நீடித்து நிலவும் அபிவிருத்திக்கான கல்வி |Education for Sustainable Dvelopment

Education- for -Sustainable -Dvelopment
Education for Sustainable Dvelopment

 நீடித்து நிலவும் அபிவிருத்தி (Sustainable Delelopment) அபிவிருத்தி என்பது மக்கள் மேம்பாடு தொடர்பாக உலகம் முழுவதும்; பரவிக் காணப்படும் எண்ணக்கருவாகும். 1989 ஆம் ஆண்டு சூழலுக்கும் அபிவிருத்திக்குமான  உலக  ஆணையம்  இன்று  வரவலாக  ஏற்றக்  கொள்ளப்படும்  நீடித்து நிலவும் அபிவிருத்தி என்பதற்கான வரைவிலக்கணத்தை உருவாக்கியது. இதன்படி நீடித்து நிலவும் அபிவிருத்தி நிலை என்பது “எதிர்கால தலைமுறையினர் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குரிய வல்லமையைப்  பாதிக்காமல்  இன்றைய  அபிவிருத்தித்  தேவைகளை  நிறைவேற்றிக் கொள்வதாகும்.

அதாவது தேசத்தின் எதிர்கால சந்ததியினர் தமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உள்ள ஆற்றல்கள் மற்றும் இடரீதியான வாய்ப்புக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நிகழ்கால தேவைகளை அபிவிருத்தி செய்தல். என வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது.

  சமூக அடுக்கமைவு - மேலதிக தகவல்கள் 

நீடித்து நிலவும் அபிவிருத்தி என்பது எதிர்கால சந்ததியினரின் சகல எதிர்பார்ப்புக்களையும், தேவைகளையும் நிறைவு செய்வதற்குத் தற்போதுள்ள வளங்களுக்கும், இயல்பு நிலைக்கும் பாதிப்பு எற்படாதவாறு நிகழ்கால சந்ததியினர் தமது கேள்விகளையும், தேவைகளையும் நிறைவு செய்யும் வகையில் மனிதன் இயற்கைச் சூழல் மற்றும் புவிக்கோளம் ஆகியவற்றை பயன்படுத்தலும் முகாமை செய்தலுமாகும்.

நீடித்து நிற்கும் அபிவிருத்தி என்பது உண்மையிலே முழுமையானதொரு புதிய எண்ணக்கருவல்ல. விசேடமாக மூன்றாம் உலக நாடுகள், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் புதிய அபிவிருத்தியின்

உபாயம் என்ற வகையில் இந்த எண்ணக்கருவை அண்மைக்காலமாக புதிய அர்த்தத்தை தரும் விதமாக பயன்படுத்தி வருகின்றன. ளுரளவயiயெடிடந என்ற ஆங்கிலச் சொல்லுக்கு “நன்மை பயக்கும்”, “தாங்கிக் கொள்ளும்”, “நீடித்து நிலவும்”, “பேண்தகு”, “நிலையான” என்றவாறு பல்வேறு பதங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதைக் காணலாம். இவை தவிர “சகித்துக் கொள்ளக்  கூடிய”, “பொறுத்துக்கொள்ளக் கூடிய”இ  “அழிவின்றித் தொடர்கின்ற”, “சக்தியை உருவாக்கக் கூடிய”   போன்ற சொற்களும் அகராதியில் தரப்பட்டுள்ளன.

அபிவிருத்தி என்பதற்கு நாம் எல்லோரும் பொதுவாக அறிந்த Delelopment என்னும் சொல்லானது சோசலிசம், ஜனநாயகம் போன்ற சொற்களினாலும்   முன்வைக்கப்பட்டுள்ளன.  Delelopment   என்பதற்கு இணையத்தளத்தில் Operation என்ற சொல்லும் எடுத்துக்காட்டப்படுகின்றது. Sustainable Operation (நீடித்து நிலவும் செயற்பாடுகளை நெறிப்படுத்ததல்) எனும் தொடரின் பொருள் பின்வருமாறு, “எதிர்கால சந்ததியினர்   தமது   ஆற்றல்கள்   மற்றும்   இயலுமைகளுக்குத்தக   அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்குத் தமக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களை எவ்வித பாதிப்புமில்லாதவாறு உறுதிப்படுத்தத் தக்கதாக சமகால சமூகங்களின் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு நெறிப்படுத்தவதாகும்”.

கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

Sustainable Delelopment  எமக்கு மிகவும் பழக்கப்பட்ட சொல்லாக நிலைத்திருக்கும் அபிவிருத்தி எனும் பொருளை உணர்த்த Sustainable   Operation என்ற கருத்தே சாலப் பொருத்தமுடையதாக இருப்பதைக் காணலாம். இதன் மூலம் அபிவிருத்தி என்பது மட்டுமன்றி அதனோடு இணைந்த மேலும் நன்மைகளைத் தருகின்ற நாளாந்த செயற்பாடுகளை உள்ளடக்கும் பராமரிப்புப் பணிகளையும் Sustainable Operation சொல்லானது அர்த்தமுடையதாக்குகின்றது எனலாம். எனவே இந்த இரண்டு வரைவிலக்கணங்களையும்

அடிப்படையாகக் கொண்டே இவ் எண்ணக்கருவை ஆராய்தல் வேண்டும். அதன் பின்னரே பொருத்தமான தொடர் எதுவெனத் தீர்மானிக்கலாம். எனினும் ளுரளவயiயெடிடந என்பதற்கு எமது நாட்டு அரசினால் வழங்கப்படும் அர்த்தம் “உறுதியானது”  என்ற பொருளைத் தரும் “பேண்தகு”   என்பதாகும். இடம்,  வீடு, பாடசாலை, நூல்கள், உடை, கல்வி முதலிய ஓரிரு விடயங்களை வழங்குவதன் மூலம் பேண்தகு தன்மையைச் செய்ய முடியாது. பேண்தகு எனும் தொடர் அரசியல் சார்ந்த பொருளில் நன்மை தருதல் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை. இதனால் மிகவும் பொருந்தக் கூடிய நீடித்து நிலவும்  அபிவிருத்தி  என்ற  வகையில்  “நீடித்து  நிலவும்  அபிவிருத்தி”     என்ற  தொடர்  இங்கு பயன்படுத்தப்படுகின்றது. அரசியல் சார்ந்த வகையில் நன்மையின்மை என இருந்தாலும் சமூக விஞ்ஞான மற்றும் கோட்பாட்டு ரீதியான உள்ளடக்கம் உள்ளதெனக் கருதலாம்.

