கல்விக் கணிப்பீடு

 கல்வியில் கணிப்பீடு என்றால் என்ன?

1997 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கல்வி திருத்தத்தின் பின்னர் கணிப்பீடு என்பது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் சொல் ஆகும்.பாடசாலை நடைமுறையில் வகுப்பறை மட்டக் கணிப்பீடு பாடசாலை மட்டக் கணிப்பீடு மற்றும் தொடர் கணிப்பீடு ஆகியன அதிகம் பேசப்படுகின்றன.

கல்விக் கணிப்பீடு என்பது மாணவர்களின் அறிவு மனப்பாங்கு ,திறன், மற்றும் நம்பிக்கைகள் என்பவற்றை அளவிட்டு ஆவணப்படுத்தும் செயல்முறை ஆகும். ஆசிரியர்களைப் பொறுத்தவரை இது சோதனைகள், செயலட்டைகள், செயல் நூல்கள், ஒப்படைகள், குழுச் செயற்பாடுகள் அல்லது பிற வளங்களினூடாக தங்கள் மாணவர் என்ன, எவ்வளவு சிறப்பாக கற்றோர்கள் என்பது குறித்து பயனுள்ள கருத்துக்களைப் பெறுவதற்கான ஒரு கருவி அல்லது முறையாகும். மாணவர்களை கற்றலை நோக்கி ஊக்குவிப்பதற்கு கணிப்பீடு வாய்ப்பளிக்கின்றது. மேலும் கற்றல் கற்பித்தல் முறையின் வினைத்திறன், கற்பித்தல் துணைச் சாதனம் - ஊக்கப்படுத்தல் உத்திகள் போன்றவற்றையும் கணிப்பீட்டினுடாகத் திரமானிக்க முடியும் மேலும் இது செயல்முறை சர்ந்ததாகவும் கண்டறியும் இயல்புடையதாகவும் உள்ளது.

கல்வி உளவியல்   - Click Here

எனவே கணிப்பீடு என்பது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையிலான ஒரு தொடர்பாடல் செயன்முறையாகக் கருதப்படலாம். மேலும் ஆசிரியர் என்ன கற்பிக்கின்றார் என்பதையும், மாணவர்கள் எந்த அளவில் சிறப்பாகக் கற்கிறார்கள் என்பதையும் இது தெரிவிக்கின்றது.

கணிப்பீட்டின் நோக்கங்களை அறிந்து கொள்ள வேண்டும். கணிப்பீட்டின் பின்வரும் மூன்று செயன்முறையின் மூலம் அவை சிறப்பாக

கற்றலுக்கான கணிப்பீடு (Messment for learning)

கணிப்பீட்டுத் தகவலானது ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் உத்திகளையும் மாணவர்கள் தங்கள் கற்றல் உத்திகளையும் சரிசெய்ய பயன்படுத்தும் ஒரு செயன் முறையாகும்.

உதாரணம்: இடையீட்ட மதிப்பீடு மற்றும் ஆய்ந்தறி போதனைகள்.

கற்றதை கணிப்பிடுதல் ( assessment of learning)

- மாணவர் அடைவின் இறுதி மதிப்பீட்டை அளவிட்டு பதிவு செய்ய அல்லது அறிக்கைப்படுத்த பயன்படும் ஒரு பணி அல்லது செயற்பாடு ஆரும்.

- உதாரணம்: இறுதி மதிப்பீடு

கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

கற்கும் பொது மதிப்பிடல் (assessment as learning)

ஒரு பணி அல்லது செயற்பாட்டின் மூலம் மாணவர்களுக்கு அவர்களின் கற்றலை மேலும் மதிப்பீடு செய்ய, கணிப்பீட்டைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் உதாரணம்: சுய கணிப்பீட்டு செயற்பாடு

வகுப்பறை அடிப்படையிலான கணிப்பீட்டின் பண்புகள்

1. மாணவர் மையம்

ஆசிரியர்கள் மாணவர்களின் கவனத்தை மையமாகக்கொண்டு , கற்றலை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகின்றார்...

2. ஆசிரியருக்கான வழிகாட்டி:

ஒரு ஆசிரியர் எதைக் கணிப்பீடு செய்ய வேண்டும்? எவ்வாறு கணிப்பீடு செய்ய வேண்டும்? சேகரிக்கப்பட்ட தகவல்களுக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை நிமானிக்கின்றார்.

3. இடையீட்ட கணிப்பீடு

மாணவர்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு குறித்த காலம் முழுவதும் தொடர்வது

4. குறித்த உள்ளடக்கம் : |

ஆசிரியர் மாணவர்களின் குறிப்பிட்ட தேவைகள், இயல்புகளுக்கு ஏற்ப பதிலளிக்க வேண்டும். ஆசிரியர் - மாணவர்களின் ஒரு குறித்த வருப்பிற்கான செயற்பாடுகள் மற்றொரு வகுப்பிற்கு பொருந்தாது.

 கல்வி உளவியல்   - Click Here

எமது கல்வி வீடியோக்கள் பார்த்து பயன்பெற - Click Here

கல்வியியல் கட்டுரைகள்  - Click Here


எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்

மேலும் செயலட்டைகள் மற்றும் வினாத்தாள்கள் தேவை எனின் கீழ் வரும் link Click செய்யவும் 

தரம் 1                                                     

தரம்  2                                                       

தரம்  3                                

தரம் 4                                 

தரம் 5           

தரம் - 6                       

தரம் - 7 

தரம் - 8

தரம் - 9

தரம்  - 10

தரம் - 11

A/L Tamil`

எமது கல்வி சார் காணொளிகளை காண கீழே உள்ள லிங்கை click செய்யவும்

எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்

மேலும் வாசிக்க

Post a Comment

0 Comments