பொருத்தபாடு என்றால் என்ன?

51. பொருத்தமான எண்ணக்கரு தொடர்பான அறிவு ஆசிரியர் ஒருவருக்கு ஏன் முக்கியமானதாகவுள்ளது என்பதைச் சுருக்கமாக கூறுக. 

 மாணவனை இனங்காண்பதற்கும் சரியாக விளங்கிக் கொள்வதற்கும். 

இது தொடர்பாக ஆசிரியரிடத்து உள்ளக ரீதியான சாதக மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு.

வகுப்பறை பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து – அவற்றைப் பொருத்தமுறத் தீர்த்து வெற்றி பெறுவதற்கு 

கற்றல் கற்பித்தல் செயன்முறைக்கும் பொருத்தமான சூழலை ஏற்படுத்தவும் -

கற்றலுக்கு வழிகாட்டவும்.

ஆசிரிய வாண்மைத்துவத்தை விருத்தி செய்து நல்லாசிரியராக இற்றைப்படுத்தப்பட்ட நவீன ஆசிரியராவதற்கு. 

  சமூக அடுக்கமைவு - மேலதிக தகவல்கள் 

52. பொருத்தப் பாடடைய முடியாமை ஒரு சமூகப் பிரச்சினையா? 

எந்தவொரு வயது மட்டத்தை  சேர்ந்தவராயினும் அவர்களின்  சிலருக்குப் பொருத்தப்பாடடையாத நிலைமை ஏற்படலாம்.பொருளாதாரக் காரணியால் கல்வி முறிவடைதல்,தேவைகள் , ஆசைகள், விருப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாமை, நவீன உலகின்  போட்டிகளுக்கு முகங்கொடுக்க முடியாமை, பெற்றோரிடையே ஏற்படும் பல்வகைப் பிரச்சினைகளால் பிள்ளைகள் அன்பு, பாதுகாப்பு, கணிப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியாமை, சமூகத்திறன்களை வளர்த்துக் கொள்வதில் வசதியீனங்கள் போன்றன. மாணவன் மத்தியில் மன முரண்பாடுகள், நடத்தைச் சீர்கேடுகள், விரக்தி மனப்பான்மையை ஏற்படுத்தக் கூடியவை.

உழைக்கும் உலகோடு உகந்த  தொடர்பை உறுதிப்படுத்திக்கொள்வதிலுள்ள வசதியீனங்கள், தொழில் திருப்தியின்மை, திருமணம், வயது முதிர்ச்சியடைதல்,ஓய்வுபெறுதல் போன்ற சந்தர்ப்பங்களுக்கு வெற்றிகரமாகமுகங்கொடுப்பதிலுள்ள சிரமங்கள் ஆகியவை வளர்ந்தோர் மத்தியிலும் விரக்தியை நிலையை உருவாக்கலாம். 

இவை நீடிக்கும் போது இயல்பாகவே மனநோயும், உடல் நோயும் ஏற்பட வாய்ப்புண்டு. உளநோய் உருவாவதால் உடல் தாக்கமும் உண்டாகி இவர்கள் சமூகத்தில் பொருந்தாத மனித வளங்களாக மாறுகின்றனர். இவர்களுக்கு சமூக நல வசதிகளுக்காகப் பெருந்தொகைப் பணமும், காலமும் விரயமுமாகும். இவை முடிவில் ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக அமையலாம். 

கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

53. பதகளிப்புக்குள்ளாகும் பிள்ளைகளிடத்துக் காணப்படும் இயல்புகள் சிலவற்றைத் தருக? 

தன்னம்பிக்கை குறைந்தவர்களாக இருத்தல்.

உற்சாகத்துடன்  செயற்படுவதில் குறைபாடு இருத்தல்.

நரம்புப்பினி, மயக்கமடைதல், பேச்சுக் குறைபாடு, இதயத்துடிப்பு அதிகரித்தல்,உடல் அல்லது கை, கால் குளிர்ந்து போதல்.

ஐம்புலன் கள் பலவீனமடைதல் - செயற்பாடு குறைவுறுதல்

பொதுவாக இயல்பான ஆரோக்கியம் கெடுவதால் கற்றல் இடரப்பாடுகள் தோன்றி சமூக விருத்தி வீழ்ச்சியுற்று, பொருத்தமான ஆளுமை விருத்தி தடைப்படும். 

54. பொருத்தமடைதல் தொடர்பான விளக்கம  பற்றிய அறிவு ஆசிரியர் ஒருவருக்கு ஏன் முக்கியம் வாய்ந்தது? 

ஆசிரியர் ஒருபுறம் சமூக சேவையாளராகவும் மறுபுறம் கல்விச் செயன் முறையைச் செயற்படுத்துபவராகவும் இருத்தலால்.

வகுப்பறைப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து தன்நம்பிக்கையோடு வெற்றிகரமான கற்பித்தலை மேற்கொள்வதற்காக.ஆசிரியரும் ஒரு சமூகப் பிராணியாக அமைவதால், இயல்பாகத் தாம் வாழும சமூகத்தின் பல்வேறு எதிர்பார்ப்புக்கள், அழுத்தங்கள் போன்றவற்றில் ஏற்படுத்தும் உளப்பிரச்சினைகளுக்கு வெற்றிகரமாகத் துணிச்சலுடன்  முகங் கொடுப்பதற்கு.

