இரட்டையர் குழு
குழுவின் மிகச் சிறிய வடிவமாக “இரட்டையர் குழு” அமைகின்றது. இது இரு உறுப்பினர்களை மட்டும் கொண்ட குழுவாகும். இதிலிருந்து ஆரம்பமாகும் குழு பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொண்ட பெருங்குழுக்கள் வரை வீச்சுடையதாகக் காணப்படும்.
முதல் நிலைக் (ஆரம்ப நிலை) குழுவும், இரண்டாம் நிலைக் குழுவும் C.U COOLIE (1992) போன்ற மரபுவழிச் சமூகவியலாளர்கள் குழுக்களை முதல் நிலைக் குழுக்கள், இரண்டாம் நிலைக் குழுக்கள் என வகைப்படுத்துகின்றனர். நட்புரீயான தொடர்பின் கீழ் ஆரம்பக் குழுக்களும், ஒப்பந்தத்தின் கீழ் இடை நிலைக்குழுக்களும் கட்டியெழுப்பப்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக கூறுகின்றார்.
முதன் நிலைக் குழு
அன்னியோன்னியமாகத் தனிப்பட்ட தொடர்பினைப் பேணும் குழுவினை ஆரம்ப நிலைக் குழு என்பர். இது உளவியல் அடிப்படையில் பல்வேறு நோக்கங்களுடன் கூடிய பொதுவாழ்க்கைக்கு உட்பட்டதாகக் காணப்படும். முதல் நிலைக் குழுக்கள் சமூகத்தில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. முதல் நிலைக்குழுக்கள் அவற்றுக்கேயுரிய தனித்துவமான பண்புகள் பலவற்றைக் கொண்டிருக்கும். குடும்பம் முதல்நிலைக் குழுவுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
முதல் நிலைக் குழுவின் பண்புகள்
• குழுவின் தொடர்புகள் நேருக்கு நேராகவும், மிகுந்த ஒருங்கிணைப்பு விசைகளைக் கொண்டதாகவும் இருக்கும்.
• குழுவில் பெரும்பாலும் குறைந்தளவு உறுப்பினர்களே காணப்படுவர்.
• உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுவதால் கூடிய ஊடாட்டங்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும்.
• முதல் நிலைக் குழு ஒப்பீட்டளவில் நிரந்தரத் தன்மையைக் கொண்டிருக்கும்.
• நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட உறவு முறை காணப்படும்.
• குழுவின் உறுப்பினர்களிடையே நாம் என்ற உணர்வு காணப்படுதோடு, அந்த உணர்வின் தொடர்ச்சியான விசைகளும் தொழிற்பட்ட வண்ணமிருக்கும்.
சமூகமயமாக்கல் செயன்முறையில் முதல் நிலைக் குழுவின் பங்களிப்பு
சிறப்பாக ஆரம்பநிலைச் சமூகமயமாக்கற் செயற்பாடுகளில் முதல் நிலைக் குழுக்கள் உன்னதமான செயற்பாடுகளைப் புரிகின்றன. ஆரம்ப நிலை மொழிவளர்ச்சி, மனவெழுச்சி, மற்றும் நெறிமுறைகள், சமூகத் தொடர்புகள், பழக்கவழக்கங்களைச் சொல்லிக் கொடுத்தல், ஆபத்துக்களைத் தாங்கிக் கொள்ளல், அறைகூவல்களை ஒன்றிணைத்துக் கொள்ளல் முதலிய தொழிற்பாடுகள் முதல் நிலைக் குழுவுக்குரிய சிறப்பியல்புகளாகக் கொள்ளப்படுகின்றன.
முதல் நிலைக் குழுவின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சமூகத்திற்கு கட்டுப்பாடு வயதுடையவர்கள் என்ற அடிப்படையில் பல பொறுப்புக்களை எடுக்கின்றனர். உதாரணமாக,
• உறுப்பினர்களது நடத்தையைக் கட்டுப்படுத்துதல்.
