவ்வொரு திருத்தலத்தைப் பற்றிய வரலாறு ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் விசேடம் இதில் கூறப்படும். இவைகூட சிவனது தெய்விக மரபுகளை உருவாக்குவதற்குப் பெருந்துணை புரிவன.
புராணங் கூறும் சிவ வடிவங்கள் அமைந்த தலங்கள் தோறும் சென்று நாயன்மார்கள் பதிகங்கள் பாடினர். அப்பதிகங்களில் சிவனது தெய்விக மரபு, வீரச் செயல்கள் மற்றும் இன்னோரன்ன செய்திகள் இடம்பெற்று புராணக் கருத்துக்களை மேன்மேலும் தெளிவுபடுத்தின. சிவனது தெய்விக மரபை அறிய தேவாரங்களும் இன்றியமையாதவையே.
சிவனது தெய்விக மரபினை புராணங்கள் கூறும் வழிநின்று விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்ட நூல்களுள் கைலாசநாதக் குருக்களின் ஆராய்ச்சி நூல் குறிப்பிடத்தக்கது. புராணங்களை அடிப்படையாகக் கொண்டு சிவனது உருவத் தோற்றப் பொலிவு, உடை, ஆபரணங்கள், ஆயுதங்கள், வாகனம், கொடி, இருப்பிடம், தெய்விகக் குடும்பம், வீரச் செயல்கள் போன்ற பல விபரங்களை நாம் பெற முடியும். சிவனைப் பற்றிப் புராணங்கள் குறிப்பிடும் எண்ணற்ற பெயர்கள் அவனது வீரச் செயல்களையும் தெய்விக மரபுகளையும் அடிப்படையாகக் கொண்டவை. சிவனது தோற்றம் பல வகையிற் புராணங்களிற் சித்திரிக்கப்பட்டுள்ளது. அவனது உருவத்தோற்றத்தில் மிகப் பிரபலமானவை நீல கண்டம், முக்கண், ஜடாமூடி போன்றவையே. அவனது வாகனம் இடபம் ஆகும். ஆயுதம் திரிசூலம். மானைத் தோலையோ அன்றி புலித் தோலையோ ஆடையாக அணிந்திருப்பான். பல்வேறு அசுரர்களை அழித்தவனாகக் குறிக்கப்படுவன். இத்தகைய விபரங்கள் சிவன் பற்றிய விக்கிரகவியலுக்கு அடிப்படையானவை.
புராணந்தரும் இச்செய்திகள் பல வகையில் முக்கியத்துவம் டையன. தொன்மையான தெய்விக மரபினை அடிப்படையாகக் கொண்டு அடுத்துவரும் காலப்பகுதிக்கேற்ற விளக்கங்களை உள்ளடக்கிய தெய்விக வரலாற்றை உருவாக்கிய பெருமை இப்புராணங்களுக்கேயரியக்
சிவன் திரிமூர்த்திகளில் முதல்வன் என இலிங்க புராணம் கூறும் 143 பராணங்களில் சிவன் இரு அம்சங்களிற் சித்திரிக்கப் படுவன். ஒன்று சாந்த வடிவம். 144 இது உயிர்களுக்கு நன்மை அளிக்கும் தோற்றமாகும். மற்றையது உக்கிர வடிவம் தீயவர்களுக்குத் தீங்கு விளைவிப்பது இவ்வடிவம். இருக்குவேதம் கூறும் உருத்திரனில் இவ்விரு அம்சங்களையும் நாம் காண்கின்றோம். சிவன் உக்கிரவடிவில் தோற்றம் பெறும் அமைப்புப் பற்றிப் புராணங்கள் கூறும் விபரங்கள் விக்கிரகங்களை உருவாக்குபவர்களுக்குப் பயன்படுவதாகும்.
