துணைப்பண்பாடுகள் என்றால் என்ன ?

சமுதாயமொன்றினுள் காணப்படும் துணைப்பண்பாடுகள் 

துணைப்பண்பாடுகள் - என்றால் -என்ன ?
துணைப்பண்பாடு

பெரிய சமுதாயங்கள் பெரும்பாலும் துணைப் பண்பாடுகளை அல்லது அவர்கள் சார்ந்த பெரிய பண்பாடுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டக்கூடிய தனித்துவமான நடத்தைகளையும், நம்பிக்கைகளையும் உடைய குழுக்களைக் கொண்டவையாக இருக்கின்றன. இத் துணைப்பண்பாடுகள் அவற்றின் உறுப்பினரின் வயது, இனம், வகுப்பு, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடலாம். அழகியல், சமயம், தொழில், அரசியல் போன்ற பண்புகளும் துணைப்பண்பாடுகளில் தனித்துவத்துக்குக் காரணமாக இருக்கக் கூடும். இவற்றில் ஒவ்வொன்றும் தனித்தனியாகவோ அல்லது ஒன்றக்கு மேற்பட்டவை இணைந்தோ துணைப் பண்பாடுகளை உருவாக்கலாம்.

பண்பாட்டு அணுகுமுறைகள்

 அடிப்படைப் பண்பாடு (Core Culture) : : இது ஜேர்மனியில் பஸ்ஸாம் திபி என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி ஆகும். இதன்படி சிறபான்மையினர் தமக்கான அடையாளங்களை வைத்திருக்கலாம், ஆனால் அவர்கள் முழுச் சமுதாயத்தினதும் அடிப்படையான பண்பாட்டின் கருத்துருக்களை ஆதரிப்பவர்களாக இருக்க வேண்டும்.

 கலப்புப் பண்பாடு (Melting Pot) : ஐக்கிய அமெரிக்காவில் மரபு வழியாக
இத்தகைய நோக்கு இருந்து வருகின்றது.இதன்படி எல்லா வருகுடியேற்றப்
பண்பாடுகளும் அரசின் தலையீடு இல்ராமலேயே கலந்து ஒன்றாகின்றன எனக் கருதப்படுகின்றது.

 ஒற்றைப் பண்பாட்டியம் (MonoCulturalism) சில ஐரோப்பிய நாடுகளில் பண்பாடு என்பது தேசியவாதத்துடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. இதனால் வருகுடியேற்றப் பண்பாடுகளை பெரும்பான்மைப் பண்பாட்டுடன் தன்வயமாக்குவது அவ்வரசுகளின் கொள்கையாக இருந்து வருகின்றது.எனினும் சில நாடுகள் பல்பண்பாட்டிய வடிவங்கள் தொடர்பாகவும் ஆய்வு செய்து வருகின்றன.

கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

 பல்பண்பாட்டியம் (MultiCulturalism) வருகுடியேற்ற பண்பாட்டினர் தமது
பண்பாடுகளை பேணிக்கொள்ள வேண்டுமென்றும், பல்வேறு பண்பாடுகள் ஒரு நாட்டிற்குள் அமைதி வழியில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதும் இதன் கருத்தாகும்.

ஒரு நாட்டின் வருகுடியேற்றப் பண்பாடுகள் மேற்சொன்ன அணுகுமுறைகளுள் ஒன்றுடன் சரியாகப் பொருந்தும் என்பதற்கில்லை. ஏற்கும் பண்பாட்டிற்கும் 
வருகுடியேற்றப் பண்பாட்டிற்கும் இடையிலான வேறுபாட்டின் அளவு, குடியேறுவோரின் எண்ணிக்கை, ஏற்கனவே இருக்கும் மக்களின் மனப்பாங்கு, அரசின் கொள்கைகள், அக்கொள்கைகளின் செயற்படுதிறன் என்பன விளைவுகளைப் பொதுமைப்படுத்துவதைக் கடினமாக்குகின்றன. இதபோலவே சமூதாயத்தில் அடங்கியுள்ள துணைப் பண்பாடுகள் பெரும்பான்மை மக்களின் மனப்பாங்கு, பல்வேறுபட்ட பண்பாட்டுக் குழுக்களிடையேயான தொடர்புகள் என்பன விளைவுகளைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. 

