கல்வித் தத்துவம்

தத்துவம் மற்றும் கல்வித் தத்துவம்  என்பவற்றுக்கிடையிலான தொடர்பினை பரசிலிக்குக.




      தத்துவம் என்பது philosopy  என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இந்த சொல் கிரேக்க மொழியில் philos sophiya என்ற சொல்லில் இருந்து தோற்றம் பெற்றுள்ளது. philos என்றால் விருப்பம் என்றும் ளழிhலைய என்றால்  அறிவு எனப்பொருள் படும். எனவே தத்துவம் என்பது அறிவில் விருப்பம் மற்றும் உண்மையை தேடுதல் எனப் பொருள்படுகிறது. அதேபோல் சிந்தனையாளர்கள் அறிவில் விருப்பமும் உண்மையை தேடுவதில் ஆர்வமும் உள்ளவர் என வரைவிலக்கணம் படுத்துகின்றனர்.

  இதனைப்போன்றே கல்வி தத்துவத்தை எடுத்து நோக்குவோமானால். கிங்ஸ்லி பிரய்ஸ் என்பவர் கல்வி தத்துவம் என்பது கல்வியோடு தொடர்புடைய பகுப்பாய்வுக் கற்றலாகும் எனக் கூறுகின்றனர். இவ்வாறாக தத்துவம் மற்றும் கல்வி தத்துவத்திற்கு ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதனை அவதானிக்கலாம். தத்துவத்தில் ஒரு அம்சமான பௌதீகவதீத எனும் பிரிவில் அறிவாய்வு ஒழுக்கம் மற்றும் யதார்த்தத்தின் தன்மை என்பன ஆராயப்படுகிறது இதனை நாம் கல்வியின் அம்சங்களிலும் செல்வாக்கு செலுத்துவதை நோக்கும் போது தத்துவம் மற்றும் கல்வி தத்துவத்தின் இடையிலான தொடர்பினை நாம் கண்டுக் கொள்ளலாம்.

   மேலும்  தத்துவத்தில் அடங்கியுள்ள நல்லொழுக்கம் எனும் அம்சமானது கல்வி தத்துவத்தின் விஷேட செல்வாக்கை செலுத்துகிறது. அதாவது கல்வி தத்துவத்தில் பாடவிதான உள்ளடக்கம் கற்பித்தல் முறைகளைக் கையாளுதல் வகுப்பறையில் ஒழுக்கக்கட்டுப்பாடுகள் என்பவற்றின் மீது மேற்கூறப்பட்ட ஓழக்கவியலின் அமசங்கள் கல்வியில் செல்வாக்கை செழுத்துகின்றது.

 அத்துடன் அக்ராவெல்லின் எனும் அறிஞரின் கருத்து இதனை மெய்பிக்கின்றது.. தத்துவம் இன்றிய கல்வி குருட்டுத்தனமான பயிற்சி எனவும் கல்வியில்லாத தத்துவம் பெறுமதியற்றது எனவும் இவர் எடுத்துகாட்டுகிறார். இக்கூற்றுக்கமைய கல்வி எனும் அம்சம் வெற்றியடைய தத்துவத்தின் தொடர்பு அவசியமாகிறது;.

  மேலும் முன்கூட்டியே தீர்மானங்களை மேற்கொண்டு  பிள்ளையை விருத்தி செய்வதற்காக தத்துவ பின்னனியைத் தயார்செய்தலும் அதனை மதிப்பிடலுமே தத்துவத்தின் தொழிற்பாடாகும். இதனையே கல்வியி;ல் பல பிள்ளைகளின் விருத்தி கட்டங்களை கவனத்தில் கொண்டு அறிவாற்றல் உடல் மனவெழுச்சி மற்றும் நற்பண்புகளின் விருத்திக்குச்  சரியான முறையில் வழிகாட்டல் நடைமுறைகளை முன்கூட்டியே திட்டமிட்டுதான் நடைமுறைப்படுத்துவதை கல்வியில் நாம் அவதானிக்கலாம்.

  பொதுவாக தத்துவ ஞானிகள் தத்துவத்தில் அறிவின் தோற்றம்  ஒழுக்கம் சார் பிரச்சினைகள் ஒழுக்கவியல் போன்ற அம்சங்களை பற்றி பேசுகின்றனர். மேற்கூறப்பட்ட இதே அம்சங்களை நாம் கல்வி தத்துவத்திலும் காணலாம். எல்லாத் தத்தவங்களிலும்  அவற்றிற்கே உரித்தான அறிவின் தன்மையும் அறிவைப் பெறும் முறைகளையும் ஆராயப்படுகின்றன. இவ்வாறே கல்வியின் தத்துவத்திலும் கல்வியை பெறும் முறைகளும்  கல்வியின் தன்மை என்பன பற்றியும் ஆராய்கின்றது. ஒட்டமொத்தமாக நோக்குமிடத்து தத்துவமும் கல்வியும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டதாக இருப்பதுடன் கல்வியில் பிரயோகிக்கப்படும் பல்வேறு அம்சங்கள் தத்துவத்தின அம்சங்களில் இணங்கி போவதையும் அவதானிக்கலாம். ஆக்வேதான் தத்துவமும் கல்வியும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு மிக்கதாகவே காணப்படுகிறது எனக்கூறலாம்.

