![]() |
கலாசார பல்வகைமை |
சமத்துவத்தை நிலைநாட்டுவதன் அவசியம்
அனைத்து இனங்களுக்கும் உள்ளுர உணரக்கூடிய சமத்துவம் நிலவுவது பல்கலாசார சமூகங்கள் வென்றெடுக்க வேண்டிய பிரதான குறிக்கோள் ஆகும். அது சமூக உறுதிப்பாட்டிற்கும், சமூகபொருளாதார முன்னேற்றத்திற்கும் துணை புரியும். இத்தகைய சமத்துவம் நிலவுவதன் காரணமாக சகல இனங்களும் சமூதாய மதிப்பினைப் பெற்று பெருமையுடன் வாழவேண்டிய சூழலொன்று உருவாகும்.
கலாசார பல்வகைமையின் மீது புதிய நோக்கினை ஏற்படுத்துதல்
சகல கலாசார குழுக்களுக்குமுரிய சிறப்பான உலக நோக்கு, விழுமியங்கள் மரபுகள், ஒழுக்கநெறிகள் ஆகியன உள்ளன. அவற்றை ஏற்றுக் கொள்ளவும், அவற்றை மதிக்கவும், பழக்கப்படுத்துதல் பல்பண்பாட்டுக் கல்வியின் மற்றுமொரு நோக்கமாகும். ஒரு சமூதாயத்திலுள்ள வித்தியாசங்களும், பல்வகைமைகளும் சமூதாயத்தின் முன்னேற்றத்திற்குத் தேவையான படைப்பாற்றல் மிக்க எண்ணக்கருக்களுக்கு புத்துயிர் அளிக்கின்றன.
தாம் யார் என்பது பற்றிய உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுதல்
ஒரு நாட்டில் வாழுகின்ற அனைத்து இனங்களுக்கும் சமூக மதிப்பொன்றைப் பெற்றுக் கொடுத்து அவர்கள் பெருமையடையக் கூடிய சூழலொன்றை ஏற்படுத்துதல் முக்கியமானதாகும். இல்லாவிடின் பிறரை ஏளனப்படுத்தவும், வேறுபடுத்திப் பார்க்கவும், அநியாயங்களுக்கு உட்படுத்தவும் வாய்ப்பு ஏற்படுகின்றது.
பண்பாட்டுத் தனித்துவம்
ஒவ்வொரு இன, சமய, மொழிக் குழுவுக்கும் தமக்கென தனியான பண்பாடு நிலவுகின்றது. இவ்வாறு ஒவ்வொருவருக்கும் உரிய தனித்த பண்பாடே பண்பாட்டுத் தனித்துவமாகும். ஒவ்வொரு குழுவும் தமது தனித்துவத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு பாடுபடும். இந்த பண்பாட்டுத் தனித்துவத்தை பாதுகாப்பதும் அதனை பிற்கால சந்ததியினருக்கு ஒப்படைப்பதும் எமது கடமையாகும். அந்த தனித்துவத்தின் மூலமே ஒரு பண்பாடு இன்னொரு பண்பாட்டிலிருந்து வேறுபடுகின்றது. நமது பண்பாட்டுத் தனித்துவத்தை பாதுகாப்பதைப் போலவே ஏனைய பண்பாட்டுத் தனித்துவங்களையும் பாதுகாக்க வேண்டும். அப்போது தான் இனங்களிடையே ஒற்றுமை ஏற்படும். நாட்டின் தேசிய ஒற்றுமை என்பது ஒவ்வொரு இனக் குழுவும் தமது பண்பாட்டுத் தனித்துவத்தைப் பாதுகாப்பதுடன் தேசிய ரீதியில் ஒற்றுமையைப் பேணுவதுமாகும். எல்லா கலாசாரங்களினதும் ஒருமைப்பாடே ஒரு நாட்டின் தேசிய கலாசாரமாகும். அந்த தேசிய கலாசாரத்தை வளர்ப்பது ஒற்றுமைக்கான ஒரு வழியாக அமையும்.
பல்பண்பாட்டுக் கல்வி
பல் பண்பாட்டுக்கல்வி என்னும் எண்ணக்கரு 1960ஆம் ஆண்டு அமெரிக்கச் சமூகத்தினுள் விருத்தியடைந்தது.