அபிவிருத்தியானது மக்களின் முன்னேற்றத்துடனும், பிரதேசத்தின் தேவைகளுடனும், ஒத்துச் செல்வதாக இருந்தல் வேண்டும். என்ற சிந்தனையுடன் இந்த எண்ணக்கரு கட்டியெழுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலுள்ள நிலைமைகளுக்கேற்ப பிரதேச  ரீதியாகப் பொருந்தும் வகையில், காலாசாரத்திற்குப் பொருத்தமான, கல்விசார் நெறிப்படுத்தல்களோடு கூடியவாறு பாடசாலைகளில் உருவாக்கப்படுதல் முக்கியமானதென கருதப்படுகின்றது. மக்களுக்குப் பொருத்தமான கல்வி, கல்வியை விரும்பும் மக்கள் என்றவாறும். கலாசாரம் சார் அடையாளங்களையும், பாதுகாக்கும் விதத்திலும், நீடித்து நிலவும் அபிவிருத்திக்கான வழிகாட்டல்கள், செயற்பாடுகள் அமையப்பெறுதல் வேண்டும். இதன் மூலம் எதிர்கால சந்ததியினரின் இருப்புக்கும், அவர்களுடைய அபிவிருத்தித் தேவைகளுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு அல்லது குறைபாடுகளை ஏற்படுத்தும் வகையில் இடம்பெறாத இயல்பான நடவடிக்கைகள் நான்கு அவதானிக்கப்பட்டுள்ளன.

எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்

1. புவிக் கோளத்தில் உள்ள இயற்கைப் பொருட்களை அவற்றின் இயல்பான தன்மைக்கு அப்பால் அதிகளவு வேகத்தில் விருத்தி செய்ய முடியாது. எரிபொருள், கனியவளங்கள், தங்கம், வெள்ளி,

இரத்தினக்கல் முதலிய வளங்கள் உருவாவதற்கு நீண்டகாலம் தேவை என்பதுடன் அதற்குரிய சமவிகிதத்திலன்றி மனிதன் அவற்றை அதிக வேகத்தில் பயன்படுத்துகின்றான்.

2. சமூதாயத்தினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை உயிர்க்கோளத்தில் முறைப்படி சேமித்து வைக்க முடியாது. உதாரணமாக மனித சமூகமானது பொலித்தீன், றெஜிபோம், பிளாஸ்திக்கு, முதலிய பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்து புவிக்கோளத்தில் வெளியிடுகிறது. அவற்றை நிலம் உறுஞ்சுவதற்கு நீண்ட காலம் (800 ஆண்டுகள் வரை) செல்லும்.

3. இயல்பு நிலையைக் கவனத்தில் கொள்ளாது நாம் உற்பத்தியினைச் செய்ய முடியாது. உற்பத்தியிலும், இயல்பு நிலையிலும் உள்ள வேறுபாடுகளின் பொருட்டு நீர்த் தன்மையானவற்றைக் கெடுத்துவிடக் கூடாது. சமகால உற்பத்திகளால் எதிர்கால உற்பத்திகளுக்குரிய ஆற்றலை அழித்தவிடக் கூடாது. உதாரணமாக நிகழ்கால உற்பத்திகளை வரையறை இன்றி உயர்மட்டத்தில் பயன்படுத்தினால் இயல்பு நிலையின் பல்வகைமைக்குப் பாதிப்பு ஏற்படும். இதனால் எதிர்கால உற்பத்தி ஆற்றலுக்கும் பாதிப்பு ஏற்படும். கடலிலே மீன் பிடிக்கும் போது தற்பொழுது பயன்படுத்தப்படும் விரும்பத்தகாத முறைகள் காரணமாக இயல்பாக உருவாகும் தன்மையில் பாதிப்புக்கள் உண்டாவதால் எதிர்காலத்தில் மீன்களை உண்பது தொடர்பான சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. எனவே மீளவும் உருவாக்கக் கூடிய வளங்களை அதிகம் பயன்படுத்துவதுடன், எதிர்கால வளப் பயன்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படாதவாறு எமது நுகர்வினை பூமியையும் சூழலினையும் பாதிக்காதவாறு மேற்கொள்ளுதல் வேண்டும்.

4. மேலே எடுத்துக்காட்டிய மூன்று சட்டங்கள் மூலம் எதிர்பார்த்த இலக்கினை அடையும் பொருட்டு பொதுவான மற்றும் விளைதிறன் மிக்க வகையில் மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தற்போதுள்ள வளங்களைப் பயன்படுத்துதல் நீடித்து நிலவும் அபிவிருத்திச் செயன் முறையின் நோக்கமாக இருக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட வளங்களிலிருந்து அதிகூடிய பயனைப் பெறுவதற்கும், அதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்கு நியாயமானவற்றை உறுதி செய்வதற்கும், வகை செய்பவர்களாக நாம் இருத்தல் வேண்டும்.

நீடித்து நிலவும் அபிவிருத்திக்கான கல்வி

நீடித்து நிலவும் அபிவிருத்தி என்பது கல்வியை மையமாகக் கொண்ட காரணியாகும். கல்வியும் நீடித்து நிலவும் அபிவிருத்தியும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத அளவுக்குத் தொடர்புட்டவையாகும். உண்மையில் அபிவிருத்தி என்பது பொருளாதாரத்தை மையமாகக் கொண்டதாகவே கருதப்பட்டு வந்தது. பின்னர் சமூக அபிவிருத்தி என்பது முன்னிலைப் படுத்தப்பட்டது.

எந்தவொரு அபிவிருத்தியிலும் இரண்டு பக்கங்கள் உள்ளன. நீடித்து நிலவும் அபிவிருத்தி மற்றும் கல்வி ஆகியவற்றுக்கிடையில் நிலவும் தொடர்புகளை எல்லோரும் விளங்கிக் கொள்வது கடினம் என்பதால் நீடித்து நிலவும் அபிவிருத்தியை கல்வியிலிருந்து பிரிக்கமுடியாமல் இருப்பது ஏன் என விமர்சனம் செய்யப்படுகின்றது. நீடித்து நிலவும் அபிவிருத்தியில் பிரதேசரீதியான, மக்களுக்குத் தகுந்த, கலாசார ரீதியாகப் பொருத்தமான வேலைத் திட்டங்களை நெறிப்படுத்துதல் அடிப்படையான தேவையாகும். அங்கு பிரதேச ரீதியான சூழல். பொருளாதாரம் மற்றும் மாற்றமுறா சமூதாய நிலைமைகள் ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். அதன் பலாபலனாக உலகம் முழுவதிலும் நீடித்து நிலவும் அபிவிருத்தியின் பொருட்டு கல்வி சார் நிகழ்ச்சித் திட்டங்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுவதை மற்றும் பல்வேறு வடிவங்களில் இடம்பெறுவதைக் காணமுடியும். எவ்வாறாயினும் இதன்பொருட்டு அடிப்படையாகக் கொள்ளக் கூடிய நான்கு கோட்பாடுகள் உள்ளன.