கல்வி தத்துவம் பற்றிய அறிவினைப் பெற்றுக்கொண்ட ஆசிரியரின் வகிபாகம் 
   கல்வி மற்றும் தத்துவம் அடிப்படையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றமை போல ஒரு ஆசிரியரை பொருத்தவரை கல்வி தத்துவம் தொடர்பான அறிவனைப் பற்றிய தெளிவு இருப்பது கட்டாயமானதாகும். கல்வி தத்துவ அறிவினைப் பெற்ற ஆசிரியருக்கும் கல்வி தத்துவம் தொடர்பாக விளக்கமற்ற ஆசிரியருக்கும் பாரிய ஒரு வித்தியாசம் இருப்பதை நாம் அவதானிக்கலாம். இவர்களின் ஒவ்வொரு கட்ட அனுகுமுறைகளிலும் ஒவ்வொரு  நுட்பமுறைகளிலும் வித்தியாசத்தை நாம் நோக்கலாம்

  மனித வாழ்வையும் அவனது தொழிற்பாடுகளையும் கருத்துக்கள் பிரச்சினைகளையும் அடையாளங் கண்டு கொள்வதற்கு ஆசிரியருக்கு கல்வித்தத்துவம் தேவைப்படுகிறது. இவ்வாறான அறிவினைப் பெற்றுக்கொண்ட ஆசிரியர் சமூகத்தின் நல்லுறவைக் கட்டியெழுப்பிக் கொள்ளும் திறன்களை தனக்குள் வளர்த்துக்கொள்ள கூடியதாக திகழ்வார்.; அத்துடன் எந்த ஒரு கல்வி செயற்பாட்டின் போது நோக்கங்களையும் குறிக்கோள்களையும் தீர்மானித்தல் வேண்டும் அதனைப்போலவே கல்வி செயற்பாட்டில் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் தீர்மானிப்பதற்கு கல்வி தத்துவம் அறிவினைப் பெற்ற ஆசிரியருக்கு அதனை தீர்மானிப்பதும் செற்படுத்துவதும் இலகுவாக இருக்கும்.

  மேலும் பாடசாலையில் கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பது அனைத்து ஆசரியருக்கும் இருக்ககூடிய மிகப்பெரிய பொறுப்பாகும். இதனை தீர்மானித்துக் கொள்வதற்கும் ஒவ்வொரு மட்டத்திலும் எத்தகைய விடயங்களை கற்பிப்பது அதனை எந்த அளவு கற்பிப்பது போன்ற பல அம்சங்களை கல்வி தத்துவம் பெற்ற ஆசரியருக்கு தீர்மானிப்பது மிகமிக இலகுவாக இருக்கும்.

 கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளின் போது ஒரு ஆசிரியர் கையாளும் முறைகளும் வழிகளும் பற்றிய பிரச்சினைகள் தோன்றலாம். அதாவது குறிப்பிட்ட மாணவர்களுக்கு எம்முறையை கையாளுவது அதாவது விரிவுரை முறை பயன்படுத்துவது நல்லதா? மனனம் செய்வதற்கு பலவந்தப்படுத்தல் நல்லதா? அவ்வாறு இ;ல்லையெனில் செயல்மூலம் விளையாட்டு மூலம் கற்பித்தல் சிறந்ததா போன்ற வினாக்களுக்கு எந்தவித குழப்பமும் இன்றி கல்வி தத்துவம் பெற்ற ஆசரியர் பாடசாலையில் தெளிவான முடிவினை பெற்றுக்கொள்ளக் கூடியவராக திகழ்வார்.

   இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியில் நற்பண்புகள் என்பது அருகிவருகிறது இதன்போது இதனை எவ்வாறு விருத்தி செய்வது. பாடவிடயங்களை தெரிவு செய்வது ஒழுங்கமைத்தல்  முன்வைத்தல் மற்றும் மதிப்பீடு என்பவற்றினை மேற்கொள்ளும் போதும் கல்வி தத்துவம் பெற்ற ஆசிரியர் முன்னுதாரணமாக இருக்கக்கூடிய சந்தர்;ப்பம் காணப்படுகிறது. மேலும் ஒழுக்கம் பற்றிய சட்டத்திட்டங்களை ஒழுங்கமைக்கும் போதும் கல்வி தத்துவ அறிவினை பெற்ற ஆசரியரின் பங்கு முக்கிய இடத்தை பெறக்கூடியதாக இருக்கும்.

அடுத்ததாக முக்கியமாக கல்வி தத்துவத்தில் சிந்தனையாளர்களின் அதீத கருத்துப் போதனை மற்றும் நிபந்தனைப்படுத்தலும் பிழையான கற்பித்தல் முறைகள் என எடுத்துக்காட்டுகிறது. இந்த அறிவினை கல்வி தத்துவம் பெற்ற ஆசிரியரினால் மட்டுமே அதற்கு ஏற்றாட்போல பிழையான நடத்தைகளை தவிர்த்து சரியான முறையில் கற்பிக்கக் கூடியவர்களாக திகழ்வர். மற்றும் கல்வி தத்துவ அறிவினைப் பெற்ற ஆசிரியர் தம்மைப்பற்றிய விளக்கத்தை பெற்றவராகவும் தமது நடத்தை வாழ்க்கை என்பன பற்றியும் தர்க்க ரீதியில் முடிவுகளை எடுக்கக்கூடியவராகவும் விளங்குவர்.

   இவ்வாறாக சமூகத்தில் அல்லது பாடசாலையில் அல்லது பிற இடங்களில் கல்வி தத்துவ அறிவினைப் பெற்ற ஆசிரியரின் வகிபாகம் ஏனைய தரப்பினரை விடவும் மேலோங்கி இருப்பதுடன் சழுகத்தின் முக்கிய இடம் வகிக்க கூடியவராகவும் காரண காரிய தொடர்புகளுடன் ஒரு முடிவை எடுக்கக்கூடிய  பிரஜையாகவும் சிறந்த ஆளுமை மிக்க ஆசிரியராகவும் விளங்குவர்.      

 கல்வித் தத்துவம் என்றால் என்ன ?