சிறுபான்மைச் சமூகத்தின் குழந்தைகளைப் பெரும்பான்மைச் சமூகக் கலாசாரத்தில் ஈடுபடுத்துவதற்காகச் சிறுபான்மைச் சமூகத்தின் பண்பாடு பெரும்பான்மைச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாடசாலைகளில் கலைத்திட்டத்தில் உள்ளடக்குவதை இந்த எண்ணக்கரு வெளிப்படுத்துகிறது. இதற்கேற்ப அமெரிக்காவில் நியூயோர்க், சிகாக்கோ, கலிபோர்ணியா, போன்ற பல் பண்பாட்டு நிலை காணப்படுகின்றபோட்டியானபாடசாலைகளில் பல் கலாசாரக் கல்வி ஆரம்பிப்பதற்குசமூகக் கோரிக்கை வெளிப்படுத்தப்படுகிறது.
பல் பண்பாட்டுக் கல்வியை அறிமுகப்படுத்துவதற்காகப் பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டாலும் அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் துயஅநள.யு.டீயமௌ இன் வரைவிலக்கணம் மிகவும் பிரசித்தமானது அதாவது “அசாதாரண நிலைக்குட்பட்டுள்ள சமூகத்தின் கலாசார செயற்பாடுகளை பாடசாலைக் கல்விச் செயற்பாடுகளின் போது ஒன்றிணைத்துச் செயற்படுத்துதல் பல் பண்பாட்டுக் கல்வி” என வரையறுக்க முடியும்.
பல்வேறு இனக்குழுமத்தின்பாற்படும் பல்வேறு மொழியைப் பேசுகின்ற அதேபோல் பல்வேறு சமயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பகுதியினருக்குட்பட்ட பிள்ளைகளுக்குச் சமமான கல்வியை வழங்குதல் பல் பண்பாட்டுக் கல்வியில் இடம்பெறும்.
கல்வி உளவியல் - Click Here
எமது கல்வி வீடியோக்கள் பார்த்து பயன்பெற - Click Here
கல்வியியல் கட்டுரைகள் - Click Here
எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்
பல்கலாசார கல்வியின் குறிக்கோள்
பல்லினத்தைக் கொண்ட ஒரு ஜனநாயக சமூகத்தில் வாழ்வதற்குத் தேவையான அறிவு, திறன் மனப்பாங்கினை வழங்குதல் பல் பண்பாட்டுக் கல்வியின் அடிப்படை நோக்கமாகும்.
பல் பண்பாட்டு சமூகத்தில் காணப்படும் பல்வேறு பகதிகள் ஒத்துழைப்புடன் வாழுதல்,தொடர்பாடல், மற்றும் ஒன்றாகக் கொடுக்கல் வாங்கல் செய்தல், ஆகியவற்றுக்காகத் தேவைப்படும் ஆற்றலை வழங்குதல் பல் பண்பாட்டுக்கல்வியில் இடம்பெறுதல் வேண்டும் ஒவ்வொரு பண்பாட்டிலும் வாழ்வதற்குத் தேவையான கலாசார இலக்கியத்தை (ஊரடவரசயட டவைநசயஉல) வழங்குதல் பல் பண்பாட்டுக்கல்வியினூடாக எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவான இலக்கியத்தைப் போன்று கலாசார இலக்கியம் உரையாடல், பொதுசன ஊடகப் பாவனை, வாசிப்பு, என்பவற்றை நன்கு விளங்கிக்கொள்ளல் இதில் அவசியப்படும். பல்வேறு பண்பாட்டுக் குழுக்களுக்கேற்ப இனப் பாகுபாடு உருவாகியிருக்கும்.
ஆனால் இவர்களிடையே ஒருமைப்பாட்டை உருவாக்குவதே கல்வியின் அடிப்படை நோக்கமாகும்.
• சமுதாயமொன்றின் நல்லொழுக்க விழுமியங்களைப் புரிந்து கொள்ளதல்.
•சமுதாயத்தின் ஒற்றுமைக்காக தனிநபர்கள் ஒவ்வொருவரினதும், பொறுப்பினை இனம் காணுதல்.
• ஒவ்வொரு ஆளினதும் சமூகப்பெறுமதியை இனம்காணுதல்.
•மற்றவர் மீது நல்லெண்ணத்தைக் காட்டுதலும், ஒத்துழைப்பினதும், குழுமப் பொறுப்புக்களினதும் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுதல்.
• பல்லின, பல்சமய, பல்மொழி நிலவுகின்ற சமுதாயமொன்றில் கலாசாரப் பல்வகைமையினை இனம்காணுதலும், புரிந்து கொள்ளலும், ஏற்றுக்கொள்ளலும், மதித்தலும்.
• தம்மைப் போன்று ஏனையோருக்கும் தமது கலாசாரத்தினைப் பேணுவதற்கான உரிமை உண்டு என்பதை ஒப்புக்கொள்ளல்.
