Guidance and Counseling | கல்வி வழிகாட்டலும் ஆலோசனை கூறலும் - 01

 01. கல்வி ஆலோசனை எனும் எணணக் கருவை விளக்குக. 

மாணவர்கள் தமது கல்வி தொடர்பான இலக்குகளை அமைத்துக்கொள்ள உதவுதல் கல்வி ஆலோசனையாகும்.

மாணவரி உளச்சார்பு, திறன்கள், நாட்டங்கள், மனப்பாங்குகள், அடைவுகள் தொடர்பான புள்ளி விபரங்களைச் சேகரித்தலும், அறிக்கை பேணுதலும் -வழிப்படுத்த உதவுதலும் கல்விசார் ஆலோசனையின் ; முக்கிய பணிகளாகும்.
  • கல்வி ஆலோசனை வழங்கலானது 

கற்றல்சார் அடைவுகளில் மாணவரது வினைதிறனையும் அடைவுசார்        திறனையும் விருத்தி செய்ய ஆலோசனை உதவி வழங்குதல்.

எப்பாடநெறியை – எந்த நிகழ்ச்சித் திட்டத்தை மாணவர் ஒருவர் தெரிவு          செய்தல் தொடர்பானவற்றைத் தீர்மானிக்க உதவுதல்.

கல்வி சம்பந்தமான சகல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பொருத்தமான ஆலோசனை உதவி வழங்குதல் கல்வி ஆலோசனையாகும். கற்றல் முரண்பாடுகள் தொடர்பான சிகிச்சை முறைகளும் இதில் அடங்கலாம்.

02. கல்வி வழிகாட்டல், கல்வி ஆலோசனை கூறல் என்ற எண்ணக்கருக்களின்                இடையிலான வேறுபாடுகள்

                   மேலும் வாசிக்க -  கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

வழிகாட்டல் என்பது பொதுவாக மாணவர் தம் பிரச்சினைகளுக்கு வழிகாட்டுபவர் அவரை வழிப்படுத்தலாகும். அதாவது கல்வி சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை சொல்லிக் கொடுக்க  முயற்சித்தல்.

வழிகாட்டல் என்பது நேர்முகம் காண்பவரின் வாக்குப் பலத்தில் தங்கியுள்ள விடயமாகும். இவர் தனது திறமையையும், அனுபவத்தையும் பயன்படுத்தி யதார்த்தமான தெரிவை ஆலோசனை நாடி செய்ய அவரை வழிப்படுத்துதல். எனவே அவற்றை கொடுப்பதும், தகவல் வழங்குதலும் கொண்ட ஒரு வழிகாட்டும் தலையீடாக இது அமைகிறது எனலாம்


எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்

வழிகாட்டலை விட ஆலோசனை வழங்குதல் மிகச் சிக்கலானது விஞ்ஞான பூர்வமானது. கற்றல்சார் அனைத்துப் பிரச்சினைகள் - முரண்பாடுகள் என்பனவற்றிலிருந்து  ஆலோசனையும் - சிகிச்சை முறைகளுடனான உதவிகளும் இதில் அடங்கும்.

ஆலோசனை வழங்குபவர் ஓர் உளவியலாளராக, ஆராய்ச்சியாளராக, புள்ளிவிபரவியலாளராக இருந்தலுடன் செய்முறை பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்

இங்கு அறிவுரை வழங்குதலோ, தீர்மானம் எடுத்தலோ ஆலோசகரின பணியல்ல. தீர்மானம் எடுக்கும் உரிமை ஆலோசனை நாடியிட விடப்படும். பொறுப்பும் அவரையே சாரும். சூழ நிலையை உருவாக்கிக் கொடுத்தலே ஆலோசகரின் பணியாகும்.

03. தொழில் வழிகாட்டல், ஆலோசனை கூறலின் பிரதான குறிக்கோள்கள் 

தொழிலின் தன்மை, பொறுப்புக்கள், அத்தொழில் தொடர்பான பணிக்கொடை போன்றன பற்றி அறிய உதவுதல்.

வெவ்வேறு தொழில்களுக்குத் தேவையான பொதுத் திறன்கள் - சிறப்புத்  திறன்களை அறியச்செய்தல்.

                     மேலும் வாசிக்க -  கல்வி உளவியல்   - Click Here

தொழில் பகுப்பாய்ந்த தகுதி, அறிவுத் தகைமை, திறன்பெற உதவுதல்.