பொதுவான தத்துவத்திற்கும் கல்வித் தத்துவத்திற்கும் இடையேயுள்ள தொடர்பினை விளங்க கொண்டு உறுதியான முறையில் கல்வித் தத்துவம் என்பதனால் கருதப்படுவது ஆராய்வோம். யாதெல்


நவீன சிந்தனையாளர் சிலர் கல்வித் தத்துவம் பொதுவான தத்துவத்தின் விசேடமான பிரிவெடை கொள்ளமுடியாது எனக் கருத்து வெளியிட்டுள்ளனர். *கல்வித் தத்துவம்” விடயத்துறையொன்று இல்லை என மேலும் சிந்தனையாளர்கள் சிலர் கருதுகின்றனர். ஆனாலு பல்கலைக்கழகங்களில் கல்விப் பிரிவிலும் ஆசிரியர் கலாசாலைகளிலும் 'கல்வித்தத்துவம்' ஒ பாடமாகக் கற்பிக்கப்படுவதை நாம் அறிவோம். நவீன சிந்தனையாளர்கள் இவ்வாறு கூறுவதற்கு காரணம் கல்வித் தத்துவப் பாடத்தின் தன்மையினாலேயாகும். அப்படியானால் கல்வித் தத்துவம் பற்றிய வரைவிலக்கணங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.


கிங்ஸ்லி பிரய்ஸ். *கல்வித் தத்துவம் என்பது கல்வியோடு தொடர்புடைய பகுப்பாய்வுக் கற்றலாகும். கல்வி என்பதைச் சரியாக விளங்கிக் கொள்வதற்கு அதில் உள்ளடங்கியுள்ள எண்ணக்கருக்கள், கருத்துக்கள் என்பன பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. மேலும் கல்வித் தத்துவத்தில் பொதுத் தத்துவத்தில் அடங்கியுள்ள அம்சங்கள் செல்வாக்குச் செலுத்தும் விதமும் ஆராயப்படுகின்றது” என்று கருத்துத் தெரிவிக்கிறார்.


ஆர்.எஸ்.பீட்டர்ஸ் கல்வித் தத்துவம் என்பது தத்துவத்தின் பிரிவுகளினூடாகக் கல்விப் பிரச்சினைகளுக்குப் பொருத்தமான விடயங்களை ஒன்று சேர்த்தலாகும் என்று கருதுகின்றார். Ethics and Education என்ற நூலில் ஆர்.எஸ்.பீட்டர்ஸ் கல்வித் தத்துவத்துறையின் ள்ளடக்கத்தை நன்றாக விளக்கியுள்ளார். அவர் இவ்விடயத்தில் நான்கு பிரிவுகளின்மீது கவனம் செலுத்துகிறார். அவற்றில் இரண்டு கல்வித் துறையில் தோன்றுகின்றன. அடுத்த இரண்டும் பொதுத் தத்துவத்தின் இரு உப பிரிவுகளால் ஏற்படுகின்றன. அவையாவன :1 கல்வியோடு தொடர்புடைய விசேட எண்ணக்கருக்களை ஆய்தல்


2. கல்வியின் உள்ளடக்கம், நுட்பமுறைகள் என்பவற்றின்மீது ஒழுக்கவியல், சமூகத் தத்துவம் என்பன செல்வாக்குச் செலுத்தும் முறையைப் பகுத்தாய்தல். கல்விச் செயன்முறையின் மீது கல்வி உளவியலின் செல்வாக்கு, அனுமானங்கள் 3.


(Assumption) என்பவற்றை ஆய்வுக்குட்படுத்தல். பாடவிதான உள்ளடக்கம், ஆய்தல். ஒழுங்கமைப்பு என்பன பற்றிய தத்துவப் பிரச்சினைகளை 4.


டி.ஆர்.ஓகொனர் கல்வித் தத்துவம் என்ற விடயம் ஒன்று இல்லையெனக் கூறுவதுடன், “கல்வித் தத்துவம் என்பது கல்வி பயிலும் மாணவர்கள் கவனம் செலுத்தவேண்டிய முக்கியமான தத்துவப் பிரச்சினைகளின் தொகுதியாகும்" என்று விளக்குகிறார். ஓகொனர் காட்டுகின்றவாறு. இப்பிரச்சினைகள் ஒரு தொனிப்பொருளின் கீழ் ஆராயப்படவேண்டும்- அதனால் கல்வி பயிலும் மாணவர்கள் அத்தகைய பிரச்சினைகள் உள்ளன என்பதையும் விளங்கிக் கொள்ளவேண்டும். கல்வித் தத்துவம் என்பது ஒரு கூட்டுமொத்தத்தில் உள்ள உபபிரிவாகும்” என அவர் மேலும் கூறுகிறார்.


இத்தத்துவக் கோட்பாடுகள் வருவிக்கப்பட்ட கோட்பாடுகள் எனப்படுகின்றன. அதாவது கல்வித் தத்துவமானது ஓர் தனித்துறை அல்ல. அது ஏனைய தத்துவவியலாளர்களின் நெருங்கிய செல்வாக்கினால் கட்டியெழுப்பப்பட்ட ஒன்றாகும். இத்தத்துவவியலாளர்களுக்கும் கல்விக்கும் உள்ள தொடர்பின் பகுப்பாய்வே இங்கு பிரதானமாகக் கருத்திற் கொள்ளப்படுகின்றது. கல்விச் செயன்முறையில் ஈடுபடும் பிள்ளையின் உண்மையான இயற்கையைக் கண்டறிதலே கல்வித் தத்துவத்தின் முதன்மையான நோக்கமாகும்.


Philosophical Analysis and Education என்ற நூலில் எல்.ஏ.றீட் கல்வித் தத்துவத்திற்குப் பின்வருமாறு வரைவிலக்கணம் கூறுகிறார். "கல்வித் தத்துவம் என்பது கல்விப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தத்துவ நுட்பமுறைகளைப் பயன்படுத்தலும் குறிப்பிட்ட தத்துவச் சிந்தனைக்கும் கல்விக்கும் இடையேயுள்ள தொடர்பினைத் தீர்மானித்தலுமாகும்". இதனையொத்த கருத்தைக்கொண்டுள்ள ரொபின் பெரோ, "கல்வித் தத்துவத்தின் அடிப்படைச் செயலாவது கல்விக்குப் பொருத்தமான எண்ணக்கருக்களையும் கருத்துக்களையும் பகுத்தாய்தலாகும்” என்று கூறுகிறார்.