• கலாசாரப் பல்வகைமை காரணமாக எழுகின்ற தனிப்பட்ட மற்றும் குழுக்களுக்கிடையிலான வேறுபாடுகளைக் குறைத்தல்.
• மோதல்கள் வன்முறையாக மாறுவதைத் தடுப்;பதற்கும், மோதல் முகாமையினையும், மத்தியஸ்தம் செய்வதனையும் மேற்கொள்ளல்.
கல்வி உளவியல் - Click Here
• நியாயத்தினையும், சமத்துவத்தினையும் பேணுதல்.
• சகிப்புத் தன்மை வாய்ந்த சமாதானத்தின்பாற்பட்ட சமுதாயமொன்றை உருவாக்குவதற்குத் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளல்.
• நாட்டின் தேசிய மற்றும் கலாசார உரிமைகளைப் பேணுதல்.
பல்கலாசாரக் கல்வியை வெறுமனே வகுப்பறைக்குள் மாத்திரம் இடம்பெறச் செய்யாமல் பாடசாலை முழுவதும் வியாபிக்கச் செய்தல் வேண்டும். அதாவது அதிபர், ஆசிரியர், பணியாட் தொகுதி, பெற்றோர், மாணவர்கள் மற்றும் வெளிச் சமுதாயம் ஆகிய அனைத்து அம்சங்களுக்கும் வியாபித்திருத்தல் வேண்டும். அதற்காக,
1. பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்ப்பு முறைகள் சிறப்பு மிக்கதாய் அமைதல் வேண்டும்.
2. பாடசாலையின் நோக்கங்களுக்கும், குறிக்கோள்களுக்கும்- பெற்றோரது குறிக்கோள்களுக்குமிடையே இணக்கமிருத்தல் வேண்டும்.
3. பாடசாலை மாணவர்களது தன்மானத்தினையும், கற்பதிலுள்ள விருப்பத்தினையும் மேம்படுத்துதல் வேண்டும்.
4. தான் சாராத இனக்குழு கலாசாரத்தினை எதிர்க்கும் மனப்பாங்குடைய செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தாதிருத்தல்.
5. ஊடகங்கள் சமூக வலைத்தளங்கள் சகிப்பற்ற தன்மையைத் தூண்டாதிருத்தல்.
வீட்டுக்கு அப்பால் பிள்ளைகளின் மனப்பாங்கினைக் கட்டியெழுப்புதலானது பாடசாலையாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. எனவே உளப்பாங்குகளைக் கட்டியெழுப்பும் பணியில் ஆசிரியர்களின் கடமைப்பண்பு மிக முக்கியமானதாகும். சுருங்கக் கூறின் பல்கலாசாரக் கல்வியானது, சனநாயக முறையின் பாற்பட்ட நடத்தையினைக் கற்பிக்கும் அதே நேரத்தில் சனநாயகமான கலாசாரம் ஒன்றினையும் உருவாக்குவதற்கும் துணை புரிகின்றது. பிரேசில் நாட்டுக் கல்வியியலாளர் பவ்லோ பேரேரே அவர்களின் கருத்துப்படி தற்பொழுது பாடசாலைகளில் மௌன கலாசாரம் ஒன்றே ஆட்சி புரிகின்றது. இதனை ஒழித்துக் கட்டுவதற்கு பல் கலாசாரக் கல்வி உதவும்.
பல் பண்பாட்டுக் கல்வி பின்வரும் அடிப்படையில் அவசியமானது,
• பல்வேறு கலாசாரக் குழுக்கள் பல இருக்கும்போது ஒவ்வொரு சமூகத்திற்கும் பல் பண்பாட்டுக்கல்வி அத்தியாவசியமாகும்.
• குழுக்களிடையே நெருங்கிய தொடர்பு மற்றும் ஆளிடைத்தொடர்பு பேணப்படுதல் காலத்தின் தேவையாகும். விஞ்ஞான தொழிநுட்ப முன்னேற்றதைப் பகிரவேண்டிய தேவை உள்ளது.
• எப்போதும் வேறு இனத்தவருடன் அல்லது வகுப்பினருடன் இடைத்தொடர்புகொள்ள வேண்டிய தேவை உள்ளது.
• வினைத்திறன்மிகு தனியாட்களை உருவாக்குதல் கல்வியின் எதிர்பார்ப்பாக உள்ளதுடன் அனைத்து இனத்தவர்களுடனும் இணைந்து செயற்படக்கூடிய தனியாட்களை உருவாக்குவதும் தற்காலத் தேவையாக உள்ளது.