நீடித்து நிலவும் அபிவிருத்திக் கோட்பாடுகள்

1. அடிப்படைக் கல்வியை விருத்தி செய்தல்.

2. நடைமுறையிலுள்ள கல்வியை நீடித்து நிலவும் அபிவிருத்தித் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் புனருத்தாரணம் செய்தல்.

3. பொது மக்களின் விளக்கம் மற்றும் விழிப்புணர்வு போன்றவற்றை விருத்தி செய்தல்.

4. மேலே கூறப்பட்ட மூன்று காரணிகளையும் அடைந்து கொள்ளும் பொருட்டுத் தேவையான மனித வளத்தைப் பயிற்றுவித்தல். அடிப்படைக் கல்வியை விருத்தி செய்தல் அடிப்படைக் கல்வியின் கால அளவு மற்றும் பாட இணைப்புத் தொடர்பாக உலகம் முழுவதிலும் வேறுபாடுகள் இருப்பதைக் காணலாம். ஆரம்பக் கல்வியே ஏனைய நாடுகளில் அடிப்படைக் கல்வியாகக் கருதப்படுகின்றது. இன்னும் சில நாடுகளில் பன்னிரண்டு ஆண்டு அடிப்படைக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாசிப்பு, எழுத்து, மற்றும் எண் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. எமது நாடான இலங்கையில் பதினொரு வருட அடிப்படைக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.(16 வயது வரை). க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் தோல்வியடையும் மாணவர்களும் தொழிற் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்காக 13 வருட உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வி தற்போது  பாடசாலைகளிலே  நடைமுறைப்படுத்தப்பட்டு  வருவதைக்  காணலாம்.  நிலைமை எவ்வாறு இருப்பினும் நூல்களை வாசித்தல், எழுத்து, அடிப்படைக் கணித அனுபவங்களை விருத்தி செய்தல் என்பவற்றுடன் தமது வீட்டிலும் சமூக வாhழ்க்கையிலும் தமக்குள்ள வகிபாகத்தை அறிந்து கொண்டு அதற்கான திறன்களை அபிவிருத்தி செய்வதற்கு அடிப்படைக் கல்வியில் இடம் வழங்கப்பட வேண்டும். அது போலவே மாணவன் தனது நாட்டினது செயற்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தமது பிரச்சினைகளுக்கு அப்பால் உலகில் அன்றாடம் நிகழும் முக்கிய நிகழ்வுகளைப் பற்றி கவனமாக இருப்பது முக்கியமானதாகும்.

இப்பொழுது பல நாடுகள் செயற்படும் விதத்திலே அடிப்படை எழுத்தறிவை விருத்தி செய்து கொள்ளல், நீடித்து நிலவும் அபிவிருத்திக்குப் போதாதெனக் கூறுதல் வேண்டும். மக்களினங்கள் தமது நீடித்து நிலவும் நோக்கங்களை இனம் கண்டு அவற்றை அடைந்து கொள்வதற்கு உதவும் பல்வேறு அபிவிருத்தி உபாயங்களை பின்பற்றுதல் மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாகத் தமது திறன்கள், விழுமியங்கள், குணஇயல்புகளை விருத்தி செய்து கொள்ளும் வேளையில் மக்கள் பங்கேற்பும், சமூதாயத்தின் தீர்மானம் மேற்கொள்ளும் ஆற்றலையும் ஊக்கப்படுத்தக் கூடிய அபிவிருத்தி நோக்கங்களில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். அது போலவே நீடித்து நிலவும் சமூகமொன்றில் பொது மக்களின் பங்கேற்பும் அடிப்படை இலட்சணமாகக் காணப்படுகின்றது. பொது மக்களது பங்கேற்பினை உருவாக்கும் விதத்தில் அடிப்படைக் கல்வியினைத் திட்டமிட வேண்டும். இங்கு குறிப்பாக பின்வரும் திறன்களை விருத்தி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குதல் வேண்டும்.

விசாரணைக்குரிய திறன்கள்.

ஒழுங்கமைப்புச் செய்யும் ஆற்றல்.

தரவு மற்றும் தகவல்களுக்கு விளக்கம் காணும் திறன்.

பிரச்சினைகளை விமர்சன ரீதியாக நோக்கும் திறன்.

பகுப்பாய்வு செய்யும் திறன்.

இத்தகைய தேவைகளுக்குப் புறம்பாக பெரும்பாலான நாடுகளிலே அடிப்படைக் கல்வியானது கீழ் மட்டத்திலேயே உள்ளது. நிலவும் அபிவிருத்தி மற்றும் சமூகத்தின் எதிர்காலம் தொடர்பாகத் தேசிய ரீதியாகத் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் பாதிப்புக்களை ஏற்படுத்தம். இலத்தின் அமெரிக்காவிலும் கரிபியன் நாடுகளிலும் கட்டாயக் கல்வி வயது 6 தொடக்கம் 8 வரை இருந்தாலும் வருடாந்தம் 15 வீதம் அடையவில்லை  என  ஆய்வுகள்  சுட்டிக்காட்டுகின்றன.  ஆசியாவிலே  வங்களாதேஸ், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் ஐந்து வருட கட்டாயக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டாலும் ஆண்களிலும் பார்க்க பெண் பிள்ளைகளின் பாடசாலை வருடக் கல்வி குறைவாக உள்ளது. ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பாடசாலைகளில் சேர்ந்து கொள்ளுதல் அல்லது பாடசாலைக்குச் செல்லும் காலம் வருடக்கணக்கிலன்றி மாதக்கணக்கிலேயே உள்ளது. யுத்தம். போர், வரட்சி, நோய்கள் போன்ற காரணங்களால்  பாடசாலை  செல்லல்  இலகுவானதாக  இல்லாமையே  இதற்கான காரணங்களாகும்.

இதனால் சில மாதங்களேனும் பாடசாலைக் கல்வியைப் பெறுதல் தகைமையாகக் கொள்ளப்படுகின்றது. இவ்வாறான கீழ்மட்டப் பண்புகளையுடைய கல்வியும் நீடித்து நிலவும் அபிவிருத்தியை குறுகிய கால மற்றும் நீண்டகால அடிப்படையில் திட்டமிடுவதில் தாக்கத்தினை உண்டு பண்ணுகிறது. உலகம் முழுவதிலுமுள்ள நாடுகளில் அநேகமானவை 1990களிலிருந்து அடிப்படைக் கல்வியில் கூடுதலான ஆர்வம் காட்டியமையால் அடிப்படைக் கல்வியில் பூகோள ரீதியான முன்னேற்றத்தைக் காண முடிந்தது. அடிப்படைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளின் தொகையும் தற்பொழுது உலகம் முழுவதிலும் அதிகரித்துச் செல்கின்றது. பாடசாலைகளில் சேரும் பிள்ளைகளின் சதவீதமும் அதிகரித்துள்ளது. பால் வேறுபாடுகளின்றி பிள்ளைகள் சேர்ந்து கொண்டமை இதற்குக் காரணமாகும். பூகோள ரீதியாகப் பார்க்கும் போது அடிப்படைக் கல்வி மட்டுமன்றி, ஆரம்ப மற்றும் இடைநிலை பாடசாலைக் கல்வியிலும், ஆண்-பெண் வேறுபாட்டிலுள்ள வித்தியாசம் குறைந்து செல்வதைக் காணலாம். எவ்வாறாயினும் பாடசாலைக்குச் செல்லாத பெண் பிள்ளைகள் இன்னும் இருக்கின்றனர். இந்நிலைமையின் கீழ் 2015 இல் எழுத்தறிவை பெற்றக்கொள்வதை எதிர்பார்க்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட “எல்லோருக்கும் கல்வி” எனும் குறிக்கோள் முழுமையாக அடையப்பட வில்லை என்றே கூறலாம். இது தற்போது 2030 வரை நீடிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