மேலே குறிப்பிடப்பட்ட தத்துவ அடிப்படையிலான வரைவிலக்கணங்களில் இருந்து விளங்குவது யாதெனில் "கல்வித் என்பது பொதுவான தத்துவத்தின் விசேட பிரிவில்லாத, ஆனாலும் பொதுவான தத்துவத்திற் செல்வாக்குச் செலுத்துகின்ற, கல்விச் செயன்முறைக்கு. விடய உள்ளடக்கத்திற்கு, நுட்பமுறைகளுக்கு, கல்வியின் வேறு பிரிவுகளுக்குப் பொருத்தமான எண்ணக்கருக்கள், பிரச்சினைகள் பற்றிப் பகுப்பாய்ந்த விடயங்களின் தொகுப்பு" என்பதாகும்.


கல்வித் தத்துவமும் கல்விக் கோட்பாடுகளும்


ஆசிரியர் என்ற வகையிலும் ஆசிரியத் தொழிலுக்குப் பயிற்சி பெறுவோர் என்ற வகையிலும் கல்வித் தத்துவத்திற்கும் கல்விக்கோட்பாட்டிற்கும் (Educational Theory) உள்ள வேறுபாட்டை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். கல்விப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்போது தத்துவத்தை மட்டுமல்லாமல் கல்வியுடன் தொடர்புடைய வேறு விடயங்களின் பெறவேண்டியேற்படும். கல்வியைப் பின்னணியாகக் கொண்ட தத்துவத்தைப் போலவே துணையையும் உளவியல்சார், சமூகவியல்சார். வரலாறுசார் காரணிகள் கல்விமீது செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதை நாம் அறிவோம். உதாரணமாக சமயக் கல்வி எல்லாப் பாடசாலைகளிலும் பாடவிதானத்தில் உள்ளடக்கப்பட வேண்டுமா? மாணவரின் அறிவு மட்டத்திற்கேற்ப கற்றலனுபவங்களை ஒழுங்கமைக்க வேண்டுமா? பிள்ளைகளுக்கு ஆசிரியர் விரும்பியவற்றை மட்டும் கற்பித்தல் நல்லதா? போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குக் கல்வித் தத்துவத்தைப் போலவே கல்வி உளவியல், கல்விச் சமூகவியல் என்பனவும் அவசியமாகும்.


ஆர்.எஸ்.பீட்டர்ஸ் Educational and Foundation Disciplines என்ற நூலில் கூறுகின்றவாறு கல்வித் தத்துவம் கல்விக்கோட்பாட்டின் ஒரு பிரிவாகும். கல்வி உளவியலும் கல்விச் சமூகவியலும் கல்விக்குப் பொருத்தமான எண்ணக்கருக்களைப் பகுப்பாய்வு செய்வதற்கு உதவுவன என ஜோன் டூயி நம்புகிறார்.


Moral Philosophy For Education என்ற நூலில் ரொபின் பெரோ, கல்வி பற்றிய ஆய்வில் தத்துவ,உளவியல், சமூகவியல், வரலாற்றுக் காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன என்று காட்டுகிறார். மேலும் அவர் கூறுகின்றவாறு, "கல்விக் கோட்பாடு. கல்வித் துறையில் தத்துவம், உளவியல், சமூகவியல் வரலாறு என்பன பற்றிய ஆய்வினைத் தொடர்புபடுத்துகின்ற


உள்ளடக்குகின்ற "குடை" (Umberella) ஒன்றின் அமைப்பைக்கொள்கிறது. உதாரணமாக ஆரம்பப் பாடசாலைப் பாடவிதானமொன்றைத் தயாரிக்கும்போது கல்வியுடன் தொடர்புடைய மேற்கூறப்பட்ட நான்கு விடயங்களையும் பயன்படுத்த வேண்டும். அத்தகைய பாடவிதானமொன்றைத் தயாரிக்கும்போது ஏற்படுகின்றபிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கண்டு, சிறந்ததொரு பாடவிதானமொன்றை அமைத்துக்கொள்ள முடியுமெனக் கூறுகிறார்.


வி.எச்.ஹர்ஸ்ட் இதனையொத்த கருத்தினைக்கொண்டு கல்விக் கோட்பாட்டுக்குப் பின்வருமாறு வரைவிலக்கணம் கூறுகின்றார். "கல்விக்கோட்பாடு சகல சமூகவியல் விடயங்களிலும் உள்ள கோட்பாடுகள் அறிவை ஈர்த்துக்கொள்கிறது பாடவிதானத்தின் உள்ளடக்கத்தைத் தீர்மானித்துக்கொள்ளும்போது உளவியல், தத்துவம் சமூகவியல் ஆகியவற்றின் காரணிகளைப் பயன்படுத்தாமல் உறுதிப்படுத்திக் கொள்ளமுடியாது" என்று அவர் தெளிவாகக் காட்டுகிறார்.


எல்.ஏ.றீட் Philosophical Analysis and Education என்ற நூலில், "கல்விக்கோட்பாடு என்பது கல்வியில் கோட்பாடுசார் (தத்துவம்சார். உளவியல்சார், சமூகவியல்சார்) பிரிவுகளின் முறையான ஆய்வதாகும்" என்று கூறுகின்றார். கல்விக்கோட்பாடு மூவரணங்களைக் கொண்ட ஜோனின் அங்கியை ஒத்ததாகும்" என்று மேலும் கல்விக்கோட்பாட்டை வரைவிலக்கணப்படுத்துகிறார்.


