பதின்மூன்று வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட பாடசாலைக் கல்வி நிகழ்ச்சி திட்டம்.


 

  தரம் ஒன்று தொடக்கம் தெடர்ச்சியாக 13 வருடம் கல்வி கற்கும் முறையாகும். அதாவது கல்விப் பொதுதராதர சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத அல்லது உயர்தரத்திற்கு தகுதி பெற முடியாத வகையில் பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் உயர்தரக் கல்வியை  தொடர்வதற்காகவும் அவர்களுக்கு தொழில் ரீதியாக தயார்படுத்தப்பட்ட திட்டமே பதின்மூன்று வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட பாடசாலைக் கல்வி நிகழ்ச்சி திட்டமாகும்.

இந்நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் தனக்கு பிடித்த பாடத்துறையை தெரிவு செய்து கற்றுக்கொண்டு தொழில் வல்லுனர்களாக மாற்றம் பெறும் ஒரு செயற்றிட்டமே இதுவாகும்.


பதின்மூன்று வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட பாடசாலைக்   கல்வி நிகழ்ச்சி திட்டத்தின் குறிக்கோள்கள் 

1. அறிவுடன் கூடிய சிறந்த பிரஜை  ஒருவரை இலங்கை  தொழிற்றணிக்கு அர்ப்பணித்தல்

2. தொழில் திறமையுடன் கூடிய சிறந்த பிரஜை  ஒருவரை இலங்கை  தொழிற்றணிக்கு அர்ப்பணித்தல்

3. சமூக திறமையுடன் கூடிய சிறந்த பிரஜை  ஒருவரை இலங்கை  தொழிற்றணிக்கு அர்ப்பணித்தல்

4. ஆளுமைத்திறன் அபிவிருத்தியுடன் கூடிய சிறந்த பிரஜை  ஒருவரை இலங்கை  தொழிற்றணிக்கு அர்ப்பணித்தல்

5. சுய மரியாதை தொழில் கண்ணியத்துடன் கூடிய சிறந்த பிரஜை  ஒருவரை இலங்கை  தொழிற்றணிக்கு அர்ப்பணித்தல்

6. நல்ல அணுகுமுறையுடன் கூடிய சிறந்த பிரஜை  ஒருவரை இலங்கை  தொழிற்றணிக்கு அர்ப்பணித்தல்

7. தாய்மொழி மற்றும் அங்கில மொழி எழுதுதல் வாசித்தல் புரிந்தக் கொள்ளல்  மற்றும் பயன்படுத்தலை அதிகரித்தல்

8. மகிழ்ச்சி அழகியல் மற்றும் திருப்திகரமான நபர்  ஒருவரை உருவாக்குதல்

9. அன்றாட செயற்பாடுகள் தொடர்பில்  தகவல் மற்றும் தொடர்பாடல்  தொழிநுட்ப திறன்களை அபிவிருத்தி செய்தல்

10. தலைமைத்துவம் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய திறமை சமூக திறன்களை அபிவிருத்தி செய்து கொள்ளுதல்

11. தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் முனைப்புத் திறனை மேம்படுத்தல்

12. சமநிலைமை ஆளுமைக் கொண்ட தொழில்முறையாளர் ஒருவரை உருவாக்குதல்.


     இந்நிகழ்ச்சி திட்டத்தை நடைமுறைப்படுத்தவதன் இயல்பு

    இந்நிகழ்ச்சி திட்டத்தின் இயல்பை பொருத்தவரை க.பொ.த சாதாரண தரம் சித்தியடையாத மற்றும் சித்தியடைந்தவர்கள் பங்குப்பற்ற கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதில் 26 தொழிற்பாடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது மேலும் SMART CLASSROOM வசதிகள் கொண்டதாகவே இப்பாடநெறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பாடநெறிகள் கீழ்வரும் முறையில் அடிப்படையிலையே கொண்டு செல்லப்படுகிறது.
இப்பாடநெறி 7 துறைகளை உள்ளடக்கியதாக 26 பாடப்பிரிவுகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    கற்பிக்கப்படும் பாடத்துறைகளும்  பாடப்பிரிவுகளும் 

