சமூக அடுக்கமைவும் மாக்ஸிஸ வாதமும்

சமூக-  அடுக்கமை
 சமூக அடுக்கமை

சமூக அடுக்கமைவு தொடர்பாக ஆராய்ந்தவர்களில் மிகவும் முக்கியமானவராகவும்,  முன்னோடியாகவும் விளங்குபவர் கார்ல் மார்க்ஸ் ஆவார். இயங்கியல் பொருள்முதல் வாத கோட்பாட்டினை முன்வைத்த முன்வைத்த கார்ல் மார்க்ஸ் அதனூடாக சமூக அடுக்கமைவு ஒன்றினை இனம் காண முற்படுகின்றார்.

 சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் பொருளே தீர்மானிக்கிறது என முன்மொழியும் கார்ல்   மாக்ஸ்  பொருளை   அடிப்படையாகக்  கொண்டு  உள்ளவர்கள் , இல்லாதவர்கள் என இரு முரண்பட்ட நிலைகளைக் காட்டுகிறார். இதில் பொருள் உள்ளவர்களை முதலாளிகள் என்றும், பொருள் இல்லாதவர்களை அதாவது முதலாளிகளில் தங்கியுள்ளவர்களை தொழிலாளிகள் என்றும் இரு வகுப்புக்களாகக் காட்டுகின்றார். இவ்விரு வகுப்புக்களிடையேயும் ஓர் இடைவெளியை ஏற்படுத்தும் சக்திகளாக உபரிப்பெறுமானம், சுரண்டல், அந்நியமாதல், தனியுரிமையாதல் என்பன விளங்குவதாகவும் கூறுகின்றார். இதன் வழி முதலாளி வகுப்பு, தொழிலாளி வகுப்பு என இரு சமூக வகுப்புக்களை அடையாளம் காட்டுகின்றார்.


1.     முதலாளி வகுப்பு : 

நிலம், தொழிற்சாலை, இயந்திரங்கள் என்பவற்றுக்கச் சொந்தக்காரர்கள் இவர்களது நோக்கம்             இலாபத்தைப் பெருக்குதலாகும் தொழிலாளர்களது உழைப்பிலிருந்தே செல்வம், அரசியல் அதிகாரம என்பவற்றைப் பெறுகின்றார்கள்.  கிடைக்கும் இலாபத்தை மேலும் பெருக்க உற்பத்திச்சாதனங்களில் முதலிடுகின்றார்கள். அதன் வழி இவர்கள் ஆளும் வர்க்கமாக இனங்காட்டப்படுவர்.

2. தொழிலாளர் வகுப்பு : 

இவர்கள் சுரண்டப்படும் வகுப்பு. தொழில் வலு, தொழிற்படை என்பதை விட வேறு எதற்கும் சொந்தக்காரர்கள் அல்லர். இவர்களது அபரிதமான உழைப்பால் முதலாளிகளுக்கு உபரி வருமானம் கிடைக்கின்றது. சுரண்டலால் தொழிலாளர்களின் நிலை கீழ்நோக்கிச் செல்லும். இதற்கு மாற்றீடாக தொழிலாளர்களால் பெரிதாக எதனையும் சாதிக்க முடியாது. காரணம் முதலாளிகள் அரசியல் அதிகாரத்தினால் தமது ஆதிக்கத்தைப் பலப்படுத்தி நிலைநிறுத்திக் கொள்வர்.  இதனால் தொழிலாளர் வகுப்பு ஆளப்படும் வர்க்கமாகவே இருக்கும்.

இவ்விரு அமைப்புக்களும் சமூகத்தில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கட்டமைப்புக்களாக கார்ல் மாக்ஸால் விபரிக்கப்படுகின்றது. இவற்றுக்கிடையிலான முரண்பாட்டை விளக்குவதற்கு அடிக்கட்டுமானம், மேல்கட்டுமானம் என இரு கருத்துக்களை முன்வைக்கின்றார். ஒரு சமூகத்தின் அடுக்கமைவானது பொருளாதார உற்பத்திக் காரணியாலேயே வெளிப்படுகின்றது. ஒவ்வொரு சமூகத்திலும் குறிப்பிட்டதோர் உற்பத்தி உறவும், உற்பத்திக் காரணியும் இருக்கும். விவசாய சமூகத்தில் நிலமும், குத்தகையும் முக்கியம் பெறும்;. கைத்தொழில் சமூகத்தில் முதலாளி, தொழிலாளி என்போர் முக்கியம் பெறுவர். இதன்வழி பொருளாதாரம் என்ற அடிக்கட்டுமானத்திலிருந்து அரசியல், கல்வி, சமயம்,  சட்டம்,  கலை  முதலிய  மேற்கட்டுமானங்கள்  உருவாக்கம்  பெறுகின்றன.