மேலே கூறப்பட்ட வரைவிலக்கணங்களிலிருந்து கல்விக்கோட்பாட்டு கல்வித் தத்துவத்தினைவிட மிகவும் பரந்த விடயங்களின் தொகுப்பு என்பது புலனாகும். அதனால் அது கல்வியோடு தொடர்புடைய விடயங்களின் தொகுப்பாகிறது. அவ்வாறின்றேல் கல்விக்கோட்பாடு துறைகளுக்கிடையிலான (Interdisciplinary) தன்மையை எடுத்துக்காட்டும். விடயத்


கல்விக் கோட்பாடு பற்றி ஆராயும்போது கல்விப் நடைமுறையை அல்லது கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவது பற்றியும் சுருக்கமாக ஆய்தல் நல்லது. கல்விக் கோட்பாடு கல்வி நடைமுறைக்குப் பொருத்தமாக இருத்தல் வேண்டும். இப்பொருத்தப்பாடு இரு வழிகளில் ஏற்படும். முதலாவது, கல்விக்கோட்பாட்டின்மூலம் கல்வி நடைமுறையை மாற்றமுடியும். உதாரணமாக: நவீன உளவியல் சார் சமூகவியல்சார் தரவுகள்மூலம் நடைமுறையை மாற்றமுடியும். இரண்டாவது: கோட்பாட்டின் துணையுடன் நடைமுறையில் விருத்தியை ஏற்படுத்த முடியும். உதாரணமாக ஆரம்ப வகுப்புகளில் முன்பு விரிவுரை முறையில் கற்பிக்கப்பட்டாலும் தற்போது செயற்பாட்டுமுறை, குழுமுறை என்பன பயன்படுத்தப்படுகின்றன.


கல்வித்தத்துவத்தின் பல்வேறு அணுகுமுறைகள்:


முற்பட்ட காலத்திலிருந்தே கல்விச் சிந்தனையாளர்கள் அவ்விடத்தைப் பயில்வதற்காக இருவகை அணுகுமுறைகளைப் பின்பற்றியதாகத் தெரிகிறது. இவ்வணுகுமுறைகள் இரண்டினையும் இங்கு ஆராய்வோம்.


மரபுசார் கல்வித் தத்துவம் (Traditional philosophy of Education)


முற்பட்ட காலத்திலிருந்தே பல்வேறு மரபுசார் கல்வித் தத்துவ முறைமைகளின் துணையுடன் கல்விச் செயன்முறைகளுக்காகச் செல்லுபடியாகும் மூலகங்களும் கட்டளைகளும் முன்வைக்கப்பட்டன. பிளேட்டோ வாழ்ந்த காலத்திலிருந்தே கல்விச் செயன்முறைக்கான கட்டளைகளும் நடைமுறைப்படுத்தல்களும் நடைமுறைசார் கல்வித் தத்துவத்தின்மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டன. அந்தந்த மரபுசார் தத்துவத்தில் அடங்கியுள்ள பௌதிகவதீதவியல் அறிவாய்வு, ஒழுக்கவியல் ஆகிய பிரிவுகளின் கோட்பாட்டு மூலகங்கள் கல்விச் செயன்முறையை தயாரிப்பதற்குதவின. இதன்படி இலட்சியவாதம் (Idealism) Grounded வாதம் (Realism)| இயற்கைவாதம் (Naturalism) பயன்வழிவாதம் (Pragmatism) போன்ற தத்துவவாதங்களும் வேறு தத்துவவாத முறைமைகளும் முற்காலத்திலிருந்தே பரவியிருந்தன.


ஒவ்வொரு கல்வியியலாளரும் ஒரு தத்துவஞானியாக இருக்க வேண்டும் என்பது ரோபேர்ட் ரங் (1957) இன் கருத்தாகும். இக்கருத்திற்கமைய கல்வியில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு நபரும் தத்துவரீதியான சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டியமைக்கான தேவை தெளிவாகின்றது. கல்விசார் பிரச்சினைகளையும் வினாக்களையும் தத்துவப்பிரச்சினைகளுக்கு ஏற்றவகையில் மீளாய்வு செய்வதற்கும் திருத்தியமைப்பதற்குமான ஆற்றலைக் கொண்டிருத்தல் வேண்டும் கல்வித்தத்துவத்தின் நடைமுறைரீதியான தோற்றப்பாடாக இதனை நாம் குறிப்பிடலாம்.


தத்துவ முறைமையொன்றை உருவாக்குவதே மரபுசார் தத்துவத்தின் பொறுப்பாகவிருந்தது. இதற்கு முன் குறிப்பிட்டவாறு இப்பல்வேறு தத்துவ அமைப்புக்களும் காட்டுகின்ற தத்துவம் மூலம் அதற்குப் பரம்பரையாய் கிடைக்கும் யதார்த்தத்தின் இயல்பு கல்விக்குறிக்கோள்கள், விடய உள்ளடக்கம். கற்பித்தல் நுட்பமுறைகள் ஆகியன தீர்மானிக்கப்பட்டன. பல்வேறு கல்விக் தத்துவங்களிலும் இக்காரணிகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டன; வேறுபாட்டைக் காட்டின. இதன்படி பல்கலைக்கழகங்களிலே கல்வித்துறைகளில், ஆசிரிய கலாசாலைகளில் கல்வித் தத்துவம் என்ற பாடத்தில் பிளேட்டோ. கொமினியஸ், ரூஸோ, ஜோன் டூயி, பெஸ்டலோசி. புரோபெல், மாரியா மொண்டிசோரி ஆகியோரினதும் ஏனைய சிந்தனையாளர்களினதும் கல்வித் தத்துவத்தைப் பயில்வதற்குப் பழகிக்கொண்டனர்.


பகுப்பாய்வு முறைக்கல்வித் தத்துவம் (Analytic Philosophy of Education)


1960 தசாப்தத்தில் கல்வித் தத்துவத்தில் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டது. பொதுத்தத்துவத்தில் ஏற்பட்ட பகுப்பாய்வுமுறை ஈடுபாடு கல்வித் தத்துவத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கல்வித் தத்துவத்தில் இத்தகைய வேறுபாட்டை ஏற்படுத்துவதற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த கல்விச் சிந்தனையாளர்களான ஆர்.எஸ்.பீட்டர்ஸ். பி.எச்.ஹர்ஸ்ட் ஆகிய இருவரும் முன்னோடிகளாகச் செயற்பட்டனர். அமெரிக்காவில் கல்வித் தத்துவத்தில் இந்தப் பகுமுறை ஈடுபாடு ஏற்படுவதற்கு முன்னோடியாகச் செயற்பட்டவர் இஸ்ராய்ல் ஷெரிப்லர் என்ற சிந்தனையாளராவார்.