• நடத்தைகளை சீர்திருத்துதல்.
• சமூக மாற்றத்தை உண்டு பண்ணுதல்
முதல் நிலைக் குழுக்களைத் தீர்மானிக்கின்ற காரணிகள்
• பௌதீக நிலைமை
• பௌதீக ரீதியான அண்மிய உறவு நிலை
• அந்த உறவு நிலைக்கான முக்கியத்துவம்
• உள நிலைமை
• தனிப்பட்ட உறவுகள்
• உறவின் உள்ளடக்கத் தன்மை
• உறவினை இயல்பாக ஏற்றுக் கொள்ளுதல்
• உள்ளகக் கட்டுப்பாடு
• பாதுகாப்பு உணர்வு
• பரஸ்பர ஒத்துழைப்பு
சமூக நோக்கு, பண்பாட்டு நோக்கு என்ற வகையில் குறிப்பிட்ட நோக்கங்கள் அல்லது இலக்குகளை அடையும் நோக்குடன் இரண்டாம் நிலைக் குழுக்கள் ஆக்கம் பெறுகின்றன. அந்த நோக்கங்கள் அடையப் பெற்றதும், மேலும் நிகழ்ச்சித் திட்டங்கள்
இல்லாதவிடத்து குறிப்பிட்ட குழு சிதைந்து போகலாம். மேலும் குறிப்பிட்ட குழுவினர் தமது குழுவின் இலக்குகளோடு ஒவ்வாமை கொள்ளும் நிலையில் அதிலிருந்து வெளியேறலாம் அல்லது வெளியேற்றப்படலாம். உதாரணம்: அரசியல் கட்சிகள், அழகியல் கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள்.
இரண்டாம் நிலைக் குழுவின் பண்புகள்
• இரண்டாம் நிலைக் குழுக்கள் முதல் நிலைக் குழுக்களோடு ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் உறுதித் தன்மை குறைந்தவையாகும். இக்கருத்துக்குச் சில விதிவிலக்குகளும் இருக்கலாம்.
• இக்குழுக்கள் பொதுவாக பருமனில் பெரியவையாகவும், அதிக உறுப்பினர்களைக் கொண்டவையாகவும் காணப்படும்.
• நேருக்கு நேர் உறவாடல் குறைவாகவே காணப்படும்.
• தமக்கு கூடுதலான நன்மை கிடைக்கும் என்ற நிலையில் இரண்டாம் நிலைக் குழு உறுப்பினர்கள் தீவிரமாகச் செயற்படும் தன்மை காணப்படும்.
முதலாம் நிலைக் குழுவும், இரண்டாம் நிலைக் குழுவும் இயக்க விதிகளுக்கு உட்பட்டவை. எடுத்துக்காட்டாக முதலாம் நிலைக் குழுவில் குழந்தையாக இருக்கும் ஒருவர் வளர்ந்து பெரியவராகும் போது அவர் முன்னர் மேற்கொண்ட கழு ஊடாட்டங்களில் மாற்றங்கள் ஏற்படும். அவ்வாறே இரண்டாம் நிலைக் குழுவிலும் ஒருவரது குழுவின் உள்ளமைந்த பதவிகளில் மாற்றங்கள் ஏற்படும் போதும், அவரது அறிவு, அனுபவங்களில் மாற்றங்கள் ஏற்படும் போதும் ஊடாட்டங்களில் குறிப்பிடத்தக்களவு பெயர்ச்சிகள் தோற்றம் பெறும்.
சமூக அமைப்பு, சமூகவியல்புகள், சமூகமாற்றம் முதலியவற்றின் வெளிப்பாடாகவும், தெறிப்பாகவுமே குழுக்கள் தோற்றம் பெறுகின்றன. எடுத்துக்காட்டாக, சமூகமாற்றம் குடும்பம் என்ற முதல்நிலைக் குழுவிலேயே மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. குடும்பம் மேற்கொண்ட அடிப்படையான மொழி கற்பித்தல், விளையாட்டு, வழிபாட்டு முறைமை முதலியன தற்போது முன்பள்ளிகளிடம் கையளிக்கப்பட்டு வருகின்றது.