நீடித்து நிலவும் அபிவிருத்திக்கும், சுற்றாடலுக்கும் இடையில் அந்நியோன்னியமான தொடர்பு உள்ளது. ஒன்றிலிருந்து ஒன்றினைப் பிரிக்க முடியாத அளவுக்கு இணைந்துள்ள இவற்றின் மத்தியில் வேற்றுமைகளை அல்லது தடைகளை ஏற்படுத்திக் கொண்டு நீடித்து நிலவும் அபிவிருத்தியைச் செய்ய முடியாது. சுற்றாடலிலுள்ள வளங்களைப் பற்றிக் கவனத்தில் கொள்ளாமல் அவற்றை நயவஞ்சகம் செய்யும் வகையிலான பணிகளால் நீடித்து நிலவும் அபிவிருத்தியின் மூலம் எதிர்பார்ப்பவற்றை நிறைவேற்ற முடியாது. வளங்களை பயன்படுத்தும் போது சுற்றாடல் தொடர்பாக அவதானம் செலுத்ததல் வேண்டும் என்பது கட்டாயமானதாகும். அபிவிருத்தி என்பது உண்மையிலே சுற்றாடலை மேலும் விருத்தி செய்வதாகும். சுற்றாடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு அல்லது சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புக்களை இயன்றளவு குறைத்துக் கொள்ளல் வேண்டும். அதாவது மனிதனா? அல்லது சுற்றாடலா? முக்கியமானது என்பதே இங்கு முக்கியமானமதாகும். இந்த பிரச்சினை தொடர்பாக அரசியல், பொருளாதார, சமூக விஞ்ஞானத் துறைகளிலே புதிய கருத்து வேறுபாடுகள் உள்ளதைக் காணலாம்.

இறுதிப் பகுப்பாய்வு என்ற வகையில் இன்று மிக முக்கியமாகக் கருதப்படுவது சுற்றாடலைப் பாதுகாக்கும் வேளையில் சுற்றாடலுக்குக் குறைந்த பாதிப்பு நிலவினாலும் மனிதன் அச்சுற்றாடலிலேயே வாழ வேண்டியுள்ளது. இதன்படி மக்களின் வாழ்க்கையின் இருப்பினை நோக்கி மனித தேவையை நீண்ட காலம் உறுதிப்படுத்த வேண்டியிருந்தாலும், சுற்றாடலையும் நீண்ட காலம் பாதுகாக்க வேண்டியுள்ளது.

இது போலவே அபிவிருத்தியையும், சுற்றாடலையும் பாதுகாக்க வேண்டுமானால் இரு எண்ணக்கருக்களிலும் சிறப்பானதொரு பகுப்பாய்வை மேற்கொண்டு அதிசிறந்ததொரு அபிவிருத்தியை எதிர்பார்த்தல் வேண்டும்.

டொஹொல்டா மிடோஸ் தனது “அபிவிருத்தியின் எல்லை” என்ற பிரசித்தி பெற்ற நூலில் உலகக் கட்டமைப்பின் நீடிப்புத் தன்மை நோக்கி மீள் கட்டமைப்புச் செய்வதற்கான ஆறு வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்.

1. மீள்சுழற்சி செய்ய முடியாத வளப் பயன்பாட்டினை வெகுவாகக் குறைத்தல்.

2. மீள்சுழற்சி முறையில் இயலுமான அளவில் வளத்துஷ்பிரயோகம் தவிர்க்கப்படுதல்.

3. இருக்கும் வளங்களை உச்ச செயற்திறனுடனும், சிக்கனத்துடனும் பயன்படுத்துதல்.

4. சனத்தொகைப் பெருக்கமும் பொருள் உச்ச விருத்தி வேகமும் படிப்படியாகக் குறைந்து சென்று இறுதியில் நிறுத்திக் கொள்ளல் வேண்டும்.

5. மனித நலன்கள் இயற்கைச் சூழல் மற்றும் குறிப்பிட்ட வள நிலைமையின் நிரந்தர முன்னேற்றம் போன்றவற்றை மீளாய்வுக்கு உட்படுத்துதல்.

6. குறைந்து செல்லும் சூழல் காரணிகள் குறை நிரப்பலுக்காக அளிக்கப்பட வேண்டிய பிரதிபலிப்புக்கான காலக்கெடுவை அதிகரித்தல். அதாவது சூழலுக்கு விளையும் கேடுகளைச் சமாளித்துக் கொள்வதற்கான பொதுவான காலத்தையும் வாய்பினையும் வழங்குதல் வேண்டும்.

ஜூலியான் அகிமஸ் எனும் கல்வியியலாளர் நீடித்து நிலவும் கல்வியினை “சூழல் சமநிலைத் தொகுதிக்குள் அமைந்த எல்லைகளுக்குள் வாழ்ந்து கொண்டு நல்லதோர் வாழ்க்கைத் தரத்தினை உறுதி செய்து கொண்டு பொதுவான மற்றும் சமநிலை வாழ்வின் அவசியத்தை உணருதலே நீடித்து நிலவும் கல்வி என்ற அடிப்படையில் வரைவிலக்கணப்படுத்துகின்றார். இங்கு எதிர்பார்க்கப்படுவது, பிரசைகளின் பிரதேச ரீதியான அவசியமும் கலாசார சாய்வுக்கும் உகந்த நீடித்து நிலவும்

இலக்குகளைத் தெரிவு செய்து கொள்வதாகும். தமது அடிப்படை வாழ்க்கைத் தேவைகளைப் போன்றே நிகழ்கால, எதிர்கால நிலைமைகளையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். இவை அனைத்தும் பாடசாலைப் பாடத்திட்டத்தின் இலக்குகளுடன் ஒன்றிணைத்தல் வேண்டும்.

