ஓப்பீட்டுக் கல்வி


i. ஓப்பீட்டுக் கல்வி என்றால் என்ன?
ஒப்பீட்டுக் கல்வி முறை என்பது ஒரு நாட்டின் காணப்படும் கல்விக் குறிக்கோள்கள் இலக்குகள் நடைமுறைகள் மற்றும் இதர செயற்றிறன்களுடன் அனைத்து வகையான அனுகுமுறைகளையும் குறுக்கு அல்லது கிடையான முறையில் அதாவது உள்நாட்டில் காணப்படும் அம்சங்களுடன் ஒப்பீட்டுப் பார்த்தல் அல்லது ஏனைய வெளிநாடுகளின் காணப்படும் முறைகளுடன் ஒப்பீட்டு பார்த்து தீர்மானங்களை மேற்கொள்ளல் ஒப்பீட்டுக் கல்வி எனப்படும்.

ii. ஓர் ஆசிரியர் என்ற வகையில் ஒப்பீட்டுக் கல்வியை கற்பதனூடாகப் பெறும் நன்மைகள் யாவை?
  ஒப்பீட்டுக் கல்வியை பொருத்தவரை ஆசிரியர் ஒருவருக்கு பல்வேறுப்பட்ட நன்மைகள் கிடைப்பதை அவதானிக்கலாம். அதில் பிரதானமாக உள்நாட்டில் காணப்படும் ஏனைய கல்வி முறைகளுடன் ஒப்பீட்டுப் பார்த்தல் என்ற தன்மையினை கூறலாம் அதாவது தமது நாட்டில் பிற இடங்களில் அல்லது பிற பாடசாலைகளில் ஏனைய ஆசிரியர்கள் அல்லது கல்வியலாளர்கள் தான் கற்பிக்கும் போது பல்வேறு வித்தியாசமான வினைத்திறனுடனான முறைகளை கையாளுவர் இம்முறைகளையும் ஆசிரியர் என்ற வகையில் தாம் கற்பிக்கும் முறைகளையும் ஒப்பீட்டு அதன் சாதக பாதக விடயங்களை அறிந்து கொள்ளக் கூடியதாக இருப்பதுடன் அவற்றின் ஊடாக தேவையான நுட்பங்களை பெற்றுக்கொண்டு அதனை வகுப்பறையில் பிரயோகித்து வினைத்திறன்மிக்க கற்பித்தலை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். 
  மேலும் கற்பித்தலில் புத்தாக்கத்தை உருவாக்குவதற்கு உதவக் கூடியதாக அமைகிறது அதாவது  ஒப்பீட்டுக் கல்வியினூடாக ஏனைய பிரிவினர் பயன்படுத்தப்படும் புதிய புதிய விடயங்களை அறிந்துகொள்ளக் கூடியதாக இருப்பதுடன் அதனை அறிந்து கற்பித்தலில் பயன்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். உதாரணமாக சமூக நிறுவனமாக காணப்படும் Room to Read என்ற அமைப்பானது மாணவர்களுக்கு தமிழ் எழுத்துகளில் ஒரு எழுத்தை கற்பிப்பதற்கு 8 முறைகளை கையாளுகிறது. இதன் மூலம் சிறந்த பெறுபேறுகளையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இவ்வாறு நாம் ஏனைய கற்பித்தல் நுட்பங்களை ஒப்பீட்டுப் பார்ப்பதன் மூலம் இப்புதிய விடயங்களை எமது ஆசிரியரின் கற்பித்தலிலும் பயன்படுத்தக் கூடியதாக இருப்பது இதன் ஒரு நன்மையாகும்.
   மற்றும் ஒப்பீட்டுக் கல்வியின் மூலம் பொருத்தமான கல்வியை தெரிவு செய்து வழங்க முடியும்;. காலத்திற்கு காலம் ஒரு நாட்டின் சமூக நிலைமை மாற்றம் பெற்றுக்கொண்டே தான் இருக்கிறது. இந்த சமூக நிலைமைகளுக்கு ஏற்ப பொருத்தமான கல்வியை வழங்க வில்லையாயின் கொடுக்கப்படும் கல்வியில் எவ்வித பயனும் இருக்காது. அதாவது முன்னைய காலங்களில் தொழிநுட்ப கல்விக்கோ அல்லது செயன்முறை கல்விக்கோ முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை ஆனால் தற்பொழுது இவை இரண்டுமே கற்பித்தலில் முக்கிய இடம் பெறுகிறது. இதன் காரணமாக கல்வியை ஏனைய துறைகளுடன் ஒப்பீட்டு அதனூடாக பொருத்தமான கல்வியை வழங்கக் கூடியதாகவும் ஆசிரியர்களுக்கு உதவக் கூடியதாகவும் இருக்கும்
    மேலும் கல்விசார் பிரச்சினைகளுக்கான பொருத்தமான தீர்வை பெற்றுக்கொள்ளக் கூடியதாக ஒப்பீட்டுக் கல்வி முறை உதவக் கூடியதாக இருக்கிறது. அதாவது கற்றல் கற்பித்தல் நடைபெறும் போது பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் இடம்பெறும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் எவ்வாறான விடயங்களை கைக்கொள்வது மற்றும் எப்படிப்பட்ட தீர்வை வழங்குவது போன்ற விடயங்களில் ஏனைய தரப்பினர் எவ்வாறான முடிவுகளை மேற்கொண்டார்கள் மற்றும் அம்முடிவுகள் எவ்வளவு தூரம் வெற்றியைத் தரக்கூடியதாக இருந்தது போன்ற அம்சங்களை கவனத்தில் கொண்டு ஆசிரியர்களின்  பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக் கொள்வதற்கு ஒப்பீட்டுக் கல்வியின் மூலம்
    இயலுமானதாக இருக்கும்.  மற்றும் வெளிநாடுகளின் கல்வி நிலைமைகளை அறிந்து கொள்ளக்கூடியதாகவும் இருக்கும் ஆசிரியர் என்ற வகையில் பல்வேறுப்பட்ட விடயங்களை அறிந்துக்கொள்வது கட்டாயமானதாகும். அந்த வகையில்  வெளிநாடுகளில் காணப்படும் கல்வி முறைகளையும் கல்வி நடவடிக்கைகளையும் மற்றும் எவ்வாறான முறையில் கல்வி விடயங்கள் இடம்பெறுகிறது ஆகிய விடயங்களை அறிந்துக்கொள்ளலாம். அத்துடன் இம்முறைகளை அறிந்துக்கொண்டு ஆசிரியர் என்ற வகையில்  தனது கற்பித்தலின் போது பயன்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.
  இவ்வாறாக பல்வேறுப்பட்ட நன்மைகளை ஒப்பீட்டுக் கல்வியினை கற்பதன் மூலம் ஆசிரியரால் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.


Post a Comment

0 Comments