பல்பண்பாட்டுக் கல்வியின் பிரச்சினைகள்

பல்பண்பாட்டுக் -கல்வியின்- பிரச்சினைகள்
பல்பண்பாட்டுக் கல்வி


1. இன அடையாளத்தைப் பாதுகாப்பது தொடர்பான பிரச்சினை

2. தேசிய அடையாளத்தைப் பாதுகாப்பது தொடர்பான பிரச்சினை

3. சர்வதேச அடையாளத்தை பாதுகாப்பது தொடர்பான பிரச்சினை

இன அடையாளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மொழி சமயம், கலை, வாழ்க்கை ஒழுங்கு இன அடையாளத்தை பாதுகாக்கும் வகையில் கல்வி இடம்பெறுதல் வேண்டும்.

பிரதான மொழியாகத் தமது தாய்மொழியைக் கற்பதற்காக வசதியளிக்க வேண்டியுள்ளமையால் அதிக செலவுக்கு இடமுண்டு. இலங்கையில் சிங்கள, தமிழ் மொழியை உதாரணமாகக் கொள்ள முடியும்.

மொழி ஊடகம் மாறுபடுவதால் பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பாடசாலைகளில் கல்வியைப் பெறுவர். இன வேறுபாடுக்கேற்பப் போதுமான பாடசாலை இல்லாததாலும் மாணவர்களது கோரிக்கை உதாசீனம் செய்யப்படுவதாலும் இனப்பாகுபாட்டு பிரச்சினைகள் உருவாகும். இதனால் பொது நிறுவனத்தில் அனைத்து இனத்தவர்களும் கற்கவேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

                                                  கல்வி உளவியல்   - Click Here

        எமது கல்வி வீடியோக்கள் பார்த்து பயன்பெற - Click Here

                                            கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்

ஒரே பாடசாலையில் பல்வேறு மொழியைக் கற்பது ஒருங்கிணைப்புக்குப் பதிலாக வேறுபாடு உருவாகக் காரணமாகின்றது. இதனால் பாடசாலையில் பொதுவான மொழி ஊடகமாக ஆங்கிலம் இருத்தல் வேண்டும் என்பதுடன் பாடசாலைக்கு வெளியே வேறு மொழியைக் கற்றல் வேண்டும்.

பொது மொழி என்பதால் இனங்களுக்கிடையே ஆளிடைத்தொடர்பு ஏற்படும். மொழி வேறுபட்டிருப்பதால் தற்காலத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.

கலை தொடர்பான கல்வியில் மேலைத்தேயக் கலை உயர்வானது எனக் கருதப்படும் அதேவேளை பிறநாட்டுக் கலை உயர்வானதாகக் கருதப்படாத தன்மை பிரித்தானியாவில் காணப்படுகிறது.

கலையை ஊடகமாகக் கொண்டு பல்வேறு இன இயல்புகளைக் கற்பிக்கும் தன்மை காணப்படுகிறது.

சமயம் கற்பித்தலில் கிறிஸ்தவ சமயத்திற்குக் கூடுதலான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கலைத்திட்டத்தில் ஏனைய சமயங்களை உள்ளடக்குவது தடுக்கப்பட்டுள்ளமை சமயத்தை உள்ளடக்குவது முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளது.

கல்வி உளவியல்   - Click Here

தனது மொழியைக் கற்கும் அதேவேளை தேசிய மொழியைப் பயன்படுத்துதல் தேசிய அடையாளத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் சிங்கள மொழி இதற்கு உதாரணம். தமிழினத்துக்கு இது பாதிப்பாக உள்ளது. இதற்காக இரண்டாம் மொழியைக் கற்கச் சந்தர்ப்பம் ஏற்;படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. (தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியும் சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியும் கற்க வேண்டும் )

சர்வதேச அடையாளத்துக்கு ஆங்கில மொழியைக் கற்கவேண்டியுள்ளமை மற்றொரு முரண்பாடாகும்.

கலை, ஆடை ஆபரணங்கள், பாரம்பரியம் என்ற வகையில் சிங்களமும் தமிழும் நெருங்கியிருத்தல் பண்பாட்டு ரீதியான முரண்பாடுகள் குறைவாக இருப்பதற்குக் காரணமாகும்.

வர்க்க ரீதியான தேசிய ரீதியான சர்வதேச ரீதியான அடையாளம் தொடர்பிலான முரண்பாடுகளைக் கவனத்தில் கொண்டு இந்த மூன்றுக்கும் இடையில் சமநிலையை உருவாக்கும் வகையில் செயற்படுதல் வேண்டும்

கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

மேலும் வாசிக்க

Post a Comment

0 Comments