செயலாய்வு சட்டகம்

செயலாய்வு சட்டகம்

1.         முன்னுரை

முன்னுரை

            மேற்கொள்ளவுள்ள ஆய்வினைப் பற்றிய மேலோட்டமான குறிப்புகள்

சூழல்

·         ஆய்வாளர் பின்னணி

·         கற்பிக்கும் பாடம்

·         பள்ளி / மாணவர்கள் பற்றிய பொதுவான பின்னணி

     

கற்றல் கற்பித்தல் சிந்தனை மீட்சி

·         கற்பிக்கும் பாடம் தொடர்பான அனுபவம்

·         கற்றல் கற்பித்தல் பற்றிய சுய சிந்தனை மீட்சி

o   பாட உள்ளடக்கம்

o   பயிற்றியல் உள்ளடக்கம்

o   சுய அனுபவம்

§  முந்தைய ஆய்வுகளுடன் ஒப்பீடு

§  பயிற்றியல் கோட்பாடுகளுடன் ஒப்பிடுதல்

§  தற்போதைய ஆய்வினை நிறுவுதல்

 

2.             ஆய்வுக் குவியம்

·         ஆய்வுக் குவியத் தேர்வு

§  ஆய்வாளருடன் தொடர்புள்ள, மாணவர்களின் தேவைக்கேற்ப உள்ள ஆய்வுக் குவியத்தை அடையாளங்கண்டு விவரித்தல்

§  தேர்ந்தெடுத்த ஆய்வுக் குவியத்தைக் கீழ்காணும் கூறுகளின் அடிப்படையில் மதிப்பிடல்

§  மேலாண்மை (சிக்கலைக் கையாளும் திறன்)

§  முக்கியத்துவம் (அறிவுப் பகிர்வும் பயிற்றியல் மேம்பாடும்)

§  பயன்பாட்டுநிலை

ü  ஆசிரியரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஆய்வு – மாணவர் அல்லது பாடத்துணைப்பொருள்

ü  கூட்டுமுறை – சக ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், நிபுணத்துவ உதவிகள்

ü  பள்ளிக்கு ஏற்படும் விளைவுகள்

§  மிகத் தெளிவான ஆய்வுக் குவியமும் மேம்பாட்டின் விளக்கமும்

 

·         ஆய்வுக்கு முந்தைய தரவுகள்

§  குறையறி சோதனை, உற்றுநோக்கல், பயிற்சிப் புத்தகங்கள், நேர்காணல்

§  சிக்கலைக் களைவதற்கான முனைப்பைக் காட்டுதல்

 

குறிப்பு: மேலே உள்ள தலைப்புகளோடு முந்தைய ஆய்வினைத் தொடர்பு படுத்தி எழுதிட வேண்டும். கீழ்காணும் விடயங்களுக்குக் கவனம் செலுத்துதல் அவசியம்.

§  ஆய்வின் இடுவோடு தொடர்புடைய முந்தைய ஆய்வுகள்

§  கண்டறியப்பட்ட சிக்கல் களைதலின் முக்கியத்துவத்தோடு தொடர்பு படுத்துதல்

§  APA Version 7

·         செயல் திட்டம்

§  தேர்ந்தெடுத்த செயலாய்வு மாதிரியத்தை விளக்குதல்

§  பயன்படுத்தப்பட்ட  செயல்திட்டத்தின் முழுமையான விளக்கம் (என்ன / உருவாக்கிய முறை)

§  கற்றல் கற்பித்தலில் சிக்கலைக் களைய செயல்திட்டம் பயன்படுத்தப்பட்ட முறையின் விளக்கம்

§  கல்விக் கோட்பாடு, கருத்துரு ஆகியவற்றைத் தொடர்பு படுத்துதல்

§  முந்தைய ஆய்வுகளோடு ஒப்பிடுதல்

 

3.             ஆய்வின் நோக்கம்  & ஆய்வின் வினா

·         ஆய்வின் நோக்கம்

§  ஆய்வாளர், ஆய்வுக்குட்பட்டோர் ஆகியோரை உட்படுத்தியிருத்தல் வேண்டும்

§  ஆய்வாளருக்கான நோக்கம் குறிப்பிட்ட அளவீட்டை வெளிப்படையாகக் காட்டுவதாக இருத்தல் வேண்டும்.