பேண்தகு அபிவிருத்தி இலக்குகள்

பேண்தகு அபிவிருத்திக் இலக்குகளில் 17 பிரதான இலக்குகளும் 169 துணை இலக்குகளும் உள்ளடங்குகின்றன. இவை பேண்தகு அபிவிருத்தியுடன் தொடர்புடைய பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளன. இந்த இலக்குகள் 2016 ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதுடன் அவற்றை வெற்றி கொள்வதற்கான இறுதி இலக்கு 2030 ஆண்டாகும் இது சுமார் 15 வருட காலப்பகுதியைக் கொண்டதாகும்.

பேண்தகு அபிவிருத்தி இலக்குகளின் முக்கிய அம்சம் என்னவெனில், அவை உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஏற்புடையதாக இருப்பதாகும். அவ்வாறே அபிவிருத்திக்கான அதிக துறைகளையும், அதிக இலக்குகளையும் கொண்டிருப்பதுமாகும். இதுவரை கலந்துரையாடப்படாத பெண்களை வலுவூட்டல், சமாதானமும் பாதுகாப்பும் மற்றும் நல்லாட்சி போன்ற எண்ணக்கருக்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருப்பது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

எதிர்கால உலகின் அபிவிருத்தித் திட்டங்கள் இப்புதிய இலக்குகளின் அடிப்படையில் அமைந்தவையாக இருக்கும். அனைத்து நாடுகளும் இந்த இலக்குகளை தமது அபிவிருத்தி கொள்கைத் திட்டங்களில் உள்ளடக்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்த இலக்குகளை அடைய குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்ய வேண்டியிருக்கும். விளிம்பு நிலை வறுமையை ஒழிப்பதற்காக வருடாந்தம் சுமார் 66 பில்லியன் அமெரிக்க டொலர் தேவை எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதே போன்று நீர், விவசாயம், மின்சக்தி, போன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு வருடாந்தம் தேவையாகும் நிதியும் அதிகமானதாகும். மொத்தத்தில் இந்த

இலக்குகளை அடைந்து கொள்வதற்கு வருடாந்தம் மூன்று டிரில்லியன் டொலர்கள் தேவை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிதியை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது பிரச்சினையாகும். அந்தந்த நாட்டு மக்களின் நிதி உதவிகளும் இவ் இலக்குகளை அடைவதற்கு முக்கியமாகத் தேவைப்படுகின்றன. இதற்காக பின்வரும் நடிவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படுகின்றது.

வரிக் கொள்கையை மாற்றியமைத்தல்.

தனியார் துறையை ஊக்குவித்தல்.

சட்டவிரோத நிதி நடவடிக்கைகளை நிறுத்துதல்.

ஊழலை இல்லாதொழித்தல்.

நிதியங்களை அமைத்தல்.

சில நாடுகளில் இதற்கான நிதி வளங்களைப் பெற்றுக் கொள்வதில் இயலாமை உணரப்பட்டுள்ளது. உதாரணமாக எத்தியோப்பியாவில் நடைபெற்ற மாநாடொன்றில் இந்த இலக்குகளை அடைந்து கொள்வதற்குத் தேவையான நிதியங்களை அமைப்பது கடினமானது எனவும் அபிவிருத்தியடைந்த நாடுகள் இதனைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரதான இலக்குகளும் துணை இலக்குகளும்.

1. வறுமையை அனைத்து முறைகளிலும் அனைத்து இடங்களிலும் முடிவறுத்துதல்

பின்தங்கிய வறுமையை (நாளொன்றுக்கு 1.25 டொலருக்கு குறைந்த வருமானம் பெறும்) 2030 ஆண்டளவில் அடியோடு ஒழித்தல்.

அந்தந்த நாடுகளில் தேசிய சுட்டிகளுக்கு அமைய வறுமையில் வாடும் மக்களின் தொகையை 2030 ஆம் ஆண்டளவில் அரைவாசியாகக் குறைத்தல்.

2030 ஆம் ஆண்டளவில் வறுமை மற்றும் நலிவுற்ற பகுதி மக்களின் பொருளாதார வளங்களை சமமாக அடையக்கூடியவாறு இருத்தல்.

ஏழ்மை மற்றும் நலிவுற்ற பகுதியினர் காலநிலை தொடர்பான பின்தங்கிய நிலை மற்றும் அனர்த்தங்களின் போது ஏற்படும் தாக்கங்களுக்கு தாக்குப்பிடித்தல்.

2. பசியால் வாடுதலை முடிவுறுத்துதல்

உணவு பாதுகாப்பு மற்றும் உயர் போசாக்கு மட்டத்தை அடைதல்.

பேண்தகு விவசாயத்தை மேம்படுத்துதல்.

2030 ஆம் ஆண்டளவில் மக்கள் பசியால் வாடுவதை முடிவுறுத்துதல்.

அனைத்து மக்கள் பகுதியினருக்கும் பாதுகாப்பான, போசாக்கான, போதுமான அளவு உணவு வருடம் முழுவதும் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்தல்.

2030 ஆம் ஆண்டளவில் பல்வேறு விதமான போசாக்கின்மை நிலைமையை முடிவுறுத்துதல் மற்றும் 5 வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் வயதுக்கேற்ற நிறை இல்லாதிருத்தல் தொடர்பிலான இலக்குகளை 2025 ஆம் ஆண்டளவில் அடைதல்.

2030 ஆம் ஆண்டளவில் விவசாய விளைச்சலை இரட்டிப்பாக்குதல், சிறியளவிலான உணவு உற்பத்தியாளர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்.

2030 ஆம் ஆண்டளவில் பேண்தகு உணவு உற்பத்திக் கட்டமைப்பை உறுதிப்படுத்துதல், நெகிழ்வுத் திறன்மிக்க வழிமுறைகளை அமுல்படுத்துதல்.

2030 ஆம் ஆண்டளவில் விதை, பயிரினங்கள், வளர்க்கும் மற்றும் வீட்டு விலங்குகள் மற்றும் அவற்றின் மாதிரிகள், இனங்களின் பன்மைத்துவத்தைப் பாதுகாத்தல்.

3. ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிப்படுத்ததல் மற்றும் அனைவருக்கும், அனைத்து வயதிலும் நல்லிருப்பை உறுதிப்படுத்துதல்.

உலகளாவிய ரீதியில் தாய் மரண வீதத்தை 2030 ஆம் ஆண்டளவில் உயிருள்ள பிறப்புக்கள் 100,000 க்கு 70 ஆகக் குறைத்தல்.

பிறக்கும் பிள்ளைகளினதும் 5 வயதுக்கு குறைந்த பிள்ளைகளினது தடுக்கக் கூடிய மரணங்களை 2030 ஆம் ஆண்டளவில் முடிவுறுத்ததல்.