ஒரு சமூதாயத்தினுள் அடங்கியுள்ள பண்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்வது சிக்கலானது. இதன் போது பல வகையான மாறிகளைக் கவனிக்க வேண்டும்.
பாடசாலைக் கலாசாரம் பாடசாலைக் கலாசாரம் என்பது பாடசாலைக்குரிய சமூகக்குழுவின் இயங்கு நிலையைக் குறிப்பதாகும். பாடசாலைப் பங்குதாரர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நம்பிக்கைத் தொகுதிகள், விழுமியங்கள், நடைமுறைகள், நியமங்கள் என்பன இதில் அடங்கும். பாடசாலைச் செயற்பாடுகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்த பொதுவான சில எடுகோள்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்றன.

சாத்தியமானவை எவை? சாத்தியம் அல்லாதவை எவை? என பாடசாலைக் கலாசாரமே வரையறை செய்வதால் குறித்த கலாசாரமொன்றைக் கொண்டுள்ள பாடசாலையின் பங்குதாரர்கள் அனைவரும் ஒரேவிதமான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க முயல்வர். சமூகமயமாக்கற் செயன்முறை இடம்பெறுவதைப் போல பாடசாலையிலும் மாணவர்களும், புதிய ஆசிரியர்களும் பாடசாலைக் கலாசாரத்திற்குப் பொருத்தப்பாடடையச்
செய்யப்படுகின்றனர். பாடசாலையின் பொதுவான நடைமுறைகளைப் பின்பற்றி நியமங்களையும், விழுமியங்களையும் பேணும் வகையில் பாடசாலைக் கலாசாரத்தை அவர்கள் கற்றுக்கொள்கின்றனர். பாடசாலைக் கலாசாரம் முக்கியமானது, அனைத்துப் பங்குதாரரிடையேயும் பரஸ்பர மரியாதைக்குரிய சூழ்நிலைகளை உள்ளடக்கியது. சாதனைகள் மற்றம் வெற்றிகள் கொண்டாடப்படுகின்றன. மேலும் தொடர்ந்து ஒத்துழைப்பு
என்பது விதிமுறையாக உள்ளது. அனைத்துப் பங்குதாரர்களும் ஒரே குறிக்கோளினைக் கொண்டு ஒரே பக்கத்தில் இருக்கும் போது பாடசாலை செழிப்படையும். இதனால் பாடசாலைத் தலைவர்கள் ஆரோக்கியமான பாடசாலைக் கலாசாரத்தை உருவாக்குவது முதன்மையானது என்பதை உறுதிப்படுத்துதல் வேண்டும்.

மேலும் கல்வியியல் சார்ந்த விடயங்கள் எமது தளத்தில் பதிவேற்ற பட்டுள்ளது 

                                                        கல்வி உளவியல்   - Click Here

        எமது கல்வி வீடியோக்கள் பார்த்து பயன்பெற - Click Here

                                            கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்


பாடசாலைக் கலாசாரம் என்பது நேர்மறையான அல்லது எதிர்மறையான ஒரு
மனநிலையாகும். பாடசாலைக் கலாசாரத்தில் நேர்மறை நீடிக்கும் போது அனைவரும் செழித்து வளர்கின்றார்கள். அதிபர், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் பொதுவாக அங்கு இருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றார்கள். ஆச்சரியமான விடயங்கள் நேர்மறையான சூழலில் நடக்கும். மாணவர்களின் கற்றல் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் வாண்மைத்துவத்தில் மேம்பட்டவர்களாக உள்ளனர். அதிபர்கள் மிகவும் நிதானமாக இருக்கின்றார்கள். அனைவரும் செழித்து இந்த வகைச் சூழலிலிருந்து
பயனடைகின்றார்கள். 

