உளவியல் என்றால் என்ன?


1.1 உளவியல் என்றால் என்ன?

ஆரம்ப நாட்களில் உளவியலின் வரைவிலக்கணம் மனதைப் பற்றிய கற்கையாக மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது. அண்மையகால விருத்திகளோடு இது அனைத்து வகையான மனித நடத்தைகளையும் கற்கும் ஒரு விஞ்ஞானமாக மாறியுள்ளது.

இது தனிநபர்களின் உடல்சார், அறிகைசார், சமூக, மனவெழுச்சிசார் மற்றும் ஒழுக்கம்சார் நடத்தைகள் என்பவற்றை உள்ளடக்கியது. வெவ்வேறு துறைகளின் எழுச்சிக்கு வழிகோலிய உளவியலின் விரிவாக்கம் உரு 1.1 இல் விளக்கப்பட்டுள்ளது.


education - psychology
education-  psychology - Asiriyam 
        மேலதிக வாசிப்பு கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

இப்போது 'கல்வி உளவியல்' என்பது 'உளவியலின்' ஒரு கிளை என்பதை உங்களால் அறிந்துகொள்ள முடியும். மேலும், 'கல்வி' மற்றும் 'உளவியல்' ஆகியவை ஒன்றிலொன்று தங்கியிருக்கின்றன என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. 'உளவியல்' கல்வியின் ஆன்மாவாக (Spirit of Education) மாற்றிவிட்டது, அது வகுப்பறையில் கற்பித்தல் மற்றும் கற்றலுக்கான புதிய அர்த்தத்தையும் அளிக்கிறது.

1.2 கல்வி உளவியல்

அபரிதமான வளர்ச்சியைக் கண்டுள்ள கல்வி உளவியலானது, ஒப்பீட்டளவில் காலத்தால் மிக அண்மித்த ஒரு கிளைத் துறையாகும். இது உளவியலின் வகைகளில் ஒரு பகுதியளவில் பரிசோதனை சார்ந்ததாகவும் மற்றுமொரு பகுதியளவில் பிரயோகக் கிளையாகவும் விளங்குகின்றது. ஆனால் இது ஆரம்ப மற்றும் இடைநிலைப் பாடசாலை அமைப்பில் நிலவுகின்ற பிரச்சனைகளைக் கையாளுகின்ற ஒரு பிரயோகத் துறையாக விளங்குகின்ற ‘பாடசாலை உளவியல்' என்பதிலிருந்து வேறுபடுகின்றது. கல்வி உளவியலை சிலர் உளவியலில் இருந்து அறிவைப் பெற்று அதனை வகுப்பறைக்கு பிரயோகிக்கும் ஒரு பாடத்துறை என நம்புகின்றனர். எவ்வாறாயினும், “கல்வி உளவியல் என்பது தனக்கேயுரிய கோட்பாடுகள், ஆய்வு முறைகள், நுட்பங்கள் மற்றும் பிரச்சினைகளையும் உள்ளடக்கிய தனித்துவமான ஒரு துறை” என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக அமைகிறது (Woolfolk, 1987). மேலும் இது கற்றல் கற்பித்தல் செயலொழுங்கைப் புரிந்துகொள்ளச்செய்வதிலும் இச் செயன்முறையை முன்னேற்றுவதற்கான வழிமுறைகளை விருத்திசெய்வதிலும் அக்கறை கொண்டுள்ளது.

கல்வி உளவியல் துறையானது

விருத்தி உளவியல்,

நடத்தை உளவியல்

அறிகை உளவியல் எனும் பிற பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது. இந்தப் பிரிவுகளின் அண்மைக்கால முன்னேற்றங்கள் கல்வி உளவியலின் நோக்கத்தை விரிவாக்கியுள்ளன.


எமது கல்வி வீடியோக்கள் பார்த்து பயன்பெ - Click Here

கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்



Post a Comment

0 Comments