கல்வி வாய்ப்புக்களும் சமூக வகுப்பும்


கல்வி -வாய்ப்புக்களும் -சமூக -வகுப்பும்

கல்வி வாய்ப்புக்களைத் தீர்மானிப்பதில் சமூக வகுப்பு ஏற்படுத்தும் தாக்கம்

கல்வி வாய்ப்புக்களைத் தீர்மானிப்பதில் சமூக வகுப்பானது பல்வேறு வகைகளில் மக்கிய காரணியாகத் திகழ்கின்றது. சமூகமொன்றின் கல்வி விருத்திக்கு சமூகம் காரணமாக அமைவதைப் போல கல்வியானது சமூக அபிவிருத்திக்கான பிரதான காரணியாகவும் தொழிற்படுவதைக் காணக் கூடியதாக உள்ளது. தனியாட்களின் ஆளுமைக்கு கல்வி அடிப்படையாக விளங்குவதோடு சமூக நலன்களைப் பேணுவதற்கும் இது துணையாக அமைகின்றது.

  சமூக அடுக்கமைவு - மேலதிக தகவல்கள் 

சமூக வகுப்பானது கல்வி முறைகளிலும், கல்வி நிர்வாக முறைமைகளிலும் முக்கிய வகிபாகத்தினைப் பெற்றுள்ளமையினை அவதானிக்கலாம். சமூக வகுப்புக்களுக்கிடையே காணப்படும் உயர்வு தாழ்வுகளை இழிவளவாக்குவதில் கல்வி ஒரு முக்கியமான வழிமுறையாக உள்ளது. கல்வியானது சமூக வகுப்பினை உள்ளவாறு பேணுவதற்கும் உறுதுணையாகத் தொழிற்படுகின்றது. பெற்றோருடைய கல்வி நிலைமை, பொருளாதார நிலைமை,தொழில் தராதரம், என்பன பிள்ளைகளின் பாடசாலைக் கல்வியுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளது.

சமூக வகுப்பானது பிள்ளைகளின் பாடசாலைத் தெரிவு, பாடசாலைக் கல்வியில் நீடித்திருக்கும் காலம், அவர்களது கல்வி அடைவு மட்டம் என்பனவற்றைத் தீர்மானிக்கின்றது. பெற்றோர்களது சமூக வகுப்பே அவர்களது கல்வி, சுகாதாரம், போசனை, புலன் தொழிற்பாடுகள், என்பவற்றைத் தீர்மானிப்பதாக உள்ளது.

நகர்புறங்களில் பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் கல்வி கற்கும் வாய்ப்பு உயர்தர மற்றும் நடுத்தர வகுப்பினருக்கே உண்டு. கல்வி வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதிலும், நீடிப்பதிலும் கடும்பப் பின்னணி அதினளவில் தாக்கம் செலுத்துகின்றது. வீட்டு வசதி, தொழிநுட்ப சாதன வசதி கற்பதற்கான சூழல், ஊக்குவிப்பு முதலியன கல்வியில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன.

தொழிலாளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் கல்விக்கு வழங்கப்படுகின்ற பெறுமானம் மிகவும் குறைவானதாகும். இவர்கள் கல்விக்கு பெருமளவு முதலீடு செய்ய முடியாத நிலைமைகள் உள்ளன. இதனால் குறைந்த வயதில் பாடசாலையை விட்டு விலகுதல், உடனடி நன்மை பெறும் வகையில் தொழிலொன்றை நாடுதல் என்பவற்றுக்கே முக்கியத்துவம் வழங்குகின்றனர். இவர்கள் உயர் தொழில் அந்தஸ்தினை அடைவதில் குறைந்தளவு பெறுமானங்களையே கொண்டுள்ளனர். பெற்றோர்களின் கல்வி மீதான ஆர்வமும் சமூக வகுப்பின் செல்வாக்கிற்கு உட்படுகின்றது. கலாசார இழப்பு மற்றும் கலாசார வறுமை காரணமாக தொழிலாளர் வகுப்பின் பிள்ளைகளது கல்வி அடைவுகளில் பாரிய தாக்கம் ஏற்படுகின்றது. கல்வியில் சமவாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலமாகவே இத்தகைய பாதிப்புக்களை நீக்க முடியும்.

கல்வி உளவியல்   - Click Here

இவ்வாறாக சமூக வகுப்பானது கல்வியில் பல்வேறு வகைகளில் தாக்கம் செலுத்துகின்றது. இத்தகைய செல்வாக்குகளைச் சமநிலைப்படுத்தம் வகையில் நியாயத் தன்மையுடன் கூடிய கல்வி முறைமை ஒன்றைச் செயற்படுத்த வேண்டியது அவசியமானின்றது.

இலங்கையில் சமூக வகுப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாடசாலைகள் இருப்பதாக ரூபசிங்க தெரிவித்துள்ளார். இனக்குழுவுக்கேற்ப, ஆண், பெண் வேறுபாட்டுக்கேற்ப பாடசாலைகளில்காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுவதாகத் தவிர்க்கப்படுகிறது. தற்காலத்தில் சரவதேச பாடசாலைகள் சமூக வகுப்புக்குச் சேவை புரிவதாக உள்ளது. கீழ் சமூக வகுப்புப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் அப் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கீழ்மட்டத்திலான மனப்பாங்கைக் கொண்டவர்களாகவே

எமது கல்வி வீடியோக்கள் பார்த்து பயன்பெற - Click Here

இpருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. வளப்பகிர்வில் பாகுபாடு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கல்வி நிவனங்களில் அனுமதிக்கப்படுவது, உயர் கல்விச் சந்தர்ப்பங்கள், மொழி ஊடகம், பாடநெறிகளைத் தெரிவு செய்தல் போன்றவற்றில் சமூக வகுப்புச் செல்வாக்குச் செலுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையிலும் பாடசாலைத் தெரிவிலும் பாடநெறித் தெரிவிலும் சமூக வகுப்புச் செல்வாக்குச் செலுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் சிறந்த பாடசாலைகளில் கற்க அதிக போட்டி நிலவுவதைக் காணலாம். குடிசை வீடுகளில் வசிப்பவர்களின் பிள்ளைகளின் கல்வி பங்குபற்றல் மிகவும் குறைவானது என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. பிள்ளைகளின் விஞ்ஞானக் கல்வி அடைவில் சமூக பொருளாதாரப் பின்புலம் செல்வாக்குச் செலுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

 

Post a Comment

0 Comments