சங்கமருவிய கால அறநூல்களின் பொதுவான பண்புகள்

 

சங்கமருவிய கால அறநூல்களின் பொதுவான பண்புகளைக் குறிப்பிடுக.
Asiriyam


சங்கமருவிய கால அறநூல்களின் பொதுவான பண்புகள்

    சங்கமருவிய காலப்பகுதியில் அறநூல்கள் பெரிதும் தோன்றியுள்ளன. பதிணென்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார் முதலான பதினொரு நூல்களும் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களும் அறத்தைப் பெரிதும் வலியுறுத்துகின்றன. இந்தவகையில் இவ்வற நூல்களின் பொதுவான பண்புகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

    சங்கமருவிய கால அறநூல்களின் பிரதான பண்பு அவை அறம், ஆசாரக் கருத்துக்களை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதாகும். சங்ககால இறுதில் ஏற்பட்ட அகப்புற வாழ்க்கையின் முரண்பாடுகள் சமூகச்சீர்கேடுகளை உருவாக்கியமையால், சமண பௌத்த துறவிகள் பல்வேறு அறக்கருத்துக்களைக் கூறினர். எனவே அறக்கருத்துக்கள் அவ்விலக்கியங்களின் பாடுபொருளாக அமைந்தன.

                மேலும் வாசிக்க - தமிழ் இலக்கிய வரலாறு 

    இவ்வறக் கருத்துக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் என இருவகை உத்திகளில் கூறப்பட்டுள்ளன. பதிணென்கீழ்க்கணக்கு நூல்களில் பதினொரு நுால்கள் அறத்தை நேரடியாகக் கூறுகின்றன. தலைசிறந்த அற இலக்கியமாகிய திருக்குறள் 'அறத்தின் ஊங்கு ஆக்கமில்லை' என அறத்தைவிட சிறந்த செல்வம் இல்லை என்கின்றது. இவ்வாறு அறத்தை நேரடியாக எடுத்துரைக்கும் போது திருக்குறள், நாலடியார் முதலானவை அறம், பொருள், இன்பம் என்று மூன்று பிரிவுகளின் ஊடாக அறத்தை வலியுறுத்துவதோடு பழமொழி நானூறு பழமொழி மூலம் அறத்தை வலியுறுத்துவதும் குறிப்பிடத்தக்கது.

    அறத்தைக் கதைவடிவில் வலியுறுத்தவதையும் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான காப்பியங்களில் காணலாம். உதாரணமாக சிலப்பதிகாரத்தில் 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' , 'உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுவர்', 'ஊழ்வினை வந்து உறுத்தும்' என்ற மூன்று அறக்கருத்துக்கள் கதையினுாடாகவே வலியுறுத்தப்படுவதைக் காணலாம்.

    அறஇலக்கியங்கள் பெரும்பாலும் சமணபௌத்த துறவிகளால் இயற்றப்பட்டுள்ளமையால் அவை சமயச்சார்புடையனவாக அமைந்துள்ளன. மேற்படி துறவிகள் ஊர்தோறும் பள்ளிகளை நிறுவி சமயக்கருத்துக்களையும் அறக்கருத்துக்களையும் போதித்தமையால் அற இலக்கியங்களில் சமயச்சார்பு காணப்பட்டது. உதாரணமாக திருக்குறள், நாலடியார், சிலப்பதிகாரம் போன்றன சமணசமயச் சார்பினையும் மணிமேகலை பௌத்தமதச் சார்பினையும் ஆசாரக்கோவை சைவசமயச் சார்பினையும் கொண்டு விளங்குவதையும் காணலாம்.

  எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்


    அறக்கருத்துக்களை வலியுத்துவதற்கு உகந்த யாப்பாக வெண்பா யாப்பு பயன்படுத்தப்பட்டுள்ளமை இவ்வற இலக்கியங்களின் இன்னொரு பண்பாகும். அதாவது, வெண்பா யாப்பு செப்பலோசை உடையதென்பதால் அறத்தைப் போதிப்பதற்கு அதிகம் பணன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    அறக்கருத்துக்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டிய ஏற்பட்டதால் ஒரு விடயத்தை பல செய்யுள்களில் கூறுகின்ற தொடர்நிலைச் செய்யுள் அதிகம் கையாளப்பட்டுள்ளது.

            மேலும் வாசிக்க -      ஈழத்து இலக்கிய வரலாறு 

    மொழிமரபைப் பொறுத்த வரையில் சொற்சுருக்கமும் பொருட்தெளிவும் கொண்டமைந்துள்ளன. உதாரணமாக திருக்குறள் ஈரடி வெண்பாவால் செறிவான கருத்துக்களை கொண்ட மொழிநடையில் அமைந்திருப்பதைக் குறிப்பிடலாம்.

இவ்வாறு சங்கமருவிய கால அறஇலக்கியங்கள் சில தனித்துவமான பண்புகளைக் கொண்டு விளங்குவதைக் காணலாம்.


மேலும் வாசிக்க

 கூட்டத்தை குறிக்கும் இளமை பெயர்கள்

 பிராணிகளின் இளமை பெயர்கள்

தாவரங்களின் இளமை பெயர்கள் 

தமிழ் இலக்கிய வரலாறு 

தமிழ் கற்போம் 

 கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

 கல்வி உளவியல்   - Click Here


Post a Comment

1 Comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்