தென்னிந்தியக் கோயில்களிலும் ஈழத்துக் கோயில்களிலும் சிவன் ஒரு தலையையுடையவனாகவே சித்திரிக்கப்படுவன். இது ஒரு மரபாகவே அமைந்துவிட்டது. சிவன் ஐந்து தலைகளுடன் கூடியவனாகக் காண்பது மிக அரிதேயாகும். எனினும் சிவ லிங்க வழிபாட்டில் இந்த ஐந்து முகங்களும் வழிபடப்படுவன. ஐந்து முகங்களைக் கொண்ட இலிங்கம் பஞ்சமுகலிங்கமாகும். எனவே சிவனுக்கு பஞ்சவக்திரன் என்ற பெயர் உண்டு. சில புராணங்கள் நான்கு முகங்களெனக் கூறும். ( ஏனே புராணங்கள் இம் முகங்களுக்குரிய பல்வேறு நிறங்களையும் குறிப்பிடும்."
சிவனது சடையைப் பற்றி புராணங்கள் கூறுவன. இவன் ஜடாதரன் எனப்படுவன. ஜடாமௌலி, ஜடாமண்டலமண்டிதன் போன்ற பெயர்கள் குறிப்பிடத்தக்கன. சடை மகுடமாக அமையும் நிலை பற்றியும் புராணங்கள் கூறுவன. சடை மேல் நோக்கியதாக முடிந்து கட்டப்பட்டதாக விளங்கும்.
சிவனுக்கென சிறப்பாகவுள்ளது அவனது நெற்றிக்கண், இக்காரணம் பற்றி இவன் பழைய இலக்கியங்களில் கிரயம்பகன் எனச் சுட்டப்படுகின்றான. இவன் முக்கண்ணன் ஆவன்.15- நெற்றிக் கண் சிவனுக்குத் திலகம் போல அமைவதாகும். சிவனது முகங்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு கண்களின் எண்ணிக்கையும் அமையும். ஒவ்வொரு முகத்திலும் நெற்ற வளங்கும். அக்கினியே நெற்றிக்கண் என புராணங் கூறும். நெற்ற கண்ணினால் இவன் காமனை எரித்த வரலாறு குறிப்பிடத்தக்கது. கு சந்திரனும் சிவனின் மற்றைய இரு கண்களாகும்.
சிவனது கைகளைப் பற்றியும் விரிவான விளக்கங்கள் காணப்படுவன. கதகளின் எண்ணிக்கை நான்காகும். தென்னாட்டிலும் ஈழத்திலுமுள்ள சிவாலயங்களில் உள்ள சிவ வடிவங்களில் நாம் இம் மரபையே காணமுடிகின்றது. ஐந்து முகங்களோடு உள்ள நிலையில் பத்துக்கரங்கள் கறிப்பிடப்படுகின்றன. சிவன் கொள்ளும் வடிவத்திற்கேற்ப கைகள் பதினாறு என்றும் பதினெட்டு என்றும் குறிப்பிடப்படுவன. இவனது கரம் முழங்கால் வரை நீண்டு விளங்கும். கரங்களில் இரண்டு அபயமாகவும் வாதமாகவும் அமைவன. ஏனைய கரங்களில் சிவன் கொண்டு விளங்கும் வடிவத்திற்கேற்ப பல்வேறு ஆயுதங்கள் இடம்பெறுவன.
மேலும் கட்டுரைகள் வாசிக்க - Click Here
சிவனது கழுத்து நீல நிறம் வாய்ந்தது. இதனால் இவனுக்கு நீலகண்டன் என்ற பெயர் உண்டு, ஆகமங் கூறும் வழிபாட்டில் இடம்பெறும் மந்திரங்களில் இவனது கழுத்து பற்றிக் குறிப்பிடப்படுகின்றன. திருப்பாற்கடலை கடைந்தபொழுது தோன்றிய ஆலகால விஷத்தை சிவன் உட்கொண்டவேளை கழுத்தில் தங்கியதால் நீலகண்டன் என்ற பெயர் ஏற்பட்டதென்ற வரலாற்றை அக்கினி புராணம் கூறும்."