§  ஆய்வின் சிக்கலுக்கான பதிலாக இருத்தல் வேண்டும்

§  செயல்திட்டத்தின் வழி செயல்படுத்தப்படும் நோக்கமாக இருத்தல் வேண்டும்

§  ஆய்வுக்குட்பட்டோரை உட்படுத்திய நோக்கம் கீழ்காணும் 3 கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும்

o   செயல்திட்டத்தின் அடைவுநிலை  - ... மிகச் சரியான உச்சரிப்புடன் ...

o   குவியம் – குறில், நெடில் சொற்களின் மாத்திரை அளவை..

o   செயல்திட்டம் – மாத்திரையோ மாத்திரை

§  எடுத்துக்காட்டுகள்:

o   நான்காம் ஆண்டு மாணவர்களுக்குத் திரையிசைப்பாடலின் மெட்டைப் பயன்படுத்திச் செய்யுள் மொழியணிகளில் நினைவாற்றலையும் ஈடுபாட்டினையும் அதிகரிக்கும் முறையினை விளக்குதல்.

o   நான்காம் ஆண்டு மாணவர்களுக்குத் திரையிசைப்பாடலின் மெட்டைப் பயன்படுத்திச் செய்யுள் மொழியணிகளில் நினைவாற்றலையும் ஈடுபாட்டினையும் அதிகரிக்கும் வழிகள் ஆசிரியர் பயிற்றியல் முறைமைக்கு வலுசேர்ப்பதை விவரித்தல்

·         ஆய்வின் வினா

o   நான்காம் ஆண்டு மாணவர்களுக்குத் திரையிசைப்பாடலின் மெட்டைப் பயன்படுத்திச் செய்யுள் மொழியணிகளில் நினைவாற்றலையும் ஈடுபாட்டினையும் எவ்வாறு அதிகரிக்க இயலும்?

o   நான்காம் ஆண்டு மாணவர்களுக்குத் திரையிசைப்பாடலின் மெட்டைப் பயன்படுத்திச் செய்யுள் மொழியணிகளில் நினைவாற்றலையும் ஈடுபாட்டினையும் அதிகரிக்கும் வழிகள் எவ்வாறு ஆசிரியர் பயிற்றியல் முறைமைக்கு வலுசேர்க்கும்


குறிப்புவேறுபாட்டினை விளக்குதல், தொடர்பைத் தெளிவுபடுத்துதல், விளைபயனை விவரித்தல் போன்ற சொற்றொடர்களைத் தவிர்க்கவும்

o    கருதுகோள் செயலாய்வில் தவிர்க்கப்பட வேண்டும் 

4.             ஆய்வுக்குட்பட்டோர்

·         ஆய்வாளர் ஆய்வுக்குட்பட்டோரோடு கொண்டுள்ள நேரிடைத் தொடர்பைப் பற்றிய விளக்கம்

·         ஆய்வுக்குட்பட்டோரின் விபரங்களை மிகத் துல்லியமாக விவரித்தல்

o   எண்ணிக்கை, பாலினம், இடம்/பள்ளி/வகுப்பு. ஆய்வுக்குட்பட்டோர் அடைவுநிலை, ஆய்வுக்குட்பட்டோரின் குறிப்பிட்ட பண்புகள் அல்லது நிலை

o   ஆய்வுநெறியைக் கடைப்பிடிப்பது முக்கியம்

·         ஆய்வுக்குட்பட்டோரின் எண்ணிக்கை ஆய்வு நோக்கத்திற்கு ஏற்ப இருத்தல் அவசியம்

·         ஆய்வுக்குட்பட்டோரைக் குறிக்க மாணவர் அல்லது ஆய்வுக்குட்பட்டோர் என்ற சொற்களைப் பயன்படுத்தவும். தரவாளர்’, மாதிரிக்கூறு போன்ற சொற்களைத் தவிர்க்கவும்.