01 சுகாதாரம் மற்றும் சமூக சேவை
  • குழந்தை உளவியல் மற்றும் பாதுகாப்பு
  • சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு
  • உடற்கல்வி மற்றும் விளையாட்டு

02 சமூக கலாசார கல்வி
  • கலை நிகழ்ச்சி
  • நிகழ்ச்சி தொகுப்பு முகாமைத்துவம்
  • கலை மற்றும் கைவினை

03 வடிவமைப்பு
  • உள்ளக வடிவமைப்பு
  • அலங்கார வடிவமைப்பு
  • கிரபிக் வடிவமைப்பு
  • கலை வடிவமைப்பு
  • தரை அழகு வடிவமைப்பு
  • இணையத்தள வடிவமைப்பு

04 விவசாயம் மற்றும் உணவுத் தாழில் நுட்பம்
  • பிரயோக தோட்டக்கலை தொழில்நுட்பம்
  • கால்நடை தொழிலுநுட்பம்

05 தொழில்நுட்ப கல்வி
  • நிர்மானத்துறை தொழில்நுட்பம்
  • மோட்டார் இயந்திர தொழில்நுட்பம்
  • மின் மற்றம் இலத்திரனியல் தொழில்நுட்பம்
  • ஆடை தொழில்நுட்பம்
  • உலோக தயாரிப்பு தொழில்நுட்பம்
  • அலுமினிய தயாரிப்பு தொழில்நுட்பம்
  • மென்பொருள் அபிவிருத்தி தொழில்நுட்ப

06 சுற்றுலா மற்றும் விருந்தினர் உபசரிப்பு
  • சுற்றுலா மற்றும் விருந்தினர் உபசரிப்பு

07 சுற்றாடல் சார் கல்வி
  • சுற்றாடல் சார் கல்வி

பொதுப்பாடங்கள்

  1. முதலாம் மொழி தமிழ் /சிங்களம்
  2. வணிக ஆங்கிலம்
  3. அழகியல் ஆர்வம்
  4. தகவல் தொடர்பாடல் திறன்
  5. குடியியல் தொடர்பான திறன்
  6. சமூக நல்வாழ்வுக்காக சுகாதார திறன்
  7. சுய தொழிலாண்மை திறன்
  8. விளையாட்டு மற்றுமு; ஏனைய பாடச் செயற்பாடுகள்
  9. வாழ்க்கை வழிகாட்டல வேலைத்திட்டம்


இப்பாடநெறிகள்  பொதுப்பாடத்துறை, பிரயோகப் பாடத்துறை, நிறுவனஞ்சார் தொழில்பயிற்சி ஆகிய மூன்று முக்கிய பாடத்துறைகளை ஒரு மாணவன் கற்க வேண்டும்.
  தரம் 12 இல் பொதுப்பாடத்துறையும், பிரயோகப்பாடத்துறையும் கற்பிக்கப்படும். முதலாவது தவணையில் பொதுப் பாடத்துறையில் அடங்கும் ஒன்பது பாடங்களையும் இரண்டாம், மூன்றாம் தவணைகளில் பிரயோகப்பாடத்துறையில் அடங்கும் 26 பாடங்களில் விரும்பிய மூன்று பாடங்களையும் தெரிவு செய்து மாணவர்கள் கற்க வேண்டும்.
  தரம் 13 இல் மேலே கற்க மூன்றில் ஒரு பாடத்தை தெரிவு செய்து கற்பதுடன் தொழில் பயிற்சிக்காக கல்வியமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் கற்றல் பயிற்சியை மேற்கொள்ளல் வேண்டும். இவையனைத்தும் பாடசாலை நேரத்தினுள் வழமையான பாடவேளைகள் (40 நிமிடம்) போலல்லாது நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாக அமையும்.
இப்பாடநெறிகளை படித்து சென்றதும் சிறந்த பயிற்சி மிக்க அல்லது தொழிற்றிறன் மிக்க ஒரு பிரஜையை உருவாக்க கூடியதாகவே இப்பாடநெறியின் இயல்பாக காணப்படுகிறது.