சிவனுக்குரிய நிறங்களைப் பற்றியும் புராணங்கள் விபரிக்கின்றன. சிவனது வெண்மை கற்பூரத்துடன் ஒப்பிடப்படுகின்றது. '' சிவனைக் குறிக்கும் ‘மகா காலன்' என்ற பெயர் 'பெருமை மிக்க கரிய நிறத்தினன்' என்ற பொருளைத் தருவதாகும். உருக்கி வார்த்த பொன்னிறத்தவன் எனவும் சிந்தூரப் பொடி போன்று செம்மை நிறத்தவன் எனவும் குறிப்பிடப்படுகின்றான்.
சிவனுக்கு அ~;ட மூர்த்தி என்ற பெயரையும் புராணங்கள் வழங்குவன. நீர், நிலம், தீ, வளி, விசும்பு என்னும் ஐம்பூதங்களும் சூரியன், சந்திரன் ஆகிய இரு கோள்களும் வேட்கும் இயல்பினனான இயமானதும் இவ்வெட்டு உறுப்புகளாக அமைவன. இவ்விளக்கத்தை அடிப்படையாகக் கொண்ட பெயரை நாம் புராணங்களில் காணலாம். '' சிவனது அரத்தநாரீசுவர அம்சத்தையும் லிங்கபுராணம் கூறும். '
சிவன் யோகியாக புராணங்களில் குறிப்பிடப்படுகின்றான். இதனால் யோகீசுவரன் எனச் சுட்டப்படுவன். இந்நிலையில் சிவனுக்கு தட்சணாமூர்த்தி என்ற பெயரும் பொருத்தமாக அமையும்.
சிவனது உடை தோலினாலானது. புலி, சிங்கம், யானை மிருகங்களின் தோல் இவனுக்குரிய ஆடையாக பல சந்தர்ப்பங்களில் விளங்கியுள்ளன. இவன் ஆடையின்றி திகம்பரனாகவும் காணப்படு காருகாவனத்தில் சிவன் இந்நிலையிலேயே திரிந்தவன். பத்மபரான சிவன் புலித்தோலையும் யானைத் தோலையும் அணிந்த குறி வருகின்றது. 3 சிவன் நரசிம்ஹனுடைய தோலை அணிந்தவனாகவும் கூர்மபுராணம் குறிப்பிடும். சிங்கத்தின் தோலை உடுத்திய நிலை பற்றி லிங்கபுராணம் கூறும்.''
சிவன் அணியும் ஆபரணங்களைப் பற்றியும் புராணங்களில் விபரங்கள் காணப்படுவன. இவன் இரத்தினக் கற்களாலும் தங்கத்தினாலும் உருவாகிய ஆபரணங்களை அணிபவன்; சூடாமணியைத் தரித்தவன்; தங்கமாலை அணிபவன்; கால்வரையிற் தொங்கும் மலர்மாலையை சூடுபவன்; கைகளை கேயூரம் போன்ற அணிகலன்கள் அழகு செய்வன. பொதுவாக இவன் எல்லாவித ஆபரணங்களையும் உடையவனென லிங்கபுராணம் கூறும் "66 இவனது அணிகலன்களில் குறிப்பிடத்தக்கது சர்ப்பமாகும். கைகளில் வளையல்களாக, கடகமாக, இடையணியாக, யக்ஞோபவீதமாக அணிந்திருப்பது பாம்புகளையே. இவை காதில் குண்டலங்களாகவும் விளங்குவன. பத்மன், பிங்களன் ஆகிய இரு பாம்புகளே இக்குண்டலங்கள்.'' பாம்புகளை யக்ஞோபவீதமாக அணிந்த காரணம் பற்றி இவனுக்கு 'நாகயக்ஞோப வீதத்தையுடையவன்' என்ற பெயருமுண்டு. பாம்புகள் தீவினைகளையும் கோபத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவன. இத்திய பண்புகளை அடக்குமுகமாகவே அவன் இவற்றை ஆபரணங்களாக அணிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சந்திரப்பிறை சிவனது சடையில் விளங்கும். 169 இக்காரணம் பற்றி இவனுக்கு சந்திரமௌலி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. கங்கையும் சிவனது. சடைக்கு அழகூட்டும். இதுவும் ஒரு விசேட அணியே."