இதற்கு முன்பே கல்வித் தத்துவத்தில் பகுப்பாய்வு இருந்தாலும் நவீன பகுப்பாய்வு மொழிப்பயன்படுத்தலில் மிகவும் நுண்ணிய தன்மையொன்றைக் கொண்டுள்ளது. பகுப்பாய்வு. எண்ணக்கரு சார்பானதும் மொழிசார்பானதுமாகும். இதற்கு முன்பு மிக நுண்ணிய முறையில் கல்வியுடன் தொடர்புடைய எண்ணக்கருப் பகுப்பாய்வு நவீன பகுமுறைக் கல்விச் சிந்தனையாளர்கள் தத்துவ முறைமைகளை உருவாக்குவதற்குப் பதிலாகக் கல்வியுடன் தொடர்புடைய எண்ணக்கருக்களை ஆழமாகப் பகுப்பாய்ந்தனர். இவர்களது கருத்துப்படி கல்விக்கு வழிகாட்டுவதற்காகக் கல்வி எண்ணக்கருக்களைப் பகுப்பாய்வு செய்தலும் விளக்கப்படுத்தலும் அவசியம் 'கற்பித்தல்', ஆகும். 'கல்வி', 'கல்வி 'பயிற்சி', போன்ற நோக்கங்கள்', 'தேவைகள்', 'விருப்பங்கள்', 'கற்றல்', எண்ணக்கருக்களுடன் எண்ணக்கருக்களும் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. கல்வியுடன் தொடர்புடைய வேறு


மேலே கூறப்பட்ட விடயங்களிலிருந்து, மரபுசார்கல்வித் தத்துவம். பகுப்பாய்வுமுறைக் கல்வித் தத்துவம் ஆகிய இரு பிரதான அணுகுமுறைகளைக் கொண்டதாகக் கல்வித் தத்துவம் உள்ளது. என்பது புலனாகும். ஆசிரியர் என்ற வகையில் மரபுசார் கல்வித் தத்துவம், பகுமுறைக் கல்வித் தத்துவம் பற்றிய சிறந்த விளக்கத்தைப் பெற்றிருத்தல் அவசியமாகும்.


கல்வித் தத்துவம் ஆசிரியருக்கு எவ்வாறு பயன்படுகிறது?


இதுவரை நாம் ஆராய்ந்த விடயங்களிலிருந்து எத்துறையிலும் தத்துவ வழிகாட்டல் அவசியம் என்பது புலனாகின்றது. கல்வித் முக்கியமாக உள்ளன. துறையில் தத்துவத்தின் செல்வாக்கும் அதனால் கல்வித் தத்துவத்தை ஒரு பாடமாக ஏன் பயில வேண்டும் என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும். தேவையும் மிக


மனிதனின் வாழ்வையும் அவனது தொழிற்பாடுகளையும் கருத்துக்கள், பிரச்சினைகளையும் அடையாளங்கண்டுகொள்வதற்கு ஆசிரியருக்கு கல்வித்தத்துவம் தேவையாகிறது. பிள்ளையைப் பற்றி மட்டுமன்றி சுயமாக வேலைசெய்யும் ஏனையோரைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் விளக்கம் பெற்றக் கொள்வதற்கான தேவை ஆசிரியருக்கு உள்ளது. சமூகத்துடன் நல்லுறவைக் கட்டியெழுப்பிக் கொள்ளும் வகையில் இத்தகைய தத்துவம் அவசியமான ஒன்றாகும். சார் விளக்கம் ஆசிரியருக்கு


(1) எக்கல்வி முறைக்கும் நோக்கங்களும் குறிக்கோள்களும் இருத்தல் வேண்டும். இக்கல்வி நோக்கங்களும் குறிக்கோள்களும் வாழ்க்கை நோக்கங்களுடன் சம்பந்தப்பட்டவை. கல்வி நோக்கங்களையும் குறிக்கோள்களையும் தீர்மானித்துக் கொள்வதற்கு ஆசிரியருக்குக் கல்வித் தத்துவங்கள் உதவுகின்றன. நோக்கங்களையும் குறிக்கோள்களையும் தீர்மானிப்பதற்குத் தத்துவ அடிப்படை அவசியமாகும். கல்வியின் நோக்கங்களாக. "கல்விமான் என்பவர் யார்? தனியாளின் சமூகமயமாக்கல் என்றால் என்ன? ஆகிய பிரச்சினைகள் தொடர்பாகத் தத்துவக் கண்ணோட்டத்தில் ஆய்வதற்கு ஆற்றல் இருத்தல் வேண்டும். ஆகவே கல்வியின் நோக்கங்களையும் குறிக்கோள்களையும் அறிந்து கொள்வதற்கு, விளங்கிக் கொள்வதற்கு பகுப்பாய்வு செய்வதற்கு ஆசிரியருக்குக் கல்வித் தத்துவம் உதவியாகவுள்ளது.


