சமூக அடுக்கமைவு வகைகள்


சமூக - அடுக்கமைவு - வகைகள்
சமூக அடுக்கமைவு வகைகள்


சமூகவியலாளர்கள் மூன்று பிரதான சமூக அடுக்கமைவு வகைகளை இனங்காட்டுவர்.

சாதி அமைப்பு 

பண்ணை அமைப்பு 

திறந்த வகுப்பு அமைப்பு 

சாதியமைப்பு

சாதி அமைப்பு மூடிய அமைப்பாகும். பிறப்பின் அடிப்படையில் ஒருவனுடைய சமூகத் தரம் தீர்மானிக்கப்படுகின்றது. இந்தியாவில் நான்கு சாதியமைப்புக்கள் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. பிராமணர், சத்திரியர், வைசிகர், சூத்திரர் இவர்களை விட தீண்டத் தகாதவர்கள் என்ற ஒரு சாதியும் இருந்தது. (இது வெளிச் சாதியாகக் கொள்ளப்பட்டது.) ஆயினும் இன்ற எமது புலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சாதிப்பிரிவுகள் காணக்கூடியதாக உள்ளது.

  சமூக அடுக்கமைவு - மேலதிக தகவல்கள் 

பண்ணை அமைப்பு

பண்ணை அமைப்பு என்பது மத்திய கால ஐரோப்பாவில் காணப்பட்ட நிலமானிய அமைப்பாகும். அங்கு மூன்று வகையான பண்ணை அமைப்புக்கள் இருந்தன.

பிரபு- அரசன்

மதகுருக்கள் 

விவசாயிகள்ஃகூலியாட்கள்

இந்திய சாதியமைப்பு சமயத்திலும், மத்திய கால ஐரோப்பிய பண்ணை அமைப்பு பிரபுக்கள், சட்டங்கள் என்பவற்றிலும் தங்கியிருந்தன.

சமூக வகுப்பு

சமூக அமைப்பு என்பது சமூக விஞ்ஞானங்களிலும், அரசியல் கோட்பாடுகளிலும் சமூக அடுக்கமைவு மாதிரிகளை மையப்படுத்தியதாக தற்சார்பாக வரைவிலக்கணம் கூறப்படும் ஒரு தொகுதிக் கருத்துக்களாகும். இதில் மக்கள் படிநிலை அமைப்புக் கொண்ட சமூகப் பகுப்புக்களில் குழுக்களாக அடக்கப்படுகின்றனர். பொதுவாக உயர்தர வகுப்பு, நடுத்தர வகுப்பு, தாழ்ந்த வகுப்பு என்பன காணப்படுவதைக் காணலாம்.

வர்க்க அமைப்பு என்பது தனியாட்கள் தனிப்பட்ட முறையில் பெறும் திறமையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது. இதனூடாக ஒவ்வொருவரும் முன்னேற இடமுண்டு. மேல்நோக்கிய கீழ்நோக்கிய அசைவு இங்கு சாத்தியமாகும். தனியாட்களுக்கிடையே போட்டி மனப்பான்மையை இது தூண்டுகின்றது. பொருளாதாரம், வாழ்க்கைத் தரம், அரசியல் அதிகாரச் செல்வாக்கு, சமூக, சமய அந்தஸ்து என்பவற்றைப் பொறுத்து தனி நபர்களையோ, அல்லது சமூகக் குழுக்களையோ தாழ்வு நிலையிலிருந்து உயர் நிலை வரை படிநிலை அடுக்கமைவாகப் பிரிக்கலாம். அவ்வாறு பிரிக்கப்படும் ஒவ்வொரு பிரிவும் வர்க்கம் அல்லது வகுப்பு எனப்படும்.

வர்க்கப் பிரிவினையின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பை வர்க்கப் படிநிலை அடுக்கமைவு குறிக்கின்றது. வர்க்கம் அல்லது வகுப்பு என்பது ஒரே சமூக, பொருளாதார நிலையிலுள்ள மக்கள் குழுவைக் குறிக்கும். பலவிதமான சமூக அடுக்கமைவுகள் சுட்டிக் காட்டப்பட்டாலும் பொருளாதார ரீதியில் மூவகையான வர்க்கங்களே எல்லோராலும் சுட்டிக்காட்டப்படுகின்றன.