குறித்த தனிநபருக்கு ஆற்றல், உளச்சார்பு, விருப்பு வெறுப்பு குறித்த தகவல் போன்றன பெற்றுக் கொடுத்தல்.

சுய ஆய்வு, பாடநெறி, கருத்தரங்குகளில் பங்குபற்றுதல் - நிறுவனங்கள் பற்றிய  விளக்கம் பெற உதவுதல்.

தொடர்பு பேணுதலுக்கு வழிப்படுத்தல்.

04.பிள்ளையானது விருத்திப் பருவத்தில் இருப்பதனால் விருத்திசார் நோக்கில்      ஆலோசனை கூறலானது வழிகாட்டலை விட பிள்ளைக்குப் பயன்மிகுந்தது           என்பததற்கான காரணங்கள் .

ஆலோசனை கூறலானது வழிகாட்டலை விட, பிள்ளையைப் பொருத்தமடையச் செய்கிறது.

சிறந்த உளச் சுகாதாரத்திற்கு உதவுகிறது.

சமநிலை ஆளுமை விருத்தி செய்வதில் பங்களிப்புச் செய்கிறது.

கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தேவையான உள்ளார்ந்த சக்தியைக் கட்டியெழுப்புவதில் உதவுகிறது.

தீர்மானம் மேற்கொள்ளும் திறன்களை விருத்தி செய்வதில் பங்காற்றுகிறது.

வாழ்வின்  இலக்குகளை அடைவதில் மிகுந்த பயனுடையதாக அமைகிறது

05. இலங்கையில்  பாடசாலை தொழில் வழிகாட்டல் சேவையின் தேவைக்கான       நான்கு காரணிகள்

பாடசாலையில் வெளியேறுவோர் தொழில் பெற முற்படுவதால் அதற்கான 
ஆலோசனை வழங்குவதற்கு.

தொழிலின் இயல்பு, சேவை நிலை, அதன் பொருத்தப்பாடு முதலான விடயங்கள் பற்றி விளக்குவதற்கு 

ஒவ்வொருவரும் தத்தம் இயல்புக்கும் ஆளுமைக்கும் ஏற்றவாறு தொழிலைத் 
தெரிவதற்கு வழிகாட்டுவதற்கு.

தவறான தொழிலைத் தேர்ந்தெடுப்பின் தொழிலில் திருப்தி அடைய 
முடியாதென்பதை விளக்குவதற்கு.
 
பின்னர் செய்யவிருக்கும் தொழிலுக்குத் தயாராகும் நிலையை பாடசாலையில் வழங்குவதற்கு

தொழிலுக்குப் பொருத்தமான பாடநெறிகளைத் தெரிவு செய்து கொள்ள 
உதவுவதற்கு.

எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்  

06. தொழில் வழிகாட்டல் ஆலோசகர் ஒருவரின்  பிரதான கடமைகள் 

வேலை உலகு பற்றிய தகவல்களைச் சேகரித்தல்.

தொழில் வழிகாட்டலுக்கான ஒழுங்கமைப் பாடசாலையில் ஏற்படுத்துதல்.

மாணவர்களை இனங்காணுதலும், வழிநடாத்துதலும்.

நிபுணத்துவ உதவிகளையும், வெளித் தொழில் நிறுவனங்களின்  உதவிகளையும் பெறுதல்.

பொருத்தமான முறையில் நம்பிக்கையையும், வெளிப்படைத் தன்மையும், பொறுப்புக் கூறலையும் ஏற்படுத்திக் கொள்ளுதல்.

07.ஆலோசனை கூறுதல் ஒரு விசேட தொழிலாகக் கருதப்படுவதற்கான             
    காரணங்கள் 

வழிகாட்டுதலை விட முக்கியமானதும் சிக்கலானதுமாக இருத்தல் 

விஞ்ஞானச் செயன்முறை சார்ந்ததாக அமைவதால்.

பயனுள்ள வாழ க்கைக்குத் தேவையான திறன்களைப் பெற்றுச் செயலாற்ற உதவும் சிகிச்சை முறையாக அமைவதால்.

