பல்லவர் காலம்


6 – 9 நூற்றாண்டு வரையான காலப்பகுதி

பக்தி நெறிக்காலம்
எதிர்ப்பார்க்கப்படும் வினாக்கள்

1. பல்லவர் காலமானது பக்தி நெறிக்காலமாகும் ஆராய்க?
2. பல்லவர் கால இலக்கியங்களை வகைப்படுத்துக.
3. பல்லவர்கால இலக்கிய பண்புகளை விளக்குக. 
4. சங்ககாலம் பல்லவர் காலத்திற்கு எவ்வாறு உதவியது?
5. சங்க மருவிய காலத்தின் தொடர்ச்சியே பல்லவர்காலமாகும் ஆராய்க.
6. பல்லவர் காலம் அடுத்து வந்த காலத்திற்கு எவ்வாறு உதவியது



பல்லவர் கால இலக்கியங்கள்
வைணவ  இலக்கியங்கள்                                                      
1. திருமலை                                                                              
2. திருபள்ளி எழுச்சி                                                                                                      
   தாண்டரடிப்பொடியாழ்வார                                                  
3. திருவெழுக் கூற்றிருக்கை                                                      
4. திருக்குநற் தாண்டகம்                                                            
5. திருநெடுந் தாண்டகம்                                                            
6. பெரிய திருமடல்                                                                    
7. திருப்பாவை                                                                          
8. திருவிருத்தம்                                                                          
9. திருவாசிரியம்
10. பெரிய திருவந்தாதி
11. திருவாய் மொழி
12. பெரியதிருமொழி
13. நாச்சியார் திருமொழி
14. பெருமாள் திருமொழி
 சைவ இலக்கியங்கள்
1. தேவாராம்
2. திருவாசகம்
3. திருவிசைப்பா
4. திருப்பல்லாண்டு
5. திருமந்திரம்
6. பொண்வண்ண அந்ததாதி
7. திருவெம்பாவை
8. திருக்கைலாய ஞான உலா
9. திருச்சிற்றம்பலக் கோவை
பிற இலக்கியங்கள்
1. சங்கயாப்பு
2. பட்டியல் நூல்
3. பெருங்கதை
4. நந்திக்கலம்பகம்
5. பாரதவெண்பா
6. முத்தொள்ளாயிரம்
7. பாண்டிக்கோவை
இலக்கணநூல் -        புறப்பொருள் வெண்பாமாலை
உரை நூல்          -         இறையனார் அகப்பொருளுரை
                                             சிறிபுராணம்

பல்லவர்கால இலக்கியப்பண்புகள்
1. நாட்டார் பாடல் தன்மை
  •திருவாசகத்தில் உள்ள திருவம்மாணை, திருச்சாலல்,  
  திருப்பொண்ணூஞ்சல் என்பவற்றில் நாட்டார் பாடல் தன்மை காணப்படல்
• பெரியாழ்வார் நூலில் “கண்ணன் புலவாரர் காக்கையை அழைத்தல்”

• திரவம்மானை, நந்திக்கலம்பகம் என்பன நாட்hர் பாடல் தன்மைமிக்கது

• ஆண்டாளின் திருப்பாவை “கூவின பூங்குயில் கூவின கோழி…”

2. பாவினம் கையாளப்படல் - விருத்தப்பாவே அதிகம் கையாளப்படல், 

மதங்கம், தோழ்வகுப்பு, அம்மானை போன்ற பாவினக்கூறுகளும் தோற்றம் பெற்றது
3. பதிக அமைப்பு – நாயன்மார், ஆழ்வார்கள் இறைவன் மீது தமது உணர்ச்சி அனுபவங்களை 10 பாடல்கள் மூலம் விளக்கியமை 