பதின்மூன்று வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட பாடசாலைக் கல்வி நிகழ்ச்சி

  1. இத்திட்டத்தின் நன்மைகள்
  2. இத்திட்டத்தின் பிரச்சினைகள்
  3. பிரச்சினை தீர்ப்பதற்கான உபாயங்கள்

          நன்மைகள்
  • சித்திடையாத மற்றும் அடைந்த மாணவர்களும் இத்திட்டத்தின்; மூலம் நன்மையடைவர்
  • பரீட்சையில் சித்திடைய தவறிய மாணவர்களுக்கு கூட தான் விரும்பிய துறையில் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.
  • எதிர்பார்க்கப்படும் தொழில் தொடர்பான முறையான தொழிற் பயிற்சி மற்றும் வழிகாட்டல் ஒன்றை பெறுதல்
  • தேசிய தகைமை NVQ 4 சான்றிதழுடன் கூடிய தொழிலாளியாக இருத்தல்.
  • தொழில் புரிபவர்கள் தொழில் சம்பந்தமான தெளிவினை பெற்றவர்களாக இருப்பர்
  • மாணவர்கள் தவறான பாதையில் செல்வதற்கான வாய்ப்பு குறைவடைதல்
  • தனக்கு பிடித்த தொழிலில் மேற்கொண்டு படிக்க கூடியவர்களாகவும் திறமையை வளர்த்துகொள்ளக் கூடியவர்களாகவும் திகழ்வர்
  • ஏழை மாணவர்களுக்கு கூட தான் விரும்பியதை படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தல்.
  • எதிர்காலத்தில் தொழிற்படையணி ஒன்று உருவாகும் 

   இவ்வாறான பல நன்மைகள் கிடைக்கும் என கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் நேர்முக காணலின் போது பதின்மூன்று வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட பாடசாலைக் கல்வி நிகழ்ச்சி திட்டத்தின் நடைமுறைப்படுத்தி கொண்டு போகும் போது ஏற்படக்கூடிய அல்லது எழக்கூடிய பிரச்சினைகள் பற்றி கேட்கப்பட்டபோது கிழு;வரும் பிரச்சினைகளை அவர்கள் மூவரும் பட்டியல் படுத்தினர்.

இத்திட்டத்தின் பிரச்சினைகள்
முதலாவது பிரச்சினையாக கருதப்படுவது  இந்த திட்டம் சித்தியடையாத மாணவர்களுக்கு என அனைவருக்கும் தெரியப்படுத்தியதன் பின் இந்த திட்டத்தில் பங்குப் பெறுபவர்கள் அனைவரும் சித்தியடையாதவர்கள் என்ற மனப்பாங்கின் காரணமாக மாணவர்கள் கலந்துக் கொள்ள அச்சப்படுகின்றனர்.