2030 ஆம் ஆண்டளவில் பிறப்பு மரண வீதத்தை 1000 பிறப்புகளுக்கு 12 வரை குறைத்தல் மற்றும் 5 வயதுக்கு குறைந்த பிள்ளைகளின் மரணத்தை 1000 பிறப்புகளுக்கு 25 வரை குறைத்தல்.

2030 ஆம் ஆண்டளவில் எயிட்ஸ், காசநோய் மற்றும் வெப்பமண்டல நோய்களை அடியோடு ஒழித்தல், செங்கமாரி, நீரின் மூலம் பரவும் நோய்கள், தொற்றா நோய்கள் போன்றவற்றை அடியோடு ஒழித்தல்.

2030 ஆம் ஆண்டளவில் வீதி விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் மற்றும் காயங்களை அரைவாசியாகக் குறைத்தல்.

பொருத்தமானவாறு புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பில் வரையறுக்கப்பட்ட உடன்பாடுகளைச் செயற்படுத்துதலை வலுவூட்டல்.

4. சமமான, பரம்பலடைந்த (ஐnஉடரளநை) சகல சமூகங்களுக்கும் வாய்ப்புக் கிடைக்கக் கூடியவாறு கல்வியைப் பெற்றுக் கொள்வதை உறுதி செய்தலும், அனைவருக்கும் வாழந் hள் பூராகவும் கல்வியைப் பெற்றுக் கொடுக்கக் கூடியவாறு அதனை மேம்படுத்துதலும்.

2030 ஆம் ஆண்டளவில் சகல ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் சுதந்திரமான, சமனான மற்றும் பண்புத் தரம்மிக்க ஆரம்ப நிலை மற்றும் இரண்டாம் நிலைக் கல்வியைப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துதல்.

2030 ஆம் ஆண்டளவில் சகல ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் உயர் தரத்திலான முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்காகப் பிரவேசித்தல்.

2030 ஆம் ஆண்டளவில் சகல ஆண் மற்றும் பெண் பிள்ளைகளும் ஏற்றுக் கொள்ளக்

கூடிய பண்புத் தரமுடைய தொழிநுட்ப, தொழில்சார் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான சமமான வாய்ப்பினை உறுதிப்படுத்துதல்.

2030 ஆம் ஆண்டளவில் சகல இளைஞர் யுவதிகளும் மற்றும் வளர்ந்தோரில் குறிப்பிடத்தக்க அளவினர் எழுத்தறிவு, எண்ணறிவு ஆற்றலைப் பெறுவதை உறுதிப்படுத்துதல்.

அபிவிருத்தியடைந்து வரும் குறிப்பாக மூன்றாம் மண்டல நாடுகளுக்கு வழங்கப்படும் கல்விக்கான புலமைப் பரிசில்களை அதிகரித்தல். 

5. ஆண்-பெண் பால்நிலை சமூகத்தை அடைதல் மற்றும் பெண்களையும் பெண் பிள்ளைகளையும் வலுவூட்டுதல்.

பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் எதிராக நிகழும் பொதுவான மற்றும் பொது இடங்களில் நிகழும் சகல வகையான வன்முறைகளையும் முடிவுறுத்துதல்.

அரசியல், பொருளாதாரம், பொது வாழ்க்கையின் சகல மட்டங்களிலும் தீர்மானம் மேற்கொள்ளப்படும் சகல சந்தர்ப்பங்களிலும் பெண்களின் பரிபூரணமான உற்பத்தித் திறன் மிக்க பங்கேற்பிற்கும், தலைமைத்துவத்திற்குமான சந்தர்ப்பங்களை உறுதிப்படுத்துதல்.

6. அனைவருக்கும் நீர் கிடைத்தல், பேண்தகு அபிவிருத்தி மற்றும் பொது சுகாதார வசதிகள் கிடைப்பதை உறுதிப்படுத்ததல்.

2030 ஆண்டளவில் அனைவருக்கும் பாதுகாப்பானதும், தாங்கக் கூடிய விலையுடையதுமான குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்கு உலகளாவிய ரீதியில் சமமான வாய்ப்பினைப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துதல்.

2030 ஆண்டளவில் போதுமான, சமமான, பொதுச் சுகாதார வசதிகளை அனைவரும் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்தல்.

2030 ஆண்டளவில் நீர் மாசடைதலை குறைத்தல், நச்சு இரசாயனப் பொருட்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் நீருடன் சேர்வதை நிறுத்ததல், முகாமை செய்யப்படாத கழிவு நீரின் அளவை பாதியாகக் குறைத்தல், நீரின் மீள்சுழற்சி மற்றும் பாதுகாப்பான மீள்பாவனையை மேம்படுத்துதல் என்பவற்றினூடாக நீரின் பண்புத் தரத்தை உயர்த்துதல்.

2030 ஆண்டளவில் சகல துறைகளினதும் நீர் பாவனையின் வினைத்திறனை குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தல், நீர்ப் பற்றாக்குறையிலிருந்து மீளுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தவதனூடாக நீர்hற்றாக் குறையினால் துயருறும் மக்களின் அளவைக் குறைத்தல்.

நீரண்டிய சூழல் தொகுதிகளைப் பாதுகாத்தலும், மீளமைத்தலும்.

நீர் மற்றும் பொதுச் சுகாதார முகாமைத்துவ அபிவிருத்தியின் போது பிரதேச மக்களின் பங்களிப்பை அதிகரித்தலும், உதவியளித்தலும்.

7. ஏற்றுக்கொள்ளக் கூடிய, நம்பகரமான, பேண்தகு நவீன வலுச்சக்தி முறைகளுக்கான பிரவேசத்தை சகலருக்கும் உறுதிப்படுத்ததல்.

2030 ஆண்டளவில் ஏற்றுக் கொள்ளக் கூடிய, நம்பகரமான, மற்றும் நவீன வலுச்சக்தியைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்ததல்.

2030 ஆண்டளவில் உலகளாவிய வலுச்சக்தி முறைகளுள் காணப்படும் மீள புதுப்பிக்கத் தக்க மின்சக்தி முறைகளை குறிப்பிடத்தக்களவு அதிகரித்தல்.

2030 ஆண்டளவில் மின்சக்தியின் வினைத்திறனான வளர்ச்சியை உலகளாவிய ரீதியில்

இருமடங்காக அதிகரித்தல்.

2030 ஆண்டளவில் தூய்மையான வலுச்சக்தி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் தொழிநுட்பம் தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பினை அதிகரித்தல்.

8. ஏற்றுக்கொள்ளக் கூடிய, உள்ளீர்க்கப்பட்ட பேண்தகு பொருளாதார வளர்ச்சி, பூரண உற்பத்தித் திறனுடைய வேலை வாய்ப்புக்கள் மற்றும் அனைவரும் கௌரவமான தொழில்களைப் பெற்றுக் கொள்வதை மேம்படுத்துதல்

தேசிய நிலைமைகளுக்கேற்ப தனிநபர் பொருளாதார வளர்ச்சியை பேணுதல், விசேடமாக துறை அபிவிருத்தியுடைய நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தியின் 7 சதவீத வயர்ச்சியை வருடாந்தம் பேணிச் செல்லுதல்.