முதிர்ச்சியடைந ;த ஆளுமையுடையவர் ஆசிரியர் என்பதை எப்போதும் வகுப்பறை –பாடசாலை சமூகச் சூழலில் நிறுவி மாணவருக்கும் பெற்றோருக்கும் எடுத்துக்காட்டாளராக அமைவதற்கு.

பொருத்தப்பாடடையாத மாணவரை நன்கு விளங்கிக் கொள்ளவும் அவர்களைக் கற்றல் செயன்முறைக்கு வழிகாட்டுவதற்கும்  தயார் நிலையில் நம்மை வைத்திருப்பதற்கும் பொருத்தப்பாடு பற்றிய அறிவு அவசியமாகும்.

எமது YouTube தளம் www.youtube.com/@Asiriyam-2.O பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்

55. கற்றல் இடர்பாடு என்ற எண்ணக்கருவை விளக்குக. 

நிச்சயக்கப்பட்ட அறிவாற்றல், உடலியல், புலன்களில் குறைபாடொன்று நேரடியாகத் தொடர்பற்றதாக இருந்தால் அவ்வாறான பிள்ளைகள் கற்றல் இடர்ப்பாடுடைய பிள்ளைகள் எனும் பிரிவைச் சேர்ந்தவராவார் என்று வெஸ்ட்வூட் என்பவர் குறிப்பிடுகின்றனர். பாடசாலைச் சனத்தொகையில் 15 – 20 விதமான கற்றல் தொடர்பான சாதாரண கற்றல் பிரச்சினையுள்ள மாணவர்கள் கற்றல் இடர்பாடுடையவர்களாகவுள்ளனர் என்று டேலரும், ஸ்ரேன்பேர்க்கும் கூறுகின்றனர். 

முன்னர் மெல்லக் கற்கும் மாணவர் என அழைக்கப்பட்டவர். தற்போது கற்றல் இடர்ப்பாடுடையவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

அடிப்படைக் கல்விசார் திறன்களைக் கற்றுக் கொள்வது மிகவும் கஷ்டப்படும் மாணவர்கள் கற்றல் குறைபாடு கொண்டு கற்பதில் இடர்ப்பாடு அதாவது கஷ்டம் அனுபவிப்பதாகக் கூறப்படுகின்றது.

பொதுவாக கேட்டல், பேசுதல், வாசித்தல் எழுதுதல் ஆகிய அடிப்படைக் கற்றல் திறன்களைப் பெற்றுக் கொள்வதில் உடலியல், நலனுணர்வு, அறிவாற்றல் ரீதியில்அவதிப்படுகின்ற, கஷ்டப்படுகின்ற தன்மையைக் கற்றல் இடரப்பாடு எனலாம்.

இவர்கள் கற்றல் தொடர்பான பிரச்சினைகளை மட்டுமின்றி, சமூகப் பொருத்தப்பாடு பற்றிய பிரச்சினைகளையும் அனுபவிக்கின்றனர் என்று கூறப்படுகிறது. 


56. கற்றல் இடர்ப்பாடு ஏற்படுவதற்கான  காரணிகள் யாவை? 

இது பல்வேறு காரணிகளின் சிக்கலான இடைத் தொடர்பினால் நிகழ்வதாகக் கூறப்படுகின்றது. 

மாணவனின்  உடலியல் குறைபாடுகள் - தாக்கங்கள் - எதிர்பாராத விபத்துக்களின் பாதிப்பு.

மாணவன்  வளரும் சூழல்களின் தாக்கங்கள், குடும்பம், வீட்டுச்சூழலின் வசதியீனங்கள் - பொருளாதாரத் தடைகள் - கலாசாரப் பழக்கவழக்கங்களின் பாதிப்பு.

கற்றல் சூழலின் காரணமாக ஏற்படும் நிலைமைகள். பொருத்தமற்ற –விரும்பத்தகாத பாடசாலைச் சூழல் - ஆசிரியர், மாணவர் தொடர்புகள் -வகுப்பறைச்  சூழல் என்பன.

கலைத்திட்டம் - பாடப்பகுதிகள் மாணவரினன் முதிர்ச்சிக்குப் பொருத்தமற்றதாக இருப்பது.

சமவயதுக் குழுவின் எதிர்மறையான செல்வாக்குத் தாக்கங்கள்.

போதனா மொழி, இரண்டாம் மொழி தொடர்பான சிக்கல்கள் உூம் இரண்டாம ; மொழியாக ஆங்கிலம் கற்பித்தல் - கிராமப்புற சாதாரண குடும்பச் சூழுலில் உள்ள மாணவர்களுக்கு இடர்பாடு ஏற்படலாம். 


57. கற்றல் திறனின்மை இயலாமை, குறைபாடு என்ற எண்ணக் கருவை விளக்குக. 

