சமூக அடுக்கமைவும். செயற்பாட்டு வாதமும்


ஒரு சமூகமானது ஒழுங்கு முறையாகவும், சீரான போக்கிலும் செயற்படுவதற்கு சில அடிப்படை அம்சங்களைப் பூரணப்படுத்தியிருக்க வேண்டும். இதனால் ஒரு சமூகத்தின் சீரான இயக்கத்திற்கு ஒழுங்கு, கட்டுப்பாடு, உறுதிப்பாடு என்பன அவசியம் என்பதையும், சமூக அடுக்கமைவானது இதற்கு உறுதுணையாக அமைதல் வேண்டும் எனவும் செயற்பாட்டு வாதம் வலியுறுத்துகின்றது.

செயற்பாட்டு வாதியான டால் கொற்பர்சன்ஸ் கருத்துப்படி சமூகத்தில் நிலவுகின்ற ஒத்துழைப்பு,          உறுதிநிலை,  ஒழுங்கு நிலை, என்பன     பெறுமானங்களில்    தங்கியுள்ளன.   பெறுமானங்களின் அடங்கியுள்ள பெறுமதி மிக்கவையாகவும்  நல்லவற்றையும் உள்வாங்குவதில் உடன்பாட நிலவுதல் வேண்டும்.

சமூக அடுக்காக்கம் என்பது சமூகத தொகுதியிலுள்ள  கூறுகளை பொதுவானதொரு பெறுமான முறைக்கு ஏற்ப வரிசைபடுத்துதலைக் குறித்து நிற்கின்றது. அநேகமான சமூகங்களின் பெறுமானம் என்பது முக்கிய கூறாகக் கொள்ளப்படுவதனால் சில பொதுவான பெறுமானங்களின் மூலம் சமூக அடுக்கமைவானது திர்மானிக்கப்படுகின்றது. சமூக ஒழுங்கு முறையானது இரு முறைகளில் ஒருங்கிணைக்கப்படுகின்றது. என்கிறார் டொல் கொற் பர்சன்ஸ்.

தாழ்ந்த படிநிலைகளுக்குள்ள ஒவ்வொரு முறைமையும் உயர் நிலையிலுள்ளவற்றிற்கு வேண்டியததான சக்தி, நிபந்தனைகளை வழங்குகின்றன.

  சமூக அடுக்கமைவு - மேலதிக தகவல்கள் 

உயர் நிலைகளில் உள்ளவை தமக்குக் கீழ் உள்ளவற்றைக் கட்டுப்படுத்துகின்றன.

பர்சனின் ஆய்வானது மிகவும் பொதுமைப்படுத்தப்பட்ட உருவாக்கமாகவும் படிநிலை நோக்கியதாகவும் அமைந்திருந்தன. உலகளாவிய படிமலர்ச்சி எனும் இவரது கருத்தியலின் முக்கியத்துவமான, முன்நிபந்தனையான, மேம்பாட்டுக்கான புதியதும், அதிக சிக்கல் மட்டங்களை உரியதுமான சமூக அமைப்புக்கள் இனங்காணப்படுகின்றன. முறைகள், முறைப்படுத்தப்பட்ட மக்களுக்குரிய மனப்பான்மைகள், நடத்தைகள், அரசியல் முறைமைகள், பொருளாதாரக் கட்டுப்பாடு என்பன படிமலர்ச்சிக்குரிய நவீன இயல்பகளாகக் கொள்ளப்படுகின்றன.

பர்சன் சமூகப்படி மலர்ச்சி மூன்று மட்டங்களில் அமைகின்றது என்கிறார்.

1. தொன்மையான மட்டம் : இது செயற்பாட்டு ரீதியில் ஒன்றிணைக்கப்பட்ட மரபு ரீதியான சமூகமாகும்.

2. இடைமட்டம் : அமைப்பு ரீதியான உருமாற்றத்தைக் கொண்ட மேம்பாட்டை நோக்கிய அமைப்பு   மாற்றங்கள் ஆரம்பித்து விட்ட சமூகமாகும்.

3. நவீன மட்டம் : இது நவீன மேம்பாட்டுச் சமூகமாகும்.

சமூகம் முதலில் தொன்மையான மட்டத்திலிருந்து இடை மட்டத்திற்கு நகர்கின்றது. அப்பொழுது மொழி படிமலர்ச்சி அடைகின்றது. பிறகு சமூகம் இடை மட்டத்திலிருந்து நவீன மட்டத்தை அடைகின்றது. அப்பொழுது அதன் நியதிகள், சட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நெறியமைப்பு முறை மாற்றமடைந்து படி மலர்கின்றது. என்பது இவரது கருத்தாகும்.

KINGELEY DAVIS AND WILLBEART MOORE (1945) ஆகியோரது கருத்துப்படி சமூக அடுக்கமைவானது சகல சமூகங்களிலும் இடம்பெறுகின்ற செயன்முறையாகும். ஒரு சமூகமானது வினைத்திறன் மிக்கதாக செயற்பட வேண்டுமாயின் செயல்நிலை அடிப்படையில் சில தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளல் வேண்டும். சமூகம் வெற்றிகரமானதாகத் தொழிற்படுவதற்கு வகிபங்கு ஒதுக்கீடு என்பது மிக அவசியமாகும். திறமைமிக்க நபர் சமூகத்தின் உயர்நிலைப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகளைத் தீர்மானிப்பதற்கு சமூக அடுக்கமைவு வழிப்படுத்துகின்றது.

கிங்ஸ்லி டேவிஸ் மற்றும் வில்பேர்ட் மூர் (Kingsley Davis and Wilbert Moore) ஆகியோர் தொழில்களின் அடிப்படையிலேயே சமூக அடுக்கமைவு உருவாகின்றது. இது வெவ்வேறு வேலைகளின் சமமமற்ற தன்மையைக் குறிக்கிறது என்கின்றனர். இதன்படி சமூகத்தின் சில பணிகள் மதிப்புமிக்கவை இந்தப் பணிகளை மேற்கொள்ளத் தகுதிவாய்ந்தவர்களுக்கு மற்றயவர்களை விட அதிக வெகுமதி வழங்கப்பட வேண்டும் என இவர்கள் தெரிவித்துள்ளனர்

கல்வி உளவியல்   - Click Here

  சமூக அடுக்கமைவு 

எமது கல்வி வீடியோக்கள் பார்த்து பயன்பெற - Click Here

கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்


Post a Comment

0 Comments