அடித்தட்டு வர்க்கம்

உயர் வர்க்கம்

அடித்தட்டு வர்க்கம் எனப்படுவது பொருளாதார, சமூக அடுக்கமைவில் மிகவும் பின்தங்கிய மக்கள் குழுவாகும். ஆயஒ றுநடிச அவர்களது சமூக பொருளாதார சொற் பயன்பாட்டில் இது தொழிலாளர் வர்க்கம் எனப்படுகின்றது. இவர்களைப் பற்றி ஒட்டுமொத்தமாக வரையறை செய்வது கடினம். எவ்வளவு ஒழைத்தும் தொடர்ந்தும் பின்தங்கி நிற்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், எளிமையான வாழ்வு முறையைத் தேர்ந்த துறவிகள் போன்றோரும், குடி, போதை போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமைப்பட்டு பின்தங்கி நிற்போர், நொய் சமூகக் கட்டமைப்பு போன்ற இதர காரணிகளால் பின்தங்கியோர் என பலதரப்பட்ட மக்கள் இந்த தடித்தட்டு வர்க்கம் என்ற வட்டத்தினுள் வரக் கூடும். ஆங்கிலத்தில் றுழசமiபெஉடயளளஇ ருனெநசஉடயளள என்றும் இவர்களை வேறுபடுத்திக் காட்டுவர். தமிழில் உழைப்பாளிகள், விளிம்புநிலை மக்கள் என்ற சொல்லாடலர்களும் உண்டு.

  சமூக அடுக்கமைவு - மேலதிக தகவல்கள் 

நடுத்தர வர்க்கம் எனப்படுவது சமூகப் படிநிலை அடுக்கமைவில் நடுவிலுள்ள வகுப்பினரைக் குறிக்கும். (ஆயஒ றுநடிநச) அவர்களது சமூக பொருளாதார சொற் பயன்பாட்டின் படி தற்கால சமூகத்தின் சமூக, பொருளாதார அடிப்படையில் தொழிலாளர் வகுப்புக்கும், உயர் வகுப்புக்கும் இடையில் இருக்கும் பரந்தளவு மக்கள் கூட்டத்தையே நடுத்தர வகுப்பு எனும் சொற்பதம் குறித்து நிற்கின்றது. நடுத்தர வர்க்கம் என்பதைத் தீர்மானிக்கும் அளவு கோல் வெவ்வேறு பண்பாடுகளில் வெவ்வேறு விதமாகக் காணப்படுகின்றது. நடுத்தர வர்க்கத்தினர் நல்ல வாழ்க்கைத் தரத்தைத் தரக் கூடிய பொருளாதார வசதியைப் பெற்ற, அல்லது பெற வல்ல மக்கள் கூட்டத்தினராவர். அவர்கள் உயர் வர்கத்தினர் அளவுக்கு அதிகாரத்தை அல்லது செல்வாக்கை கவியப்படுத்திக் கொண்டிருப்பதில்லை. பொதுவாகத் தொழிற்துறை வல்லுனர்கள், புலமையாளர்கள், அரச சேவையாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் இந்த வர்க்கத்தில் அடங்குவர். பொருளாதார, வாழ்க்கைத்தர நிலைமைகளைப் பொறுத்து விவசாயிகளும், தொழிலாளர்களும் கூட இந்த வரையறைக்குள் வரக் கூடும்.