(2) கலைத்திட்ட உள்ளடக்கத்தைத் தீர்மானித்துக் கொள்வதற்குக் கல்வித் தத்துவர். உதவியாகவுள்ளது. ஒவ்வொரு வயது மட்டத்திற்கும் எத்தகைய விடயங்கள் தேவை? எவ்வளவில் அவை சேர்த்துக் கொள்ளப்படவேண்டும்? போன்ற தத்துவ ஆய்வுகள் தேவைப்படுகின்றன. மாணவனின் வளர்ச்சி மட்டத்திற்கேற்பக் கல்வி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென ரூஸோ தெளிவுபடுத்துகிறார். ரூஸோ எழுதிய Emile என்ற நூலுக்கு அடிப்படையாக அமைந்தது இத்தத்துவக் கருத்தேயாகும். ஆரம்பக் கலைத்திட்டமொன்றை அமைப்பது எவ்வாறு? அது ஒன்றிணைந்த பாடவிதானமாக இருக்கவேண்டுமா? போன்ற முக்கிய பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்குத் தத்துவ ஈடுபாடு அவசியமாகும். இந்தவகையில் ரூஸோ, பெஸ்லோசி, புரோபெல், ஜோன்டூயி போன்ற சிந்தனையாளர்கள் பிள்ளைப்பருவத்தில் பிள்ளையின் தேவை, ஆர்வம், விருப்பம் என்பவற்றிற்கேற்பப் பிள்ளை மையக்கலைத்திட்டமொன்று இருக்கவேண்டுமெனக் கருத்து வெளியிட்டனர். கலைத்திட்ட அபிவிருத்தி, கலைத்திட்டத்தை மாற்றுதல், என்பன சம்பந்தமாகப் பிரச்சினைகள் தோன்றலாம். இப்பிரச்சினைகளை ஆய்வதற்கும் ஏற்றுக் கொள்ளக்கூடியதும் உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடியதுமான தீர்வுகளை அடைவதற்கும் ஆசிரியருக்குக் கல்வித் தத்துவம் பெரிதும் உதவுகின்றது.


(3) கற்றல்-கற்பித்தலின்போது ஆசிரியர் கையாளும் முறைகளும் வழிகளும் பிரச்சினைகள் தோன்றலாம். பற்றிய ஆரம்ப வகுப்புகளில் விரிவுரை முறையைப்பயன்படுத்தல் நல்லதா? இயந்திரத்தைப்போல விடயங்களை மனனம் செய்வதற்கு மாணவர்களைப் பலவந்தப்படுத்தல் நல்லதா? அவ்வாறின்றேல் செயல்மூலம் கற்பிப்பதற்காக விளையாட்டுமறைச் செயற்பாடுகள் மூலம் விளங்கிக் கொள்ளல், கண்டுபிடித்தல், ஆய்வு செய்தல் ஆகிய முறைகளைப் பயன்படுத்த வேண்டுமா? இப்பிரச்சினைகளைப் பகுப்பாய்வு செய்வதற்குரிய ஆற்றல் ஆசிரியரிடம் இருத்தல் வேண்டும். மேலே குறிப்பிட்ட சிந்தனையாளர்கள் எல்லோரும் தங்களது கல்வித் தத்துவத்தில் செயன்முறைக் கற்பித்தல். செயல்முறையற்ற கற்பித்தலை விடச் சிறந்தது எனக்காட்டியுள்ளனர். இப்பிரச்சினைகள் சம்பந்தமாகத் தத்துவ விமரிசனம் செய்வதற்குக் கல்வித் தத்துவம் பற்றிய அறிவும் விளக்கமும் ஆசிரியருக்குதவியாக அமைகின்றன.


நவீன தொழிநுட்ப வளர்ச்சியுடன் கல்வியும் சமூகமும் வேகமாக மாற்றமடைந்து வருகின்றன. ஆகவே மனிதன் மட்டுமன்றி கல்விச்செயன்முறையும் இயந்திரத் தன்மையானவையாக மாறியுள்ளன. மனிதன் இயந்திரத்தனமானவனாக மாறியநிலையில் நற்குணப்பண்புகள் போன்ற விழுமியங்கள் மனிதனிடமிருந்து மறைந்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. எனவே தொழிநுட்பத்தை மட்டும் கொண்டு ஒரு மாணவனை நற்குணவியல்புகள் கொண்ட பிரஜையாக மாற்றுவதில் பெரும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. கல்வித்தத்துவம் மற்றம் தத்துவப்பிரச்சினைகள் சார்ந்த அறிவை இங்கே பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆகவே கல்வித்தத்துவத்தைக் கற்பதன் ஊடாக ஆசிரியர் மட்டுமன்றி கல்விக்கும் பெரும்விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் இது குறிக்கோள்களை உருவாக்குதல், பாடவிடயங்களைத் தெரிவு செய்தல், ஒழுங்கமைத்தல், முன்வைத்தல் மற்றும் மதிப்பீடு என்பவற்றுக்கு மட்டுமன்றி ஒரு தனியாளின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் கூட இதனைக் குறிப்பிடலாம். கல்வித்தத்தவத்திலிருந்து பெற்றுக் மிகப்பெரிதாகும். கொள்ளக்கூடிய ஆதரவு


(4) வகுப்பறையில் ஆசிரியர் ஒழுக்கம் பற்றியும் கவனம் செலுத்தவேண்டியுள்ளது. மாணவனால் தாங்கிக்கொள்ள நோக்கம் என்ன? முடியாத சட்டதிட்டங்களை உருவாக்குதல் நல்லதா? தண்டனையின் உடல்சார் தண்டனை ஒழுக்கவியலுக்கு முரணானதா? பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியுள்ளது. ரூஸோ தமது Emile நூலில் உடல்சார் தண்டனை வழங்குதல் பிழையான செயன்முறையெனக் குறிப்பிட்டுள்ளார். இது சம்பந்தமாகக் கல்வித் தத்துவத்திற் கற்ற ஒழுக்கவியல் மூலம் இப்பிரச்சினைகளைத் தத்துவக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து பார்ப்பதற்குச் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. போன்ற


(5) வகுப்பறைச் சூழல் பற்றியும் ஆசிரியர் சிந்திப்பதற்குத் தத்துவ அறிவு உதவுகின்றது, வகுப்பறையில் தான் சர்வாதிகார முறையில் அடிமைச் சூழலையா? அல்லது மாணவர் பங்களிப்பு. மாணவர் செயற்பாடு ஆகியவற்றை உண்டாக்குகின்ற ஜனநாயகச் சூழலையா? அல்லது எத்தகைய கட்டுப்பாடுமில்லாத பூரண சுயாதீன வகுப்பறைச் சூழலையா? உருவாக்க வெண்டுமென்பதைத் தீர்மானிக்க வேண்டியுள்ளது. இப்பிரச்சினையைத் தத்துவச் சார்புடன் ஆராய்ந்து ஜனநாயகச் சூழலை வகுப்பறையில் உருவாக்குவது நல்லது என்பதை உணர்ந்து கொள்வார்.