  • பாடசாலை வளப்பற்றக்குறை பிரதான பிரச்சினையாக கருதப்படுகிறது.
  • 1 தொடக்கம் 11 வகுப்புக்கள் வரை கல்வி கற்ற ஒருவன் இதுவரைக்காலமும் ஆசிரியர்கள் எவ்வளவு சொல்லியும் கல்வி கற்காத ஒருவன் மீண்டும் சித்தியடையாமல் அதே பாடசாலையில் கல்வி கற்கும் போது குழப்பங்கள் விளைவிக்க கூடியதாக இருக்கிறது.
  • ஆசிரியர்களுக்கு போதுமான பயிற்சி இன்மை
  • தேவையான விதத்தில் அல்லது பாடத்திட்டத்திற்கு பொருந்தக் கூடிய வகையில் வகுப்பறை அமையாமை
  • இதுவரையும்  smart classroom அமைக்கப்படாமை
  • தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் பற்றாக்குறை தன்மை
  • மாணவர்கள் இடைவிலகல்
  • மாணவர்களை கட்டுப்படுத்த முடியாமை
  • அடுத்து முக்கியமாக பிரச்சினையாக காணப்படுவது எல்லா பாடசாலைகளிலும் தொழில் நுட்ப வகுப்பறை காணப்படுவதில்லை இதன்போது சிறந்த முறையில் கல்வி கற்கும் பிள்ளைக்கு அது தொடர்பான அறிவு கிடைப்பதில்லை ஆனால் தோற்றவனுக்கு smart classroom  அனுபவம் கிடைக்கிறது இந்த நிலைமையானது நன்றாக படிக்கும் பிள்ளையையும் நாம் படித்து என்ன நடக்கப் போகிறது என்ற மனோநிலை தோன்றி கற்பதலில் விருப்பமற்ற நிலைக்கு தள்ளப்படலாம். இதனால் நன்றாக படிக்கும் பிள்ளையும் திசைமாறி செல்லக் கூடும்.

இப்பிரச்சினைகளுக்கான தீர்வு
  • மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும்  இச்செயற்றிட்டமானது மாணவர்களின் எதிர்கால நலன் கருதியே மேற்கொள்ளப்படுகிறது அத்துடன் இச்செயற்றிட்டம் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு மாத்திரம அல்ல கற்றலில் விருப்பமுள்ளவர்களுக்கும் இப்பாடத்தை தொடரலாம் என தெளிவுப்படுத்தல்
  • மத்திய அரசாங்கத்துடன் கதைத்து சரியான முறையில் வளப்பகிர்வுகள் இடம்பெறச் செயதல்
  • மாணவர்களை குழப்பங்களில் இருந்து தடுத்துக்கொள்ள சில இறுக்கமான சட்டத்திட்டங்களை பல அமுல்படுத்துதல் கட்டாயமானதாகும்
  • பாடத்திட்டத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் இடவசதிகளை இனங்கண்டு அதற்கு ஏற்றாற்போல் ஒரு பாடசாலையை தெரிவு செய்து அப்பாடசாலைக்கு இத்திட்டத்தை அமுல்படுத்தச் செய்தல்
  • மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வுகள் செய்தல் 
  • பிள்ளைகளுக்கு எதிர்மறையான எண்ணங்கள் தோன்றாமால் இருப்பதற்கு  இலங்கையில் அனைத்துப் பாடசாலைகளிலும் Smart Classroom முறையை அறிமுகம் செய்து அனைத்து மாணவர்களுக்கும் இந்த அனுபவத்தை கொடுத்தல் வேண்டும்.
இவ்வாறான உபாயங்களை கைக்கொள்வதன் மூலம் மேலும் வினைத்திறனமிக்க பதின்மூன்று உத்தரவாதப்படுத்தப்ட்ட கல்வியை வழங்கக்கூடியதாக இருக்கும்.


உசாத்துணை நூல்கள்
01. பதின்மூன்று வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வியின் கைந்நூல
02. பத்திரிகைக் கட்டுரைகள்

வாசகர்களுக்கு....!

இவ்வளைத்தளமானது முற்றுமுழுதாக சேவை நோக்கம் கருதியே மேற்கொள்ளப்படுவதால் இவ்வளைத்தளத்தின் வளர்ச்சிக்கு உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். எனவே இவ்வளைத்தளத்தை SHARE செய்வதும் FACEBOOK PAGE LIKE செய்து COMMENTS பன்னுவதினூடாக ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

இக்கட்டுரையின் கீழ் பகுதியில் தங்களுடைய கருத்துக்களையும் தங்களது ஆலோசனைகளையும் Comments Boxil  பதிவிடவும்.

Post a Comment

2 Comments

  1. உண்மையில் மிகப் பயன்பாடான வலைத்தளமாகும்.

    உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும்

    ReplyDelete
  2. Very useful informations.. tnx and keep it up..

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்