சிவன் உக்கிர வடிவங்கொள்ளும் வேளை மண்டையோடுகள் அவனது உடலை அணிசெய்வன. பிட்சையேந்தும் பாத்திரமாக இல கபாலத்தைத் தாங்குவன். கபாலத்துடன் உள்ள தொடர்பால் இவன் கபாலி என்ற பெயரும் உண்டு.
அரக்கர்களை அழிக்கும்வேளை இவன் தாங்கும் ஆயுதங்களைப் பற்றியும் புராணங்கள் கூறுவன. சூலமும், பிநாகம் என்ற வில்லும் இவனுக்கே சிறப்பாக உரியவை. சூலத்தைத் தாங்கியபடியால் சூலி என்ற பெயரும் வில்லைத் தாங்கியபடியால் பிநாகி என்ற பெயரும் இவனுக்குண்டு. சிவனுக்குரிய மற்றைய சிறப்பான ஆயுதம் மழுவாகும். சிவனது பெரும்பாலான வடிவங்களில் இந்த ஆயுதமே இடம்பெறுகின்றது. ஏனைய ஆயுதங்களான கதை, டங்கம். கிருபான, கட்கம், தண்டம், அணி, வச்சிரம், கேடயம், சக்தி போன்ற ஆயுதங்கள் இடம்பெறுவன. சிவனது அம்புகளில் ஒன்று விஷ்ணுமயமானது என்ற குறிப்புக் கவனித்தற்குரியது. திரிபுராந்தகரின் மர்க்கம் கையில் ஏந்தியுள்ள அம்பில் இந்த அம்சத்தினைக் காணலாம். மதுரை ஆயிரங்கால் மண்டபத்திலுள்ள திரிபுராந்தக வடிவம் இத்தகைய அம்பினைத் தாங்கியுள்ளமை கவனித்தற்குரியது.
சிவனுக்குரிய ஊர்தி இடபமாகும். பக்தர்களுக்கு அருள் புரியும் வேளை இவன் இடப ஊர்தியில் தோற்றம் பெறுவான்."
சிவனுக்குரிய இருப்பிடம் கைலாசமாகும். இங்கு இவன் கணங்கள் சூழ விளங்குவன் உமையுடன் வீற்றிருப்பன்; இத்தகைய விபரங்களைப் புராணங்கள் விளக்கி நிற்கின்றன.
திக்குகள் பத்தினுள் இவனுக்குரியது வடகிழக்கு மூலையாகிய ஈசான திசையாகும். சிவனுக்குரிய கொடி இடபம் ஆகும்.
பிரமா, வி~;ணு , உருத்திரன் ஆகிய மூவருக்கும் உரிய படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களை சிவனே புரிவதாகப் புராணங்கள் கூறும், மகேசுவரனே இம் மூன்றையும் செய்பவன் என்பதை லிங்கபுராணம் குறிப்பிடுகின்றது. இதன் காரணம் பற்றி சிவனுக்கு சிருஷ்டிஸ்திதி சம்ஹாரகாரகன் என்ற பெயரை புராணங்கள் வழங்குவன. கூர்மபுராணம் சவனை அழித்தற் கடவளெனச் சுட்டும். சிவனது நடனத்தைப் பற்றியும் புராணங்கள் கூறுகின்றன. பிரளயகால தாண்டவத்தைப் பற்றி பாகவத புராணம் குறிப்பிடுகின்றது.
இவ்வாறு புராணங்கள் சிவனது வீரச் செயல்களைக் கூறுவதோடு அவன் கொண்டு விளங்கும் தோற்றப் பொலிவையும் கூறும். இவனது சயலகள் பலவாயினும் எட்டு வீரச் செயல்கள் அட்ட வீரட்டங்களாகச் சிறப்புப் பெறுவன. இவ்வகையில் சிவனது தெய்விகத் தோற்ற வரலாறு ஆகியவற்றைத் தொன்மையான கருத்துக்களின் அடிப்படையில் விளக்கங்களுடன் தருவதில் புராணங்கள் நிகரற்றன.