  சமூக அடுக்கமைவு - மேலதிக தகவல்கள் 

இவ்வாறு சமூகத்தின் அமைப்பு முறையினை கார்ல் மாக்ஸ் விளக்குகின்றார். வரலாற்றின் ஒவ்வொரு கால கட்டத்திலும் உற்பத்திக்கான மூலப்பொருள் வகிக்கும் இடத்தினைப் பொறுத்தே சமூகம் ஒன்றின் அடிப்படை தீர்மானிக்கப்படுகின்றது.

 கார்ல் மாக்ஸ் மேற்கு ஐரோப்பாவினை அடிப்படையாகக் கொண்டும், உற்பத்திக்கான மூலப்பொருள் சமூகத்தில் வகிக்கும் இடத்தினைப் பொறுத்தும் சமூகத்தின் அபிவிருத்தியை ஐந்து படிநிலைகளாகப் பிரிக்கின்றார்.

முதலாவது படிநிலையில் ஆதிகால கம்யூனிச சமூகம் இருந்ததாகக் கூறுகின்றார். இங்கு உற்பத்தி முறைமை சமுதாயம் சார்ந்ததாக இருந்தது. உற்பத்திக் கருவிகளாக வேட்டையாடுதலும், இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைத் திரட்டிக் குவிப்பதாகவும்

இருந்தது. இங்க சொத்துக்கள் யாவும் யாருக்கும் சொந்தமாக இருக்கவில்லை. வேட்டையாடுதல் மூலமும், இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைத் திரட்டிக் குவிப்பதன் மூலமும் கிடைத்த மேலதிக பொருட்கள் சேமிப்புக்களாயின. யாரிடம் மிகையான சேமிப்பு இருக்கின்றதோ அவரிடம் அதிகாரமும் சென்றடைந்தது.அவர் சமூகத்தின் தலைவரானார். சமூகத்தில் தோன்றிய அவ்வாரம்பப் படிநிலை நகர அரசுகளின் தோற்றத்துடன் வீழ்ச்சியடையத் தொடங்கியது.

இரண்டாவது படிநிலையில் ஆண்டான்- அடிமை சமூகம் இருந்தது. இச்சமூகத்தின் தோற்றத்துடன் தனியார் சொத்துடமையும், வர்க்க சமூகமும் தோன்றி விட்டதாக கால் மார்க்ஸ் கூறுகின்றார். இங்கு அடிமைகள் ஆண்டானின் சொத்துக்களாயினர். அவர்கள் எவ்வித ஊதியமுமின்றி ஆண்டானிற்காக வேலை செய்தார்கள். இச்சமூக அமைப்பிலிருந்து இயக்கவியல் பற்றி மார்க்ஸ் விளக்குகின்றார். அடிமைகள் ஆண்டானின் சொத்தக்கள் மாத்திரமல்ல, ஆண்டானின் பாதுகாவலர்களுமாவர். அடிமைகள் இராணுவத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டார்கள். ஆண்டான் அடிமைச் சமூகம் உள்முரண்பாடுகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது.

