மரபுத்தொடர்கள்

 


             எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்
அடிப்பற்றிய மரபுத்தொடர்கள்

அடியொற்றுதல்         -     பின்பற்றுதல்

அடிநகர்தல்                 -     இடம்பெயர்தல்

அடிப்பணிதல்            -     கீழ்பணிதல்

அடிப்படை                   -     மூலாதாரம்

அடிவிளக்குதல்         -     தன் மரபைப் புகழ் பெறச்செய்தல்

அடியிடுதல்                 -     ஆரம்பித்தல்


கண் பற்றிய மரபுத்தொடர்கள்

கண்வைத்தல்         -     விருப்பம் கொள்ளுதல்

கண்வளர்த்தல்        -     நித்திரை செய்தல்

கண்ணெறிதல்        -    கடைக்கண்ணாற் பார்த்தல்

கண் மலர்தல்         -       நித்திரை விட்டெழுதல்

கண்கலத்தல்         -       ஒருவரை ஒருவர் விரும்புதல்

கண் மூடுதல்         -        இறத்தல்

கண்திறத்தல்        -        அறிவுண்டாதல்

கண்ணறுதல்         -       அன்பு குறைதல்


மேலும் வாசிக்க  கூட்டத்தை குறிக்கும் இளமை பெயர்கள் -  Click here


கழுத்து பற்றிய மரபுத்தொடர்கள்

கழுத்துக் கொடுத்தல்         -     பிறர் துன்பத்தில் உதவுதல்

கழுத்தறுத்தல்                        -     நம்பிக்கை துரோகம் செய்தல்

கழுத்திற்கட்டுதல்                -     வலிந்து தினித்தல்

கழுத்தை கட்டுதல்              -     விடாமல் நெருக்குதல்


காது பற்றிய மரபுத்தொடர்கள்

காது கொடுத்தல்         -         அவதானித்தல்

காது குத்துதல்              -         ஏமாற்றுதல்

காதில் ஓதல்                        கோல்    சொல்லுதல்

காதைக் கடித்தல்       -         இரகசியம் கூறல் 


மேலும் வாசிக்க பிராணிகளின் இளமை பெயர்கள்  - Click here


கால்  பற்றிய மரபுத்தொடர்கள்

கால் பின்னுதல்         -     தடைப்படல்

கால் பிடித்தல்            -     காலைப் பற்றி கெஞ்சுதல்

கால் கொள்ளுதல்    -     ஆரம்பித்தல்

காலைச் சுற்றுதல்    -     பற்றித்தொடர்தல் - தொடர்நது பற்றுதல்

காலாறுதல்                  -     ஓய்ந்திரத்தல் 

கால் ஊன்றுதல்         -     நிலை பெறுதல்

காலில் விழுதல்         -     மன்னிப்பு கேட்டல்


வயிறு பற்றிய மரபுத்தொடர்கள்

வயிற்றைக் கட்டுதல்                                    -     செலவைச் சுருக்குதல் 

வயிற்றிலடித்தல்                                            -     சீவனத்தைக் கெடுத்தல்

வயிறு வளர்த்தல்                                            -     எவ்வாரோ பிளைத்தக் கொள்ளல்

வயிறு கிள்ளுதல் , வயிறு கடித்தல்        -     பசியுண்டாதல்

வயிறு குளிர்தல்                                              -     திருப்தி அடைதல்

வயிறு எரிதல்                                                   -     பொறாமை கொள்ளுதல் 

வயிறு கழுவுதல்                                              -     அரும்பாடுப்பட்டு வாழுதல்


வாய்  பற்றிய மரபுத்தொடர்கள்

வாய் விடுதல்                   வெளிப்படையாக கேட்டல் 

வாய் புலம்பல்             -     அணுகூலமாதல்


கை  பற்றிய மரபுத்தொடர்கள்

கையிடல்                 -         ஆரம்பித்தல்

கை நீட்டுதல்         -         அடித்தல் 

கைப்பிசைதல்     -         செய்வதறியாது திகைத்தல் 

கைதளர்தல்          -         வறுமையாதல்

கைகொடுத்தல்   -         உதவி செய்தல் 

கைமிகுதல்            -         அளவுக்கடத்தல்

கைகலப்பு                    சண்டை

கையளித்தல்        -         ஒப்படைத்தல் 

                      கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

செவி  பற்றிய மரபுத்தொடர்கள்

செவி கொடுத்தல்     -     கவனித்துக் கேட்டல்

செவிக்கேறுதல்         -     கேட்பதற்கு இனிமையாக இருத்தல்


தலை பற்றிய மரபுத்தொடர்கள்

தலைக்காட்டுதல்                     -     வெளிவருதல்

தலை கீழாய் நடத்தல்             -    முறைத்தவறி நடத்தல்

தலைக்கொழுப்பு  தலைப்பாரம்  தலை வீக்கம் தலைக்கனம் - தான் என்ற அகந்தை

தலைகீழாய் நிற்றல்                -     பிடிவாதம் கொள்ளல்

தலைப்படுதல்                            -     மேற்கொள்ளுதல்

தலைமறைதல்                           -     ஒளிந்திருத்தல்


தோள் பற்றிய மரபுத்தொடர்கள்

தோளிலிருந்து செவிகடித்தல்     -     ஆதரிப்பவரை வஞ்சித்தல்

தோள் மாற்றுதல்                               -     பிறர் சுமையை தான் சுமத்தல்

தோள் கொடுத்தல்                            -     உதவி செய்தல்


நா பற்றிய மரபுத்தொடர்கள்

நாக்கு வளைத்தல்                             -     பழித்தல்

நாக்கு விழுதல்                                    -     பேச நாவெழாமற் போதல் 

நாக்கு தவறுதல் 

நாக்கு புரளுதல் நாக்கு தப்பல்     -     பேச்சுறுதி தவறுதல் பொய் சொல்லுதல்

நாக்கு நீளுதல்                                      -     அடக்கமின்றி பேசுதல்

நாக்கடைத்தல்                                         பேச முடியாது இருத்தல்


பல் பற்றிய மரபுத்தொடர்கள்

பல் இளித்தல்                           -     ஏளனஞ் செய்தல் , பல்லைக் காட்டி கெஞ்சுதல்

பல்லைக் கடித்தல்                 -     துன்பந் தருவதை சகித்துக் கொள்ளுதல்

பல்லைப் பிடுங்குதல்           -     சக்தியை அடக்குதல் 


முகம் பற்றிய மரபுத்தொடர்கள்

முகத்தில் அடித்தல்             -     நேரே நிந்தித்தல்

முகம் தருதல்                         -     அன்பு காட்டுதல் 

முகம் பார்த்தல்                     -     இரக்கம் காட்டுதல்

முகமறிதல்                              -     மனம் நோகல் 

முகங்கொடுத்தல்                -     எதிர்கொள்ளல்


மேலும் வாசிக்க

 கூட்டத்தை குறிக்கும் இளமை பெயர்கள்

 பிராணிகளின் இளமை பெயர்கள்

தாவரங்களின் இளமை பெயர்கள் 

தமிழ் இலக்கிய வரலாறு 

தமிழ் கற்போம் 

 கல்வியியல் கட்டுரைகள்  - Click Here

 கல்வி உளவியல்   - Click Here


 எமது YouTube தளம் www.youtube.com/Asiriyam பல்வேறு கல்வி சார் காணொளிகளை  கொண்டுள்ளது Subscribe செய்து ஒத்துழைப்பை தரவும்
Post a Comment

0 Comments