இயல்பினதோ அத்தகைய இயல்பினதாகவே குழுக்களும் அமையும். சமூகத்தில் வெளிப்படையான குழுக்கள் இருத்தல் போன்று கரந்துறையும் குழுக்களும் செயற்பட்ட வண்ணமிருக்கும். மறைந்து செயற்படும் இக்குழுக்கள் சமூக நேர்நிலைச் செயல்களிலும் ஈடுபடலாம். மறைமுகமான செயற்பாடுகளிலும் ஈடுபடலாம்.
📺 எமது YouTube தளம்
பல்வேறு கல்வி சார் காணொளிகளை கொண்டுள்ளது. எமது காணொளிகளைப் பார்வையிட்டு Subscribe செய்து உங்கள் ஒத்துழைப்பை வழங்குங்கள்!
▶ SUBSCRIBE NOW❤️ உங்கள் ஆதரவே எமது வளர்ச்சி!
பிரயோக நிலையில் நேர்குழு – எதிர்க் குழு எனவும் சமூகக்குழுக்களை வகைப்படுத்தலாம். பறிப்பும் அடாத்தும் நிகழும் சமூக நிலையில் அந்த எதிர்மறைப் பாங்குகளுக்குத் துணைபோகும் வகையில் இயங்கும் குழுக்கள் எதிர்மறைக் குழுக்கள் எனப்படும். இவற்றில் இடம்பெறும் கல்விச் செயற்பாடுகள் சமூக எதிர்மறைச் சிந்தனைகளுக்கு வலுவூட்டும் வகையிலேயே பொதுவாக இடம்பெற்றக் கொண்டிருக்கும்.
உட்குழுக்களும் - வெளிக்குழுவும்; -
வில்லியம் கிரகம் சம்னர் (1906) உள்ளார்ந்த குழு வெளிவாரிக் குழு ஆகியவற்றிடையே வேறுபாட்டைக் காட்டியுள்ளார். உள்ளார்ந்த குழுவை றுந புசழரி எனவும் வெளிவாரிக் குழுவை எனவும் அவர் இனங்காட்டுகிறார். நாடு, பிராந்தியங்கள், சமயங்கள் மற்றும் இனத்துவக் குழுக்கள் எல்லாம் இவ்வகைப்பாட்டினுள் அடங்கும். ஒரு இனம் இன்னொரு இனத்திலும் பார்க்க மேலானது என்ற சிந்தனை குழு உறுப்பினர்களின் நடத்தையில் செல்வாக்குச் செலுத்துகின்றது.
சமூக வளர்ச்சியின் போது நிகழும் முக்கியமான தோற்றப்பாடுகளாக சமூகத் தொழிற்பாடுகள் சிக்கலடைந்து செல்லும் நிலை காணப்படும். அதற்கு இயைந்தவாறு கல்விச் செயற்பாடுகள் சிக்கலடைந்து செல்லும். இந்நிலையிலே பெருங்குழுவின் இலக்குகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அதன் உள்ளமைந்த உட்குழுக்கள் வளர்ச்சி பெறத் தொடங்கும். எடுத்துக்காட்டாக அரசியல் கட்சி என்ற பெருங்குழுவில் அதன் இரட்சியங்களை முன்னெடுத்துச் செல்வதற்கேற்ற வகையிலே உள்ளமைந்த சிறு குழுக்கள் வளர்ச்சி பெறும் உதாரணம் குறித்ததொரு அரசியல் கட்சியின் மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி என்பவற்றைக் கூறலாம்.
பெருங்குழுக்களில் சமூகச் செயற்பாடுகள் சிக்கலடைந்து செல்லும் போது நடைபெறும் பிறிதொரு தோற்றப்பாடு அவற்றின் இயக்கங்களைத் திறனாய்வு செய்வோரால் ஒன்றிணைந்து உருவாக்கிக் கொள்ளப்படும் திறனாய்வுக் குழுக்களாகும். இதுவே வெளிவாரிக் குழு எனவும் அழைக்கப்பெறுகின்றது.