பல்வகைமை, தொழிநுட்ப வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களினூடாக உயர் மட்டத்திலான பொருளாதார உற்பத்திப் பெருக்கத்தை பெற்றுக் கொள்ளதல்.

2030 ஆம் ஆண்டளவில் உற்பத்தி நுகர்வில் உலகளாவியரீதியில் வளங்களின் வினைத்திறன் வளர்ச்சியும் பொருளாதார அபிவிருத்தியில் சூழல் மாசடைதலை முகாமை செய்தல்.

தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பான தொழில் சூழலை மேம்படுத்துதல்.

9. மீள்கட்டமைப்பு வசதிகள், உள்ளீர்ப்பு, பேண்தகு கைத்தொழில்மயமாக்க மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களை ஊக்கப்படுத்துதல்

2030 ஆம் ஆண்டளவில் உள்ளீர்ப்பு, பேண்தகு கைத்தொழில்மயமாக்க மேம்பாடு, கைத்தொழில் துறையின் தொழில் வாய்ப்புக்கள் மற்றும் மொத்த தேசிய உற்பத்திக்கான பங்களிப்பை அதிகரித்தல்.

2030 ஆம் ஆண்டளவில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கைத்தொழில் விருத்தி செய்வதன் மூலமாக பேண்தகு தன்மை, வளங்களின் பயன்பாட்டில் வினைத்திறனை அதிகரித்தல், தூய்மையான மற்றும் சூழல்நேய தொழிநுட்ப முறைகளைப் பயன்படுத்துதல்.

10. நாடுகளுக்குள்ளேயும், நாடுகளுக்கிடையேயும்,  உள்ள  ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல்.

நாட்டில் குறைந்த வருமானம் பெறும் 40 வீதமானோரின் பொருளாதார வளர்ச்சியை 2030

இல் தேசிய பொதுவான மட்டத்தை விடவும் உயர்ந்த மட்டத்தில் பேணுதல்.

வயது, பால்நிலை, விசேட தேவையுடையோர், போன்ற விடயங்களைக் கருத்திற் கொள்ளாது சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் ரீதியாக 2030 ஆண்டாகும் போது அனைவரையும் உள்ளீர்த்தலை மேம்படுத்துதல்.

நிதி, சம்பளம் மற்றும் சமூக பாதுகாப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டு கூடுதலான சமத்துவம் அடைதல்.

11. நகர மற்றும் மனித குடியிருப்புக்களை உள்ளீர்த்தல், பாதுகாப்பு, நெகிழ்திறன் மற்றும் பேண்திறன் தன்மையை மாற்றுதல்.

2030 ஆம் ஆண்டளவில் போதுமானளவு, பாதுகாப்பானதும், கொள்வனவுச் சக்திக்குத் தாக்குப்பிடிக்கக் கூடியளவு வீட்டு வசதி கிடைப்பதை உறுதிப்படுத்துதல்.

2030 ஆம் ஆண்டளவில் பாதுகாப்பான, கொள்வனவுச் சக்திக்குத் தாக்குப் பிடிக்கக் கூடிய பேண்தகு போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை அனைவருக்கும் வழங்குமுகமாக வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல்.

2030 ஆம் ஆண்டளவில் பேண்தகு நகரமயமாக்கலை மேம்படுத்துதல்.

உலகில் பண்பாடு மற்றும் இயற்கை மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளைப் பலப்படுத்ததல்.

வளியின் தரம், கழிவு முகாமைத்துவம் தொடர்பில் விசேட அக்கறையுடன் நகரங்களில் தனிநபர் சுற்றாடல் தாக்கத்தினை 2030 ஆண்டளவில் குறைத்தல்.

வள வினைத்திறன், உள்ளீர்க்கப்படும் தன்மை காலநிலை மாற்றங்களைக் தடுத்தல்  மற்றும் இயைபாக்கம் அடைதல், அனர்த்தங்களுக்குத் தாக்குப்பிடித்தல் போன்ற விடயங்கள் தொடர்பான திட்டமிடல் மேற்கொள்ளுவதில் கவனமெடுத்தல் நகர்சார் மனிதக் குடியிருப்புக்களின் தொகையை 2030 ஆண்டளவில் அதிகரித்தல்.

12. பேண்தகு நுகர்வு மற்றும் உற்பத்தி முறையை உறுதிப்படுத்துதல்

பேண்தகு நுகர்வு மற்றும் உற்பத்தி தொடர்பில் பத்தாண்டு சட்டகத்தை செயற்படுத்ததல்.

2030 ஆம் ஆண்டளவில் இயற்கைவள பேண்தகு முகாமைத்துவம் மற்றும் வினைத்திறனான பயன்பாட்டை அடைதல்.

சிறு வியாபார நிலையங்கள், மற்றும் நுகர்வு மட்டத்தில் இடம்பெறும் தனிநபர் உணவு வீணாக்கலை 2030 ஆண்டளவில் அரைவாசியாகக் குறைத்தல்.

இரசாயனப் பொருட்கள், கழிவுப் பொருட்களை 2020 ஆம் ஆண்டளவில் பேண்தகு மட்டத்தில் முகாமைத்துவம் செய்தல்.

தவிர்த்தல், குறைத்தல், மீள்சுழற்சி மற்றும் மீள்பயன்பாடு ஆகியவற்றின் ஊடாக கழிவுப் பொருள் உருவாதலை 2030 ஆண்டளவில் காத்திரமானளவு குறைத்தல்.

பேண்தகு அபிவிருத்தியில் தாக்கம் செலுத்தும் குறைபாடுகளைக் கண்காணிப்பதற்காக கருவிகளை (வுழழடள) உருவாக்குதல்.

13. காலநிலை மாற்றமடைதல் மற்றும் அதன் தாக்கங்களைத் தவிர்ப்பதற்காக துரித நடவடிக்கை எடுத்தல்.

காலநிலை மாற்றமடைதல் தொடர்பான அனர்த்தங்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் நெகிழ்வுத்தன்மை மற்றும் இயைபாக்கம் அடையும் ஆற்றலை வலுவூட்டுதல்.

காலநிலை மாற்றமடைவதைக் குறைத்தல், இயைபாக்கமடைதல், தாக்கங்களைக் குறைத்தல், முன்னெச்சரிக்கைக் கல்வி, புரிந்துணர்வு மற்றும் ஆற்றலை அதிகரித்தல்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் காலநிலை மாற்றமடைதல் மற்றும் அதன் தாக்கங்களை தவிர்ப்பதற்கு 2020 அண்டளவில் அபிவிருத்தியடைந்த நாடுகளின் பங்களிப்பில் வருடாந்தம் 100 பில்லியன் டொலர் நிதியத்தை உருவாக்கும் வாக்குறுதியைச் செயற்படுத்துதல்.