• உதாரணம்  சம்மந்தர்கோயில் திருபதிகம்

• ஆண்டாளின் நாச்சியார் திருமொழி
4. சிற்றிலக்கிய வகை தோற்றம் - உலா, பிரபந்தம், கோவை, மடல், எழுக்கூற்றிருக்கை, பள்ளியெழுச்சி
• உதாரணம் உலா - முத்தொள்ளாயிரம், நந்திக்கலம்பகம்
• கோவை – பாண்டிக்கோவை
5. புறத்தினையை அகத்தினையுடாக வெளிப்படுத்தியமை  
    • நாச்சியர் திருமொழியில் தாம் காதலித்த மதுசூதன் தன்னை மனம்பேச   1000 யானைகள் புடைசூழ வந்தான்
     • முத்தொள்ளாயிரம், நந்திக்கலம்பகம் என்பன அகத்தினை ஊடாக புறத்தனையை விளக்கல்
     • பாண்டிக்கோவை – வானொரு மதியை அடைந்தது என் வதனம் மரிக்கடல் புகழ்ந்து உன் கீர்த்தி கானுரு புலியை அடைந்து, வீரம் கற்பகம் அடைந்து உன்கரம்
6. வடமொழி கலப்பு
• நாயன்மார், ஆழ்வார்கள் வடமொழி கருக்களைக் கொண்டு பாடல்கள் பாடியமை
மாணிக்கவாசகர் - “காலனை காலால் உதைத்த….”
ஆண்டாள் - “…ஓங்கி உலகலந்த உத்தமன் பேர் பாடி….”
ஆழ்வார்கள் வடமொழி மகாபாரதரம், இராமாயனம், பாகவதம் என்பவற்றை தழுவி கோசலை தாலாட்டு, தசரதன் புலம்பல், தேவகி புலம்கல், கண்ணனுடைய பாலலீலை
7. பண்டைய அகத்தினை மரபை இறையியலுக்காக பயன்படுத்தியமை.
•கைக்கிளை காதல் மரபு போனப்பட்டது
மாணிக்கவாசகர், ஆண்டாள்; இறைவனை காதலித்தமை
• பெருந்திணை – திருமங்கையாழ்வார் இறையருள் கிடைக்காததால் மடல் ஏற முயற்சித்தல் (பெரிய திருமடல், சிறிய திருமடல்)
8. இறைவனை மட்டுமன்றி அடியாரையும் புகழ்ந்து பாடியமை

 • சுந்தரர் -  திருதொண்டர் தொகையை பாடியமை

 • மதுரகவியாழ்வார் - நம்மாழ்வாரை போற்றி பாடியமை
9. இறைவனையும் இயற்கையையும் இனைத்து பாடியமை

• மாணிக்கவாசகர் - செப்புரு கமலங்கள் மலர்ந்த தன் வயல் சுழ்   திருப்பெருந்துறை

• சம்மந்தர் - வாவிதோரும் வன்கமல முகம் காட்ட 
10. பக்தியை காதலாக உருவகித்தமை - தலைவன் தலைவி பாவம் நாயகன் நாயகி பாவமாக மாற்றமடைந்தமை

• நாவுக்கரசர் - முன்னர் அவள் நாமம் கேட்டளும்…

• ஆண்டாள் - இறைவனை காதலனாக நினைத்து பாடல்களை பாடியமை

11. பிடிவாத குணமுடைய பாடல்கள்
• ஆண்டாள், பெரியாழ்வார் திருமொழி
12. இறைவனுக்கு உருவம் கொடுத்து வழிப்பட்டமை
• சம்மந்தர் -  தோடுடைய செவியன் விடை….
• நாவுக்கரசர் - குனித்தபுருவமும் கொவ்வை செவ்வாயிற் குமின் சிரிப்பும்….
• தொண்டரடிப் பொடியாழ்வார் - பச்சை மாமழைபோல் மேனி பவளவாய் கண் செங்கன்
13. பிரச்சார போக்குத்தன்மை
• நாயன்மார்களும் ஆழ்வார்களும் சமன பௌத்த மதங்களுடன் அனல் வாதம், புனல் வாதங்களில் ஈடுபட்டு கண்டணங்களை தெரிவிக்கவும், மதத்தை பரப்பவும் பாடல்கள் பாடினர்.
14. இறைவனை உறவு முறையில் வழிப்பட்டமை
  • சம்மந்தர் - தந்தையாக அம்மையே அப்பா ஒப்பிலா மனியே  (சற்புத்திர)
  • அப்பர் - ஆண்டான் அடிமையாக (தாசமார்க்கம்)
  • சுந்தரர் -  தோழனாக பித்தா பிறைசூடி…. (சகமார்க்கம்)
    மாணிக்கவாசகர் - தலைவனாக (சன்மார்க்கம்)
    ஆன்டாள் - தலைவன் தலைவி
  • திருமங்கையாழ்வார் - தலைவன் தலைவி
15. மணிப்பிரவாள நடை

சங்கமருவிய காலத்தின் தொடர்ச்சியே பல்லவர் காலமாகும்.