5.             ஆய்வு அமலாக்கத் திட்டம்

·         மூன்று முக்கிய கூறுகளை உள்ளடக்கியது

o   செயல்திட்டத்தின் படிநிலைகள்

o   தரவுகள் திரட்டும் வழிமுறை

o   தரவுகள் பகுப்பாய்வு வழிமுறை

 

·         செயல்திட்ட அமலாக்க வழிமுறை

o   மிகத் தெளிவான செயல் திட்ட அமலாக்கத்தின் விளக்கம்

o   நடவடிக்கைகளை நிரல்பட விவரித்தல்

o   நடவடிக்கைகளை ஞாயப்படுத்துதல் / நிறுவுதல்

 

·         தகவல்கள் திரட்டும் செயல்முறை

o   செயலாய்வின் ஆய்வாளர் தாமே முக்கிய ஆய்வுக் கருவியாக செயல் படுவார்

o   ஆய்யுநெறியைப் பின்பற்ற வேண்டும்

§  எடுத்துக் காட்டு - பெற்றோர் அனுமதிக் கடிதம்

o    3 ஆய்வு அணுகுமுறைகள்

§  உற்றுநோக்கல்

§  நேர்காணல்

§  ஆவணம்

o   ஆய்வுக் கருவிகள்

§  சோதனைகள் (குறையறி சோதனை, முன்னறி சோதனை, பின்னறி சோதனை)

§  நேர்காணல் (வடிவமைக்கப்பட்ட நேர்காணல், பகுதியளவு வடிவமைக்கப்பட்ட நேர்காணல் அல்லது வடிவமைக்கப்படாத நேர்காணல்)

§  உற்றுநோக்கல் ( பங்கேற்று உற்றுநோக்கல், பங்கேற்காது உற்றுநோக்கல்)

§  ஆவணப் பகுப்பாய்வு

§  முதன்மை ஆவணம் - ஆய்வுக்குட்பட்டோரின் குறிப்புகள், திரட்டேடு, நாட்குறிப்பு

§  இரண்டாம் நிலை ஆவணம் – கூட்ட அறிக்கை, மாணவர் கோப்பு, அறிக்கை   

·         தரவுகள் பகுப்பாய்வு செயல்முறை

o   ஆய்வு நெறிகளைக் கடைபிடிப்பது முக்கியம்

o   தரவுகளின் வகைக்கேற்ப இருத்தல் வேண்டும்

§  தரவுகள் பகுப்பாய்வு முறை விளக்கப்பட வேண்டும்

o   பண்புசார் தரவுகளின் பகுப்பாய்வு அட்டவணை இணைக்கப்பட வேண்டும்

o   அளவுசார் பகுப்பாய்வு அட்டவணை, குறிவரைவு மூலம் காட்டப்பட வேண்டும் 

6.             ஆய்வின் கண்டுபிடிப்புகள்

o   பண்புசார் தரவுகள் கருத்துகளுக்கு ஏற்ப விளக்கப்பட வேண்டும்

o   அளவுசார் தரவுகளின் கண்டுபிடிப்புகள் அட்டவணை, குறிவரைவு ஆகியவற்றின் உதவியுடன் விளக்கப்பட வேண்டும்

7.             சிந்தனை மீட்சி

o   மேற்கொள்ளப்பட்ட செயலாய்வின் நோக்கம் (ஆய்வாளர், ஆய்வுக்குட்பட்டோர்) நிறைவேறியதை, சிறிது நிறைவேறியதை அல்லது நிறைவேறாத நிலையைச் சிந்தனை மீட்சி செய்தல்

o   காரண காரியங்களை நிறுவுதல் 

8.             பரிந்துரைகள்

o   ஆய்வின் நோக்கங்கள் எதிர்பார்த்த அளவில் நிறைவேறாத நிலை

§  மறுசுற்றுக்குத் தேவையானவற்றைப் பரிந்துரைத்தல்

o   நோக்கம் நிறைவடைந்த நிலை

§  தொடர் ஆய்வுக்கான பரிந்துரை 

மேற்கோள் மூலங்கள்

இணைப்புகள்

·         மாணவர் அனுமதிக் கடிதம்

·         ஆய்வுக் கருவிகள்

·         வரவு செலவு

·         செயல் அட்டவணை

 


Post a Comment

0 Comments