                    மேலும் வாசிக்க -  கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

ஆலோசனை கூறுபவர் ஓர் உளவியலாளராக, ஆராய்ச்சியாளராக, 
புள்ளிவிபரவியலாளராக, செயன்முறைப் பயிற்சி பெற்றவராக  இருக்க 
வேண்டியுள்ளமையால்.

08.‘ஆலோசனை கூறல்’ அபிவிருத்திசார் செயன்முறையென ஏன் கருதப்படுகின்றது? 

மாணவரின்  சம ஆளுமை விருத்திக்கு வினைத்திறனுடைய உதவி வழங்கக் கூடிய  அடிப்படை அறிவை வழங்குவதால்.

அத்தோடு அவர்களில் சாதக மனப்பாங்கு, திறன்களை விருத்தியடையச் செய்வதன் மூலம் பொருத்தமான வழிகாட்டல்களை வழங்குகின்றமையால். 
பயனுள்ள வாழ்க்கைக்குத் தேவையான திறன்களைப் பெற்றுக் கொள்ள உதவும்  செயன்முறையாக அமைவதால்.

ஒரு விஞ்ஞான செயன்முறையாகவும் அமைவதால்.

சுய விளக்கத்தின்  மூலம் தனது குறைபாடுகளை நீக்கிக் கொள்வதும்  தீர்வுகளை எடுத்து அதன்படி செயற்படுவதற்காகத் தனக்கும் சூழலுக்கும் இடையிலான தொடர்பை புரிந்து கொண்டு அதனை வழிப்படுத்தி தன்னிடம் காணப்படும்  சக்தியை விருத்தி செய்வது பற்றிக் கவனம் செலுத்துவதாக இருப்பதால்.

09. பார்ஸோனியன் மாதிரியை (Parsonian Model)) விளக்குக. 

1908 இல் பொஸ்டன் நகரத்தில் பார்ஸோன் என்பவர் ஒரு தொழில் நிலையத்தை நிறுவினார். இதில் நேர்காணல், சோதனைகள் போன்றவற்றை நடத்தியதுடன்  இந்நிறுவனம் தொழில்சார் தகவல்களையும் வழங்கியது.

ஒருவரை அவரது குணாதியங்களுக்குப்  பொருத்தமான தொழிலில் ஈடுபடச் செய்வதன் மூலம், அவர் தன்னையும் சமூகத்தையும் விருத்தி செய்ய முடியுமென பார்ஸோன் நம்பினார். அதற்கு உதவி செய்வதற்காக அவர் தயாரிக்கும் முறைமை பார்ஸோன் மாதிரி எனக் குறிப்பிடுடப்படுகிறது. 

ஒருவர் தொழிலைத் தெரிவு செய்ய உதவும் போது மூன்று முக்கிய கட்டங்களைக் 
கடக்க வேண்டும ;. 
i. அவரது ஆளுமைப் பகுப்பாய்வு 

ii. அவருக்கான தொழில் பகுப்பாய்வு 

iii.மேற்படி (ஆளுமைப் பகுப்பாய்வு, தொழில் பகுப்பாய்வு) இரண்டையும் ஒப்பிட்டு ஆராய்தல். இம்மாதிரி வழிகாட்டல் சேவையின்  ஆரம்பம் எனவும் 
கருதப்படுகின்றது. 

10. வழிகாட்டலும் ஆலோசனை கூறலும் என்ற எண்ணக்கருவை ஆன்ஜோன்ஸ        என்பவர் எவ்வாறு வரைவிலக்கணப்படுத்துகிறார்? 

இவரது விளக்கம் ஆலோசனை வழங்குதலின் தன்மையைப் பெரிதும் விளக்குகின்றது. 

தனியாள் ஒருவரின் வாழ்நாள் முழுவதிலும் ஏற்படும் சகல தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பங்களிலும் உரிய முறையில் அவற்றுக்கு (பிரச்சினைகளுக்கு) முகம் 
கொடுக்கும் சக்தியை அவரிடம் கட்டியெழுப்ப உதவும் ஒரு செயன்முறையே 
ஆலோசனையாகும் என்கிறார்.

இங்கு ஒருவருக்கு பிரச்சினைகளை இனங்காணவும் அவற்றிற்கு முகங்கொடுக்கவும், தீர்மானம் மேற்கொள்ளும் ஆலோசனை வழங்கப்படும் உதவியே முக்கியப்படுத்தப்படுகின்றது. 

எமது Youtube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்

Post a Comment

0 Comments