மூன்றாவது படிநிலையில் நிலப்பிரபுத்துவ சமூகம் இருந்ததாக கால் மார்கஸ் குறிப்பிடுகின்றார். நிலபிரபுத்துவ சமூகம் நேரடியாக முதலாளித்துவ சமூகத்தின் எழுச்சிக்கு காரணமாகியது என்ற வகையில் மக்கியமான இடத்தைப் பெறுகின்றது. நிலபிரபுத்துவ சமூகம் படுக்கைகளாயமைந்த பல வர்க்க முறைகளைக் கொண்டதாகும். அங்கு அரசன், பிரபுக்கள், குடியானவர்கள் என பல வர்க்கங்கள் இருந்தன. குடியானவர்கள் என்பவர்கள் அடிமையினை விட சற்றுக் கூடிய சமூக அந்தஸ்தினை உடையவர்களாவர். அரசன் நிலங்களின் ஆட்சியாளன். பிரபுக்கள் பெருந்தொகையான நிலங்களுக்கச் சொந்தக்காரர்கள். குடியானவர்;கள் தமது தொடர்ச்சியான வாழ்க்கைக்காக பிரபுவின் நிலங்களில்; உற்பத்தியை மேற்கொண்டு வந்தனர். நிலங்கள் பிரபுக்களுக்கச் சொந்தமாக இருந்தமையால் குடியானவர்களின் வாழ்வாதாரத்தைப் பராமரிப்பதற்குத் தேவையானவை போக மிகை உற்பத்திகள் அனைத்தும் பிரபுக்களுக்கச் சொந்தமாக இருந்தது. ஆண்டான் அடிமைச் சமூகத்தில் அடிமை ஆண்டானின்உடமையாக இருந்தான். பிரபத்துவ சமூகத்தில் குஎயானவன் பிரபுக்களின் உடமை அல்ல. ஆனாலும் அடிமைத்தனத்தின் இயல்பு வேறு வடிவத்தில் தொடர்ந்தது. குடியானவனின் பிள்ளைகள் பிரபுவின் நிலங்களிலேயே பெற்றோருடன் வேலை செய்ய வேண்டி இருந்தது. மேலும் குடியானவன் யுத்தகளத்தில் போர்வீரனாகவும் பயன்படுத்தப்பட்டான். நிலச் சொந்தக்காரர்களுக்கிடையில் இடம்பெற்ற யுத்தங்கள் பிரபுத்துவ சமூகத்தைச் சிதைக்கத் தொடங்கியது. நிலப்பிரபுக்கள் ஏனைய பிரபுக்களால் வெற்றி கொள்ளப்பட்டு அவர்களுக்கச் சொந்தமான குடியானவர்களையும் கைப்பற்றிக் கொண்டனர். இது இறுதியில் அரசனின் அதிகாரத்திற்கும் அபத்தாக மாறியது. மறுபக்கத்தில் நாணயங்களின் அறிமுகம் குடியானவர்கள் சொந்தமாக நிலங்களை வாங்குவதற்க உதவியது. மேலும் நாணயங்களின் அறிமுகம் புதிய வர்த்தக சமூகம் ஒன்றினைத் தோற்றவித்தது. மக்கள் அரசிற்கு வரி செலுத்த வேண்டும் என அரசன் கட்டளை பிறப்பித்தான். தமது நிலங்களைக் கடந்து செல்லும் வர்த்தகர்கள் மீது நிலப் பிரபுக்கள் வரி விதித்தனர். இது நிலப் பிரபுக்களுக்கும், வர்த்தகர்களுக்குமிடையில் புதிய முரண்பாட்டைத் தோற்றவித்தது. சமூகத்தில் ஏற்பட்ட விங்ஞான, தொழிநுட்ப வளர்ச்சி, புதிய இயந்திரசாதனங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கும், புதிய உற்பத்தி முறைகள் அறிமுகமாவதற்கும் காரணமாகியது. புதிய உற்பத்தி முறை முதலாளித்துவ சமூகத்தின் எழுச்சிக்கு உதவியது.

கல்வி உளவியல்   - Click Here

எமது கல்வி வீடியோக்கள் பார்த்து பயன்பெற - Click Here

கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்

நான்காவது படிநிலையில் முதலாளித்துவ சமூகம் இருந்தது. இங்க புதிய வர்க்க அமைப்பு இருந்ததாகக் கால் மார்க்ஸ் கூறுகின்றார். தொழிலாளர்கள், புதிய உற்பத்திக் காரணிகளுக்கச் சொந்தக்காரர்களாகிய முதலாளிகள் என்பவர்களே இப்புதிய வர்க்கத்தினராவர். உற்பத்திக் காரணிகளுக்கிடையிலான உறவுகளே சமூக வர்க்க முறைகளைத் தீர்மானிக்கின்றன என கால் மார்க்ஸ் நம்புகின்றார். முதலாளித்துவ சமூகத்தில் பதிய உற்பத்திக்காரணிகளாகிய நிலம், தொழிற்சாலைகள், தொழிநுட்பம், போக்குவரத்து போன்றவற்றின் சொந்தக்காரர்களும், விநியோகஸ்தர்களுமாக முதலாளிகளே காணப்படுவர். இவர்கள் சமூகத்தில் காணப்படும் சிறிய வர்கத்தினராவர். உழைக்கும் திறனை வேதனத்திற்கு விற்று வாழும் மக்கள் தொழிலாளிகளாவர்.

இவர்களே சமூகத்தில் பெரும்பான்மையினராவர். இப்பெரும்பான்மைச் சமூகம் தொழிலாளர் வர்க்கம் என அழைக்கப்படுகின்றனர். தொழிலாளர் வர்க்கத்தினரது உழைப்பினைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், சேவைகள் என்பன முதலாளிகளால் இலாபத்திற்கு விற்கப்படுகின்றன. முதலாளித்துவ வர்க்கத்தினர் அரசாங்கத்தில் பிரதான பதவிகளை வகிப்பதோடு அரச இயந்திரத்தினைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் பெற்றிருந்தனர். முதலாளிகள் தமது நலன்களை உயர்த்தவும், பாதுகாக்கவும், எற்ற கொள்கைகளை உருவாக்கி அவற்றைச் சட்டமாக்கிக் கொண்டார்கள். உண்மையில் முழு அரசாங்க இயந்திரமும் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களுக்காகவே பயன்படுத்தப்பட்டது. இவர்கள் தொழிலாளர்களுக்கு எதிரான கொடூரமான சுரண்டல்களுக்கு எற்ப பாதுகாப்பினை உருவாக்கிக் கொண்டனர்.


Post a Comment

0 Comments