நேர்மறையான பாடசாலைக் கலாசாரத்தை உருவாக்குவது தலைமைத்துவத்துடன் தொடங்குகின்றது. தலைவர்கள் பங்குதாரர்களுடன் கைகோர்த்து தனிப்பட்ட தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும். பாடசாலைக் கலாசாரத்தை மேம்படுத்த விரும்பினால் அதிபர்கள் பங்குதாரர்களுக்கு எதிராக செயற்படுவதை விட அவர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும். பாடசாலைக் கலாசாரம் பாடசாலையின் வெற்றிக்கு மிக முக்கியமானது. பாடசாலையில் எதிர்மறைக் கலாசாரம் நிலவுகின்ற போது அதில் யாரும் செழிக்கவில்லை. யாரும் முன்னேறவில்லை. இது ஆரோக்கியதானதல்ல. யாரும் இங்கு இருக்க விரும்பவில்லை என்றால் இறுதியில் பாடசாலை ஒருபோதும் வெற்றி பெறாது. நேர்மறையான பாடசாலைக் கலாசாரத்தை வளர்ப்பதற்கு நிறைய நேரமும் கடின உழைப்பும் தேவை. அது ஒரு இரவில் நடக்காது. இது ஒரு கடினமான செயன் முறையாகும். அதிபர் ஆசிரியர்கள் இந்த எதிர்மறையான கலாசாரத்தை ஒருபோதும் அனுமதிக்கக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த தங்களால் ஆன அனைத்தையும் செய்ய வேண்டும். சில நிறுவனங்கள் வன்மையாகக் கட்டுப்பாடுகளை விதிப்பனவாக இருக்கும். இவை ஒரு தனி நோக்கத்திளாலும், பெருமளவு நியாயமான நடைமுறைகளாலும் வழிநடத்தப்படுவனவாகவும் இருக்கும். ஆனால் பாடசாலைக் கலாசாரங்கள் தளர்வான பிணைப்புக்களையுடைய தொகுதிகளாக விபரிக்கப்படும். பட்டும் படாதவையுமான தொடர்புகளை உடையவையும், அதிகம் விளங்கிக் கொள்ள முடியாதவையுமானதொகுதிகளே தளர்வான பிணைப்புடைய தொகுதிகள் எனப்படுகின்றன. 

பாடசாலைக் கலாசாரமும் ஒரு தளர்வான பிணைப்புடைய தொகுதியாக விபரிக்கப்படுவதற்கு ஆசிரியர்கள் தமது சகபாடிகளிடமிருந்து ஓரளவேனும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதும் பகுதிக்காரணமாகின்றது. அத்தோடு ஆசிரியர்கள் வெவ்வேறு அளவிலான பாட நிபுணத்துவத்தோடு கூடிய வாண்மையாளர்கள் என்பதும் கூட பாடசாலைக் கலாசாரத்தின் வேறுபட்ட தன்மைக்குக் காரணமாகும். எனவே ஆசிரியர்களின் நம்பிக்கைக்கு முரணாக அமையக் கூடிய நிர்வாக நடவடிக்கைகளைக் கட்டளையிடும் முறையிலோ அல்லது அதிகாரத் தோரணையில் செயற்படுவதோ அல்லது மாற்றங்களை
ஏற்படுத்துவதோ கடினமானதாகும். பாடசாலைக் கலாசாரங்கள் தளர் பிணைப்புடைய தொகுதிகளாக விபரிக்கப்படுகின்ற போதும் எல்லா பாடசாலைகளினது கலாசாரமும் இவ்வாறு இருப்பதாகக் கூறமுடியாது. சமூதாய எதிர்பார்ப்புக்கள், அங்கத்தவர்களின் நம்பிக்கைகள், நிர்வாக நடைமுறைகள் என்பவற்றின் அடிப்படையில் பாடசாலைக்கு பாடசாலை அவற்றின் கல்வி சார் நடவடிக்கைகள் தனித்துமின்மையாகவும் வேறுபட்டிருப்பதைக் காணலாம். துலக்கமாகத் தெரியக் கூடியதும் உயர் விழுமியங்களையும், நியமங்களையும், பேணுவதுமான கலாசாரத்தை கட்டியெழுப்புவதில் பாடசாலைத் தலைமைத்துவத்தின் பங்களிப்பு அளப்பரியது. ஆசிரியர்கள் ஒருவரோடு ஒருவர் பேதமுற்று, ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலிருந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு பிணைப்புடையவர்களாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிலைக்கு மாற்றவதும் தலைமைத்துவத்தின் பொறுப்பேயாகும்.

மேலும் செயலட்டைகள் மற்றும் வினாத்தாள்கள் தேவை எனின் கீழ் வரும் link Click செய்யவும் 

தரம் 1                                                     

தரம்  2                                                       

தரம்  3                                

தரம் 4                                 

தரம் 5           

தரம் - 6                       

தரம் - 7 

தரம் - 8

தரம் - 9

தரம்  - 10

தரம் - 11

A/L Tamil`

எமது கல்வி சார் காணொளிகளை காண கீழே உள்ள லிங்கை click செய்யவும்

எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்

மேலும் வாசிக்க

Post a Comment

0 Comments