• பல்வேறு பண்பாடுகள் தொடர்பில் ஊட்டம் பெறும் தேவை தொடர்பில் பல்பண்பாட்டுக் கல்வியில் ஈடுபடுதல் வேண்டும். ஒவ்வொரு கலாசாரமும் பல்வேறு கலாசாரங்களால் ஊட்டம் பெற்றுள்ளது. மேற்கு நாடுகளில், கிரேக்கத்தின், உரோம தேசத்தின் கலாசாரங்கள் கலந்துள்ளன. இந்திய கலாசாரத்தில் கிரேக்க கலாசாரம் செல்வாக்குச் செலுத்தியுள்ளது.
• எனவே பல்வேறு கலாசார குழுக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய ஊட்டம்தொடர்பில் விளக்கம் பெறுவதற்குப் பல் பண்பாட்டுக்கல்வி அத்தியாவசியமாகின்றது.
கல்வியியல் கட்டுரைகள் - Click Here
• வேறு பண்பாடுகள் தொடர்பில் தவறான விளக்கத்தைத் தவிர்ப்பதற்கும் பல் பண்பாட்டுக்கல்வி அவசியமாகின்றது. ஐரோப்பாவிலுள்ள பிற நாட்டவர்கள் அனைவரும் ஆசியர்கள் என எடுத்துக்கொண்டால் அனைவரும் சமமானவர்களாகவே கருதப்படுவர்.
• இவர்கள் அனைவரும் கறுப்பினத்தவர்களாகவே கருதப்படுவர். அவர்கள் கீழ் நிலையிலுள்ளவர்கள் என்றும், பயங்கரமான துஷ்டர்கள் என்றும், பிரச்சினைக்குரியவர்கள் என்றும், இவர்கள் தொடர்பான மனப்பாங்கு கட்டியெழுப்பப் பட்டிருக்கும். எனினும் பல்வேறு பண்பாடுகளைக் கொண்ட பிள்ளைகள் ஒன்றாகக் கற்;கும்போது ஒன்றாகப் போட்டிப் பரீட்சைகளில் சித்தியடையும்போது மேற்காட்டப்பட்ட பிழையான அபிப்பிராயம் இல்லாமல் போகும்.
• சிறுபான்மையினருக்கு இடம்பெறும் பாகுபாட்டினைக் குறைப்பதற்கு பல் பண்பாட்டுக்கல்வி அவசியமாகின்றது அவர்களுக்குக் கிடைக்கும் கல்வி வாயப்புக்கள் குறைவாக இருத்தல், அவர்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுதல், அவர்களைக் கேலி செய்தல், கலாசார அடையாளங்களை இல்லாதொழிக்கும் வகையில் செயற்படுதல், என்பன போன்ற சமூகப் பிரச்சினைகளைக் குறைக்க பல் பண்பாட்டுக்கல்வி அவசியமாகின்றது.
• குறிப்பாக பிரித்தானியா போன்ற நாடுகளில் காணப்படும் வெள்ளை, கறுப்பு வேறுபாடு ஆசியர்களைக் கீழானவர்களாகக் கணித்தல் மற்றும் பல்வேறு நாடுகளில் காணப்படும் பல்லினங்கள் கலந்து காணப்படுதல் போன்ற காரணங்களினால் பல் பண்பாட்டுக்கல்வி அத்தியாவசியமாகின்றது சிறப்பாக இனப் பிரச்சினை காணப்படும் இலங்கை போன்றநாடுகளுக்குப் பல் பண்பாட்டுக்கல்வி மிகவும் அவசியமானதாகும்.
• மற்றவர்களது கருத்துக்களுக்குச் செவிமடுத்தல்.
• தம்மைப்போன்று ஏனையோருக்கும் அபிப்பிராயங்கள் உள்ளதென்பதை ஏற்றுக் கொள்ளுதல்.
• பிறரது அபிப்பிராயங்களை மதித்தல்.
• மனிதத்துவத்தை மதித்தல்.
• மற்றவர்களிடமிருந்து கற்றல்.
• பல்வகைமையின் வளத்துக்குரிய ஆற்றலினை ஏற்றுக் கொள்ளுதல்.
• தாம் அறிந்த விடயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுதல்.
• ஒத்துழைப்பு, நல்லிணக்கம்
மேலும் செயலட்டைகள் மற்றும் வினாத்தாள்கள் தேவை எனின் கீழ் வரும் link Click செய்யவும்
எமது கல்வி சார் காணொளிகளை காண கீழே உள்ள லிங்கை click செய்யவும்
0 Comments
உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்