சிவனது தெய்விக வரலாற்றில் அரக்கர்களை அழிக்க தெய்வங்களைப் பாதுகாப்பவனாகவே சிவன் சித்திரிக்கப்படுவன். புராணங்கள் கூறும் வரலாறு இவ்வம்சத்தையே காட்டுகின்றது. மகாதேவனாக விளங்கும் சிவன் அரக்கருக்கு வரம் அளித்த நிலையில் அவர்களிடையே காணம் குறைகளைக் களையுமுகமாக அவர்களை அழிப்பவனாயும் விளங்குபவன் புராணங்கள் சிவனுக்கு வழங்கும் பெயர்களைத் தொகுத்து கைலாசநாதக் குருக்கள் தமது ஆராய்ச்சி நூலில் விரிவாக ஆராய்ந்துள்ளார். இத்தகைய பெயர்களில் பல வைதிக நூல்களில் இடம்பெற்ற பெயர்களோடு தொடர்புறுவன. இப்பெயர்களைக் கொண்டு சிவனது பல்வேறுபட்ட அம்சங்களை அறியமுடியும். அவற்றுள் உருத்திரன், பவன், சர்வன், ஈசானன், பசுபதி, பீமன், உக்கிரன், மகாதேவன், நீலலோஹிதன், சங்கரன், சிவன், சதாசிவன், சம்பு, தேவதேவன், ஸ்தாணு, கபர்தின், ஜடாதரன், ஜடாமகுடதாரி, கங்காசலிலதரன், திரிநேத்திரன், நீலகண்டன், அர்த்தநாரீசுவரன், அஷ்டமூர்த்தி, கிருத்திவாசன், மிருகேந்திர சர்மதகாரன், கஜேந்திரசர்மதாரன், சசாங்கசேகரன், சந்திரபூஷணன், சந்திரசேகரன், புஜங்கஹரன், சூலி, சூலபாணி, கிரீசன், உமாபதி, விருஷபாரூடர், கபாலி, திரிபுராந்தகர், தக்ஷயக்கு விநாசன், காமநாசன், அந்தகாசுரமர்த்தன், காலாந்தகன், மகாயோகி, மகாயோகீசுவரன். ஈசுவரன், மகேசன், பரமேசுவரன் போன்ற பெயர்கள் குறிப்பிடத்தக்கன. இத்தகைய தெய்வ வரலாற்றுப் பெயர்கள் சிவனின் பெருமைகளைக் கூறுவன. சிவன் பரம்பொருளாக முழுமுதற் கடவுளாக விளங்கிய நிலையையே புராணங் கூறும் தெய்விக மரபு! எமக்குத் தெளிவுறுத்துகின்றது. வேதத்தில் குறிப்பிடப்பட்ட உயர் பொருளே ( பக்கா இங்கு விரிவாக விளக்கம் பெறுவது கவனித்தற்குரியது. இம்மரபில் அமையும் விக்கிரகங்கள் கோயில் வழிபாட்டில் நிரந்தர இடம்பெறுவன. அவை பற்றிய விளக்கத்திற்கு புராணங்கள் தரும் விளக்கம் மிகவும் இன்றியமையாதன. ஆகமங்களில் இறைவன் திருவுருவமைக்க வேண்டும் விதிகள் கூறப்படுமிடங்களிலெல்லாம் அமைய வேண்டும் முறை மட்டுமே கூறப்படுவதும் இவற்றியல்பு, வரலாறுகள் கூறப்படாததும் குறிப்பிடத்தக்கவை. புராணங்களே இவற்றை விளக்கிக் கூற எழுந்த நூல்களுள் முதன்மையாக வைத்தெண்ணப்படத்தக்கவை.
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்