மேலும் பெருங்குழுக்களிலே தமது ஆதிக்கத்தைத் திணிக்க முயலும் அழுத்தக் குழுக்களும் கருத்தேற்றம் என்ற கல்விச் செயற்பாட்டினையே பெருமளவில் மேற்கொள்ளும். குறிப்புக்குழு என்பது தான் தொடர்பிலோ அல்லது தமது நடத்தை தொடர்பிலோ மதிப்பிடுவதற்குரிய பின்புலத்தைக் கொண்ட முன்மாதிரிக் குழுவாகும். ஹார்டன் (ர்ழசவழn) மற்றும் ஹன்ட் (ர்யவெ) ஆகியோர் குறிப்பிடுவதன்படி ஒரு தனியாள் தனது நடத்தையை அளவிடுவதற்குப் பின்புலத்தையுருவாக்கும் குழு (ழுவாநச புசழரி) குறிப்புக் குழு என்கிறார்.
சிறந்தது என ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பாடசாலைக்குச் செல்லும் ஒரு மாணவனின் ஆற்றலுடன் கிராமியப் பாடசாலை மாணவனின் ஆற்றலை ஒப்பிடுவதை உதாரணமாகக் கொள்ள முடியும். இங்கு சிறந்த பாடசாலையில் கிராமியப் பாடசாலை மாணவன் உரித்தானவனல்ல எனினும் அந்த மட்டத்தைச் சேர்ந்தவனாக இருக்கிறான் எனக்கொள்ள முடியும்.
சாதாரண ஒரு ஆசிரியர் பட்டதாரி ஆசிரியரைப் போன்று பணியாற்ற வேண்டும் என நினைத்தால் தமது குறிப்புக் குழுவாகக் கருதுவது பட்டதாரி ஆசிரியரையேயாகும் இந்த வகையில் எமது நடத்தையை ஒப்பிடுவதற்குப் பின்புலமாக உள்ள குழு குறிப்புக் குழுவாகும்.
குத்துக் குழுவும் - கிடைக் குழுவும்
குத்துக் குழுவில் பல்வேறு அடுக்குகளைச் சேர்ந்த அங்கத்தவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவர். சமமான அடுக்குகள் பிரதிநிதித்துவப் படுத்தப்படும்போது அக்குழு குத்துக் குழுவாக அறிமுகப்படுத்தப்படும். P.யு சொரோகின் (P.யு.ளுழசழமinஇ1927) குறிப்பிடுவதன்படி பெருமளவு மக்கள் குழு செயற்படும்போது குத்து மற்றும் கிடைக் குழுக்கள் தொழிற்படும். மக்கள் வகுப்பு, அல்லது சமூக வகுப்பு என இந்த பாகுபடுத்தல் அமையும்.
சகபாடிக் குழுக்கள்
சகபாடிக் குழுக்கள் ஆரம்ப நிiலைக் குழுவில் இடம்பெறும் முறையில் குழுவாகும். வயதில், பண்புகளில் ஒத்த தன்மை கொண்டவர்கள் இக்குழுக்களில் இடம்பெறுவர். சகபாடிக்குழுவானது ஆலோசனைக் குழுவாகவும் செயற்படுகின்றது. இக்குழுவில்
இடம்பெறும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒருவரொருவருடன் தொடர்புடையவராய்
இருப்பர். சகபாடிக் குழுக்களின் பண்புகளாக பின்வருவனவற்றைக் கூறலாம்.
• நாம் என்ற உணர்வு காணப்படும்.
• நடத்தையில் ஒருமித்த தன்மை காணப்படும். நடத்தையைக் கட்டுப்படுத்துதல்.
• பரஸ்பரம் கட்டுப்பாடுகள், பரஸ்பர எதிர்பார்ப்பு என்ற
குணயியல்பு கொண்டவர்களாக காணப்படுவர்.
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்