பாடசாலைப் பாடவிதானமும் பல்கலாசாரக் கல்வியும்

 

பாடசாலைப் பாடவிதானமும் -பல்கலாசாரக் -கல்வியும்
பல்கலாசாரக் கல்வி

பாடசாலையில் இடம்பெறுகின்ற அனைத்துச் செயற்பாடுகளும் பாடசாலைப் பாடவிதானத்தினுள் அடங்கும். பாடசாலையில் பின்பற்றப்படும் பாடவிதானங்களை பின்வருமாறு நோக்கலாம்.

முறைசார்ந்த பாடவிதானம் / கற்பிக்கும் பாடவிதானம்

வகுப்பறையில் கற்பிக்கப்படும் விடயங்கள் இந்த வகுதியில் சேரும். மாணவர்கள் ஒவ்வொரு பாடத்தின் மூலம் அறிவினையும், உளப்பாங்குகளையும், தேர்ச்சிகளையும் பெற்றுக் கொள்வர்.

கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

முறைசாரா பாடவிதானம்

பாடசாலை ஒன்றில் வகுப்பறைக்கு அப்பால் இடம்பெறுகின்ற செயற்பாடுகள், விளையாட்டுக்கள், நாடகங்கள், பாடசாலைச் சுற்றலாக்கள், சங்கங்கள் மன்றங்கள் முதலியன இந்த வகுதியின் பாற்படும்.

மறைமுக பாடவிதானம்

முறைசார்ந்த மற்றம் முறைசாரா பாடவிதானங்கள் குறித்துரைக்கப்பட்ட கற்பித்தல் துறைகளை எடுத்தியம்புவதுடன் மறைமுகப் பாடவிதானமானது இவ்விரண்டிற்கும் மேலதிகமாக பாடசாலை எடுக்கும் தீர்மானங்கள், கண்ணுக்குப் புலப்படாத ஆசிரியர் - மாணவர் நடத்தைகள், வாழ்க்கை முறைகள் என்பவற்றைக் கொண்டிருக்கும்.

இவ்வாறு பாடசாலையில் நடைமுறைப்படுத்தப்படும் பாடவிதானங்கள் பாடசாலை ஒன்றின் கலாசாரத்தை நிர்ணயிக்கின்றன. பாடசாலைக் கலாசாரம் என்பது காணப்படும் நம்பிக்கைகள், பெறுமானங்கள், மோதல்கள், மரபுகள், நடத்தைகள் ஆகியவற்றின் வெளிப்புறத் தோற்றமாகும். அது பாடசாலையின் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்குமிடையிலான ஆளிடைத் தொடர்புகளை எடுத்துக்காட்டும் ஒரு வெளிப்பாடாகும். இலங்கையில் பாடசாலையில் உள்ளதெனக் கூறுகின்ற பௌத்த,

இந்து, இஸ்லாம் ஆகிய பாடசாலைக் கலாசாரங்கள் பற்றி யாவரும் அறிந்துள்ளோம். பாடவிதானம் ஒன்றியில் கலாசார கல்வியின் மூலம் விழுமியங்களும், பெறுமானங்களும், வலியுறுத்தப்படுவதால் அது பாடசாலைப் பாடவிதானத்தில் எந்த இடத்தில் அமைய வேண்டும் என்பதைக் கருத்திற் கொள்ளுதல் நல்லது. சில காலமாக பாடசாலைக் கல்வியின் மூலம் வாசித்தல், எழுதுதல், கணிதம் ஆகியவற்றிற்கு முதலிடம் அளிக்கப்பட்டதெனினும், அவற்றுக்கு மேலதிகமாக சமூக உறவுகள் எனும் நான்காவது விடயத்தையும் சேர்க்க வேண்டிய காலம் வந்துள்ளது.

                                              கல்வி உளவியல்   - Click Here

        எமது கல்வி வீடியோக்கள் பார்த்து பயன்பெற - Click Here

                                           கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்

பல் - கலாசாரக் கல்விக்கென பயன்படுத்தக் கூடிய கற்பித்தல் வழி முறைகள்

மாணவர் மையப்படுத்தப்பட்ட செயற்பாடுகள்.

ஒப்படைகள்

விளையாட்டுக்கள்

குழு வேலைகள்

போட்டிகரமான கற்பித்தலுக்குப் பதிலாக கூட்டாகக் கற்றல்

வகுப்பிலுள்ள அனைவரினதும் தன்மானம் வளரும் விதத்தில் பரஸ்பர     ஒத்துழைப்புடன் செயற்படுதல்

மனித உறவுகளில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் குறித்து வகுப்பறையில் விவாதம், கலந்துரையாடல்களை ஒழுங்கு படுத்துதல்.

நாடகங்களை அரங்கேற்றுதல்

மோதல்களைத் தீர்க்கும் முறைகளைப் யன்படுத்துதல்

பல் - கலாசாரக் கல்விக்கென பயன்படுத்தக் கூடிய கட்புல செவிப்புல சாதனங்கள்

பாடல்களும் மக்கள் இலக்கியங்களும்

பஞ்சதந்திரக் கதைகள், சரித்திரங்கள்

தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சித் திட்டங்கள், ஒலி, ஒளி நாடாக்கள்

உலகில் வாழ்ந்த மாண்பு மிக்க தலைவரின் வாழ்க்கை வரலாறுகள்

ஊடகங்கள் சமூக வலைத்தளங்களிலுள்ள நல்ல கருத்துக்கள்

கல்வி உளவியல்   - Click Here

தொடர்பு சாதனங்கள், பிரச்சாரங்கள், வகுப்புக்களின் பாடநூல்கள் முதலியன சாதகமான அல்லது பாதகமான உளப்பாங்குகளை மேம்படுத்துவதற்குரிய சக்தி வாய்ந்த ஊடகங்களாகும். எனவே தொடர்பு சாதனங்களாலும், பிரச்சார வேலைகளாலும் உயர்த்திக் காட்டப்படுகின்ற சகிப்புத் தன்மையற்ற விடயங்களைப்பற்றி பாடசாலையில் விவாதங்களை நடாத்துவது மிக மிக முக்கியமானதாகும்.

மேலும் வாசிக்க

Post a Comment

0 Comments