14. சமுத்திரம், கடல் மற்றும் சமூத்திர வளங்களை பாதுகாத்தல் மற்றும் பேண்தகு அபிவிருத்திக்காகப் பயன்படுத்ததல்.

அனைத்து வகையிலும் சமூத்திர மாசடைதலை 2025 ஆம் ஆண்டளவில் தடுத்தல் மற்றும் காத்திரமான அளவு குறைத்தல்.

சமுத்திர மற்றும் கரையோர சுற்றாடல் கட்டமைப்பை 2020 ஆம் ஆண்டளவில் பேண்தகு முறையில் முகாமைத்துவம் செய்தல் மற்றும் பாதுகாத்தல்

சமுத்திரம் அமிலமயமாதலின் தாக்கத்தைக் குறைத்தல் மற்றும் தீர்வு காணுதல்.

சமுத்திர மீன்பிடித்தல் மற்றும் மிகையாக மீன் பிடித்தல், சட்ட விரோத மீன்பிடி, பாதிப்பை ஏற்படுத்தும் முறைகளைப் பயன்படுத்ததல் போன்றவற்றை 2020 ஆண்டளவில் வெற்றிகரமாக நிர்வகித்தல்.

15. பௌதீக மற்றும் சுற்றாடல் கட்டமைப்பை பாதுகாத்தல், மீளமைத்தல், மற்றும் பேண்தகு பயன்பாட்டை மேம்படுத்ததல், வனங்களை பேண்தகு முறையில் முகாமைத்துவம் செய்தல்,பாலைவனமாதலைத் தடுத்தல், மண்ணரிப்பை நிறுத்தி அதனை மீளமைத்தல், மற்றும் உயிரியல் பன்மைத்துவம் அழிவடைவதை நிறுத்ததல்.

2020ஆம் ஆண்டளவில் பௌதீக மற்றும் உள்ளக நன்னீர் சுற்றாடல் கட்டமைப்பை பேணிப்பாதுகாத்தல், மீளமைத்தல், மற்றும் பேண்தகு பயன்பாட்டை உறுதிப்படுத்ததல்.

2020 ஆம் ஆண்டளவில் அனைத்து வளங்களையும் பேண்தகு முகாமைத்துவ மேம்படுத்தல், மற்றும் அமுல்படுத்தல் காடழிப்பை நிறுத்துதல், அழிவடைந்த காடுகளை புனரமைத்தல், மீள்காடக்கல் மற்றும் காடாக்கலை அதிகரித்தல்.

2030 ஆம் ஆண்டளவில் பாலைவனமாதலை தடுத்தல், அழிவடைந்த நிலம் மற்றும் மண்ணைப் புனரமைத்தல்.

2030 ஆம் ஆண்டளவில் மலைசார் சுற்றாடல் கட்டமைப்பைப் பேணிப் பாதுகாத்தல்.

இயற்கை வசிப்பிடங்கள் அழிவடைவதைக் குறைப்பதற்காக துரித நடவடிக்கை எடுத்தல், உயிரியல் பன்மைத்துவம் இழக்கப்படுவதனை நிறுத்துதல் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள இனங்கள் அருகிவருவதனை நிறுத்துதல்.

வேட்டை, பாதுகாக்கப்பட்ட இனங்களை சட்ட விரோதமாக கொண்டு செல்லல், சட்ட விரோத வனவிலங்கு பொருட்களின் கேள்வி மற்றும் வழங்கலை கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுத்தல்.

ஆக்கிரமிப்பு இனங்களை அறிமுகப்படுத்தவதனை தடுப்பதற்காகவும், அவற்றின் தாக்கங்களை காத்திரமான அளவு குறைப்பதற்கான நடவடிக்கைகளை 2020 ஆண்டளவில் அறிமுகப்படுத்ததல் மற்றும் முக்கியமான ஆக்கிரமிப்பு இனங்களை அழித்தல்.

உயிரியல் பன்மைத்துவம் மற்றும் சுற்றாடல் கட்டமைப்பின் பெறுமதியை தேசிய மற்றும் பிரதேச திட்டங்களுடன் சேர்த்தல்.

உயிரியல் பன்மைத்துவம் மற்றும் சற்றாடல் கட்டமைப்பை பேணிக் காத்தல் மற்றும் பேண்தகு பயன்பாட்டுக்காக நிதி வழங்கலை அதிகரித்தல்.

16. பேண்தகு அபிவிருத்திக்காக சமாதானஈஉள்ளீர்ப்புக்காக சமூக மேம்படுத்தல் மற்றும் அனைவருக்கும் நியாயம் கிடைப்பதற்கான வாய்ப்பினை வழங்குதல். மற்றும் வகைகூறலுடன் உள்வாங்கப்பட்ட நிறுவனங்களை அனைத்து மட்டத்திலும் நிறுவுதல்.

அகைத்துப் பிரதேசங்களிலும் மோதல்கள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புக்களை காத்திரமானளவு குறைத்தல்.

பிள்ளைகளுக்கெதிரான அனைத்து வகைகளிலுமான துன்புறுத்தல்கள், துஸ்பிரயோகங்களை முற்றாக முடிவுறுத்துதல்.

தேசிய மற்றும் சர்வதேசிய மட்டத்தில்சட்ட நிர்வாகத்தினை மேம்படுத்துதல்.

அனைத்து மட்டங்களிலும் வகைகூறலானதும், வெளிப்படையானதுமான நிறுவனத்தை விருத்தி செய்தல்.

17. பேண்தகு அபிவிருத்திக்கான பூகோளவியல் ஒத்துழைப்பினை அமுல்படுத்துதல் மற்றும் புதிய உயிரோட்டத்தை வழங்கும் வழிகளைப் பயன்படுத்ததல்.

உள்நாட்டு வள நகர்வை வலுப்படுத்துதல்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு மேலதிக நிதி வளங்களை நகர்த்துதல்.

வடக்கு-தெற்கு, தெற்கு-தெற்கு பிராந்திய மற்றும் சர்வதேச தொடர்புகள் ஊடாக விஞாஞானம் தொழிநுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல்.

சுற்றாடல் நேயமான தொழிநுட்பங்களை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வழங்குதல் மற்றும் மேம்படுத்துதல்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு தேவையான ஆற்றல் விருத்திக்காக சர்வதேச ஒத்துழைப்பினை வழங்குதல்.

கல்வி உளவியல்   - Click Here

சமூக அடுக்கமைவு 

எமது கல்வி வீடியோக்கள் பார்த்து பயன்பெற - Click Here

கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்



Post a Comment

0 Comments