(6) விசேடமாக மாணவர்களின் ஒழுக்கவளர்ச்சி, மனப்பாங்கு வளர்ச்சி என்பவற்றில் தத்துவத்தில் வருகின்ற ஒழுக்கவியல் செல்வாக்குச் செலுத்துகின்றது. மாணவர்களுக்கு நல்லவை தீயவை பிழையான நடத்தைகள் சரியான நடத்தைகள் என்பவற்றை விளக்கவேண்டும். நல்ல சரியான நடத்தைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதும் தீய, பிழையான செயல்களிலிருந்து மாணவர்களை விடுவித்து நல்வழியிற் செலுத்துவதும் தத்துவச் செயன்முறைகளாகும். அந்தனி ஓஹியர். விசேட பாடவிடயமொன்றைக் கற்பித்தல் என்ற வகையிலன்றி முழுப்பாடசாலைச் செயன்முறையுடனும் தொடர்புடையதொன்று என்ற வகையிலேயே ஒழுக்கக் கல்வியைக் கருத வேண்டும்" என்று கூறுகிறார்.


(7) வகுப்பறைக் கற்பித்தல் எத்தகைய செயன்முறையென்பதை ஆராய்வதற்குக் கல்வித் தத்துவம் பற்றிய அறிவு அவசியமாகும். சிந்தனையாளர்களால் அதீத கருத்துப் போதனை (Indoctrination), நிபந்தனைப்படுத்தலும் (Conditioning) பிழையான கற்பித்தல் முறைகள் என ஏற்கப்பட்டுள்ளன. அதீத போதனை என்பது தாம் ஏற்றுக்கொண்ட கருத்துக்களைப்பலவந்தமாக வேறு ஒருவருக்கு ஒப்படைத்தலாகும். இயந்திரத்தைப்போல எத்தகைய ஆராய்தலுமின்றித் வேறொருவரை உருவாக்கிக் கொள்ளுதலாகும். நிபந்தனைப்படுத்தல் தமது கருத்துக்களை இத்தகைய ஏற்கும் கற்பித்தல் முறை ஒழுக்கவியலுக்கு முரணானவை என்பதை அறிந்துகொள்வதற்கு ஆசிரியருக்குக் க பற்றிய அறிவு உதவுகின்றது.


(8) ஆசிரியருக்குத் தம்மைப் பற்றிய விளக்கத்தைப் பெறல், தமது நடத்தை. வாழ்க்கை என்ப பற்றிய அறிவு அவசியமாகும். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைத் தத்துவம் இருந்த வேண்டும். வாழ்க்கையில் தோன்றுகின்ற பிரச்சினைகள் பற்றித் தரக்க முறையில் சிந்தனையைச் செலுத்துதல் தத்துவச் செயலாகும். வகுப்பறையில் பல்வேறு சந்தர்ப்பங்களின் தமது ஆளுமையையும் நடத்தையையும் அடிக்கடி மதிப்பீடு செய்யவேண்டிய நிலை ஆசிரியருக்கு ஏற்படுகின்றது. தாம் எப்படியானவர்? தாம் கருணை, சுறுசுறுப்பு, நடுநிலையை நிலையான கருத்துக்கள் ஆகியவற்றை உடையவரா? போன்ற வினாக்களுக்கு விடையளித்துத் தொடர்ச்சியாகத் தம் ஆசிரியத்துவத்தையும் நடத்தைகளையும் பகுப்பாய்வுக்கு (Self Analysis) உட்படுத்த வேண்டியேற்படும். ஆசிரியர்கள் பின்பற்றக்கூடியவராக உள்ளாரா? என்பனவும் தீர்மானிக்கப்பட மாணவர் வேண்டும். இத்தகைய சுயமதிப்பீடு தத்துவச் செயலாகும். ஆசிரியருக்குக் கல்வித் தத்துவம் இருந்தால் மட்டுமே இதனைச் சிறப்பாகச் செய்யக்கூடியதாக இருக்கும்.


கற்றல் கற்பித்தல் செயன்முறைக்குத் தேவையான நம்பிக்கைகள், விழுமியங்கள், எடுகோள்கள், தீர்ப்புகள் என்பவற்றை நிறுவுவதில் கல்வித்தத்துவம் பயன்மிக்கது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. கல்விச்செயன்முறையின்போது இத்துடன் வகுப்பறைக்கு உகந்ததான இயல்புகள், பாடவிடயங்கள் மற்றும் மாணவர் எதிர்பார்க்கப்படும் கற்றல் வெளிப்பாடுகள் பற்றி விளக்கம் பெற்றுக் கொள்வதற்கு சாத்தியமாகிறது.


மனிதனின் வாழ்க்கை. அவரின் செயற்பாடுகள், கருத்துக்கள், மற்றும் பிரச்சினைகளை இனங்கண்டு கொள்வதற்கு ஆசிரியருக்கு கல்வி தத்துவம் அவசியமாகும். பிள்ளைதொடர்பாகவும், தம்முடன் வேலைசெய்யும் உடன் இருப்பவர்கள் தொடர்பாகவும், சமூகம் தொடர்பாகவும் விளக்கத்தினைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும். மற்றும் சமூகத்திற்கிடையிலான சிநேக பூர்வமான ஆசிரியருக்கு பாடசாலை தொடர்பைக் கட்டியெழுப்புவதற்கு அவ்வாறான தத்துவ விளக்கம் ஆசிரியரில் இருத்தல் அவசியமாகும்.


       


Post a Comment

0 Comments