1. பக்தியைக் கொடுத்தமை  – காரைகால் அம்மை, முதல் மூன்று ஆழ்வார்
2. பதிக அமைப்ப    - திருவிரட்டை மணிமாலை –  சுந்தரர், சம்மந்தர்
3. தேவார முறையைக் கொடுத்தமை- சிலப்பததிகாரத்தில் பரவி பாடும் 
    தன்மை
4. உரைநடையைக் கொடுத்தமை -  சிலப்பதிகார ஆய்சியர் குரவை, குன்றக்குறவை – சிறய, இறையனார் அகப்பொருளுரை

5. இலக்கணத்தை கொடுத்தமை - தொல்காப்பியம் - புறப்பொருள் வெண்பா மாலை
6. வடமொழிக் கலப்பு  - இரகுவம்சம் - நாயன்மார்கள், ஆழ்வாரகள் பாடல்
7.பாக்களைக் கொடுத்தமை  - அகவல் சிலப்பதிகாரம், வஞ்சி திருவிரட்டைமணிமாலைபின் மதங்கு தோல்வாங்கு என்பவற்றில் பயன்படுத்தப்பட்டது

8. நாட்டார் பாடலைக் கொடுத்தமை - சிலப்பதிகாரம் - நந்திகலம்பகம், ஆண்டாள் திருபாவை “கூவின  பூங்குயில் கூவின கோழி…”

சங்ககாலம் பல்வர் காலத்திற்கு எவ்வாறு உதவியது.
1. நாயகன் நாயகி பாவத்தை கொடுத்தமை - சுந்தரர், ஆன்டாள்

2. அகத்தையும் புறத்தையும் கொடுத்தமை  
• அகம் - நாவுக்கரசர் “ முன்னம் அவள் நாமம் கேட்டளும்
   சம்மந்தர் “சிறையாரும் மாடக்கிளியே இங்கே வா..”
• புறம் - நாச்சியார் திருமொழியில் கண்ணனின் சிறப்புக்கள் கூறப்படல்
3. தூதுமுறையைக் கொடுத்து உதவியமை
• கிளி, மயில், புறா, மேகம், பறவை முதலியவற்றை தூதனுப்பியமை 
  நந்திக்கலம்பகம் மேகம்
  சம்மந்தர் “சிறையாரும் மாடக்கிளியே இங்கே வா..” 
4. இயற்கையைக் கொடுத்து உதவியமை
5. கைக்கிளை பெருந்திணையைக் கொடுத்துதவியமை
6.மடல் கோவை போன்ற நூல் உருவாக உதவியமை
7. பாவினத்தை கொடுத்து உதவியமை
8. வழிபாட்டுமுறையைக் கொடுத்து உதவியமை
9. நாடக பாங்கு
10. அணிபயன்பாடு


வாசகர்களுக்கு....!

இவ்வளைத்தளமானது முற்றுமுழுதாக சேவை நோக்கம் கருதியே மேற்கொள்ளப்படுவதால் இவ்வளைத்தளத்தின் வளர்ச்சிக்கு உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். எனவே இவ்வளைத்தளத்தை SHARE செய்வதும் FACEBOOK PAGE LIKE செய்து COMMENTS பன்னுவதினூடாக ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

இக்கட்டுரையின் கீழ் பகுதியில் தங்களுடைய கருத்துக்களையும் தங்களது ஆலோசனைகளையும் Comments Boxil  பதிவிடவும்.

Post a Comment

1 Comments

  1. பல்லவர் காலம் பற்றியதான முழு விபரத்தையும் தெரிவியுங்கள்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்