கற்றல் இயலாமை அல்லது குறைபாடு கொண்டவர்களும் கற்றல் இடர்ப்பாடுள் மாணவர் தொகுதியினுள் அடங்குவர் எனப்படுகின்றது.

கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல், தர்க்கித்தல் - கணிதத் திறன்களைப் பெற்றுக் கொள்ளுதல், பிரயோகித்தல் என்பன பற்றித் தெளிவாகத் தென்படும்

குறைபாடுகள் மூலம் வெளிப்படுத்தப்படும் பல வகையான ஒழுங்கீனங்களுக்கு வழங்கப்படும் சாதாரண சொல்லாகக் கற்றல் குறைபாடு கருதப்படுகின்றது. இக்குறைபாடு மாணவர்களிடத்தில் இயல்பாகவே அமைந்ததொன்றாகவும், மத்திய நரம்புத் தொகுதியின்  செயற்பாட்டுக் குறைவால் - பின்னடைவால் நடைபெறுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 

புலன்கள் ஊனமுறுதல், மந்த உளநிலை, கடுமையான மனவெழுச்சிக் குழப்பம்போன்றவை காரணமாகத் தனிநபர் கலாசார வேறுபாடுகள், பொருத்தமற்ற பயிற்சிகள் போன்றவற்றுடன்  இணைந்ததாகவும் கற்றல் குறைபாடு – திறனின்மை ஏற்படக்கூடும்.


58. கற்றல் இடர்பாடுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் எவ்வாறு உதவலாம்

முதலில் கற்றல் இடர்பாடு, கற்றல் திறனின்மையுடைய மாணவர்களை இனங்கண்டு, விளங்கிக் கொள்ளுதல்.

அவர்களது உடலியல், குடும்ப, பாடசாலை, வகுப்பறைச்  சூழுல் நிலைகளுடன் அவர்களது தொடர்பு – நிலைமை குறித்து நன்கு விளங்குதல்.

சாதாரண வகுப்பில் வைத்து, அல்லது தனிப்பட்ட கற்பித்தலை மேற்கொள்வதா என்பதைத் தீர்மானித்தலும் - அதற்கேற்ப கற்பித்தலை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தலும்.

இவ்வாறான மாணவர்களுடன் நல்ல, சாதகமான தொடர்புகளைத் தொடர்ச்சியாகப் பேணி வருதல் - அன்புடன்  பாதுகாப்புடன்  கணிப்புடன்  நம்பிக்கையை வளர்ப்பதான தொடர்புகள் தேவை.

மாணவரது வயது, திறமை, விருப்பு வெறுப்பு நிலைப்பாடுகளுக்கேற்ப அவற்றிற்கு பொருந்தக்கூடியவாறு கற்பித்தல்.

கற்பித்தல் நெகிழ்ச்சியாகவும், மாணவர் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதாகவும், கனிப்பும் மதிப்பும் காட்டப்படுவதாகவும் அமைய வேண்டும்இவையாவற்றிற்கும் ஏற்ற முறையில் இவர்களுக்கான விஷேட கற்றல் கற்பித்தல் செயன்முறையைத் திட்டமிடுதல்.

பெற்றோருடன் தொடர்ச்சியாக உறவுகளைப் பேணுதல்.

அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள்,நிறுவனங்களின் ஆலோசனைகள் மற்றும் உதவிகளைப் பெறுதல்.

 

59.  குறிப்பிடுக. 

வீட்டுச் சூழல் (குடும்பம்)

பாடசாலைச் சூழல்

 உடலியற் காரணிகள்

60. (அ) நடத்தைப் பிரச்சினைகள் (ஆ ) மாணவர் அடைவில் (இ) வகுப்பறை ஒழுக்கத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? 

(அ) i. கல்வியில் கவனமின்மை – அலட்சியப் போக்கு

         ii. பரீட்சைக்குத் தோற்றாமை.

       iii. குறைந்த அடைவுகள் - எதிர்பார்த்த அடைவு இலக்குகளை                                               அடையமுடியாமை.

(ஆ) i. வகுப்பறை முகாமைத்துவத்தில் தடைகள் ஏற்படுதல்

        ii. ஏனைய மாணவர்களின ; கற்றல் செயற்பாட்டைப் பாதித்தல் - குழப்பம ;             விளைவித்தல் - சண்டையிடுதல் - கலவரம் ஏற்படுத்தல்.

         iii.கற்றலில் கவனம் காட்டாமை.

 ஆசிரியரின் கற்பித்தல் செயற்பாடுகளில் பூரண வெற்றிபெற  முடியாதிருத்தல்.

(ஆ) வகுப்பறை ஆசிரியர் ஒருவர் இனங்காணக்கூடிய மூன்று வகை நடத்தைப்  பிரச்சினைகளின் பெயர்களைத் தருக?

i. அதி தொழிற்பாட்டு நடத்தை                    –    Hypocrative Behaviour

ii. அழித்தல் சார்ந்த நடத்தை                        –    Distractive Behaviour

iii. சமூகத்தினின்றும் பின் வாங்குதல்     -     S
ocial withdrawa


எமது YouTube தளம் www.youtube.com/@Asiriyam-2.O பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்

Post a Comment

0 Comments