நடுத்தர வர்க்கம் என்பதற்கு ஈடான ஆங்கிலச் சொல் ஆநனனடந ஊடயளள என்பதாகும். இச் சொல் 1745 ஆம் ஆண்டிலே ஜேம்ஸ் ப்ராட்சா என்பவரால் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. எனினும் இச்சொல் பல பொருள்களிலும் சில வேளை முரண்பட்ட பொருள்களிலும் பயன்படுத்தப்பட்டது. ஒரு காலத்தில் ஐரோப்பாவில் பிரபுக்களுக்கும் குடியானவர்களுக்கும் இடையிலுள்ள மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. பிரபுத்துவ வகுப்பினர் நாட்டுப்புற நிலங்களுக்கு உடமையாளர்களாக வியங்கினர் அவர்களது நிலங்களில் வேலை செய்த மக்கள் கூட்டம் குடியானவர்கள் எனப்பட்டனர். இவ் வகுப்புக்களுக்குப் புறம்பாக புதிதாக உருவான, வணிகச் செயற்பாடுகளோடு தொடர்புடைய நகரவாசிகள் நடுத்தர வகுப்பினராகக் கருதப்பட்டனர். இன்னொரு வரைவிலக்கணத்தின் படி பிரபுத்துவ வகுப்பினரோடு போட்டி போடக் கூடிய அளவிற்கு மூலதனம் வைத்திருந்த முதலாளிகள் நடுத்தர வகுப்பினர் எனப்பட்டனர். தொழிற் புரட்சி காலத்தில் பெருமளவு மூலதனத்தைக் கொண்ட இலட்சாதிபதிகளாக இருப்பதே நடுத்தர வகுப்பினராக இருப்பதற்குரிய தகுதியாக இருந்தது. பிரஞ்சுப்புரட்சியை நிகழ்த்தியவர்கள் நடுத்தர வர்க்கத்தினரேயாவர்.

நடுத்தர வர்க்கம் என்பதற்குரிய தற்கால பொருளுடன் கூடிய பயன்பாடு 1913 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் பதிவாளர் நாயகத்தின் அறிக்கையில் காணப்பட்டது. இதில் புள்ளிவிபரவியலாளர் னு.ர்.ஊ. ஸ்ரீவன்சன் நடுத்தர வகுப்பினரை உயர் வகுப்பினருக்கும், தொழிலாளர் வகுப்பினருக்கும் இடைப்பட்டவர்களாகக் குறிப்பிட்டார். உயர் தொழில் வல்லுனர்கள், மேலாளர்கள், அரச அதிகாரிகள் உயர் மட்டத் தொழிலாளர்கள் போன்றோர் நடுத்தர வகுப்பினராகக் கருதப்பட்டனர்.

உயர் தர வர்க்கம்

உயர் தர வர்க்கம் ஒரு சமூகத்தில் அரசியல், பொருளாதார, சமூக, சமய, கல்வி, ஊடகவியல் முனைகளில் அதிக ஆதிக்கம் செலுத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் மக்கள் குழு உயர் வர்க்கம் எனப்படுகின்றது. தமிழில் மேட்டுக் குடிகள், மேட்டுக்குடி வர்க்கம் போன்ற சொல்லாடல்களும் உயர் வர்க்கத்தினரைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. பொதுவான சமூகக் கட்டமைப்பில் ஓர் சிறு மக்கள் குழுவே பல துறைகளிலும் குவியப்படுத்தப்பட்ட அதிகாரத்தைக் கொண்டிருக்கும். தனிநபரோ, குடும்பமோ, சமூகக் குழுக்களோ, நாடுகளோ தமது வர்த்தக நிலையில் இருந்து மேல்நோக்கியோ, கீழ்நோக்கியோ அசைவது தொடர்ந்து நிகழும் ஒரு செயற்பாடேயாகும். இளமையில் அடித்தட்டு வர்க்கத்திலுள்ள ஒருவர் நல்ல கல்வி கற்று, நல்ல வேலைவாய்பைப் பெற்று உயர் வர்க்கத்திற்கு வருவது சாத்தியமே. அதுபோல் அரசியல் சூழ்நிலைகளால் சீரழிந்து உயர் வர்க்கத்திலிருந்த ஒருவர், அல்லது ஒரு குடும்பம், அல்லது ஒரு குழு சிதைந்து அடித்தட்டு வர்க்கத்திற்கு வருவதும் சாத்தியமே.

கல்வி உளவியல்   - Click Here

  சமூக அடுக்கமைவு 

எமது கல்வி வீடியோக்கள் பார்த்து பயன்பெற - Click Here

கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்


Post a Comment

0 Comments